'எல்லாப் புகழும் எங்களுக்கே. எல்லாப் பழியும் உங்களுக்கே' - வடபுலத்தான்


வடக்கில் நடக்கின்ற குற்றச் செயல்களுக்கு படையினரே பின்னணிக்காரcm bookணம் எண்ட மாதிரியான ஒரு அபிப்பிராயத்தை உருவாக்கியிருக்கிறார் வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.
இதற்குத் தோதாக ஒத்தூதுகின்றனர் சில ஆய்வாளர்களும் சில ஊடகங்களும்.
'வடக்கில் நடக்கின்ற குற்றச் செயல்கள் படைமயமாகியிருப்பதன் விளைவே' என்ற முடிவுக்கு எப்படி முதலமைச்சர் வந்திருக்கிறார் என்று தெரியவில்லை. இதைப்பற்றி யாரும் அவரிடம் கேள்விகளையும் கேட்கவில்லை. 

விக்கினேஸ்வரன் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றியதாக நானறியவில்லை. சாத்திரகாரராகவும் இருந்த மாதிரித்தெரியவில்லை. அவர் ஒரு நீதியரசராகவே இருந்திருக்கிறார். ஆனால், இப்பொழுது அவர் நடந்து கொள்கின்ற முறைகளும் அவருடைய கூற்றுகளும் அவர் முன்னர் நீதிரசாராக இருக்கும்போது எப்படியெல்லாம் நடந்திருப்பார் என்ற கேள்விகளையே எழுப்புகின்றன.

இப்பொழுது விக்கினேஸ்வரன் சொல்லியிருக்கும் தகவல்கள் ஒரு புலனாய்வு அதிகாரியின் கூற்றைப் போலவே உள்ளன. அல்லது சோதிடகாரரின் ஊகங்களைப் போலவே தெரிகிறது.

எது எப்படியோ விக்கினேஸ்வரன் ஒரு முதலமைச்சர் என்றவகையில் அவர் சொல்லியிருப்பதை மறுக்க முடியாது. பொய்யாக இருந்தாலும் அவருடைய கருத்தை முதற்கட்டமாக மக்கள் நம்பித்தான் ஆகுவர்.

சரி, அப்படித்தான் நாமும் ஒரு பேச்சுக்காக நம்பிக்கொள்வோம்.
படையினரால்தான் சமூகச் சீர்கேடுகள் நடக்கின்றன என்றால், அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது?

அந்தப் பொறுப்பை மக்கள் யாருக்குக் கொடுத்திருக்கிறார்கள்?

கடந்த தேர்தல்களின் போதெல்லாம் பெரும்பாலான மக்கள் தங்களுடைய ஆதரவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கே வழங்கியிருந்தனர். மாகாணசபைத் தேர்தலின்போது விக்கினேஸ்வரனுக்கே அதிகூடிய வாக்குகளைப் போட்டுமிருக்கிறார்கள்.

இந்த ஆதரவெல்லாம் சும்மா வழங்கப்பட்டதல்ல.

பெருமளவு இழப்புகள், அழிவுகள் எல்லாவற்றையும் சந்தித்த மக்கள், அவற்றிலிருந்து மீள்வதற்கும் நல்ல வழியைக் காட்டுவதற்கும் தமிழ் மக்களின் அடையாளமாக  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே உள்ளது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டது.

போதாக்குறைக்கு பிரதம நீதியரசர் ஒரு மகா கெட்டிக்காரன். சட்ட வல்லுனர். அரசாங்கத்தையும் படைத்தரப்பையும் மடக்கி, அடைச்சு, தமிழ் மக்களுக்கு ஒரு விடிவைப் பெற்றுத்தருவார்.... படித்தவர். பெரிய மனிசர் என்றெல்லாம் நம்பித்தான் மாகாணசபைத் தேர்தலின்போது போராளிகளாக இருந்தவர்களும் மாவீர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் கூட வாக்களித்திருந்தனர்.
ஆனால், அந்த நம்பிக்கையை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு காப்பாற்றியிருக்கிறதா? முதலமைச்சர்தான் பொறுப்புச் சொல்லி வருகிறாரா?

இல்லவே இல்லை.

பதிலாக மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. இந்தப் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் அரசாங்கமும் படைகளுமே காரணம். இலங்கையின் சட்டமூலங்கள் பாதகமாக உள்ளன என்று சாட்டுகளைச் சொல்லி விட்டு, பொறுப்பையும் பழியையும் வேறு தரப்புகளிடம் சுமத்தி விட்டுத் தாம் சும்மா இருந்து விடுகின்றனர் கூட்டமைப்பினர்.

இப்படிச் சொல்லி விட்டுச் சும்மா இருப்பதற்காகவா மக்கள் தங்கள் ஆதரவையும் வாக்குகளையும் இவர்களுக்குக் கொடுத்தனர்?
இல்லவே இல்லை.

மக்கள் தங்களுடைய தேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கும் இவர்கள் முயற்சிப்பார்கள் என்றுதானே வாக்களித்தனர்.

அப்படி நம்பிக்கையோடு வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யலாமா?
இல்லவே இல்லை.
ஆனால் நம்பிக்கைத் துரோகத்தைத்தான் செய்து கொண்டிருக்கிறது கூட்டமைப்பு.

இதில் சந்தேகமே இல்லை.

படையினரினால்தான்  வடக்கில் பல பிரச்சினைகளும் சமூகக் கேடுகளும் நிகழ்கின்றன என்றால், அதை மாற்றுவதற்காக முயற்சிப்பது முதலமைச்சரின் கடமை. அவர் சார்ந்த மாகாண சபையின் பொறுப்பு. அவர் சார்ந்த கட்சியின் கடப்பாடு. கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பணி.

பொதுவாகச் சொன்னால், தமிழ் மக்களின் கவசப்படை, பாதுகாப்புப்படை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கே இந்தப் பொறுப்புகள் கூடுதலாக உண்டு.

அரசாங்கமும் படைகளும் படைகளல்லாதவர்களும் தப்புத் தண்டா செய்தால், அத்துமீறல்களில் ஈடுபட்டால் அதற்கெதிராகப் போராட வேண்டியதும் பேசித்தீர்க்க வேண்டிய இடங்களில் பேசித் தீர்வு காண்பதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதும் கூட்டமைப்பின் கடப்பாடுகள்.

ஆனால், இதை அது செய்வதில்லை.

மெத்தப்படித்த பிரதம நீதியரசரும் செய்வதில்லை.

 'எல்லாப் புகழும் எங்களுக்கே. எல்லாப் பழியும் உங்களுக்கே' என்ற மாதிரித்தான் எப்போதும் இவர்கள் செய்படுகிறார்கள். அதன்படி அரசாங்கமும் படைகளும்தான் எல்லாவற்றுக்கும் காரணம். நாங்கள் ஒரு பொல்லாப்பும் அறியாதவர்கள் என்று சொல்லித் தப்பி விடுகிறார்கள்.
பாவம் மக்கள். 
Source: http://thenee.com/html/250615-1.html

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...