சுவாமிநாதன் ( உந்த ) வேலை வேண்டாம் !


எஸ்.எம்.எம்.பஷீர்
பொய்களை  உண்மையாக ஒலிக்கச் செய்ய ,  கொலைகளை மரியாதைக்குரியதாக்க , சுத்தமான  காற்றுக்கு   திண்மை  தோற்றத்தைக் காட்ட அரசியல் மொழி வடிவமைக்கப்பட்டுள்ளது.
                                                                                                      ஜார்ஜ் ஓர்வெல் 
இலங்கையில் யுத்தம் முடிந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டன, ஆனாலும் யுத்த வெற்றி வாரமாக , அதுவும் யுத்த வெற்றி தினமாக இதுகாலவரை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே 19 ஆம் திகதி இனிமேல் ஞாபகார்த்த தினமாக கொண்டாடப்படப் போவதாக புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது. 


முள்ளிவாய்க்கால் தினம் என்ற பெயரில்  இலங்கைத் தமிழர்கள் உலகளாவிய ரீதியில் (இலங்கை உட்பட ) மே 18ம் திகதி  போரில் இறந்தோரின் நினைவை கொண்டாடுவதை விட தத்தமது நிகழ்ச்சி  நிரல்களுக்கேற்ப ஒரு அரங்கேற்றம் செய்யப் போகிறார்கள். புலிகளோடு சேர்ந்து புலிகள் யுத்தத்தில் வெற்றி பெறுவார்கள் என்று நம்பி , அந்த நம்பிக்கையின்பால் புலிகளை பின்தொடர்ந்து சென்று இறுதியில் முள்ளிவாய்க்காலில் இராணுவ தாக்குதல்களாலும் புலிகளின் பழிவாங்கும் தாக்குதல்களாலும் கொல்லப்பட்ட பொது மக்கள் , தாக்குதல்களில் கொல்லப்பட்ட இராணுவத்தினர் எல்லோரும் நினைவுக்குரியவர்களே ,

எல்லாவற்றையும் விட இதுகாலவரை இலங்கையில் இன ரீதியான ஆயதப் போராட்டம் தொடங்கிய காலம் முதல் அத்தகைய "போராட்டங்கள்" அதற்கெதிரான இராணுவ நடவடிக்கைகள் , இரு தரப்பினராலும் சுமார் மூன்று தசாப்தங்களாக கொல்லப்பட்ட பொதுமக்கள் , அதிலும் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளினால் மனித பொருளாதார அழிவுகள் , அழிச்சாட்டியங்கள் என்பன நிறுத்தப்பட்ட தினமும் மே 18ம் திகதிதான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. மனித அழிவுகளையும் அவலங்களையும் ஏற்படுத்தி மிகப் பெரும் மனித உயிர்ப் பலியினை கொடுத்து யுத்தம் முடிவுக்கு வந்தது என்பது ஒரு கசப்பான உண்மை . ஆனாலும் அதற்கு காரணமானவர்கள் இராணுவத்தினர் மட்டுமல்ல  புலிகளும்தான் என்பதை உலகம் வேறுபட்ட பரிமாணத்திலாயினும்  ஏற்றுக்கொண்ட உண்மை. யுத்தத்தின் முடிவே பல ஆயிரக்கணக்கான மக்களின் எதிர்கால அழிவுக்கும் முற்றுப் புள்ளி வைத்தது. ஆயிரக்கணக்கான உயிர்கள் எதிர்காலத்தில் அழிவதிலிருந்து பாதுகாத்துள்ளது. நாட்டின் இறைமையை , பொருளாதார மனித வளத்தை மேம்படுத்தி உள்ளது.


உதாரணத்துக்கு , இராணுவத்திடம்  சரணடைந்த அல்லது இராணுவத்தால் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான புலி உறுப்பினர்களில் பலர் இளைஞர்கள் என்பதும் அவர்கள் இறப்பில் இருந்து கூட மீட்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மையே.! அவ்வாறு புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள்  நிர்க்கதியான ஆனால் யதார்த்த உலகை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நடைமுறை வாழ்க்கை யதார்த்தங்களையும் சவால்களையும் எதிர்கொள்ள இலங்கை அரசாங்கம்  அவர்களை தாயார்படுத்தி சமூகத்துக்குள் அனுப்பியுள்ளது. அந்த வகையில் 12000 க்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்கள்  ஒரு புதிய உலகை எதிர் கொண்டுள்ளார். 
  
இந்த பகைப்புலத்தில் இலங்கையின்  மீள்குடியேற்ற அமைச்சர் டி .எம்.சுவாமிநாதன் அண்மையில் இலங்கையில் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர்  புணர்வாழ்வுக்கென அனுப்பப்பட்டதாக கூறப்பட்ட 12,000 புலி உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிக் கேட்கப்பட்ட பொழுது  அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி தங்களுக்கு தெரியாது என்றும் ,அது பற்றிய தகவல்கள் முந்திய அரசிடம் அல்லது பாதுகாப்பு அமைச்சிடமிருந்தே வர வேண்டும் என்றும் குறிப்பிட்டு  ஒரு புறம் அவர்கள் பற்றிய தனது புதிய அக்கறையை ஒரு புதிய அமைச்சர் என்ற வகையில் வெளிப்படுத்தி இருந்தார். 
ஆனால் இந்த யுத்தம் முடிந்த பின்னர் சர்வேதேச பிரக்ஞையுடன் 12,000 புலிகளின் புணர் வாழ்வு சமாச்சாரம் கையாளப்பட்டது என்பது உலகறிந்த செய்தி.  சுவாமிநாதன் ஒரு பிரபல வழக்கறிஞர் ,அரசியல்வாதி, வழக்கமாக நாட்டு நடப்புகள் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டியவர். அவர் 12,000 புலி உறுப்பினர்களில் தற்பொழுது இருக்கும் 49 பேரை மட்டுமே தான் அறிந்திருப்பதாக குறிப்பிட்டதும், சுமார் 11051 உறுப்பினர்களின்  விதி (அவர்களுக்கு என்ன நடந்தது ) ஒரு மர்மமே என்று குறிப்பீட்டு தன்னையும் தான் பிரதிநிதித்துவப்படுத்தம் தமிழ் சமூகத்தையும் மலினப்படுத்தி உள்ளார். தமது அரசியலுக்காக இவர்களைப் போன்றோர் பேசும் மொழிக்கும் தமிழ் தேசிய இனவாதிகள் பேசும் மொழிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. புலிகளில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் வலோற்காரமாக புலிகள் இயக்கத்தில் இணைக்கப்பட்டு தற்கொலைதாரிகளாக , ஆயுதபாணிகளாக மாற்றப்பட்டு அழிக்கப்பட்ட பொழுதும் இவர்(கள்) வாய் திறக்கவில்லை , இப்பொழுது 12,000 பேரும் யுத்தம் முடிவுக்கு வராதிருந்தால் , யுத்தத்தில் மடிந்திருந்தால், இந்த சுவாமிநாதன் போன்றோர் வடக்கில் அடையாளமே தெரியாமல் போயிருப்பார்கள். இங்கே ஒரு சாம்பிளுக்கு இரண்டு புகைப்படங்களை பதிவில் இடுகிறேன். அழிப்பதற்கும் , அழிவதற்கும் தயாராய் இருக்கும் பெண்களும், அழிந்துபோன துயரங்களை சுமக்கும் பெற்றோரும்! .புலிகளின் தோல்வியும் யுத்தத்தின் முடிவும் ஆயிரக்கணக்கான மனித உயிர்களை அழிவிலிருந்தும்  காப்பாற்றியிருக்கிறது

1 comment:

  1. தேனீயில் படித்தேன்.அருமையான கட்டுரை முழுக்க உண்மை.

    ReplyDelete

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...