“மே 18″ இனப்படுகொலை நாளா? இனவிடுதலை நாளா? – சடகோபன்


yumh(1)மே 18 சினிமா தடல்புடலாக ஓடிக்கொண்டிருக்கிறது. பனைமரக்காட்டுப் பாடகி ஜெசிக்கா சினிமா, ஓடி முடிந்து, மயூரன் மரணதண்டனை சினிமா, இப்போது மே 18 சினிமாவுடன் புங்குடுதீவு மாணவி விந்தியாவின் சினிமா கலந்து தடல் புடலாக அனல் பரப்பிகொண்டிருக்கிறது. அடுத்தவன் சாவில் வாழும் கூட்டம். விந்தியாவின் கொலைக்கு பக்கம் பக்கமாக கண்டனங்கள். இதிலும் அரசியலை இணைத்து “பிணங்காசிறி” இணையதளம் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டிருக்கிறது. இன்று யாராவது இறக்கவேண்டும் என்று தொலைபேசியை எதிர்பார்த்துக் கொண்டே பிழைப்புக்காக ஏங்கும் ஒரே ஒரு இணையதளம் சாவிலும் வாழும் “பிணங்காசிறி.கொம்”

குருநகர் மாணவி கொன்சலீற்றா இறந்தபோது கூட்டமைப்பு அந்தப்பக்கமே தலை காட்ட்ட்டவில்லை. மாணவி விந்தியாவின் மரணவீட்டில் சிறீதரன் முழங்குகிறார். இந்தக் கொலை ஒரு தனிப்பட்ட கொலை.அதற்கு அரசியல் சாயம் பூசி ஆதாயம் தேட முற்படுகிறது. கூட்டமைப்பு.  மே 18, விந்தியா கொலை என்று அழுகின்ற கூட்டம் புலிகளால் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு கணடனம் தெரிவித்ததுண்டா?செல்வி, சரோஜினி யோகேஸ்வரன்,ராஜினி திராணகம, ரேலங்கி செல்வராஜா,பவளராணி,ராஜினிதேவி,மகேஸ்வரி வேலாயுதம், என்று அடுக்கடுக்கா பெண்கள் புலிகளால் கொல்லப்பட்டபோது இப்படிக் கண்டனங்கள் எழவில்லை. ஆர்ப்பாட்டங்கள் நடக்கவில்லை. கச்சான் விற்றுக்கொண்டிருந்த பெண்ணும், இராணுவத்துடன் தொடர்பு என்று பொம்மைவெளியில் வைத்து தமிழ்ப்பெண் துரத்தித் துரத்தி புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டபோது   எவர் கண்களுக்கும் அது கொலையாகப் படவில்லை. வன்னியில் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்து புலிகள் யுத்தம் செய்த போது அதற்கு எதிராக கண்டனங்களோ ஆர்ப்பாட்டங்களோ இடம்பெறவில்லை.
இன்று விந்தியாவுக்காக எங்கெங்கோ மூலை முடுக்கெல்லாமிருந்து கண்டனக்கள் ஆர்ப்பாட்டங்கள்,அஞ்சலிகள் இடம்பெறுகின்றன. குருநகர் கொன்சலீற்றா மரணத்தில் பாதிரிமார்கள் சம்பந்தப்பட்டிருந்ததனால் பாதிரிமார்களின் ஆதரவை இழக்கக்கூடாது என்ற காரணத்தினால் அதைபற்றி கூட்டமைப்பு உட்பட யாரும் கண்டுகொள்ளவில்லை.
மே 18 இனப்படுகொலை நாளாம்! பிரபாகரன் அயுதம் ஏந்திய நாள் முதல் தமிழர்கள் கொல்லப்பட்டுகொண்டிருந்தார்கள். 83ம் ஆண்டு ஜூலை மாதம் புலிகள்  திருநெல்வேலியில் இராணூவத்தினர் 13 பேரை கண்ணிவெடி வைத்துக் ஒன்ற நாளில் மினிபஸ்சில் வந்த மாணவர்கள் மானிப்பாயில் வைத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டர்கள்.  பூவரசங்குளம், வல்வெட்டித்துறை நூல்நிலையம், குமுதினிப்படகு என்று பல இடங்களில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் இறப்பது அன்றே ஆரம்பித்தது  புலிகள் இந்திய அமைதிப் படையுடன் ஆரம்பித்த ஒரு கண்மூடித்தனமான ஒரு வலிந்த  யுத்தத்தில் கொத்துக் கொத்தாக தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டார்கள். இந்திய இராணுவத்துக்குத் துணையாக இருந்த இயக்கங்களும் தமிழ் மக்களைக் கொன்றனர். அந்த இயக்கங்களும் இன்று மே 18 இனப்படுகொலை என்று நினைவு கூருகிறார்கள்.
மே 18ல் தமிழர்கள் கொல்லப்படவில்லை. பிரபாகரன் உட்பட புலிப்பயங்கரவாதிகள்தான் கொல்லப்பட்டார்கள். உண்மையிலே மே 18 இனப்படுகொலை என்ற பெயரில் பிரபாகரன் சரணடைந்து இராணுவத்தால் கொல்லப்பட்டதை ஒப்புக்கொள்ள மறுக்கும் கூட்டத்தால் பிரபாகரனுக்குச் செய்யும் மறைமுக அஞ்சலியாகும்.
புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழ்ப் பிரதேசங்கள் இருந்த வேளையில் தமிழ் மக்கள் பல சித்திரவதைகளை அனுபவித்தார்கள். 90ம் ஆண்டு  இந்திய இராணுவம் வெளியேறியபின்  இடத்தைப் பிடித்துக்கொண்ட புலிப்பயங்கரவாதிகள் அனுருத்ர ரத்வத்தை அடித்த அடியில் குடாநாட்டை விட்டு ஓடி வன்னிக்குள் சென்று முடங்கிக்கொண்டார்கள். அன்றிலிருந்து 2009 மே 18  மாதம் வரை தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். பலர் தென்னிலங்கையில் சிங்களப் பகுதிகளில் சென்று குடியேறினனர்கள். மாற்றுக் கருத்தாளர்களும், மாற்று இயக்க உறுப்பினர்களும். அஞ்ஞாதவாசம் சென்றார்கள். நாளாந்தம் தெருத் தெருவாக பிணங்கள். புலிகளை எதிர்த்தவர்கள் வதைமுகாம்களில் வதைக்கப்பட்டார்கள். கொல்லப்பட்டார்கள். பல தமிழர்கள் காணாமல் போனார்கள்.
அமிர்தலிங்கம்,யோகேஸ்வரன் போன்று தென்னிலங்கையில் சில கொலைகளைச் செய்துகொண்டிருந்த புலிகள்2002 ல் ரணிலுடனான சமாதான காலத்தில்  தென்னிலங்கையில் இன்னும் வேரூன்றி பரவலான கொலைகளைப் புரியத் தொடங்கினார்கள்.. தென்னிலங்கையில் வாழ்ந்த மாற்று இயக்கத்தவர்களையும், ஊடகவியலாளர்களையும் புலிகள் தேடித்தேடிக் கொன்றனர். கேதீஸ் லோகநாதன், நீலன் திருச்செல்வம்,லக்ஸ்மன் கதிர்காமர், பாலநடராஜ ஐயர், ரேலங்கியும் கணவர் செல்வராஜாவும்,ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை என்று  இன்னும் பல தமிழர்களும்  சிங்களவர்களும். புலிகளால் தென்னிலங்கையில் கொல்லப்பட்டார்கள். புலிகளின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து ஒரு தடவை காயமடைந்து தப்பிய ஐக்கிய தேசியக் கட்சி எம்பி மகேஸ்வரன்  இரண்டாவது தடவை புலிகளின் கொலை முயற்சியிலிருந்து தப்ப முடியவில்லை.
தென்னிலங்கையில் புலிகளின் தற்கொலைத் தாக்குதல்கள், கண்ணிவெடித் தாக்குதல்களால் நாளாந்தம் தமிழர்கள் உட்பட கொல்லப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அமைச்சராகவிருந்த டக்ளஸ் தேவானந்தாவைக் கொல்ல புலிகள் மனித வெடிகுண்டுகளை அனுப்பிகொண்டிருந்தார்கள். கொழும்பு நகரப் பகுதிகளில் வேலை செய்யும் கணவன் மனைவிகள் புலிகளின் வெடிகுண்டுத் தாக்குதலின் அச்சம் காரணமாக ஒன்றாக ஒரே பஸ்சிலோ,ரெயிலிலோ வேலைக்குச் செல்லாமல் யாராவது ஒருவராவது மிஞ்சவேண்டும் என்ற காரணத்தால் தனித் தனியாக வேலைக்குச் சென்றார்கள். பஸ்களில்,பஸ்நிலையங்களில் வெடிகுண்டு,ரெயில்களில்,ரெயில் நிலையங்களில் சந்தைகளில், மதவழிபாட்டு ஸ்தலங்களில், மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் புலிகளின் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன, தென்னிலங்கையில் மட்டுமல்ல வடக்கிலும் கிழக்கிலும் புலிகளின் பிஸ்டல் குழுக்களின் கொலைகள்,குண்டுவெடிப்புகளும் தொடர்ச்சியாக இடம்பெற்றன. குழந்தைகள் பெண்கள் உட்பட தமிழர்கள் பலர் கொல்லப்பட்டார்கள்.  கொழும்பிலிருந்து பலாலி சென்று கொண்டிருந்த லயன் எயர் விமானத்தை இரணைதீவில் வைத்து புலிகள்  சுட்டுவீழ்த்தி தமிழர்களைக் கொன்றதை மே 18 இனப்படுகொலை நாள் கொண்டாடும் கூட்டத்திற்கு நினைவில்லையா? திருநெல்வேலியில் இடம்பெற்ற புலிகளின் மனித வெடிலுண்டுத் தாக்குதலில் யாழ் ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் கோண்டாவிலைச் சேர்ந்த ஒரு குடும்பஸ்தர் கொல்லப்பட்டார். இன்னொரு கிளேமோர்த் தாக்குதலில் டொன் பொஸ்கோ கல்லூரி மாணவன் ஒருவன் கொல்லப்பட்டான். அவன் தந்தையார் காயமடைந்தார். புலிகளின் இனப்படுகொலையை நாள் முழுக்க எழுதிக் கொண்டிருக்காலாம்.
கொலைகளுக்கப்பால்  புலிகளார் மக்கள் நாளாந்தம் சித்திரவதைகளை அனுபவித்தார்கள். கொழும்பு யாழ்ப்பாணம் செல்லும் பயணிகள் வன்னியூட்டகச் செல்லும்போது அனுபவித்த சித்திரவதைகள் கொஞ்ச நெஞ்சமல்ல! அடையாள அட்டை,பாஸ்முறை,சோதனைச் சாவடிகள். கைதுகள், காணாமற்போதல் அதற்கு மேலாக வரி, கப்பம். வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் வன்னியூடாகச் செல்ல அஞ்சினார்கள். யாழ்ப்பாணதில் வசிக்கும் மக்கள் வன்னிக்குச் சுதந்திரமாகச் செல்ல முடியாது. வன்னி மக்கள் யாழ்ப்பாணத்திற்குச் சுதந்திரமாகச் செல்ல முடியாது. புலிகளிடம் விசேட அனுமதி பெற வேண்டும். அதுவும் அனுமதி எல்லோருக்கும் கிடையாது. வட்டக்கச்சிக்கு செல்ல அனுமதி பெற்றவர் உடையார்கட்டுக்குச் செல்ல முடியாது.  பிள்ளைப் பேற்றிற்காக மனைவியுடன் அனுராதபுரம் செல்ல கணவனுக்கு புலிகள் அனுமதி வழங்கவில்லை. அனுராதபுர ஆஸ்பத்திரியில் மனைவி இறந்துவிட்டாள். அதன் பின்னர்தான் புலிகள் கணவனுக்கு அனுமதி கொடுக்க கணவன் சென்று குழந்தையை எடுத்துவந்தார். இப்படி ஏகப்பட சித்திரவதைகளை புலிகள் காலத்தில் தமிழ் மக்கள் அனுபவித்து வந்தனர். அந்தச் சித்திரவதைகளை அனுபவித்தவர்களுக்குத்தான் மே 18ன் அருமை விளங்கும்.
புலிகள் அழிந்த மே 18 2009 ம் ஆண்டிற்குப்பிறகு  தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். வட கிழக்கின்  முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் யாழ்ப்பாணத்தில் சுதந்திரமாக உலவுகிறார். அவர் போன்று புலிகளின் கொலை அச்சுறுத்தலால் அஞ்சாத வாசம் புரிந்த மாற்று இயக்க உறுப்பினர்கள் தங்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று  நிம்மதியாக வாழுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் ஆயுதங்கள் அடக்கப்பட்ட மே 18 தான்.
தமிழர்கள் மட்டுமல்ல சிங்கள மக்கலூம் உயிர் அச்சமின்றி நாடெங்கும் நிம்மதியாகச் சென்று வருகிறார்கள். 30 வருட போரினால் வடக்கு கிழக்கு, தெற்கெங்கும் மக்கள் உடல் சிதறி இறந்திருக்கிறார்கள்.அழிந்த அனைத்து அப்பாவி மக்களும் நினைவு கூரப்படவேண்டியவர்கள். அதில் தமிழர் ,சிங்களவர், முஸ்லிம்களும் அடங்குவர். அது மே மாதம் 18 அல்ல. மே மாதம் 18 தமிழினம் விடுதலையடைந்த நாள். பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டப்பட்ட நாள், பாசிசப் புலிகளின்  பிடியிலிருந்து வன்னி மக்கள் மீட்கப்பட்ட நாள். தமிழ் மக்களை சுதந்திரமாக பேச வைத்த நாள். அது மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட வேண்டிய இன் விடுதலை நாள்.
Source:  http://salasalappu.com/?p=93131#more-93131


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...