"ஆளும் ஜனாதிபதித் தேர்தலும் எதிர் கட்சிகளின் கொள்கை நிலைப்பாடும் " -VAANAVIL ISSUE – 45 SEPTEMBER 2014

.நநாh நாட்டில் அடுத்த ஆண்டு (2015) முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம் என்ற செய்திகள் வெளிவந்துள்ள சு10ழலில்ää பிரதான அரசியல் கட்சிகள் அதற்கான ஆயத்த வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 
தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாமா என்ற வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்ற போதிலும்ää ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக அவரே போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 



எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது இன்னமும் தீhமானிக்கப்படவில்லை. 
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிடுவார் என அக்கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். தங்களது முடிவை ஏனைய எதிர்க்கட்சிகள் ஏற்று தமக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர். 
ஐ.தே.கவின் முடிவை ஜே.வி.பி ஏற்கவில்லை என அக்கட்சி திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. அவ்வாறு ஐ.தே.கவின் வேட்பாளரை ஜே.வி.பி ஆதரிக்குமாயின்ää அது ஜே.வி.பியின் அரசியல் தற்கொலையாக முடிந்துவிடும் என அக்கட்சிக்குத் தெரியும். 
ஜனநாயக கட்சியின் தலைவரும்ää முன்னாள் இராணுவத் தளபதியுமான
சரத் பொன்சேகாவும் ஐ.தே.க வேட்பாளரை பொது வேட்பாளராக ஏற்க முடியாது என அறிவித்துள்ளார். 

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்கும் என்பது அறிவிக்கப்படாத போதும்,  அவர்கள் யாரை எதிர்த்து அல்லும் பகலும் அரசியல் நடாத்தி வருகின்றார்கள் என்பதை வைத்தும்,  கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் யாரை ஆதரித்தார்கள் என்பதை வைத்தும், அவர்கள் முடிவு என்னவாக இருக்கும் என்பதை ஊகிப்பது ஒன்றும் கடினமான விடயம் அல்ல. அவர்களது நிலைப்பாடு வழமை போல தங்கள் தலையில்
தாங்களே மண் அள்ளிப்போடும் செயல் என்ற போதிலும்ää அது தனியாக ஆராயப்பட வேண்டும். 


ரணில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும் என அவரை லண்டனில் சந்தித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் வலியுறுத்தியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 
ரணிலை பலரும் விரும்பாததிற்கு காரணம்ää தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்கொள்ளக்கூடிய அளவுக்கு அவர் ஒரு தகுதியான வேட்பாளர் இல்லை என்பதே காரணமாகும். ரணிலின் தலைமைத்துவத்தின் கீழ் ஐ.தே.க சுமார் இரண்டு டசின் தேர்தல்களில் தோல்வியைக் கண்டுள்ளது. 
இந்த நிலைமையில்ää எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு பொது
வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தலாம் என்ற கருத்து சில தரப்புகளால்; முன் வைக்கப்படுகிறது. அதற்கு எல்லா எதிர்க்கட்சிகளும் சம்மதிக்குமா என்பது ஒருபுறமிருக்கää யார் அந்த பொது வேட்பாளர் என்ற கேள்வியும் இருக்கின்றது. 

நேரடியாக கட்சி சார்பற்றவர்கள் என்ற ரீதியில், முன்னாள் பிரதம நீதியரசர்களான சரத் என் டி சில்வாää சிராணி பண்டாரநாயக்க என்பவர்களின் பெயர்களும்ää சில பௌத்த மத குருமார்களின் பெயர்களும் பிரஸ்தாபிக்கப்படுகின்றன. இதில் ஒரு நகைச்சுவை அம்சமாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பெயரையும் யாரோ பிரஸ்தாபித்துள்ளனர். இவர்களில் சிராணி பண்டாரநாயக்க மீது நீதிமன்றங்களில் வழக்குகள் இருப்பதால் அவர் போட்டியிடுவது சாத்தியமில்லை. 

இவையெல்லாம் ஒருபுறமிருக்கää முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாää ஐ.தே.க தலைவர் ரணில் உட்பட எதிர்க்கட்சிகள் சார்பாக பிரஸ்தாபிக்கப்படும் யாரும் புலிகளை ஒழித்துக்கட்டியதற்கான பெருமையில் பங்கெடுக்க தகுதியில்லாதவர்களாகவே இருக்கின்றனர். அந்த தகுதி ஒரேயொரு நபரான மகிந்த ராஜபக்சவுக்கு மட்டுமே உள்ளது. ஏனெனில் கடந்த தேர்தல்கள் மட்டுமின்றி, எதிர்காலத்தில் நடைபெறப்போகும் தேர்தல்களில் புலிகளின் மீதான வெற்றிப் பெருமை கணிசமான செல்வாக்கைச் செலுத்தப் போகின்றது. ரணிலைப் பொறுத்தவரை சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் அவர் ஒரு ‘இனத் துரோகி’ என்ற படிமமே ஆழமாக வேரூன்றியுள்ளது. எனவே அவர் போட்டியிட்டால் அவரது கட்சி உறுப்பினர்களைத் தவிர, சாதாரண சிங்களப் பொதுமக்கள் யாருமே அவருக்கு வாக்களிக்கமாட்டார்கள். 

சமீபத்தில் நடந்து முடிந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் வாக்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதை அடுத்து எதிர்க்கட்சிகள் பலவற்றுக்கும்,  இலங்கையில் தமக்குச் சாதகமான ஒரு ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என விரும்பும் மேற்குலக சக்திகளுக்கும் ஒரு சிறிய நம்பிக்கை

ஏற்பட்டிருப்பதை அவதானிக்க.முடிகிறது. ஆனால் ஊவா மாகாணசபை தேர்தல் முடிவை ‘ஓரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்ற கணக்கில் எடுக்க முடியாது  ஏனெனில்ää ஊவா மாகாணத்தில் கணிசமான மலையக தமிழ் மக்களும் வாழ்கின்றாhகள். அவர்களை காலம் காலமாக ஐ.தே.கவுக்கு வாக்களிக்க வைத்து காலஞ்சென்ற சௌமியமூர்த்தி தொண்டமான் பழக்கியிருப்பதால்ää அவர்கள் அந்தப் பழக்க தோசத்தில் ஐ.தே.கவுக்கே வாக்களிப்பது வழமை. அத்துடன் ஊவாவின் தலைநகரான பதுளையின் தேர்தல் தொகுதிää கொழும்பின் பொரளை தேர்தல் தொகுதிää கண்டி தொகுதி என்பன ஐ.தே.க மோசமாகத் தேர்தல் தோல்விகளைத் தழுவிய காலத்திலும் அக்கட்சிக்கு கைகொடுத்த தொகுதிகளாகும். கடந்த கால தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து பார்த்தால் இது தெரிய வரும். எனவே ஊவா முடிவுகளை வைத்து எதிர்கக்ட்சிகள் ‘அவலை நினைத்து உரலை இடித்தால்’ ஏமாற்றமே மிஞ்சும். 

மறுபக்கத்தில்,  ஊவாவில் ஆளும் கட்சிக்கு கிடைத்த வெற்றியும்,  ‘விழுந்தும் மீசையில் மண் படாத’ வெற்றிதான். ஆளும் கட்சி ஊவாவில் வெற்றி பெற்றாலும்,  அதன் வாக்கு வீழ்ச்சி அரசின் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியையும் கோடிகாட்டி நிற்கிறது. ஊவா மட்டமின்றி,  ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சொந்த ஊரை உள்ளடக்கிய தென் மாகாணசபைத் தேர்தலிலும் முந்திய தேர்தலை விட 10 சதவிகித வாக்கு வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததைக் காண முடிந்தது. புலிகள் மீதான வெற்றி மாயைக்கு அப்பால்,  ஏதோ ஒரு வகையில் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுவதையே இந்த முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. 


இந்த உண்மையை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் உட்பட பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். புலிகள் மீதான யுத்த வெற்றி என்பது மட்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றிகளுக்கு தொடர்ந்தும் உதவப் போவதில்லை என்பதையே இந்த நிலைமைகள் எடுத்தியம்பி நிற்கின்றன. எனவே மக்களின் உண்மையான பிரச்சினைகள் என்ன என்பதை ஆராய்ந்து அவற்றுக்குத் தீர்வு காண்பதிலேயே ஆளும் கட்சியின் எதிர்கால தேர்தல் வெற்றிகள் தங்கியுள்ளன.

முக்கியமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேலைத் திட்டமான ‘மகிந்த சிந்தனை’யின் உள்ளடக்கம் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை என்பது அரசாங்கத்தில் உள்ளவர்களில் ஒரு பகுதியினரின் கருத்தாகும். அத்துடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் சம்பந்தமான அறிக்கையையும் அரசாங்கம் பூரணமாக நிறைவேற்றவில்லை என்ற கருத்தும் நிலவுகின்றது. அதுதவிர,  மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவது சம்பந்தமான 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப ; படுத்தாது அரசாங்கம் இழுத்தடிக்கிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. 

இந்த மூன்று விடயங்களும் நாட்டின் எல்லா இன மக்களையும் பொறுத்தவரை முக்கியமானவையாகும். தற்போதைய ஜனாதிபதிக்கு இன்னமும் எஞ்சி இருக்கின்ற 2 வருடங்களையும் இந்த விடயங்களை நடைமுறைப ; படுத்துவதற்குப் பயன்படுத்திவிட்டுää ஜனாதிபதி தேர்தலுக்குப் போனால்ää மக்களின் ஆதரவு போதியளவு இருக்கும் என்பது,  இடதுசாரிக் கட்சிகளினதும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சில பிரிவுகளினதும் கருத்தாகும்.
 
ஆனால் மாகாணசபைகளில் ஏற்பட்டுள்ள வாக்குச் சரிவை அடிப்படையாகக் கொண்டும்ää எதிர்க்கட்சிகள் தமக்குள் ஒரு உடன்பாட்டுக்கு வருவதற்கு கால அவகாசம் கிடைக்காமல் செய்தும்,  ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடாத்துவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார் எனத் தெரிகிறது. அவர் எண்ணுவது போல ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாகக் காணப்படுவது உண்மைதான். ஆனால் அது கொள்கையின் அடிப்படையிலான அல்ல. சந்தர்ப்பம் சூழ்நிலைகளின் அடிப்படையாலனது.
  
இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் அரசின் மீதான பிரதான குற்றச்சாட்டுகளாகää மகிந்தவின் குடும்ப ஆட்சிää அராஜகம் . ஊழல், ஊடக சுதந்திர மறுப்பு போன்ற பிரச்சினைகளே இருக்கப் போகின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஜனநாயக ஆட்சி முறைமை, இனங்களின் ஐக்கியம் போன்ற விடயங்கள் பேசப்படப் போவதில்லை. அப்படிப் பேசினாலும்,  ஐ.தே.கவின் 1977 முதல் 1994 வரையிலான 17 வருட கொடுங்கோல் ஆட்சியை மக்கள் மறந்து அக்கட்சிக்கு வாக்களிக்கப் போவதில்லை. அதற்கும் மேலாக அக்கட்சி அமெரிக்கா தலைமையில் மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக மேற்கொண்டு வரும் செயல்களுக்கெதிராக   செயல்படப் போவதில்லை என்பதும் மக்களுக்குத் தெரியும். 

ஆளும் கட்சியைப் பொறுத்தவரை,  நடக்கப் போகும் ஜனாதிபதித் தேர்தலிலும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை விட, புலிகள் மீதான யுத்த வெற்றி,  இலங்கை மீதான மேற்கு நாடுகளின் மிரட்டல், புலிகளின் மீள் எழுச்சி அபாயம், பிரிவினைவாத சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாத்தல் போன்ற தேசியவாதத்தை உசுப்பிவிடும் விடயங்களே ஆளும் கட்சியின் பிரதான பேசுபொருளாக இருக்கப் போகின்றன. இந்த அபாயங்கள் குறைத்து மதிப்பிடக்கூடியவை அல்ல என்பது உண்மையே. ஆனால் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவமோää அதற்கான தீர்வோ இல்லாமல் இந்த விடயங்களை மட்டுமே முன்னிறுத்தி,  ஆளும் கட்சி தேர்தலை எதிர்நோக்கினால் , அது மீண்டும் ‘விழுந்தும் மீசையில் மண் படாத’ வெற்றியாகவே இருக்கும்.
 
எனவே ஆளும் கட்சியோää எதிரணியோ தாம் ஆட்சிக்கு வந்தால்ää என்னென்ன விடயங்களை நாட்டின் நன்மை கருதி முன்னெடுப்பார்கள் என்பதை நாட்டு மக்களின் முன்வைத்துää பரந்தளவிலான விவாதத்துக்கான சு10ழலை உருவாக்குவதற்கு,  கல்விமானகள்,  அறிவுஜீவிகள்,  சமூகச் செயற்பாட்டாளர்கள்,  சமயத் தலைவர்கள், வெகுஜன அமைப்புகள் என்பன வ லியுறுத்த வேண்டும
Source: VAANAVIL      ISSUE – 45        SEPTEMBER 2014

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...