கொன்றதும் கொல்லப்பட்டதும் கொல்லத்தூண்டியதும் புலியே = தமிழரசுக்கட்சியே - வடபுலத்தான்


மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளத்தில் கடந்த 12.11.2014ஆம் திகதி விடுதnaguleswaranலைப் புலிகளின் காவல்துறையில் இருந்து புனர்வாழ்வு பெற்ற நகுலேஸ்வரன் என்பவர் இனந்தெரியாதவர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இந்தக் கொலைக்கான காரணங்கள் என்ன என்று உடனடியாக யாருக்கும் தெரியவில்லை, ஏன் இப்போது கூட அவை பற்றி முழுமையான அறிக்கைகள் வெளிவரவில்லை.
இந்தக் கொலையை யார் செய்தார்கள் என்று அடையாளம் காணப்படவும் இல்லை.

ஆனால் இந்தக் கொலைக்கு அரசாங்கமும், படைத்தரப்புமே பொறுப்புச் சொல்ல வேண்டும் என்று தமிழரசுக்கட்சியினரும் அவர்களுடைய சகபாடிகளும் உடனடியாகவே அறிக்கைகளை விடத்தொடங்கி விட்டார்கள். 

போதாக்குறைக்கு இந்தக் கொலையை படைத்தரப்பினரே செய்த மாதிரியும் ஒரு கதையை மக்களிடம் பரப்பினர். கொல்லப்பட்டவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட சிவசக்தி ஆனந்தன் எம்.பியோ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் ஊகச் செய்தியாளர்கள் இந்தக் கொலையைப் பற்றி தங்களுடைய கற்பனைக்கு எட்டியவரை விதவிதமாக எழுதினார்கள்.
ஊரெல்லாம் கண்டபடி வதந்திகள் தலைவிரித்தாடின.

உண்மையில் முன்னாள் போராளிகள் என்று சொல்லப்படும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் பலர் கலங்கித்தான் போனார்கள்.

இப்படி சமூகத்தை பதற்றமடைய வைப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்களே தான்.

ஆதாரமற்ற செய்திகளைப் பரப்புவதில் பலே கில்லாடிகள்.
உண்மைகளை அறிய முதலே ஒன்றைப்பற்றி பொறுப்பற்றுக் கதைப்பதற்கு தமிழரசுக்கட்சியை விட வேறு எந்தக் கெட்டிக்காரரும் இல்லை.

கொல்லப்பட்டவர் புலிகளின் அமைப்போடு தொடர்பாக இருந்தவர் என்பதால் எதிர்த்தரப்பாகிய படையினர் தான் இந்தக் கொலையோடு தொடர்புபட்டிருக்கலாம் என்று ஒரு சமன்பாட்டிற்கு வந்துவிட்டார்கள்.

ஆனால் இந்தக் கொலை நடந்து மூன்று நாட்களுக்கு உள்ளேயே இதன் பின்னணியைப் பற்றிய செய்திகள் வேறு விதமாக வெளிவரத் தொடங்கியிருக்கினற்றன.

இந்தக் கொலை தனிப்பட்ட நலன்களுக்காக படைத்தரப்பு அல்லாதர்களால் செய்யப்பட்டதாகவே தெரிகிறது.

இந்தச் செய்தியையும் இதே உதயன் பத்திரிகையே வெளியிட்டுள்ளது.

இந்தக் கொலையோடு ஒரு கிராம அலுவலர், பிரதேச செயலர் உட்பட வேறு இருவரும் சம்மந்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனைப் பொலிஸ் தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரதேச செயலரும், கிராம அலுவலரும் இணைந்து செய்துகொண்டிருந்த மோசடிகளுக்கு எதிராக கொல்லப்பட்ட நகுலேஸ்வரன் என்பவர் செயற்பட்டதற்காகவே அவர் பழிவாங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இப்பொழுது இந்தச் சந்தேக நபர்கள் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தக் கொலையைச் செய்வதற்கு குறிப்பிடப்படும் பிரதேச செயலரும், கிராம அலுவலரும் யாரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றால் இன்னொரு முன்னாள் போராளியையே.

இந்த பிரதேச செயலரும், கிராம அலுவலரும் தமிழரசுக்கட்சியின் விசுவாசிகள் எனவும் தெரிய வருகிறது.

கொல்லப்பட்டவரும் முன்பு புலிகளின் காவல்துறையில் இருந்தவர்.

பின்னர் தமிழரசுக்கட்சியின் ஆதரவாளராக இருந்தவர் என்று அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அறிவித்திருக்கின்றார்கள்.

ஆகமொத்தத்தில் கொல்´லப்பட்டதும் புலி. கொன்றதும் புலி. கொலைக்குக் காரணமாக இருந்ததும் புலி ஆதரவாளர்களே.

அதாவது கொல்லப்பட்டவர் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர். கொன்றவரும் அதனுடைய ஆதரவாளர். கொலைக்குக் காரணமானவர்கள் தமிழரசுக்கட்சியின் தூண்கள்.

ஒன்றுக்குள் ஒன்றாக எல்லாம் நடந்திருக்கிறது.

ஆனால் இதை திசைதிருப்பி, உண்மையை மறைத்து, உலகத்தின்கண்களில் மண்ணைத்தூவி, எல்லோருடைய காதுகளிலும் வழமையைப் போல பூவைச் செருகுவதற்குத் தமிழரசுக்கட்சி முயற்சித்திருக்கின்றது.

இதுதான் தமிழரசுக்கட்சியின் பாரம்பரிய குணமே. 

http://www.thenee.com/html/221114-3.html

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...