சர்க்கஸ்
பார் விளையாட்டில் மறுபுறத்தில் தாங்கிப்பிடிக்க ஒரு பங்காளர் இல்லாமலும்
கீழே ஒரு பாதுகாப்பு வலை இல்லாமலும் மைத்திரிபால சிறிசேன காற்றில் போடும்
குத்துக்கரணம்
- கலாநிதி. தயான் ஜயதிலகா
“அரசியல் பாதையின் சரியானவை அல்லது பிழையானவை தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றன” – மாவோ (1971)
மாவோ சே துங்கின் சிந்தனைகளின் ஒரு முன்னாள் மாணவர் என்ற வகையில்
மைத்திரிபால சிறிசேன மாவோவின் கருத்தான “அரசியல் பாதையின் சரியானவை அல்லது
பிழையானவை தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றன” என்பதை நினைவுபடுத்திக்
கொள்ளலாம். மேலும் இதில் மாவோ தவறிழைத்துள்ளார் என அவர் ஓரளவுக்கு நம்பவும்
கூடும்,ஏனெனில் மிகைப்படுத்தாமல் சொல்வதானால் சிறிசேன பிரச்சாரம் இதுவரை
அதன் சரியான அரசியல் பாதையில் செல்லவில்லை. இது மார்க்கசிய பாரம்பரியத்தில்
வந்த ஒரு அரசியல் விஞ்ஞானியின் வார்த்தைச்; சிலம்பம் போலத் தோன்றலாம்,
ஆனால் அது அப்படியல்ல. திரு.சிறிசேனவின் அரசியல் பாதையின் தவறுகள் அல்லது
மாறாக திரு.சிறிசேன தெரிவு செய்து பின்பற்றிவரும் அரசியல் பாதை,
நிறுவனத்துக்கு – சகோதரத்துவத்துக்கு – ஒரு ஆபத்தான பாதையை திறக்கிறது, ஒரு
எதிர் சீர்திருத்தம் ஒன்றை தொடங்க முற்படும்போது மைத்திரிபாலவின் தைரியமான
எழுச்சியினால் திறந்து வைத்த பெறுமதிமிக்க அரசியல் இடைவெளியை அது
முடக்குவதுடன் அதன் திறனையும் பின்னோக்கி நகர்த்துகிறது.
அரசியல்
பாதையின் தவறுகளில் தீவிர மூலோபாயமிக்க தவறாக உள்ளது நிறைவேற்று அதிகாரம்
கொண்ட ஜனாதிபதி முறையை விரைவாக ஒழிப்பதாக எதிர்க்கட்சி வேட்பாளர்
வழங்கியுள்ள வாக்குறுதிதான். ஒரு அரசியலமைப்பை சீர்திருத்தம் செய்ய அல்லது
இல்லாதொழிக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அரசியலமைப்பு வழிமுறை மற்றது
மேலதிக அரசியலமைப்பு. மைத்திரிபாலவின் அரசியலமைப்பு மாற்றம் பற்றிய நூறு
நாள் திட்டம் அரசியலமைப்பு நடவடிக்கையின் கட்டமைப்புக்கு அப்பாற்பட்டதாக
உள்ளது. அது மேலதிக அரசியலமைப்பு, உண்மையில் அரசியலமைப்புக்கு விரோதமானது.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு உரிய அரசியலமைப்பு பாதையின்படி அதை
நிறைவேற்ற பாராளுமன்றத்தில் முன்றில் இரண்டு பெரும்பான்மை, உச்ச நீதி
மன்றத்தின் அனுமதி மற்றும் ஒரு சர்வசன வாக்கெடுப்பு என்பன தேவையாக உள்ளன.
தற்போதுள்ள
அரசியலமைப்புக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த ஒரு நகர்வும்
அரசியலமப்புக்கு விரோதமான வழிகளாகும், இது உச்ச நீதி மன்றத்தில் ஒரு சவாலை
கிளப்பிவிடும், பாகிஸ்தானைப்போல திட்டமிட்ட வீதி எதிர்ப்பு
ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிவிட்டு அதன் உச்சக்கட்டமாக அரசியலமைப்பை
பாதுகாப்பதற்காக இராணுவத்தை தலையீடு செய்ய அழைக்க நேரிடலாம்
தற்போதுள்ள
அரசியலமைப்பின் ஸ்தாபகரான கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா அதில்
அரசியலமைப்பு மாற்றங்கள் செய்வதற்கு மாறாக வெற்றிகரமான ஒரு தீவிர
தர்க்கவியல் காட்சியை – அதாவது ஒரு விரிசலை – ஏற்படுத்தியுள்ளார் என்று
தோன்றலாம். ஆனால் தற்போதைய கூட்டு எதிரணியினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கும்
விவாதம் முற்றிலும் வித்தியாசமானது. கலாநிதி. டி.சில்வா தனது வாதத்தை மீள் -
ஸ்தாபக கணத்தின் அடிப்படையில் முன் வைத்திருந்தார். அதேவேளை
விவாதத்துக்குரியது என்னவென்றால், அவரது வாதம் மிகவும் உறுதியான ஒன்றாக
இருந்தது. சோல்பரி அரசியல் அமைப்பு முற்றிலும் தேசிய நடைமுறைகளின் ஒரு
உற்பத்தி அல்ல, ஆனால் அது ஒரு காலனித்துவ (ஆலோசனைக்கும் மற்றும்
இடைநிலைக்கும் என்றால்) கட்டமைப்பு அதனால் அது அன்னிய ரகத்தைச் சேர்ந்தது.
எனவே அதை உடைத்து உள்நாட்டுக்கு அமைவான ஒரு அரசியலமப்பை அதாவது மிகவும்
பொருத்தமான ஒரு குடியரசை நிறுவுவது சட்டபூர்வமானது. அவரது இந்த வாதம்
பொருத்தமான ஒன்று.
திரு.சிறிசேனவின்
நூறு நாட்களுக்குள் ஒழிக்கும் வாக்குறதியில் அத்தகைய ஒரு பொருத்தம்
எங்கும் தென்படவில்லை. அது சர்க்கஸ் பார் விளையாட்டில் மறுபுறத்தில்
தாங்கிப்பிடிக்க ஒரு பங்காளர் இல்லாமலும் கீழே ஒரு பாதுகாப்பு வலை
இல்லாமலும் காற்றில் போடும் ஒரு குத்துக்கரணம் போன்றது. அது (ஏற்கனவே
நிறைவேற்றப்பட்ட) குடியரசு ஒன்றில் அடிப்படை மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதைப்
பற்றி முன்மொழியவில்லை மற்றும் அது வெளிப்புறமாக திணிக்கப்பட்ட
அரசியலமைப்பு ஒன்றுக்கு எதிரான ஒரு எழுச்சியுமல்ல. ஜெயவர்தனாவின்
அரசியலமைப்பு சோல்பரி அரசியலமைப்பைக் காட்டிலும் மிக அதிகமாக வேரூன்றி
உள்ளதும் சட்டபூர்வமானதும் ஆகும். எனவே கூட்டு எதிரணியின் விரைவான வழியில்
நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் முயற்சி உண்மையில்
அரசியலமைப்பின் அதிகாரங்களைத் தாண்டியது. சுயாதீனமான வலிமை குறைந்த ஒரு
உச்ச நீதிமன்றத்தின் முன் - தலைமை நீதியரசருக்கு எதிரான குற்றவியல் தண்டனை
மூலம் துல்லியமாக அத்தகைய எதிர்பாரத நிகழ்வுகளுக்காக அது ஏற்கனவே
சிதைவடைந்துள்ளது - இத்தகைய அரசியலமைப்பு சாகசங்கள் நிகழ்த்தும் பொது
வேட்பாளர் இலக்கம்: 2க்கு சில காலங்களுக்கு முன்னர் யுத்த வெற்றி வீரர்
ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்கொண்ட கோரமான வரையறைகளை சந்திக்க நேரிடலாம்.
இதற்கிடையில் குறைப்பிரசவமான இந்த அரசியலமைப்பு புரட்சியின் உண்மையான
சிற்பி பாதுகாப்பாக லண்டனுக்கோ அல்லது பரீசுக்கு வெளியே உள்ள எழில்
கொஞ்சும் இடத்துககோ திரும்பிவிடுவார்.
முட்டாள்தனமான
இந்த 100 நாள் ஒழிப்பு திட்டம் மற்றும் திரு.சிறிசேனவின் அரசியல் மேடை
என்பன சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க மற்றும் அவரது அறிவற்ற போலி
அறிவாளி எடுபிடிகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது என்று தெளிவாகத் தெரிகிறது.
சந்திரிகா மற்றும் ரணில் ஆகியோர் அவர்களுடைய எதிராளிகளான ஆளும்
சகோதரர்களுடன் ஒப்பிடுகையில் தனித்தோ அல்லது ஒருமித்தோ விவேகமுள்ள அரசியல்
புத்திசாதுர்யமான பெரிய உலுக்கல்களை ஏற்படுத்தக் கூடியவர்களல்ல. சந்திரிகா
எப்படி ஜனாதிபதியானார்? முதலில் அவர் தனது தந்தையால் உருவாக்கப்பட்ட
கட்சியை வயதாகி சக்கர நாற்காலியில் அடங்கிப்போன அவரது தாயிடமிருந்து
கைப்பற்றினார்.அது எவ்வளவு கடினமான
து?
இரண்டாவதும் மற்றும் முக்கியமானதும் அந்த நேரத்தில் ஜனாதிபதி போட்டியில்
அவரது பிரதான போட்டியாளரான காமினி திசாநாயக்கா புலிகளின் தற்கொலைக்
குண்டுதாரி ஒருவரினால் கொல்லப்பட்டார். வலிமையான காமினி திசாநாயக்கா அந்த
போட்டியில் தொடர்ந்து நின்றிருப்பாரானால் சந்திரிகா பண்டாரநாயக்கா
குமாரதுங்க ஜனாதிபதி தேர்தலில் ஒருபோதும் வென்றிருக்க முடியாது. மாறாக
பிரபாகரனின் தற்கொலை குண்டுதாரியின் தலையீட்டால் சந்திரிகாவுக்கு, அரசியல்
அனுபவமற்ற சட்டத்தரணியான காமினியின் விதவையான மனைவி சிறிமாவை
எதிர்கொள்ளவேண்டி நேர்ந்தது, சிறிமாவை ஒரு வேட்பாளராக நிற்கும்படி அழுத்தம்
கொடுத்தபோது அவர் ஐதேக வின் ஒரு அங்கத்தவராகக்கூட இருக்கவில்லை. சந்திரிகா
பண்டாரநாயக்கா குமாரதுங்க இரண்டு தவணைகள் ஜனாதிபதியாக இருந்தார்,
ஏனென்றால் ஐக்கிய தேசியக் கட்சியானது படுகொலை அலையில அகப்பட்டு தள்ளாடி
தலைமையற்ற நிலையில் இருந்தது மற்றும் திரு.ரணில் விக்கிரமசிங்கா அதற்கு
தலைமையேற்றிருந்தார்.

மகிந்த
ராஜபக்ஸவை போல கட்சியில் வழக்கமான உயர்வுகள் மற்றும் உட்கட்சி
போராட்டங்களை சந்தித்து திரு.விக்கிரமசிங்க ஐதேக தலைவராகவோ மற்றும்
எதிர்க்கட்சி தலைவராகவோ வரவில்லை. அவரும்கூட தற்போதுள்ள தன்னுடைய நீண்டகால
அரசியல் பதவியை அடைந்திருப்பது ஐதேக தலைவர்களான பிரேமதாஸ, காமினி, லலித்,
ரஞ்சன் போன்றவர்களை வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்ச்சியாக படுகொலை
செய்தபடியால்தான்.
மாறாக,
மகிந்த ராஜபக்ஸ உயர் நிலையை அடைவதற்குத் தேவையான கடும் பணியினை சிறப்பாக
ஆற்றியிருந்தார் மற்றும் ஒருமுறை பழைய கொழும்பின் உயரடுக்கினைச் சேர்ந்த
வல்லமை மிக்க மூர்க்கமான எதிரியாக இருந்த இரண்டு தற்செயல் தலைவர்களை
தோற்கடித்தது அவரது சாதனை என்றே சொல்லவேண்டும். மகிந்த ராஜபக்ஸ மக்களின்
உள்ளப் போக்கினை புரிந்து கொண்டு பேசுபவர். அவர் பொதுமக்களின் உளவியல்
தோற்றத்தை படித்தறிபவர். சரியான இடத்தில் குறி தவறாமல் அடிப்பதின் மூலம்
அவர் இன்னமும் வெற்றி பெற்று வருகிறார்.
மைத்திரிபால
சிறிசேனவும் இதேபோலச் செய்திருக்கலாம். அவரால் இன்னமும் செய்யமுடியும்.
ஆகக் குறைந்தது அந்த நீண்ட பயணத்தை அவரால் ஆரம்பிக்க முடியும். ஆனால் அவர்
தோற்றுப்போன ஒரு முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஒரு முன்னாள் பிரதமர் ஆகியோரின்
மதியீனம், பேராசை மற்றும் கிறுக்குத்தனம் காரணமாக சட்ட அரசியலமைப்பு
என்னும் கண்ணிவெடி புதை நிலத்தில் தடுமாறி விழுந்துவிடக்கூடாது. பரந்த
அளவில் மிகையான இந்த இரண்டு அரசியல்வாதிகளும்தான் திரு.மைத்திரிபால
சிறிசேனவின் மூலோபாய வியுகங்களையும் மற்றும் அரசியல் மேடையையும்
வடிவமைக்கிறார்கள். மண்ணின் மைந்தனும் கண்ணியம் மிக்க ஒரு அபூர்வ மனிதருமான
திரு. சிறிசேன அவர்கள் ,எனக்கு வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த மற்றொரு
மைத்திரிபாலவை நினைவூட்டுகிறார். மைத்திரிபால சேனநாயக்கா, ஸ்ரீலங்கா
ஒருபோதும் கண்டிராத சிறந்த மிதமான முற்போக்குவாதியான பிரதமாராக அல்லது
ஜனாதிபதியாக அவர் இருந்திருப்பார் அவரை அப்படி ஆகவிடாமல் செய்த பெருமை
பண்டாரநாயக்காமார்களையே சேரும்.
நான்
68ம் ஆண்டில் செக்கோஸ்லாவியாவில் நடந்த பிராக் வசந்த தலைமுறையை சேர்ந்தவன்
மற்றும் திரு. சிறிசேன, மற்றொரு அலெக்சான்டர் டுப்செக் ஆகவோ அல்லது இரண்டு
தசாப்தங்களுக்குப் பிறகு அவருக்கு சமமாக மாறிய முன்னாள் சீனப் பிரதமர் சௌ
சியாங் ஆகவோ ஆவதை நான் விரும்பவில்லை. திரு. சிறிசேனவை தியாகம் செய்ய
முடியாது.
நியமனப்
பத்திரம் தாக்கல் செய்யும் தினமான டிசம்பர் 8 க்கு முன்னதாக மைத்திரிபால
மீள் மூலோபாயம், மீள் நிலைப்பாடு, மீள் நோக்கு மற்றும் மீள் கட்டமைப்பு
என்பனவற்றை மேற்கொள்ள வேண்டும். அவர் தன் சொந்த வேர்களை தட்டியெழுப்பி,
தனக்கு உண்மையாக, தனது உண்மையான சொந்தக் குரலில் பேசவேண்டும். எதிர்க்கட்சி
அரசியலுக்குள் நுழைவதற்கும் மற்றும் வேட்பாளராக நியமனம் பெறுவதற்கும்
சந்திரிகா அவருக்கு அனுசரணை வழங்கியிருக்கலாம், ஆனால் அவர் இப்போது
பிரபுத்துவ மருத்துவச்சியை விட்டு விலகி தனது சொந்தப் பாதையில் நடை பயில
வேண்டும், தனது சொந்த மனிதருக்காக வெளிப்பட வேண்டும். மக்களின் மனிதரான
மைத்திரிபால சிறிசேன மக்களுக்காக ஒரு புதிய ஸ்ரீலங்காவை வழங்க வேண்டும்,
அது மக்களினால் மக்களுக்காக இருக்க வேண்டும்.
தேனீ மொழிபெயர்ப்பு எஸ்.குமார்http://www.thenee.com/html/271114-2.html
No comments:
Post a Comment