இவர்கள் இப்படியாக பேசுவது இது முதலுமல்ல கடைசியுமல்ல!= வானவில் புரட்டாதி 2014

ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தனியான நாட்டை அமைப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமல்ல என்று தமிழரசுக்கட்சியின் தலைவரும ; தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா இலங்கை உயர் நீதிமன்றத்தில் 22.09.2014 இல் சத்தியக்கடதாசி ஒன்றினை சமர்ப்பித்துள்ளார். வட்டுக்கோட்டையில்  இற்றைக்கு 38 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில், வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மக்களுக்கு ‘தமிழ் ஈழம்’  என்ற தனியான அரசு உருவாக்கப்பட வேண்டுமென்று பிரகடனப்படுத்தப்பட்டது.அத்துடன் அந்த மாநாட்டில் ‘தமிழ் ஈழ’ அரசென்ற இலக்கு எட்டப்படும்வரை அஞ்சாது போரிடும் படியும் தமிழ்த் தேசிய இனத்துக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கும் அறைகூவல் விடுக்கபப்டட்து. அன்றைய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் முக்கிய இளைய தலைவராக அந்த மாநாட்டில் அங்கம் வகித்த மாவை சேனாதிராசாää இன்றைய தமிழரசுக்கட்சியின் தலைவராகää பிரிவினைக்கு எதிரானவராகää சத்தியக்கடதாசி வாயிலாக தெரிவித்துள்ளார்.  06.09.2014 இல் வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற பொதுச்சபை கூட்டத்தில்  இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக மாவை சேனாதிராசா தெரிவானார். இந்த சத்தியக்கடதாசியினை இலங்கை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு  நான்கு நாட்கள் முன்னதாகää தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டமையை பாராட்டி காங்கேசன்துறை தமிழரசுக்கட்சி கிளையினால் வழங்கப்பட்ட வரவேற்புக ;கூட்டத்தில் உரையாற்றிய மாவை சேனாதிராசா “இன்று எமக்கு போடப்படும் மாலைகளும் பொன்னாடைகளும் எம்மை மேலும் போராடவேண்டும் என்றே தூண்டுகின்றன. போருக்கு செல்வதற்கான தூண்டுதலாகவே அவை அமைக்கின்றன. போருக்கு செல்வதற்கான ஆடை அணிகளாகவே நான் அவற்றைப் பார்க்கின்றேன்” என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் “எமக்கு கிடைக்கப்போகும் தமிழீழம் எங்கு கிடைக்க வேண்டும் என்றால் எமது மண்ணில் தான் கிடைக்க வேண்டும். இதனை விடுத்து நாம் மொழியை இழந்து மண்ணை இழந்து வேறு எங்கும் பெற முடியாது” எனவும் கர்ச்சித்துள்ளார்.   கொழும்பில் ஒன்றை சொல்வதும் வடககு; கிழக்கில ; வேறொன்றை சொல்வதும் என்பது (தமிழ் காங்கிரஸ் தமிழரசுக்கட்சியிலிருந்து இன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வரை) பாராளுமன்ற தமிழ் தலைவர்கள் காலங்காலமாக கடைப்பிடித்து வரும் கேவலமான ஒரு நடைமுறை. 2009 இல் புலிகள் அனைவரும் வழித்துத்துடைத்து அழிக்கப்படுமவ்ரை புலிகளுடன் கூடிக்குலாவிடடு;ää தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களில் சிலர் தாங்கள் ஒருபோதுமே ஆயதப்போராட்டத்தினை ஆதரிக்கவில்லையெனக் கூறிää அகிம்சை வழியில் தமிழர்களின் உரிமைகளை  பெற்றுத் தரப்போவதாக ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசுவார்கள். அத்தோடு நின்றுவிடாது,  ஆயதப்போராட்ட குழுக்களிலிருந்து வந்தவர்களை  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஓரங்கட்ட வேண்டுமென்றும் பகிரங்கமாக கூறுவார்கள். பின்னர் வன்னியை ‘வீரமண்’ என்றும் புலிகளை ‘வீரர்கள்’ என்றும் புகழ் பாடுவார்கள். இது வாக்கு பொறுக்கி அரசியலென நீண்ட காலமாக சொல்லப்பட்டு வருகின்றது.   நான்கு நாட்கள் இடைவெளியில் போர்ää தமிழீழம் என்றும் பின்னர் பிரிவினைக்கு எதிராக நீதிமன்றில் சத்தியக்கடதாசி முடிக்கும் தகிடுதத்தித்தனங்களை பொதுவாகவே பாராளுமன்ற தமிழ் தலைவர்கள் ‘அவசியமாக’ கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறையென தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ள பழகிவிடட்hர்கள். அதாவது சட்டப்பிரச்சனையெனறு; வரும்போது  எதையாவதை சொல்லித் தப்பிப்பதில் தவறேதுமில்லை என்ற மனோபாவம் அங்கீகரிக்கப்படடு;ள்ளது. அதன் காரணமாகத்தான் தாங்கள் வாக்குப்போட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தெற்கில் என்ன பேசுகிறார்கள்ää வடக்கு கிழக்கில் என்ன பேசுகிறார்கள் என்பதனை தமிழ் மக்கள் சீரெடுத்து பார்ப்பதில்லை. 

உண்மையில் ‘தமிழீழம்’ என்பது ஒரு சாத்தியமற்ற கோரிக்கை என்பது எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தில் இருந்து மாவை சேனாதிராசா வரைக்கும் நன்கு தெரிந்த விடயம். ஆனால் அந்த கோரிக்கை வைக்கும்போதுää எவ்வளவு போலியாக அந்த இலக்கை இலகுவாக அடையலாமென தமிழ் இளைஞர்களை தூண்டிவிட்டு நாடகம் ஆடினார்களோää அதே வீச்சில் சற்றும் குறையாமல் அண்மைக்காலமாக மீணடு;ம் நாடகம் ஆடத் தொடங்கி இருக்கிறார்கள். தமிழீழ மாயையில் தூண்டப்பட்டு கால்நூற்றாண்டுக்கு மேல் நீடித்த யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கானோர் மாண்டு ஐந்து வருடங்களே ஆகியிருக்கின்றன. இந்த இழப்புகளின் பின்னராவது  தமிழீழக் கோரிக்கையை முன்வைத்த  சூத்திரதாரிகளுக்கு ஒரு குற்ற உணர்வு வந்திருக்க வேண்டும். நீதிமன்றில் சத்தியக்கடதாசி தாக்கல் செய்ய முன்னர்ää வட்டுக்கோட்டையில் தமிழ் ஈழம் பிரகடனப்படுத்தப்பட்டதற்கு தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக்கோரி, அந்த பிரகடனத்தை எப்போதோ வாபஸ் பெற்றிருக்க வேணடும். 

மூலம் : வானவில் புரட்டாதி 2014

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...