(இறுதிக்கடவுள்) -சுகன்

சூரியதேவன் என்றும் நாம் அவரை அழைத்தோம்
இருளின் சக்கரவர்த்தி என்றும் அழைத்தோம்
பேராபத்தான கடவுள் என்றும்
கல்லையும் உயிர்த்துக் கயவரை அழிக்கும்
கானுறை தெய்வமென்றும் அழைத்தோம் குடும்பத்திலிருந்து ஒருவரைக் கேட்டுக்கொண்டிருந்ததால்
பகாசுதன் என்று அழைத்தோம்பின் நவீனத்துவ நவீனத்துவ வரலாற்று
வரலாற்றுக்கு முன்னான காட்டுமிராண்டி
விலங்குக்காலங்களனைத்தும் புரட்டி
மாற்றிடும் யுகபுருசன் என்றும் அழைத்தோம்
உன்னைப் புதைத்த புதைகுழியிலும் இடிவிழ
என்றும் அவரைச் சபித்தோம்
அவர் அற்புதங்கள் நிகழ்த்துவார் என்று காத்திருந்தோம்
இறந்தோரை உயிர்ப்பிப்பார் என நம்பினோம்
புனைவிற்கும் வெளிக்கும் இருப்பிற்கும் தர்க்கத்திற்கும்
அப்பாலிற்கும் அப்பாலிற்கும் அப்பாலிற்கும் அப்பால்
அவர் இருந்தார்
இன்மையிலும் இருந்தார்
ஓலியலை மின்னலை ஒற்றைத்துகள் எங்கணும்
தன் நாமத்தை அவர் ஒளிரவிட்டார்
அநாதைக்குழந்தையைப்போல அவர் எம்மைத்தொலைத்தார்
அபத்தக்கவிதையைப்போல நாம் அவரைத்தொலைத்தோம்.- சுகன் (இறுதிக்கடவுள்) 2007.

நட்சத்திர செவ்விந்தியனின் முகப் புத்தகத்தில் இருந்து

Comments

Popular posts from this blog

“மறப்போம்! மன்னிப்போம்!! “

“ सत्यमेव जयति “ ( “சத்யமேவ ஜெயதே “ )

"வேர் ஆறுதலின் வலி " - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்