வைகாசியில் வினை விதைத்தவன் வைகாசியிலே வினையறுத்த கதை !



எஸ்,எம்.எம்,பஷீர்

" திணை விதைத்தவன் திணை அறுப்பான் , வினை விதைத்தவன்  வினை அறுப்பான்  "  - பழமொழி



மே முதலாம் திகதியான  இன்றைய நாள் உலகத் தொழிலாளர்கள் தங்களின் ஒற்றுமையையை காட்டி , தொழிலாளர்களின் வல்லமைக்கு  வலுச்சேர்க்க கூடும் நாள்.  "உலகத் தொழிலாளர்களே  ஒன்றுபடுங்கள்" என்ற அறைகூவல் அகிலமெங்கும் ஒலிக்கும் நாள் .


இந்த நாள் தொழிலாளர்களின் தியாகத்தால் மலர்ந்தது. மேற்குலக நாடுகளில் தொழிலாளர்களின் போராட்டங்கள் மூலம் பெற்ற சர்வதேச வெற்றியே மே   தினம்  என்றாலும் அவர்கள் " திணையை விதைத்தார்கள் திணையையே அறுத்தார்கள்"!.



இந்த நாளில் இலங்கையிலும் சுமார் 21 வருடங்களுக்கு முன்னாள் நடத்த ஒரு இரத்தம் தோய்ந்த மே தின ஊர்வலம் நினைவுக்கு வருகிறது.

அன்றைய நிகழ்வுகளில் இன்றைய நிகழ்வுகளையும் பொருத்திப் பார்க்க முடிகிறது. மே தினத்தையே மேய்ப்பர்கள் தினமாக்கிய பெருமைக்குரிய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் , அன்றைய ஆட்சித் தலைவராக விளங்கிய ஆர் பிரேமதாசாவின் உடலைக் குதறிய நாள் , புலிகளின் கொலை வெறிக்கு அவர் பலியான தினம்.

"ஈழம்" (Eelam ) தவிர "எல்லாம்" (Ellaam)  கொடுப்போம் என்ற பிரேமதாசாவிற்கு எல்லாம் வேண்டாம் உமது உயிரே வேண்டும் என்று புலிகள் சபதம் எடுத்து "பாபு" என அறியப்பட்ட குலவீரசிங்கம் வீரகுமார் எனும் தற்கொலைப்  புலி மூலமாக  பிரேமதாசாவை கொன்றழித்த நாள்  இன்று .

பாபு எனும் புலி , பிரேமதாசாவின் தனிப்பட்ட  பணியாளான மொஹிதீன் என்பவரின் பலசரக்கு கடையில் பணியாளாய் சேர்ந்து பலரின் நண்பனாய் மாறி மொஹிதீன் உட்பட பிரேமதாசாவின் மெய்ப்பாதுகாவலர்களின்  பலவீனங்களைப் பயன்படுத்தி , மதுவும் , மாதும் , பணமும் வழங்கி , அவர்களுக்குள்  ஊடாடி இறுதியில் தமது இலக்கான பிரேமதாசாவின் இரத்தத்தை புலிகள் குடித்த தினம் இன்று.



1993ம் ஆண்டு மே தின ஊர்வலம் ஆமர் வீதியில் அமர்க்களமாக ஆரம்பிக்க  தயாரான  பொழுது " பாபு"  துவிச்சக்கர வண்டியில் நெருங்க, மொஹிதீன் துவிச்சக்கர வண்டியின் முன் சென்று துவிச்சக்கர வண்டியின் மீது கை வைத்து நிறுத்த முற்பட்ட பொழுது புலிகளின் உயிராயுதமான  "பாபு" தன்னை வெடித்து தனது இலக்கை  அடையாளம் காணாமல் அழித் தொழித்த  நாள் இன்று,  

பிரேமதாசா உட்பட இன்னும் சிலர் இல்லாமல் போயினர். இப்படி ஒரு மே தினம் இலங்கையில் என்றுமே நடந்ததில்லை நடந்ததில்லை. இந்த மே தினத்தை  இலங்கை நாட்டின் ஆட்சித் தலைவனை கொன்று குதூகலித்து கொண்டாட  புலிகள்  திட்டமிட்டனர்.

பிரேமதாசாவின் கட்டளையின்படி தெற்கிலே ஜே. வீ. பீ (மக்கள் ஐக்கிய முன்னணி) உறுப்பினர்கள் , அவ்வியக்கத்துடன் தொடர்புள்ளவர்கள் , எனப் பலர் வகை தொகை இன்றி கொல்லப்பட்டனர் என்று பரவலாக அறியப்பட்ட காலம் அவரின் ஆட்சிக் காலம்.

பிரேமதாசா புலிகளுடன் தேன் நிலவு கொண்டாடி அவர்களுக்கு நவீனரக தொலைத்தொடர்பு உபகரணங்களையும் ஆயுதங்களையும் வழங்கி இந்திய அமைதி காப்புப்படையுடனும் அவர்களுடன் சேர்ந்திருந்த இயக்கங்களுடனும் "போராடிக்" கொன்றழிக்க துணை புரிந்தவர்.  சுமார் ஒரு வருடங்கள் இலங்கை திறைசேரியிலிருந்து மாதாந்தம் 30 மில்லியன் ரூபாய்களை புலிகளுக்கு பிரேமதாசா தனது தற்றுணிவு அதிகாரத்தை பயன்படுத்தி வழங்கி வந்திருந்தார்..



1993 ஏப்ரல் 23ம் திகதி முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான பிரேமதாசாவின் அரசியல் எதிரியாக மாறிய லலித் அதுலத்முதலியை புலிகள் கொன்று பிரேமதாசாவுக்கு எதிராக மக்களின் விரோதத்தை திருப்பி பரஸ்பரம் இருபுறம் தங்களுக்குள் சந்தேகித்துக் கொள்ள , நாட்டில் ஒரு குழப்ப நிலை நிலவியபொழுது வெகு அமைதியாக  புலிகள் பிரேமதாசாவை கொன்று வெறி தீர்த்தனர். இது குறித்து பிரித்தானிய பத்திரிகை பத்தி எழுத்தாளர் ப்ரூஸ் பால்லிங்  எழுதும் பொழுது புலிகளின் மீது பலத்த சந்தேகத்தை அன்றே  முன் வைத்தார். 

அஸ்ரபை புலிகள் வான் வெளியில் கொன்ற பொழுது அஸ்ரபின்  கைவிரலில் அணிந்திருந்த மோதிரத்தை வைத்தே அவரின் சிதைந்த உடல் அடையாளம் காணப்பட்டதாக சொல்லப்பட்டது. அவ்வாறே பிரேமதாசாவின் உடலைக் கண்டுபிடிக்க உதவியது அவரின் மோதிரமும் கைக்கடிகாரமாகும்.

பிரபாகரனின் மனைவி பிள்ளைகளை அவர்கள் ஒளித்திருந்த காட்டு மறைவிடத்திலிருந்து ,  பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வர இலங்கையின் விமானப் படைக்கு   பிரேமதாசா உத்தரவிட்டு உதவி செய்துள்ளார். கிட்டுவை இலண்டனுக்கு அனுப்பி அங்கு இலங்கை தூதுவர் அவரை வரவேற்கவும் ஒழுங்கு செய்தவர் பிரேமதாசா .

பிரேமதாசா கொல்லப்பட்டதும் , அவரின் கொலை குறித்து அது புலி செய்த கொலையல்ல ஏதோ ஒரு பூனை செய்திருக்க வேண்டும் என்று கதைவிட்ட பலரில் ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் உள்ள பிரபாகரனின் பக்தரான ஒரு தமிழ் பேராசிரியரும்  ஒருவர்.

இவர்  ஷேக்ஸ்பிரின் ஜுலிய சீசரின் காவியத்தை ஒப்பிட்டு  இந்தக் கொலை ஒரு  அரசியல் கொலை என்பது போலவும் , அதுவும் நியாயப்படுத்தக் கூடிய கொலையே என்பதை போலவும்  நாசூக்காக  தனது ஆங்கில எழுத்து வல்லமைக்கு மெரு கூட்டி  சந்தேகத்தை வேறு பக்கம் திருப்ப முயன்றவர். தனது கண்மூடிய புலிப் பக்திக்கு அவர் என்றுமே தனது அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தியவர். முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றிய போதும் அதற்கு பல சதிக் கோட்பாடுகளைக் கட்டவிழ்த்து காரணம் கற்பித்தவர் .

அவரே தனது எழுத்தாக்கத்தின் முடிவில் " திணை அறுத்தவன்   திணை அறுப்பான் , விணை விதித்தவன் விணை அறுப்பான்" என்று பிரேமதாசா வினை விதித்து வினை அறுத்தார் என்பதை சுட்டிக் காட்டியிருந்தார்.

பிரேமதாசா பல கொலைகளுக்கு காரணமானவர் என சந்தேகிக்கப் பட்டவர்.  அவர் விதைத்ததைத்தானே அவரால் அறுத்திருக்க முடியும் என்று ஒரு வாதத்துக்கு  வைத்துக் கொள்வோம் , அப்படியே ராஜீவும் இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு  அனுப்பி  தமிழரைக் கொன்றவர் , எனவே  அவரின் கொலையையும் (சாவையும்) , அவர் விதைத்த வினையையே  அவரும்  அறுவடை செய்தார் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் இந்த இருவர் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை , அரசியல் தலைவர்களை அழித்த பிரபாகரன் கூட தான் விதைத்ததைதான் அறுவடை செய்துள்ளார் என்பதை எழுத தமிழ் பேராசிரியர்களைக் காணவில்லை!  

இந்த மேதினம் இலங்கையில் 21 வருடங்களுக்கு முன் பிரேமதாசாவின் கொலையுடன் அல்லோல  கல்லோலப்பட்டது . அதற்கு முன்னர் ராஜீவ் காந்தி புலிகளால் 21 மே 1991 ல் கொல்லப்பட்டார் , இதெற்கெல்லாம் காரணமான இலங்கையின் மிகப் பெரும் பயங்கரவாதியான பிரபாகரனும் 2009 ஆண்டு மே மாதம் 19 திகதி கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதில் "வினை விதித்தவன் வினை அறுப்பான்" என்ற பழமொழி விசித்திரமாக பிரபாகரனுக்கு பொருந்துகிறது. ஏனெனில் பிரபாகரன் பிரேமதாசாவையும் , ராஜீவையும் வைகாசி மாதத்தில் கொன்று , அவர் விதைத்த விதையை அதே வைகாசி மாதத்தில் அவரும் அறுவடை செய்துள்ளார் . 

2 comments:

  1. Dear Friend /Comrade, It is a very good presentation.I appreciate very much of your approach in exposing the fascist and mafia LTTE or Tamil Tiger and their friend and another sinhala fascist Premadasa. Please continue your work in favour of the people and favour of democracy . Thanks

    ReplyDelete
  2. Treasure box of political information.Can help so called Sri Lankan Muslim politicians to corroborate and sharpen their intelligentsia before they deal with Tamil politicians of the caliber of black Jews wittingly or otherwise.
    Brother Bazeer great ! service keep it up.

    ReplyDelete

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...