மே பதினெட்டாம் திகதியும் மேதகு இலங்கை பிரஜைகளும் -

 (05.10.2010 தேனீயில் வெளியான  கட்டுரை இங்கு மீள் பிரசுரம் செய்யப் படுகிறது  )


எஸ்.எஸ்.எம்.பஷீர்

 “நமது தாய் நாடானதும் நமது மூதாதயர்கள் 2600 ஆன்டுகள் வாழ்ந்ததுமான இலங்கை குடியரசின் குடிமக்களாய் இருப்பதிலும் நாம் பெருமை அடைகிறோம் . இலங்கையின் தேசிய தனித்துவத்தின் பிரிக்கமுடியாத ஒற்றுமையின் ஒரு அங்கம் நாம். ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்னவென்றால் இலங்கை குடியரசின் ஒற்றுமைக்கும் , வலிமைக்கும், இறைமைக்கும், அச்சமின்றி சுயநலமின்றி உழைத்தலாகும்

                                                                                     கலாநிதி  பதியுதின்  மஹ்முத்               

லங்கை அரசு சென்ற வருட மே மாத யுத்த வெற்றியினை ஓராண்டின் பின்னர் இம்மாதம் 11 ம் திகதி தொடக்கம் 18ம் திகதி  வரை யுத்த வீரர்கள் ஞாபகார்த்த தினமாக பிரகடன‌ப்படுத்தி நாடு முழுவதும்  நினைவு கூரும் நிகழ்சிகளை நடாத்தியுள்ளனர்.இந்த யுத்த வெற்றி பல பெறுமதிமிக்க பொது மக்களினது உயிர்களையும் காவுகொண்டுள்ளது என்பதற்கு அப்பால் , இந்த உள்நாட்டு யுத்தம் மூன்று தசாப்தஙகளாக  பலரை அங்கவீனர்களாக மனநோயாளிகளாக உடமைகளும் இடமும் இழந்த மக்களாகவும் மாற்றியுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. 


இந்த ஈடு செய்யமுடியாத இழப்புக்களின் மத்தியில் இவ் யுத்த வெற்றிக்காக பல சிங்கள தமிழ் முஸ்லிம் இளைஞர்களும் இவ்யுத்தத்தில் பங்காளிகளாகி  ஆயிரக்கனக்கில் உயிரை அவயங்களை இழந்திருக்கிறார்கள். சாதாரன பொதுமக்களும் ஆயிரக்கனக்கில் இவ்யுத்தத்தில் சிக்குன்டு பலியாகி இருக்கிறார்கள் . இரண்டு இனங்களுக்கிடையிலான சிவில் யுத்தமாக முகிழ்த்த ஆயுதம் தாங்கிய போராட்டம் சக இனத்தின் மீதான அடக்குமுறை போராட்டமாக சகோதரப்படுகொலை "போராட்டமாக" கட்டம் கட்டமாக நகர்ந்து இறுதியில் பயங்கரவாத யுத்தமாகி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது எனவே இந்த யுத்தம் வெறுமனே தமிழருக்கு எதிரான யுத்த வெற்றி அல்ல. இந்த யுத்த வெற்றியினை அரசு ஒரு வார வெற்றி தினமாக கொண்டாடி முடியும் வாரத்தின் இறுதிக்கு முந்திய நாளான 17ம்  திகதியினை பொதுமக்களையும் போராளிகளையும் நினைவுகூரும் துக்க தினமாக அனுஷ்டிக்கும் நாளாக நினைவு கூருமாறு  சம்பந்தனின் தமிழரசுக்கட்சி வேண்டுகோள் விடுத்தது.  

ஆக அரச வெற்றியின் இறுதி நாளை துக்க நாளாக கொள்ளும் ஜனநாயக உரிமை ஒருபுறமிருக்க தமிழரசுக்கட்சி "போராளிகளை"  நினைவுகூருமாறு கூறுவது எனபதுதான் அரசினை பொறுத்தவரை முரண்பாடானதாகும் ஏனெனில் இராணுவத்தினரின் அழிவுக்கும் அங்கயீனத்துக்கும் காரனமானவர்களாவிருந்த அரச படைகளின் எதிரிகளின் இழப்பினை நினைவு கூறுவது எதிரிடையான ஒரு நிகழ்வாகவே யுத்த வெற்றிக் கொண்டாட்டம் முடிவுக்கு வருகிறது. புலிகள் முதலில் சிங்கள விரோதிகளாக , முஸ்லிம் விரோதிகளாக , தமது சக போராட்ட இயக்கங்களின் எதிரிகளாக இருந்தது போக தமக்குள்ளே மஹத்தயா  எனும் மகேந்திர ராஜா பிரிவினருக்கெதிரான  தாக்குதல்களையும் கருனாவுக்கெதிரான  தாக்குதல்களையும்  சாதி அடிப்படியிலான கொலைகளையும் மேற்கொண்டு தம்மை தமது சொந்த சமூக , பிரதேச பிரிவினர்களுக்கு எதிரானவர்களாக செயற்பட்டபோது தமிழர்களில் பலர் புலிகளுக்கு எதிரானவர்களாக இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து புலிகளை (தமிழ‌ரசுக்கட்சியினர் நினைவுகூரும்  "போராளிகளை") அழிக்க செயற்பட்டதனை நன்கு ஆராய்ந்து பார்க்கும் போது துல்லியமாக புலனாவது என்னவென்றால்  இந்த யுத்தவெற்றி என்பது சிங்களவர் தமிழர் முஸ்லிம்களது பொது எதிரியாக மாறிய புலிப்பாசிசத்துக்கெதிரான வெற்றியே ஒழிய வேறில்லை.


பிரித்தானிய தமிழ் அவை 18ம் திகதியை முள்ளிவாய்க்காள் அவலமென பூடகமாக பிரபாகரனின் முடிவை நினைவு கூற பிரபாகரனை காப்பாற்ற  தாம் சென்ற வருடம் தொடங்கிய ஆர்ப்பாட்டதள‌மான‌     பிரிதானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் இன்று "மீன்டும் தொடங்கும் மிடுக்கென" கூடவுள்ளனர்.சென்ற வருடம் இவர்களுக்காக கித் வாஸ் எனும் தொழில் கட்சி அமைச்சரும் தொழில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளித்து மறைமுகமாக பிரபாகரனை காப்பாற்றும் முயற்சியில் முனைந்திருந்தனர். அதே நேரத்தில் அந்த நாடாளுமன்றத்தின் உள்ளேயே  விரெந்திர சர்மா எனும் பிரித்தானிய தமிழ்  அவையின் ஆதரவு எம்பியிடம் மூஸ்லிம்கள் தனித்துவம் குறித்து கருத்து முரன்பட வேன்டியேற்பட்ட நினைவுகளும் என்னை இந்த யுத்த வெற்றியை ஒருபுறம் ஆராதிக்க செய்ய மறுபுறம்  அங்கே துயருற்ற மக்களை நினைத்து அவர்களை திட்டமிட்டு மனிதக்கேடயமாய் இடம் நகர்த்தி அழித்த , அவலமுற வைத்த புலிகளுக்கு குரல் கொடுத்த புலன் பெயர் தமிழர் மீது ஆத்திரம் கொள்ள வைக்கிறது.


எனினும் , இந்த யுத்த யுத்த நிகழ்வுகளில் முஸ்லிம்களின் பங்கு குறித்தும் ஆராய்வதே எனது நோக்கமாகும்.இலங்கையின் முப்படைகளிலும் தொழில் ரீதியில் ஆர்வம் காட்டியவர்கள் மலாயி சமுகத்தை சேர்ந்த முஸ்லிம்களாகும். ஆனால் வட கிழ‌க்கில் 1985 பின்னர் இன முறுகல்கள் காரனமாக அதிகள‌வில் முஸ்லிம்கள் பாதுகாப்பு கருதி பொலிசில் சேருவதில் ஆர்வம் காட்டினர், இதனால்தான் ஹோம்  கார்ட் (Home Guard) எனும் பிரிவும் உருவாக்கம் பெற்றதுடன் அரச படைகளின் அத்துமீறல் இன எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் சிலவேலைகளில் இவர்கள் ஆயுதபானி தமிழ் இயக்கங்களின் அடாவடித்தனத்துக்கு எதிராக பழிவாங்கும் மனனிலையுடன் தமிழர்கள் மீது  செயற்பட்டுள்ளனர்.

ஆனால் பொதுவாக நாட்டின் இற‌மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அமைவாக இலங்கையின் முறையான தேசிய பதுகாப்புபடைகளில் காவல் துறை ஆகியவற்றில் தாம் இலங்கையர் என்ற அடிப்படியில்  சேர்ந்து ஆற்றிய பங்கு காத்திரமனது.   

கண்டியை பிறப்பிடமாகக்கொண்ட  சுராஜ் பன்சா ஜாயா (Suraj Bansa Jayah) ஐம்பத்தெட்டாவது படைப்பிரிவின் முக்கிய உறுப்பினராக பிரிகேடியர் சுரேந்திர சில்வாவின் கீழ் பதவி வகித்தவர் இவருக்கு மே மாத யுத்த முடிவின்பின்னர் இவரது பணியை கௌரவித்து பிரிகேடியர் தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டார். நாட்டின் ஒருமைபாட்டிட்காக   உயிரிழந்த படைவீரர்களுள் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் இருப்பினும் அவர்கள் பற்றிய தகவல்கள் துரதிஷ்டவசமாக இன்னமும் தொகுக்கப்படவில்லை. எனினும் யுத்தத்தில் அல்லது தமது இரானுப்பனியில் உயிரிழந்த படை வீரர்கள் என்ற வகையில் கேர்னல் பாஷ்லி லாபீர் (Colonel Fasley Lafir ) இலங்கை இராணுவத்தின் முதலாம்  விஷேட இராணுவ படைப்பிரிவின் (Special Forces Regiment) ஆணையிடும் உத்தியோகத்தராகவும் (Commanding Officer) மிகவும் அரிதான உயர்ந்த பட்ச இராணுவ சாதனையான பரம வீர விபுஷனைய எனும் விருதினை பெற்ற எழுவரில் இவரும் ஒருவராகவிருந்தார்.   1996 ம ஆண்டு முல்லைத்தீவு இராணுவமுகாம் புலிகளால் தாக்கப்பட்ட போது அங்கு உயிரிழந்த 1200 இராணுவ வீரர்களில் இவரும் ஒருவர். முல்லைத்தீவு இராணுவ முகாமை புலிகள் முற்றுகையிட்டபோது தனது சக இராணுவ வீரர்களை காப்பாற்றும் யுத்தத் மூலோபாய எத்தனத்தில் அசாத்திய வீரனாக  தன்னுயிரை துச்செமென மதித்து செயற்பட்டு  உயிரிழந்தவர்.  கடுகஸ்தொட்ட சென்ட்  அன்தொனிஸ் (St. Anthony’s) கல்லூரியின்  பழையமானவரான இவர் கண்டியிலுள்ள மடவள எனும் முஸ்லிம் பட்டினத்தை சேர்ந்தவர். இவரது மரனத்தின் பின்னர் இவர் இரானுவத்தில் ஆற்றிய அசாதாரன சாதனைக்காக அவ்விருது வழங்கப்பட்டது.
     
அவ்வாறு உயிரிழந்த  இன்னுமொரு முக்கியமான இராணுவ உளவுப்பிரிவின் சிரேஷ்ட உத்தியோகத்தர்  துவான் நிஜாம் முத்தலிப் இவர்  கொழும்பை சேந்தவர் சுமார் இரண்டு தசாப்தங்களாக  இராணுவத்தில் பணியாற்றியவர். இவர் மே மாதம் சமாதான ஒப்பந்த காலம் என்று அழைக்கப்பட்ட காலகட்டமான 2005 ல் கொழும்பில் பாதுகாப்பு கல்லூரிக்கு செல்லும் வழியில் புலி பிஸ்டல் கொலையாளியால் சுட்டுக்கொல்லப்பட்டவர் . மேலும் யுத்தத்தில் மரணித்த இராணுவ உத்தியோகதர்களான ரிஸ்வி மீடின், மேஜர் யூனுஸ் , கப்டன் ஷேரிப்டீன் கப்டன் சுரேஷ் காசிம் ஆகியோர் சிறந்த சேவை ஆற்றியவர்கள் அதேவேளை மேஜர் ஜெனரல் சவீர் , பிரிகேடியர் டி.எஸ்.சாலி ,பிரிகேடியர் பொஹ்ரான் ,மேஜர் டி.பி.இப்ரஹிம், முஹமது ரிஷர்ட்  ஆகியோர் இப்போதும் இலங்கை இரானுவத்தில் பனியாற்றி வரும் குறிப்பிடத்தக்கவர்களாகும்  . இப்போதும் இராணுவத்தில் முஸ்லிம்கள் பலர் சேவையாற்றி வருகிறார்கள். இங்கு நிரல் படுத்தமுடியாத பல முஸ்லிம்கள் இன்று இரானுவத்தில் சேவையாற்றி வருகிறமையும் குறிப்பிடத்தக்கது. அதில் ஒருவர் எனக்கு தெரிந்தவரை தனது தகப்பனை புலிகள் கடத்திக்கொன்றதால் ஆத்திரமுற்று பழிவாங்கும் நோக்குடன் இராணுவத்தில் சேர்ந்து இன்று பெரும் பதவி நிலை உத்தியோகத்தில் இருப்பவர். (அவரின் பெயரை நான் இங்கு தவிர்த்துள்ளேன் )

இரானுவத்தில் , காவல் துறையில் பனியாற்றிய முஸ்லிம் இளைஞர்கள் சிலரையும்  இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கூர்வது அவசியமாகிறது. 1990  ம்  ஆண்டு ஜூலையில் யாழ்ப்பான நகரை புலிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது யாழ்ப்பான கோட்டைக்குள் முற்றுகையிடப்பட்ட நிலையிலிருந்த அரச பாதுகாப்பு காவல் துறை உறுப்பினர்கள் வெளியேற முடியாமல் சுமார்  107  தினங்கள் முடங்கி கிடந்தபோது அதில் ஏறாவூரை சேர்ந்த சுபைர்  எனும் போலீஸ் உத்தியோகத்தர் முற்றுகை முறியடிக்கப்பட்டு தப்பி வந்தவர் எனபதும் பின்னர் பின்னர் அதே ஊரைச்சேர்ந்த ஒரு சகோதர முஸ்லிம்  இராணுவ  உத்தியோகத்தரின் தனிப்பட்ட கோபத்தினால் சுட்டுக்  கொல்லப்பட்டார் என்பதும் இங்கு முரண்நகையாக  குறிபிடத்தக்கது. 

அதேவேளை  முஸ்லிம்கள் இந்த உள்நாட்டு யுத்தத்தில் பல உயிர் உடமை நிலம் என பல இழப்புக்களை  சந்தித்தபோதும் ஓரிரு விரல்விட்டு எண்ணக்கூடிய முஸ்லிம்கள் தமது சுயநலத்திற்காக புலிகளின் மூலம் பெரும் பணத்துக்காக தமது இனத்தை அழித்த அடிமைப்படுத்திய ஆதிக்கம் செலுத்திய புலிகளின் முகவர்களாக செயற்பட்டதும் மிகுந்த வேதனை அளிக்கும் சமூக விரோத செயலாகும். மறுபுறம் அப்பாவி முஸ்லிம்களில் சிலர் அறியாமல் புலிகளின் சூழ்ச்சிக்கு பலியானவர்கள் அவர்கள் எமது அனுதாபத்துக்குரியவர்கள் என்றாலும்  அவர்களின் அறியாமை வியாபாரம் சார்ந்த நடவடிக்கைகள்  என்பன மறுபுறத்தில் ஏற்படுத்திய அழிவுகளும் எமது நெஞ்சை நெருடுகின்றன. இனி வரும் காலங்களில் முஸ்லிம் சமூகம் அத்தகைய வரலாறுகளிலிருந்து படித்துக்கொள்ள நிரம்பவே இருக்கின்றது.  

உள்நாட்டு யுத்தம் இலங்கையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வட புலத்தில் உக்கிரமடைந்தபோது கொழும்பில் ஒரு முஸ்லிம் போலீஸ் உயர் அதிகாரி புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு தமது சகோதர காவல் துறை உத்தியோகத்தர்கள் புலிகளால் கொலை செய்யப்படுவதற்கும் மற்றும் பல புலிகளின் நாசகாரச் செயல்களுக்கு தகவல் வழங்குவது உதவி புரிவது உட்பட பல சமூக (தேச) விரோத செயல்களுக்கு  உடந்தையாகவிருந்தார். அவர் கிழக்கை சேர்ந்தவர் என்று அறியப்பட்டது. புலிகளின் இன சுத்திகரிப்பிற்கும்  ஆட்கொலைகளுக்கும்   உள்ளான ஒரு சமூகத்திலிருந்து வந்தும் அரசில் பொறுப்பான பதவி வகித்தும் அவ்வதிகாரி புலிகளிடம் இலஞ்சம் பெற்று கேவலமாக நடந்துகொண்டார். பெரும்பான்மை சிங்கள இனத்திலும்  பலர் அவாறான சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபட்டுக் கைதானதால் இவர் மீதான இழிவுச்சாட்டல் பழிப்பு பெரிதளவில் இடம்பெறவில்லை.

காத்தான்குடியைச்சேர்ந்த ஏறாவூரில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த  ரஹீம்  தனது காரை புலிகள் என்று தெரியாமால் (தெரிவதற்கு சாத்தியமுமில்லை ) விற்று அக்காரை புலிகள் மருதானையில் சாஹிரா கல்லூரிக்கு முன்பாக குண்டு வெடிப்பில் பயன்படுத்தியதால் (நொவம்பர் 1987) பாரிய அழிவுக்கும் உயிர் இழப்பிற்கும் காரணமான நபர்களை கண்டு பிடிக்கும் விசாரனைகளின் மூலம் ரஹீம் இறுதியில் கைதாகி பல ஆண்டுகள் சிறையில்  வாடவேண்டி நேரிட்டது. அவ்வாறே ஏறாவூரிலும் முஹம்மது எனும் முஸ்லிம் வாகன உரிமையாளரிடமிருந்து வாங்கப்பட்ட வாகனம் மீண்டும் மருதானையில் அதே மருதானை பகுதியில் புலிகளால் வாகன குன்டு வெடிப்பிற்கு மே மாதம் 5ம் திகதி 1998ம் ஆண்டு   பயன்படுத்தப்பட்டது. அவ்வாககனத்தை கைமாறிய (விற்ற) முஸ்லிம் பெண்மணியும் இது தொடர்பில் கைது செய்யப்பட்டனர் மொத்தத்தில் முஸ்லிகளின் வியாபார ஈடுபாடுகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு முஸ்லிம்களையும் நெருக்கடிக்குள்ளாகியது மட்டுமல்ல இலங்கை அரசை சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பும் பணியிலும் ஒரு கல்லில் இரு மாங்காய் விளையாட்டை செய்தவர்கள் புலிகள். இப்போது அந்த தந்திரோபாய விளையாட்டை வேறு வடிவத்தில் அரசியலில் புலி செத்தபின்னர் முஸ்லிம் காங்கிரசின் தலைவரை வைத்துக்கொன்டு சம்பந்த‌ன் பிருகிருதிகள் செய்கிறார்கள் என்பதயும் அரசியல் , அதிலும் குறிப்பாக   தமிழ் அரசியல் சூட்சுமங்கள் புரிபவர்களுக்கு தெரியாமலிருக்க முடியாது.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடி ஊர்வீதியில் ஆற்றங்கரையை அண்மித்ததாக அமைந்திருந்த வீட்டிலிருந்து  புலிகளுக்கு இரகசிய செய்தியை வாக்கி டாக்கி (Walkie-Talki) எனும் தொலை தொடர்பு  கருவியூடாக செய்தியனுப்பிய முஸ்லிம் ஒருவர் அவ்வழியால் ரோந்து சென்ற  இரனணுவ படையினரின்  தொலைக்கருவி  சமிக்ஞை ஊடாக அகப்பட்டு கைதானதும் அதனால் அக்குடும்பம் தொல்லைகளுக்கு   உள்ளானதும் இங்கு குறிப்பிட வேண்டிய சம்பவமாகும் பணத்துக்காக புலிகள் ஊருக்குள் படகு மூலம் உள்ளே வருவதற்கு செய்திகள் வழங்குவதே இவரது செயற்பாடாகவிருந்தது.

ஆனால் அண்மையில் காத்தான்குடியை சேர்ந்த ஒரு சுங்க அதிகாரியான முபீன் என்பவர் புலிகளின் பொருட்களை நாட்டுக்குள் கொண்டுவருவதில் (இறக்குமதி செய்வதில்)  சுங்கப்பகுதியில் துணை புரிந்தார் என்பதற்காக   கைதாகி தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார் என்ற செய்தி இலங்கை அரசை பொறுத்தவரை மிக பாரதூரமான குற்றமாகும்.  இந்த விசரனைகள் அவர் புலிகளிடம் கொன்டிருந்த தொடர்புகளை உறுதி செய்வதாக தெரியவருகின்றது.     ஒருபுறம் இப்போது கொண்டாடப்படும் இலங்கை  முஸ்லிம்களை எல்லா தமிழ் இயக்கங்களும் தங்களது ஆயுதபலத்தால் மிரட்டி வந்ததுடன் அடக்கு முறைகளையும் பல சந்தர்ப்பங்களில் கட்டவிழ்த்து விற்றிருந்தனர். இந்த இயக்கங்கள் எல்லாமே தமது சொந்த இனத்தையும் தொல்லைக்குட்படுத்தியதுடன்  இப்போது ஜனநாயகம் பற்றி வாய்கிழிய பேசுபவர்களாகவும் உள்ளனர். அவர்களது மாற்றங்களை வரவேற்கலாம் ஆனால் இவ்வியக்கத்தவர்கள் எல்லாமே இப்போது திடீரென்று முஸ்லிம் மக்கள் எங்கள் சகோதரர்கள் அவர்களையும் இணைத்துக்கொண்டு தாங்கள் "அரசியல் தீர்வு" காணவேண்டும் என்று   முஸ்லிம்களுக்கு தாங்கள் இழைத்த அநீதிகளை சுயவிமர்சனம் பண்ணும் திராணியற்று உரத்து குரல்  கொடுப்பதுதான்  எமது புருவங்களை நிமிர்த்தும் கேள்வி.

 13  ஏப்ரல் 1985 ல் தமிழ் முஸ்லிம் இன வன்முறைக்கு தூபமிடும் நிகழ்வுகளில்  ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. புளட் (PLOTE) இயக்கத்தினர் காரைதீவில் முஸ்லிம் ஒருவரின் காரையும் அரிசி மூட்டைகளையும் துப்பாக்கிமுனையில் களவாடி சென்றதனை தொடர்ந்து விஷேட அதிரடிப்படையினரின் ஆதிக்கம் நிலவிய அன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்களின் ஆத்திரத்தை பயன்படுத்தி தமிழர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கையாக இச்சம்பவம் விஷேட அதிரடிபடையினரால் அரங்கேற்றப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் ஐக்கிய தேசிய அரசு தமிழ் முஸ்லிம் உறவு விரிசலுக்கு தமது படையணிகளை பயன்படுத்திக்கொண்டதுடன் , ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் புதல்வரின் ( ரவி ஜயவர்த்தனா )  கட்டுப்பாட்டிற்குட்பட்டிருந்த விஷேட  அதிரடிப்படையினரின் (Special task force) தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் தமிழ் பெண்கள் மீதான கற்பழிப்புக்கள் என பல விதத்தில் தமிழர்கள் மீதான சகல அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். 

இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டம் வரை பட்ட நிலையை தோற்றுவித்தது அதன் உச்சமாக உன்னிச்சை வயல் பிரதேசத்தில் விவசாயம் செய்த ஏறாவூர் முஸ்லிம் விவசாயிகளின் படுகொலையுடன் இன முறுகல் நிலை தீவிரமடைந்தது. 
1985 ந‌டைபெற்ற வன்செயல்களினால் உன்னிச்சை முஸ்லிம் விவசாயிகளின் கொலைகள் நடந்து சில நாட்களின் பின்னர் அன்று கிழக்கில் குறிப்பாக மட்டக்களப‌பு மாவட்டத்தில் செல்வாக்குள்ள இயக்கங்களீல் ஒன்றாக விளங்கிய ஈ பி.ஆர்.எல் எஃப் இயக்கத்தினரில் (EPRLF) எனக்கு அறிமுகமான  சிலரை மிகவும் ஆபத்தான சூழலில் சந்தித்து ஏன் அவர்களால் அவ்வாறன வண்முறையை தடுக்க முடியவில்லை என்று கேட்டதற்கு அவ்ர்கள் தமது கட்டுப்பாட்டுக்கப்பால்  அவ்வன்முறைகள் நடந்து விட்டன என்பதை மட்டுமே கூறினார்கள். மக்கள் இயக்கம் என்று முரசறைந்து முழ‌ங்கியவர்கள் வெறும் கையாலாகாதவர்கள் என்பதையே அது உனர்த்தியது. 

ஐ பீ கே எப் (IFKF) எனும் இந்திய அமைதிகாக்கும் படையினரின் வெளியேற்றம் கிழக்கில் ஆரம்பமானவுடன் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய இராணுவம் தனது அத்துமீறல்களை மேற்கொண்டு முஸ்லிம் காங்கிரசின் அனுசரையுடன்  சிவில் தொண்டர் படையில் சேர்ந்திருந்த முஸ்லிம் இளைஞர்களை காவு கொண்டனர். இந்த தமிழ் தேசிய இராணுவத்தின் மிலேச்சத்தனமான படுகொலைகளுக்கு  ஈ பீ ஆர் எல் எப் எனும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் ஈழ தேசிய ஜனநாயக முன்னணி (ENDLF) என்பன பின்னனியிலிருந்தன. ஈ என் தே எல் எப் (ENDLF) எனும் இயக்கம் புலிகளின் பிரதியீடு தவிர கொள்கையில் வேறுபடவில்லை. இவர்களே முதன் முதலில் முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தலைவரை அவரது பிறந்த இடத்தில் வைத்து கொல்ல எத்தனித்தவர்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. அக்கொலை முயற்சிகளிலிருந்து முன்னால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரஃப் ஓடி தப்பவேண்டி நேரிட்டது. அதேவேளை அலி உதுமான் எனும் அன்றைய வட- கிழக்கு  மாகான சபை உறுப்பினரை கொன்றவர்களும் இவர்களே (ENDLF) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. க‌னகரட்னம் எனும் பரந்தன் ராஜன் ஈழ தேசிய ஜனனாயக விடுதலை முன்ன‌னி தலைவராக இருக்கிரார். இவர் இக்கட்சியின் கொடியில் உள்ள‌ மூன்று நட்சத்திரங்களும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களை குறிக்கும் என்றும் மேலும் அவை ஜனனாயகம், சமஉடமை, சமத்துவம் என்பவற்றையும் குறித்து நிற்பதாக 1988 களிள் கூறி இவை எவற்றுக்குமே தொடர்பற்ற செயற்பாடுகளை இவரது கட்சியினர் முஸ்லிம்கள் சிஙகள்வர்கள் மீதும் மேற்கொன்டவர்கள்   என்ற பாரிய குற்றச்சாட்டு இவர்கள் மீது சுமத்தப்பட்டது . தமிழர்களே இவர்களை அன்றே நிராகரித்துவிட்டார்கள்.    10ம் திகதி ஜுனெ மாதம் 1990ல் பிரேமதாசாவினுடனான யுத்த நிறுத்தத்தை முடிவுக்கு கொன்டுவந்த புலிகள் கிழக்கின் பொலிஸ் நிலயங்களை முற்றுகையிட்டு நூற்றுக்கனக்கான பொலிஸாரைக் கொன்றனர். இதிலும் சுமார் நூறு புலிகலிடம் சரனடைந்த முஸ்லிம் பொலிஸ்காரர்களும் அடங்குவர். பொலிஸாரை முடங்கச்செய்த பிரேமதாசாவும் இவ்வாரான படுகொலைகளுக்கு காரனமாக்கப்படுவதில் நியாயமுன்டு.   

 புலிகள் கிழ‌க்கில் தோல்வியுற்ற போதும்  2009ம் ஆன்டு சித்திரை மாதத்தில் கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லுரியின் பொலிஸ் அத்தியாட்சகர் ஜமால்டீனை மருதமுனயில் நீராயுத‌பானியாக நின்ற வேளை ஒழித்திருந்து சுட்டுக் கொன்றார்கள் , அவ்வாறன புலிகளின் கொலை இறுதியாக இரன்டு பெண் நான்கு ஆன் புலிக‌ளை ப‌யன்படுத்தி ஏறாவூரில்  இப்ராகிம் எனும் பொலிஸ் உத்தியோகத்தரை அவரது மோட்டார் சைக்கிளை மறித்து கொன்றதுடன் புலிகளின் இறுதி முஸ்லிம் அரச படையினர் அல்லது காவல் துறையினரின் கொலைகளும் முடிவுக்கு வந்தன.   இளைஞர்கள் அப்துல் கரிம் எனும் ஏறாவூர் முஸ்லிம் ரிசெர்வ் பொலிஸ் கொலையுடன் தொடங்கிய புலிகளின் அரச படையினருக்கெதிரான கொலை இப்ராகிமின் கொலையுடன் முடிவுக்கு வந்தது. அதுவே இனிமேல் முடிவாகவும் இருக்க வேன்டும்.  

புலிகளிருந்து கருணாவும் அவருடன் கிழக்கு புலி உறுப்பினர்களும் விலகிச்சென்றபோது புலிகளின் தலைவர் பிரபாகரன் வேறுபட்டு நின்ற கிழக்கு புலிகளை அழிக்கும் பணியில் கடல் பாதையூடாக இலங்கை அரசின் அன்றைய ஜனாதிபதியுடன் மேற்கொண்ட இரகசிய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் புலிகளின் முக்கிய போர் தலைவர்களில் ஒருவரான சொர்ணத்தின் தலைமையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின்  சரத்து 1.7 க்கு எதிராக ஆயுதங்களை ஏற்றிக்கொன்டு படகுகளில் அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள்  சென்று வெருகல் ஆற்றை அண்மிய பிரதேசத்தில் தமது முன்னாள் உறுப்பினர்கள் மீது நடத்திய தாக்குதல்கள் , படுகொலைகள் இவ் யுத்த வெற்றி நிகழ்வினை நியாயப்படுத்துகின்றன அத்தாக்குதல்களில் உயிர் தப்பியும் புதிதாகவும் இராணுவத்துடன் சேர்ந்து போரிட்ட மடிந்த அவயமிழந்த கிழக்கு தமிழ் இளைஞர்கள் யாவரும் இந்த யுத்த வெற்றிக்கு உரியவர்கள். 

எனவே இந்த வெற்றி வாரம் ஒருபுறம் சென்ற வருட மேமாத இறுதி யுத்தத்தில் புலிகளின் வக்கிர குனத்தால் வலுவிழ‌ந்து அநியாயமாக உயிரிழ‌ந்த அங்கயீனமான அகதியாய் போன மக்களின் துயரம் குறித்து துவன்டு போனாலும், அப்பாவி மூளைச்சலவை செய்யப்பட்டு இறந்து போன சிறார்களை பொறுத்தவரை கவலையளித்தாலும் அவ்வாறான பல இளம் சிறார்களின் எதிர்கால இழப்புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என்ற வகையிலும் கைதாக்கப்பட்ட பல இளைஞர்களின் வாழ்வில் புதிய ஆக்கபூர்வமான எதிர்காலத்தை  நிர்ணயிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற வகையிலும் இலங்கையில் இனப்பிரச்சினையை பயங்கரவாத செயற்பாடுகள் மூலம் அனுகிய புலி பாசிஷம் முடிவுக்கு வந்த வகையிலும் இலங்கையின் ஜனனாயக கட்டமைப்புக்கள் நாடெங்கும் உயிர்ப்புபெற பொருளதார நடவடிக்கைகள் சீரமைக்கப்பட வழி பிறந்துள்ளது என்ற வகையிலும்  இந்த யுத்த வெற்றி வாரம் அணுகப்பட வேண்டும்.


மே பதினெட்டும் மேதகு இலங்கை பிரஜைகளும்'   05.10.2010 தேனீயில் வெளியான  கட்டுரை  கீழேயுள்ளது.
http://www.bazeerlanka.com/2011/03/blog-post_7220.html)
http://thenee.com/html/page-112.html

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...