செய்திகள் சொல்லும் சேதி என்ன ?




எஸ்.எம்.எம்.பஷீர்

              

நாம் அவர்களை பொதுமக்கள் அரங்கிலிருந்து தள்ளி வைக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் அதிகம் மந்தமானவர்களாக இருப்பதுடன் அவர்கள் உள்ளிட்டால் பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள். அவர்களின் பணி "பார்வையாளர்களாக" இருப்பதே ஒழிய "பங்கு கொள்பவர்களாக" இருப்பதல்ல.
                                                                              நோம் சொம்ஸ்கி

( எது  பெருவோட்ட ஊடகத்தை பெருவோட்டம் ஆக்குகிறது -இசட் மகசின் அக்டோபர் 1997 )

 ‘ We have to keep them out of the public arena because they are too stupid and if they get involved they will just make trouble. Their job is to be "spectators," not "participants."
                                                                                           -  Noam Chomsky

              ( What Makes Mainstream Media Mainstream- Z Magazine, October, 1997)

"இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத குழு: இந்தியா அச்சம்" என்ற தலைப்பில் ஒரு செய்தி தமிழ் மிரர் (Tamil Mirror) எனும் பத்திரிகையில் திங்கட்கிழமை, 30 டிசெம்பர் 2013 அன்று வெளியானது , அச்செய்தி அவ்விதழின் ஆங்கில இணையமான டெய்லி மிரரில்(Daily Mirror)  "India fears Muslim militant attacks in SL " என்ற தலைப்பில் அன்றைய தினம் வெளியான செய்தியின் தமிழாக்கமாகும் . அச் செய்தியின் இறுதிப் பகுதியில் ஆங்கிலத்தில்  "Interestingly the statement comes a few weeks after a meeting the high commission officials had with Sri Lankan Muslim leaders where comments made by Defence Secretary Gotabaya on threats by extremist Muslim elements, was discussed extensively." என்று வெளியிடப்பட்டிருந்தது.


அச்செய்தியின் படி தூதுவராலய அதிகாரிகள் ஸ்ரீ லங்காவின் முஸ்லிம் தலைவர்களை சந்தித்திருக்கிறார்கள் , அந்த சந்திப்பில்  பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தீவிரவாத முஸ்லிம் தனிமங்களின் அச்சம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக விரிவாக கலந்தாயப்பட்டது என்றும் அதன் பின்னரே இந்திய அரசின் அறிக்கை வெளியாகி உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது. இந்திய தூதுவராலய அதிகாரிகள் கோத்தபாய ராஜபக்சவின் கருத்துக் குறித்து முஸ்லிம் தலைவர்களிடம் விளக்கம் கேட்டறிந்த சில வாரங்களின் பின்னரே அப்படியான அறிக்கையினை வெளியிட்டுள்ளனர் என்பதை ஆங்கிலத்திலான செய்தி அங்கதத் தொனியுடன் வெளியிட்டுள்ளது.

அச் செய்தியின் எந்த இடத்திலும் ( இந்திய ) தூதுவராலய அதிகாரிகளுடன் கோத்தபாய ராஜபக்ச "முஸ்லிம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் தொடர்பாக இந்திய தூதுவரலாய அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தார்" என்று சொல்லப்படவில்லை
அதேவேளை தமிழில் அதே செய்தி பின்வருமாறு மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது. 

"முஸ்லிம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் பற்றிய கலந்துரையாடல்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ இந்திய தூதுவரலாய அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்டதை  தொடர்ந்தே இந்திய அரசினால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்" 

இந்த தமிழ் மொழியாக்கம்  அதே பத்திரிகையின் ஆங்கில செய்தியினை திரிவுபடுத்தி வெளியிடப்பட்டுள்ளது.  இந்த செய்தியில் முஸ்லிம்  தலைவர்களை இந்திய தூதுவரலாய அதிகாரிகள் சந்தித்து பாதுகாப்பு செயலாளரின் கருத்துக் குறித்து  கலந்துரையாடியதைப் பற்றி ஏதும் குறிப்பிடாமல்   கோட்டபாய ராஜபக்ஷ இந்திய தூதுவரலாய அதிகாரிகளுடன் சந்தித்து அறிவுறுத்தியபடியினால்தான்  இந்திய அரசு அப்படியான வேண்டுகோளை விடுத்திருந்தது என்ற சேதியை வாசகன் மனதில் விதைத்து . இந்த செய்தியினை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்ட தமிழ் மிரரின் செய்தியாளர் மொழி பெயர்ப்பாளர் , ஆசிரியர் என்போரின் அரசியல் நிகழ்ச்சி நிரலை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது இச் செய்தி. ஆங்கில விஜய செய்திப் பத்திரிகை நிறுவனத்தின் (Wijeya Newspapers Limited )  நிர்வாகத்தினர் தங்களின் தமிழ் மொழிப்  பகுதியில் செய்தி மோசடி  நடைபெறுகிறது என்பது பற்றி அறிந்திருக்க நியாயமில்லை. மிக முக்கியமான செய்தி என்னெவெனில் ஒரு செய்தியின் உண்மைத் தன்மையை ஒரே பத்திரிக்கை நிர்வாகத்திற்கு உட்பட்டவர்கள் தமிழில் திரிவுபடுத்தி வெளியிட்டு தமது அரசியலை செய்வதனை , பிழையான செய்தியின் மூலம் மக்களை திசை திருப்புவதனை செய்துள்ளனர். இது மாபெரும் நம்பிக்கை மோசடியும் செய்தித் திரிவுபடுத்தலுமாகும். 



ஆனால் தமிழ்வின் (Tamil Win)  எனும் புலி சார்பு இணையம் அது தொடர்பில் வெளியிட்ட செய்தியில்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முஸ்லிம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் தொடர்பாக இந்திய தூதுவரலாய அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தார். இதனையடுத்தே இந்திய அரசாங்கத்தின் சார்பில் தூதரக அலுவலங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
என்று சொல்லப்பட்டுள்ளது

ஆனால் தமிழ்வின்  எனும் புலி சார்பு இணையம் அது தொடர்பில் வெளியிட்ட செய்தியில்
கோத்தபாய ராஜபக்ச அண்மையில் பங்களாதேஷில்  தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட ஜமா அதே இஸ்லாமி தலைவர் அப்துல் காதிர் முல்லாவின் பின்னர் கோத்தபாய வலிந்து இந்திய அதிகாரிகளை சந்தித்து "முஸ்லிம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் தொடர்பாக இந்திய தூதுவரலாய அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தார் என்று கருதும் வகையில் ஒரு செய்தியினை உருவாக்கம் செய்து , தனது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கிணங்க கோத்தபாயாவின் அறிவுறுத்தலின் படியே இந்தியா செயற்படுகிறது என்றவாறான கருத்தியலை தமிழ்வின் நாசூக்காக திணித்தது.

ஏனெனில் அதன் பிதாமகர்களான சிவராம் , நடேசன் , நிமலராஜன்  ஆகியோரின் புலி விசுவாசம் , அவர்களின் நடுநிலைமை தவறிய பத்திரிகை பரத்தமை (Presstitution) பற்றி அந்த இணையம் பற்றி அறிந்த அனைவருக்கும் தெரிந்ததே. குறிப்பாக இக்கட்டுரையாளர் முதலிருவரையும் (சிவராம் , நடேசன் ) நேரில் அறிந்தவராவார். இங்கு கோத்தபாயா இந்திய தூதுவராலய அதிகாரிகளை சந்தித்த பின்னரே பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி இந்தியா அச்சம் கொண்டுள்ளது என்று சொல்வதன் பின்னணி என்ன? .

மிக நுணுக்கமாக அவதானித்தால் தீவிர புலி சார்பு , தமிழ்த் தேசியவாத இணையமான தமிழ் வின்னும் , கொழும்பு செய்தி நிறுவனம் ஒன்றின்    தமிழ் மிரரும் (தமிழ் செய்தியாளர்கள் ) ஒரே செய்தியையே சொல்லி உள்ளார்கள் என்பது புலப்படும். மொத்தத்தில் இரு இணையமும் ஒரே அரசியல் நிகழ்ச்சி நிரலைக் கொண்டு செயற்படுகிறார்களா என்ற கேள்வி இங்கு எழுகிறது.மறு புறத்தில் கோத்தபாயா ராஜபக்ச முஸ்லிம் தீவிரவாதிகள் பற்றி சொன்ன கருத்துக்கள்  குறித்து விமர்சனம் எழுந்ததும் அது தொடர்பில் இலங்கையின் முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ன நினைக்கிறார்கள் என்று இந்தியா நாடி பிடித்துப் பார்த்ததும் , பின்னர் தங்களின் தூதுவராலயங்கள் குறித்து அச்சம் தெரிவிப்பதும் இந்தியாவின் அரசியல் சித்து விளையாட்டு என்பதைத் தவிர வேறென்ன. . இலங்கையில் தமிழ் ஆயுதப் பயங்கரவாதத்தை தனது பிராந்திய நலனுக்காக " உற்பத்தி" செய்து இலங்கை கடந்து மூன்று தசாப்தங்களாக அழிவுற்று சிதைவுற்று மூவின மக்களும் பலியாகி போனதற்கு மூல காரணமே இந்தியாதான் என்பதில் வேறு கருத்துக்கு இடமில்லை. இந்திய சமாதானப்படை என்ற போர்வையில் தமிழ் முஸ்லிம் மக்களை ஈவிரக்கமின்றி வேட்டையாடிய இந்தியா இப்பொழுது இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதிகளிடமிருந்து தங்களின் தூதுவராலயங்களை பாதுகாக்க உதவி கோருகிறது என்பது வேடிக்கையான செய்தி.  

இந்த செய்தி இன்னுமொரு ஆங்கிலப் பத்திரிகையான தி ஐலண்ட் பத்திரிகையில்  பாதுகாப்பு செயலாளர் அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஒரு பாதுகாப்பு கருத்தரங்கில் சில சர்வதேச தீவிரவாத முஸ்லிம் தனிமங்கள் இங்குள்ள முஸ்லிம் சமூகத்தினை தங்களின் அனுகூலங்களுக்காக  பயன்படுத்தும் சாத்தியம் குறித்து சொல்லி இருந்தார் என்பதையும் சுட்டிக் காட்டி தனது செய்திக்கு மெருகூட்டி இருந்தது. இந்திய எதிர்ப்புக்கு பெயர்பெற்ற அந்த நாளிதழ் தனது செய்திக்கு இலங்கை பாதுகாப்பு செயலாளரின் கருத்தரங்குக் கருத்தை கொண்டு  மெரு கூட்டியதுடன் , பாதுகாப்பு செயலாளரின் கருத்து எப்படி முஸ்லிம்  அரசியல்வாதிகளை கோபப்படுத்தியது என்பதையும் சொல்லி வைத்தது.
தமிழ் மிரரின் தமிழ் செய்தி தனது  சிண்டு முடிப்பினை கச்சிதமாக செய்தது. அது போகட்டும் என்றால் அந்த செய்தியை உள்வாங்கிய அல்லது அதனை ஆதாரமாக காட்டிய இலங்கை வட மாகான நகரொன்றின் பெயரைக் கொண்ட , முன்னாள் தினக்குரல் பத்திரிகையில் பணியாற்றிய ஒருவர் ஐரோப்பாவில் நடத்தும் "jaffnamuslim" எனும் இணையம் ( தமிழ் மொழி)    அந்த கடைசி செய்திப் பகுதியை "பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ இந்திய தூதுவராலய அதிகாரிகளுடன் முஸ்லிம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் பற்றிய கலந்துரையாடல்களைத்  தொடர்ந்தே இந்திய அரசினால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. " என்று கோத்தபாயா ராஜபக்சவின் புகைப்படத்தையும் பிரசுரித்து அந்த செய்தியை சற்று மாற்றி , எந்த தமிழ் ஆங்கில இணையமும், பத்திரிகையும்  எழுதாத வகையில் "முஸ்லிம் குழுக்கள் தாக்கலாம் : இந்தியாவுடன் கோத்தபாய ராஜபக்ச கலந்துரையாடல் " என்று காட்டமாக தலைப்பிட்டு அச் செய்தியினை வெளியிட்டார். ஆனால் கோத்தபாயா எதிர்ப்பு தமிழ் தேசியவாதிகளின் புலிகளின் பத்திரிகைகள் இணையத் தலையங்கள் கூட கோத்தபாயாவை சாடும் வகையில் அப்படியான ஒரு தலைப்பினை அல்லது கோத்தபாயாவின் புகைப்படத்தைக் கூட பிரசுரிக்கவில்லை. உதரணத்துக்கு தமிழ் வின் " முஸ்லிம் தீவிரவாதிகளால் கொழும்புத் தூதரகம் தாக்கப்படக் கூடும்: இந்தியா அச்சம் " என்றே தலைப்பிட்டிருந்தது.




தீவிரவாதிகள் யார்!


யுத்தத்துக்கு பின்னரான இலங்கை : சவால்களும் பிராந்திய உறுதிப்பாடும் என்ற தலைப்பில் 03/09/2013 ஆண்டு கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்ற பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்ட பாதுகாப்பு செயலாளர் கோத்த பாயா ராஜபக்ச , தனது உரையின் பொழுது இலங்கையில் காணப்படும்  எல்லா இனங்களுக்குள்ளும் காணப்படும் வகுப்புவாதம்  குறித்தும் பேசியிருந்தாலும் அவரின் பேச்சில் வெளிப்பட்டது என்னவோ   இந்திய வெளியறவு அமைச்சர் சங்கர் மேனனின் கருத்துக்கள்தான் .
கோத்த பாயா ராஜபக்ச , தனது உரையின் பொழுது தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களுடன் தங்களை அடையாளபடுத்தும் சில இலங்கைத் தமிழர்கள் குறித்தும் , சில வெளிநாட்டு குழுக்கள் இலங்கை  முஸ்லிம்களையும் உலகளாவிய முஸ்லிம் சமூகத்துடன்  அடையாளப்படுத்த ஊக்குவிப்பதாகவும்  குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் முஸ்லிம் அடிப்படைவாதம் உலகம் முழுவதும் பரவி வருவதென்பதும் இப்பிரதேசங்களிலும் பரவி வருகின்றதென்பதும்   ஒரு அறியப்பட்ட செய்தி என்றும் , தீவிரவாத தனிமங்கள் தமது பயணங்களின் பொழுது தரித்துச் செல்கையில் கைது செய்யப்பட்டு தகுந்த அதிகாரத்தினரிடம் கையளிக்கப்பட்ட சம்பவங்கள் சில நடந்தேறி உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அத்தகைய சக்திகள் ஸ்ரீ லங்காவில் தங்களின் முஸ்லிம் தீவிரவாதத்தினை ஊக்குவிக்க முயற்சிக்கலாம் என்பது  எங்களின் அக்கறைக்குரிய காரணியாகும் என்று அவர் கூறி இருந்தார்.  நன்றாக அவதானித்தால் கோத்தபாய ராஜபக்ச இந்திய உளவு பாதுகாப்பு தகவல்களை மென்றிருக்கிறார் என்பது புலனாகிறது,

அதேவேளை , கோத்தபாயா ராஜபக்ச வெளிநாட்டு தரித்துச் சென்ற பயணிகள் பற்றிய சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் 2006ல் இலங்கையில் மாலைதீவைச் சேர்ந்த மூவர் முஸ்லிம் தீவிரவாத சந்தேக நபர்கள் என்று மாலைதீவு அரசின் வேண்டுகோளின்படி  அவர்களின் பயணங்களில் பொழுது கொழும்பு விமான நிலையத்தில் தடுக்கப்பட்டு மாலைதீவு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர். கோத்த பாயா ராஜபக்ச பலதடவை இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதிகள் இல்லை என்று ஜெனீவா மாநாட்டில் அன்டன் பாலசிங்கம் , அண்மையில் அமெரிக்காவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை மறுத்தவர். அப்படியானவர் இப்பொழுது இந்தியாவின் பூச்சாண்டியை கருத்தில் கொண்டுள்ளார் என்பதையும் அவரின் உரை தொட்டுக் காட்டுகிறது.

இந்திய வெளியறவு அமைச்சர் சிவ சங்கர் மேனன்    இந்தியாவில் புத்தகாயாவில் மகாபோதி தாக்கப்பட்டதன் பின்னர் இலங்கை வந்த பொழுது இலங்கை  பாதுகாப்பு உயரதிகாரிகளைச் சந்தித்து பேச்சவார்த்தை நடத்தினார் . அதன் பொழுது அவர் புலிப் பயங்கரவாதச் செயற்பாடுகள் மீண்டும் தமிழ்நாட்டில் தலைதூக்கலாம் எனவும், இஸ்லாமிய தீவிரவாத அச்சுறுத்தல்களில் கவனமாய் நடந்து கொள்ளுமாறும் இலங்கையிடம் எச்சரிக்கை விடுத்தார். அது மாத்திரமின்றி தங்களின் நாட்டில் பௌத்த மத புனித தளமான புத்தகாயா தாக்குதலில் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்கள் சம்பந்தபட்டிருப்பற்கான தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் கூறி  இலங்கை முஸ்லிம்கள் குறித்து ஒரு அச்சத்தை விதைத்தார்.  இந்தியா அடிப்படைவாத அமைப்புக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் சொல்லி வைத்தார். இந்த செய்திகளின் பின்னர் இப்பொழுது ஜமா அதே இஸ்லாமி ஹிந்த் (ஜே. ஜே,எச்)  இந்தியாவில் பகிரங்கமாக செயற்படுகின்ற வேளையில் , அதுவும் கேரளாவிலும் தமிழ்நாட்டிலும்  மிகுந்த கண்காணிப்புக்குள் ஜமா அதே இஸ்லாமி ஹிந்த் உள்ளாகி உள்ளது. பாகிஸ்தானை தோற்றுவாய்த் தளமாகக் கொண்ட  ஜமா அதே இஸ்லாமி இயக்கத்தின் ஸ்தாபகரான  மறைந்த மௌலானா அபுல் அஹ்லா மவுதூதி என்பவரின் உந்துதலால்  செயற்படும் இயக்கம் என்பதும் இந்தியாவின் அதிக கண்காணிப்புக்கு உள்ளாகிறது என்று அறியப்படுகிறது. ஆனால் இந்த இயக்கம் பற்றிய நடைமுறைகள் வன்முறையை ஆதரிப்பதல்ல , என்பதும் சமய சமரசம் செய்வதும் அரசியல் இலக்குகளைக் கொண்டதுமாகும். ஆனாலும் தீவிரவாத ஹிந்துத்துவ இயக்கங்களைவிட இவை மிகுந்த கண்கானிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன,

அதுவும் இந்தியாவிற்கு எதிராக இன்றைய பாகிஸ்தானிய ஜமா அதே இஸ்லாமிய தலைவர் செயத் முன்வ்வர் ஹசன் இந்தியாவிற்கு எதிராக கருத்துக்களை அவ்வப்பொழுது வெளிப்படுத்தும் சூழல் காணப்பட்டாலும் இந்தியா இவர்களைப் பற்றிக் கொண்டுள்ள அபிப்பிராயத்துக்கு முரணான அபிப்பிராயத்தை இலங்கையில் திணிக்க முற்பட்டுள்ளனர். மறு புறம் இலங்கை அரசு காட்டும் அசமந்தத்தனம்  பௌத்த தீவிரவாத தனிமங்களை தனிக்கச் செய்யாது. இலங்கையில் பௌத்த தீவிரவாதம் மட்டுமே காணப்படுகின்றது. அதனிடமிருந்து ஏனைய மத இன மக்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது.

அண்மையில் மாவனல்லையிலுள்ள
  தேவனகல பிரதேசத்தில் முஸ்லிம்களை இலக்கு வைத்து நடத்தப்படும் பௌத்த தீவிரவாத தனிமங்களின் நடவடிக்கைகள் குறித்து அப்பிரதேசத்தில் வாழும்  ஒரு சிங்கள பௌத்தர் ஒருவர் ஒரு செய்திக்  காணொளியில் புலி பயங்கரவாதிகளுக்கு பின்னர் நாட்டின் அமைதியைக் குழப்பும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் சிங்கள பயங்கரவாதிகள்தான் என்று குறிப்பிடுகிறார் . அதனை பல சிங்கள பௌத்தர்களும் ஆமோதிக்கிறார்கள் இன்று  முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் சிங்கள பயங்கரவாதிகள்தான் என்று கூறுவது  நாளுக்கு நாள் உண்மையாகி வருகிறது. அரசாங்கமும் தங்களின் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் இலங்கையில் புலி பயங்கரவாதிகளை  அழித்து கண்ட அமைதியை "சிங்களப் பயங்கரவாதிகள்" அழித்து  விடுவார்கள் . 



எவ்வாறெனினும்  மொத்தத்தில் இந்த செய்தி முஸ்லிம்களுக்குள் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சிங்காவிற்கு முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா  அவசர கடிதமொன்றை இது தொடர்பாக விளக்கம் கோரி அனுப்பி உள்ளது. அந்தக் கடிதத்தில் "குறித்த செய்தி மூலம் இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளை இலக்கு வைத்து இலங்கையிலுள்ள முஸ்லிம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவர் எனும் எண்ணத்தை தூண்டுகிறது. எனவே இது இலங்கை முஸ்லிம்களை சந்தேகத்துடன் நோக்க வைத்துள்ளது. ஆதலால் இயன்றளவு விரைவாக உங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்படி நாம் கேட்டுக்கொள்கின்றோம்" என்று கோரி உள்ளனர்.

முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா இந்திய உயர் ஸ்தானிகருக்கு எழுதியுள்ள கடிதத்தில்  முஸ்லிம்களுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் சில சிங்கள தீவிரவாத குழுக்கள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச 03ம் திகதி செப்டம்பர் மாதம் சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கில் ஆற்றிய உரையை தப்பர்த்தம் பண்ண முயற்சிக்கிறார்கள் . பாதுகாப்பு அமைச்சு திரு ராஜபக்ச இலங்கை முஸ்லிம்களுக் கெதிராக எந்தக் குற்றச்சாட்டையும் முன் வைக்கவில்லை என்று எங்களுக்கு அறிவித்துள்ளது"  (These sources even tried to misinterpret a speech made Defense Secretary Mr. Gotabhaya Rajapakshe during the International defense seminar on September 3rd 2013. The Ministry of Defense has informed us that Mr. Rajapakshe did not make any accusations against the Muslims of Sri Lanka.) என்றும் அந்தக் கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள். எனவே இந்தியாவின் சிண்டு முடித்தலை கொண்டு முடிக்க எத்தனை ஊடக தீவிரவாதிகள் இருக்கிறார்கள்!

03/01/2014

 http://www.dailymirror.lk/news/40914-india-fears-muslim-militant-attacks-in-sl.html

India fears Muslim militant attacks in SL

E-mail Print

The Indian High Commission in Colombo has written to Sri Lankan government requesting it to enhance security given to Indian diplomatic offices in Sri Lanka to prevent an attack by Muslim extremist groups, the Daily Mirror learns.
The request has been made by the Indian government in a letter written to Secretary of the External Affairs Ministry on December 26th.  India has expressed fears of a possible attack on Indian mission in Colombo or consular offices in other parts of the country in the aftermath of the execution of Jamaat-e-Islami leader Abdul Qadir Mullah in Bangladesh.

Abdul Qadir Mullah was sentenced to death by the Bangladesh’s International crimes Tribunal set up to investigate into the crimes committed during the 1971 liberation war.  Mullah who was found guilty of the murders of 344 persons and dozens of other war crimes was hung on December 12.

Interestingly the statement comes a few weeks after a meeting the high commission officials had with Sri Lankan Muslim leaders where comments made by Defence Secretary Gotabaya Rajapaksaon threats by extremist Muslim elements, was discussed extensively.
=================
 

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத குழு: இந்தியா அச்சம்

முஸ்லிம் தீவிரவாத குழுக்களினால் புரியப்படக்கூடிய தாக்குதல்களை தடுப்பதற்காக இலங்கையிலுள்ள இந்திய ராஜதந்திர அலுவலகங்களுக்கு வழக்கப்பட்டுள்ள பாதுகாப்பை அதிகரிக்குமாறு இந்தியா கோரியுள்ளது.

இது தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்திய அரசு டிசெம்பர் 26 ஆம் திகதி அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.

பங்களாதேச ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் அப்துல் காதிர் முல்லாவுக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையை அடுத்து,கொழும்பில் உள்ள இந்திய தூதுவரலாயம்,ஏனைய துணை தூதுவரயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்திய அரசு கருதுகிறது.

பங்களாதேசத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், 1971 ல் நடந்த விடுதலை போராட்டத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரணை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மன்றம் அப்துல் காதிர் முல்லா 344 நபர்களை அப்போது கொன்ற குற்றத்திற்காகவும், ஏனைய குற்றங்களிலும் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு, டிசெம்பர் 12 ல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

முஸ்லிம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் பற்றிய கலந்துரையாடல்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ இந்திய தூதுவரலாய அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்டதை  தொடர்ந்தே இந்திய அரசினால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/94958-2013-12-30-04-40-59.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+TamilmirrorBreakingNews+%28TamilMirror.lk+%3A%3A%3A+Breaking+News%29

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...