ஞானம் 150வது இதழ் வெளியிட்டு வைக்கப்பட்டது


ஞானம் 150வது இதழ் (ஈழத்து இலக்கியச் சிறப்பிதழ் )இலண்டனில் லூயிசாம் சிவன் கோவில் மண்டபத்தில் 24 அகஸ்து மாதம் 2013 அன்று  வெளியிட்டு வைக்கப்பட்டது. ஞானம் இதழ் ஆசிரியர் திரு. ஞானசேகரன் இலங்கையிலிருந்து தனது துணைவியாருடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.


இலக்கியம்,அரசியல்,திரைப்டத்துறை,பெண்ணியம் பற்றிய கண்ணோட்டங்கள்; (3) இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்:


 
இலக்கியம்,அரசியல்,திரைப்டத்துறை,பெண்ணியம் பற்றிய கண்ணோட்டங்கள்;  (3)
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் வழங்கிய நேர்காணலிலிருந்து ஒரு பகுதி 

நேர்காணல்:
 
1. ஆரம்பத்தில் (2008) இலங்கை அரசுடன் பேச்சுவார்தை வைத்துக்கொள்ள நாங்களாகப் போகவில்லை.  2008ம் ஆண்டு, புலிகளுக்கும் அரசுக்கும் போர் நடந்து கொண்nருக்கும்போது, இலங்கை இனப் பிரச்சினையைத் தீர்க்க இலங்கை அரசு தங்களின் ஆயுத பலத்தை மட்டும் நம்பியிராமல் அரசியல் முன்னெடுப்புக்களையும் தொடர்ந்தார்கள். ஆனால் அவர்களுடன் பேசத் தமிழ்த் தலைவர்கள் முன்வரவில்லை. தமிழ் மக்களால் தெரிவு செய்யப் பட்ட தமிழ்த் தலைவர்கள் புலிகளுக்குப் பயந்து, இலங்கையில் பதவியிலிருந்தவர்களுடன் தங்கள் முரண்பாட்ட அரசியலைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். பெரும்பான்மையான புலம் பெயர்ந்த தமிழர்களும்,ஆயத பலத்தால் புலிகள் வெல்வார்கள் என்று நம்பினார்கள். எந்த விடுதலைப் போராட்டமும் எப்போதும் ஆயுத பலத்தை நம்பியிருக்குக் கூடாது, மக்களின் நன்மை கருதி பேச்சுவார்த்தைகள் தொடரப்படவேண்டும் என்று கருதும் லண்டன வாழ் சில சில தமிழர்களை இலங்கை அரசு நல்லிணக்கத் தூதுக்குழுவாக அழைக்கப் பட்டார்கள்..

அடையாளத்தை பேனுவதில் ஏற்படும் அச்சம் -நாழிகை -ஜூன் 2013



எஸ்.எம்.எம்.பஷீர் 

"நான் விரைவாக மரணிக்க வேண்டும்;. எனது மரணவேதனையை நான் நீடிக்க செய்ய முடியாது ;  நான் புத்தரின் தர்மத்தைப் பரப்ப இருபத்தைந்து தடவைகள் புனர்ஜென்மம் எடுக்க வேண்டும்"                         அநாகரிக தர்மபால மரணப்படுக்கையில் கூறியது,


இலங்கையின் வரலாற்றில் இனங்களுக்கிடையிலான முறுகல் என்பது பல்வேறு காலங்களில் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு வந்திருக்கிறது. மகாவம்ச கதைகள் குறிப்பிடும் மிக முக்கிய இனப்பகைமை பற்றிய கதை ; எல்லாளன் துட்டகைமுனு கதைதான்.. என்றாலும் இந்தப் பகைமையின் பின்னணியாக தென்னிந்திய சோழ ராச்சியத்தின் ஆக்கிரமிப்பு ஆட்சியாளனாகவே எல்லாளன் காணப்பட்டாலும் , தெற்கிலே சுதேசிய ஆட்சியாளனான துட்டகெமுனுவுக்கும் , சோழ ஆக்கிரமிப்பின் பிரதிநிதியான எல்லாளனுக்குமிடையிலான ஆட்புல பகை முரண்பாடு  இனவாத  கூறுகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது , மகாவம்சம் பௌத்த இனவாதக் கூறுகளை  துலாம்பரமாக்குவதற்கு பிரதான காரணியாக அமைந்ததற்கு காரணம் அந்நூலை எழுதியவர்கள் பௌத்த தேசியவாத மதகுருக்களாகும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது,.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...