"முஸ்லிம்கள் தனித்துவமான சக்தியாக உள்ளனர்" எஸ்.எம்.எம்.பஷீர்


 "தீர்வுத் திட்டங்களில் தமிழ் பேசும் மக்கள் என்று சொல்லிக் கொண்டு முஸ்லிம் மக்களுக்கான உரிமையை வழங்குவது பற்றி தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிகள் முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று முஸ்லிம் மக்கள் தங்கள் முடிவுகளை தாங்களே எடுப்பார்கள் எனவும் சட்டத்தரணி பசீர் கருத்து வெளியிட்டார். முஸ்லிம்கள் தனித்துவமான சக்தியாக உள்ளனர் , அவர்களை தமிழ் பேசும் மக்கள் எனப் பார்ப்பது பிற்போக்குத்தனமானது எனவும் பசீர் அங்கு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து பேசுகையில் ஈபீடிபி கட்சியின் மனித உரிமை மீறல்கள் பற்றி வருகின்ற குற்றச்சாட்டுகள் பற்றி அமைச்சர் பதிலளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்"

"இலங்கை இந்திய ஒப்பந்தமாகாண ஆட்சியே சாத்தியம்"
 
இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஏற்றுக்  கொள்ளப்பட்ட மாகாண சுயாட்சியே  இலங்கை இனப் பிரச்சினைக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வு என்றும் அதனை அமுல்படுத்துவதற்கு தமிழ் தலைமைகளும் புலம் பெயர் தமிழ் மக்களும் அழுத்தங்களை வழங்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா லண்டனில் இடம்பெற்ற சந்திப்பில் கேட்டுக் கொண்டார்,


 தமிழ் பேசும் மக்கள் என்ற பசீருடைய கருத்துடன் தான் முரண்படுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் அதற்கான விளக்கத்தை நேரமின்மை காரணமாக அளிக்க முடியவில்லை எனத் தெரிவித்தார்.

தேசம் -ஜூன் -அக்டோபர் 2007 (த .ஜெயபாலன்)


Comments

Popular posts from this blog

“மறப்போம்! மன்னிப்போம்!! “

“ सत्यमेव जयति “ ( “சத்யமேவ ஜெயதே “ )

"வேர் ஆறுதலின் வலி " - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்