எப்படித் தப்பினாய் ஜெயபாலா ! (2)
                        எஸ்.எம்.எம்.பஷீர்
                          
                            நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
                         
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே   ( நல்வழி)

                      "கோழியிலிருந்து முட்டை வந்ததா, அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா" என்ற புதிரான விஞ்ஞான விசாரம் போல் அஸ்ரபை தனக்கு சேகு தாவூத் பசீருக்கு முன்னரே தெரியும் என்று ஜெயபாலன் குறிப்பிடலாம். ஆனால் அஸ்ரப் கொழும்பு வந்த பின்னர்   அதுவும் சேகு தாவூத் பசீர் உடனான நட்பின் மூலம் ஒரு கனதியான அறிமுகம் அவருக்கு அஸ்ரபிடம் கிடைத்தது.ஏனெனில் படுவான்கரையின் மூலம் இருவருக்குமே ஒரு நெருங்கிய தொடர்பு இருந்தது.  
 
டம்: புலிகளின் பின்னால் வ.ஐ.ச ஜெயபாலன்
                       புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான படுவான்கரையில்  ஜெயபாலன் "அரசியல் பணி" புரிந்தவர். மேலும் இவர் பசீரின் கீழ் இயங்கிய சில ஈழவர்களுடன்  (ஈழவர்களுள் சில முஸ்லிம்களும் அடங்குவர். அந்த  முஸ்லிம்களையும்  தன்னையும் ஈழவர் என்றே பசீர் அழைத்துக் கொண்டார் )  ஜெயபாலன் அவர்களில் ஒரு சிலருடன் கூட மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தவர். அவர்களின் பெயர்களை இங்கு நான் தவிர்த்துள்ளேன்.   

                       ஜெயபாலன் தனது இலங்கை விஜயம்  தொடர்பாக தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பற்றி கூறும் பொழுது தனது புலிகளுடனான தொடர்புகள் பற்றியும் வலிந்து கூறுகிறார். "1990ல் முஸ்லிம்களை குழப்புகிறேன் என்ற குற்றச்சாட்டில் மட்டக்களப்பில் வைத்து கரிகாலனும், டேவிட்டும் என்னை கடத்தினார்கள். முஸ்லிம் மக்கள் தொடர்பான என் நிலைபாட்டை மாற்றிக்கொள்ள மறுத்தேன். கருணா என்னை வந்து பார்த்தபோது வன்னிக்கு அறிவிக்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என சத்தியம் வாங்கினேன். ஒரிரு நாட்களின் பின்னர் கிரான் சுடலைக்கு மண்வெட்டி சகிதம் அழைத்துச் சென்றபோது   இறுதி நேரத்தில் பொட்டம்மான் தலையிட்டு என்னை விடுவித்தார்." வன்னிக்கு அறிவிக்காமல் (பொட்டம்மானுக்கு ) எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று கருணாவிடம் சத்தியம் வாங்கிய ஜெயபாலனுக்கு , தான் அளித்த சத்தியத்தை கருணா காப்பாற்றியபடியினால்தான் ஜெயபாலன் சுடலையில் புதையுண்டு போகாமல் இன்றும் புலம் பெயர் தமிழ் வலைப்பின்னலில் செயற்பட பொட்டம்மானின் தலையீடும் உயிர்ப் பிச்சையும் ஜெயபாலனுக்கு கிடைத்து. அதன் மூலம் தொடர்ந்தும் படுவான்கரையில் புலிகளுக்குள் இணைந்து வேலை செய்யும் பாக்கியமும் கிடைத்தது. பொட்டம்மானின் புண்ணியத்தால் தான் பிழைத்த கதையை சொல்வதன் மூலம் அவருக்கும் பொட்டம்மானுக்கும் இடையே இருந்த உறவை பற்றிய சமாச்சாரம் ஒருபுறம் இருக்க,  கிழக்கிலே அம்பாறை மாவட்டத்தில் 1980 களின்  ஆரம்பத்தில் ஜெயபாலன் தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லிம் மக்களும் பற்றி வெளிக்கள ஆய்வுகள் செய்த காலகட்டத்தில்தான் பொட்டம்மான் கிழக்கிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டி-கிரானில் நிலை கொண்டு இயக்க வேலைகள் செய்தார். பொட்டம்மானும் முஸ்லிம் இளைஞர்களையும் இயக்கத்தில் சேர்க்கும் எத்தனத்தில் இறங்கினார். அது அவர் எதிபார்த்த வெற்றியை அவருக்கு  அளிக்கவில்லை ( அது வேறு சமாச்சாரம் )

                         2000 ஆண்டு ஜூலை முஸ்லிம்களின் உரிமைகளுக்கான அமைப்பு நடத்திய கருத்தரங்கில் வ.ஐ ச ஜெயபாலன்,
                     “1996 ல் விடுதலைப் புலிகளின் பிரதிநிதி சங்கர் படுவான்கரையில் தெரிவித்த கருத்துகள்   வடகிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம்களின் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையாகலாம். முஸ்லிம்கள் தனியலகாக இணைந்திருப்பது அல்லது பிரிந்து செல்வதை பற்றி எமக்கு எந்த எதிர்ப்பு இல்லை என்றும் , வீரமுனை, காரைதீவு உட்பட எந்த தமிழ்க் கிராமங்களையும் அவர்கள் ஆக்கிரமிக்கக் கூடாது, என்றும் தங்கள் பொது எதிரியுடன் முஸ்லிம்கள் கூட்டுச்சேரக்கூடாது என்றும் சங்கர் உணர்த்திய அம்சங்களின் அடிப்படைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படலாம்.
                     என்று குறிப்பிட்டதன் மூலம் அவர் புலிகள் அதுவரை சொல்லாத ஒரு செய்தியை சொன்னார் என்பதைவிட புலிகளின் " பொது எதிரியுடன் கூட்டுச் சேரக் கூடாது" என்ற எச்சரிக்கையையும் சங்கர் உணர்த்தியதாக குறிப்பிட்டார்.
                     அவர் தொடர்ந்து பேசுகையில் "வடக்கு கிழக்கு பிரிந்திருக்கவேண்டும் என்றும் ஒருவர் இங்கு அபிப்பிராயம் தெரிவித்தார். தமிழரைப் பொறுத்தவரையில் இது சாத்தியமில்லை , அவர்கள் பாணமையில் இருந்து காங்கேசன்துறை வரை பொது எதிரிக்கான போராட்டத்தில்  ஒருங்கிணைந்துள்ளனர். என்று வட கிழக்கு பிரிய வேண்டும் என்பதற்கு இடைமேயில்லை என்பதையும் வலியுறுத்தினார்.

                    நான் இதற்க்குமேல் என்னத்தைச் சொல்ல

                      தமிழ் சினிமாவில் சென்ற ஆண்டு மரணமான  ஒரு  நகைச்சுவை நடிகர்  என்னத்தே கண்ணையா என்பரை நினைவூட்டுவதுபோல் வ.ஐ.ச ஜெயபாலனும் ", இதற்குமேல் என்னத்தை சொல்ல " என்று அங்கலாய்க்கிறார் . கண்ணையா சினிமாவில்  தனது பாத்திரங்களில் "என்னத்தை சொல்லி என்னத்தை செய்ய "  என்ற சலிப்புடன் சொல்லும் சொற்றொடர் அவரின்  புனை பெயராக மாறி கன்னையாவை என்னத்தே  கண்ணையா என்று மாறியது போல் , ஜெயபாலனும் இப்பொழுது ஒரு சினிமா நடிகர் தானே! எனவே "என்னத்தே ஜெயபாலா" என்று கூறினால் தகுமோ !

                      எது எப்படியோ , ஜெயபாலன் தனது முஸ்லிம் மக்களும் தேசிய இனப் பிரச்சினையும்புத்தகத்தை அதிகம் கொள்வனவு செய்தவர்கள் விடுதலைப் புலிகள்தான். அது அவர்களது reference புத்தகமாக இருந்தது. இதற்க்குமேல் நான் என்னத்தைச் சொல்ல.    ( reference என்ற சொல்லுக்கு தமிழை தமிழ் கவிஞன் ஜெயபாலன் எழுதவில்லை , reference எனும் சொல்லுக்கு தமிழ் சொல் உசாத்துணை என்பதை கூடக் குறிப்பிடக் கூடாத? )

                        தனது புத்தகத்தை அதிகம் கொள்வனவு செய்தவர்கள் விடுதலைப் புலிகள்தான். அது அவர்களது சுட்டுக்குறி நூலக இருந்தது என்று சொல்லும் ஜெயபாலனின்  முஸ்லிம் மக்களும் தேசிய இனப் பிரச்சினையும்நூலில் சொல்லப்பட்ட விடயங்கள் முஸ்லிம்களைப் பற்றி அவர்களின் அரசியல் அபிலாசைகள் பற்றி புலிகளுக்கு ஏதேனும் சந்தேகங்கள் தகவல்கள் தேவைப்பட்டால் அவரின் நூல் உதவியிருக்கிறது, புலிகள் அவரின் நூலை அதிகம் வாங்கி தமது உறுப்பினர்களுக்கு  உசாத்துணை நூலாக கையளித்திருக்க வேண்டும் அல்லது அந்நூல்களை கொளுத்தி சாம்பராக்கி இருக்க  வேண்டும்,  அல்லது புலிகள் அந்த நூலை வாசித்து முஸ்லிம்கள் பற்றிய தேசிய சிந்தனைகள் பற்றி அவ்வப் பொழுது ஆத்திரமுற்று முஸ்லிம்களை (கிழக்கில்) ஆங்காங்கே கொன்றழித்திருக்க வேண்டும் , வாழிடங்களை விட்டு (வடக்கில்) வெளியேற்றி இருக்க வேண்டும். ஏனெனில் இவரின் புத்தகத்தை வாசித்து புலிகள் முஸ்லிம்களுடன் உறவு பூண எத்தனித்ததாக அல்லது ஜெயபாலனின் உசாத்துணை நூலை மேற்கோள் காட்டியதாக ஒரு கடுகுச் செய்தி தன்னும் இல்லை. " உலக மகா அறிஞர் பிரபாகரன் "  போயும் போயும் இந்த புளட் ஜெயபாலனை மேற்கோள் காட்டுவாரா  என்ன!

                     "1996 - 2006 காலக் கட்டங்களில் உயிர் ஆபத்துக்களுக்கு மத்தியில்   ஒவ்வொரு வருடமும் வன்னிக்கும் படுவான்கரைக்கும் முஸ்லிம் பிரதேசங்களுக்குமிடையில் சமாதான தூதுவனாக அலைந்திருக்கிறேன். அப்போதெல்லாம் என் உயிரைக் காப்பாற்றியது விடுதலைப் புலிகளும் முஸ்லிம் தலைமையும்தான். இதற்க்கு மேல் நான் என்னத்தை சொல்ல."

                     
                       சேகு தாவூத் பசீருக்கும் ஜெயபாலனுக்கும் இடையிலான அன்னியோனயமான உறவு ஜெயபாலனின் வார்த்தைகளில் வெளிவருகிறது . தோழர் பசீர் ஜெயபாலனை விடுவிப்பதில் தனது "அயராத ராஜதந்திரத்தை" பயன்படுத்தி "தயங்கிய இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவிடம் ஜெயபாலனை விடுங்கள் அவன் பொய்சொல்லமாட்டான். பாதுகாவலர்கள் தன்னைக் கொடுமைப் படுத்தியதாக பொய்ப்பிரசாரம் செய்ய மாட்டான் என பசீர் என்னைக் கேட்காமலே உத்தரவாதம் கொடுத்திருக்கிறான், " சரி இப்பொழுது "பாதுகாவலர்கள் என்ன செய்தார்கள்  என்ற உண்மைப் பிரச்சாரத்தை " ஜெயபாலன் செய்வதில் தடை உண்டோ ? அதற்காகத்தான்  ஆசைப்பட்டார் ஜெயபாலன் என்று சொல்லப்படுகிறது.

                       தனது கைது குறித்து ஜெயபாலன் தன்னைப் பற்றிய ஒரு விம்பத்தை சிருஸ்டிக்கிறார். தான் வடக்கு கிழக்கு முஸ்லிம்களை ஒன்று படுத்தி ஒரு புதிய போராட்டம் நடத்தும் தலைவனாக தன்னைக் கற்பிதம் செய்து , அதனால்தான் காவல்துறை அச்சமுற்று தன்னைக் கைது செய்தது என்று கைதுக்கான காரணத்தை கட்டமைக்கிறார். 

                     தமிழ் முஸ்லிம் மக்களை ஒன்றுபடுத்தி வடகிழக்கு மாகாணங்களில் போராட்டத்தை ஆரம்பிக்கும் நோக்கம் எனக்கிருக்கக்கூடும் என அவர்கள் அஞ்சினார்கள்”. ஆனால் முன்பெல்லாம் இவர் சமாதானப் பணிகளில் ஈடுபட்டிருந்த பொழுது இவரைக் காப்பாற்றியவர்கள் விடுதலைப் புலிகளும் முஸ்லிம் தலைமைகளும்தான் என்று குறிப்படுகிறார் . இவரை யாரிடமிருந்து இவர்கள் காப்பற்றினார்கள் என்பது பற்றி இவர் எதுவும் சொல்லவில்லை , அந்தப் புதிரை விட்டுவிட்டுப் பார்த்தால் , இம்முறை நல்லவேளை இவர் ஒரு நோர்வே பிரஜை நோர்வே தலையிட்டு இவரைக் காப்பாற்றியிருக்கிறது. அந்த வகையில்  "ஜெயபாலன் பொய் சொல்லமாட்டான் , உங்களின் காவல்துறையை காட்டிக் கொடுக்க மாட்டான்" என்று கோத்தபாயாவுக்கு பசீர் சேகு தாவூத்  உத்தரவாதமளித்து - அதாவது  அபாரமான ராசதந்திரத்திணை பயன்படுத்தி -  ஜெயபாலனை விடுவிக்க உதவி உள்ளார்.
                     
                         சமாதானத் தூதுவர்
                       ஜெயபாலனை "தீராநதி"  எனும் இந்திய இணையம் நேர் கண்ட பொழுது  நார்வே அரசு எடுத்துவரும் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான சமாதான முயற்சிகளில் சிலகாலம் ஆலோசகராக இருந்துள்ளார் என்றும் இவர்  தமிழிலும் ஆங்கிலத்திலும் சமூக பொருளாதார ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார் என்றும் குறிப்பிட்டிருந்தது.  அந்த வகையில் அவர் நோர்வேயில் சமர்பித்த ஒரு ஆங்கில ஆய்வுக் கட்டுரை தொடர்பாகவே அவரின் கருத்துக்கள் குறித்து பார்க்க வேண்டி உள்ளது.
                         “Peace and Development in Sri Lanka” ஸ்ரீ லங்காவில் சமாதனமும் அபிவிருத்தியும் என்ற தலைப்பில் நோர்வே ஒஸ்லோ பல்கலைக் கழகத்தில்  24-25 ஏப்ரல்  2008 நடைபெற்ற மாநாட்டில் ஜெயபாலன் கலந்து கொண்டு தனது ஆய்வறிக்கையை சமர்பித்தார்.

.

                        அந்த நிகழ்வுகளில் இக் கட்டுரையாளரும் வடக்கு கிழக்கு இலங்கை                                    முஸ்லிம்களின் பிரச்சினைகளும் அபிலாஷைகளும் என்ற தலைப்பில்                                        தனது ஆய்வினைச் சமர்ப்பித்தார். ஆனால் இக்கட்டுரையாளரின்                                    கருத்துக்களை அங்கு கலந்துகொண்ட புலி ஆதரவாளர்ககளால்           புலம்பெயர் தேசியவாதிககளால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்கள் ஒரு விவாதச் சமருக்கு வழி வகுத்தனர்

                       
                       இதுபற்றி இக்கட்டுரையாளர் மாசி மாதம் 23ம் திகதி 2009 எழுதிய தமிழ் ஈழத்தின் பிறப்பும் இறப்பும் : முல்லைத்தீவிலிருந்து ஒஸ்லோ வரை ( THE BIRTH AND DEATH OF TAMIL EELAM: FROM MULLAITHEEVU TO OSLO ) என்ற கட்டுரையில் சுட்டிக் காட்டி உள்ளார். (http://www.bazeerlanka.com/2011/03/birth-and-death-of-tamil-eelam-from.html )

                        வடக்கு கிழக்கு முஸ்லிம்களும் பிஹாரி முஸ்லிம்களும்     

அந்த மாநாட்டில் , வ ஐ ச ஜெபாலன் கலந்து கொண்டு அவரின் உலகமயமாக்கலும் ஆள்புலமாக்களும்” (Globalization and Territorialisation ) என்ற தலைப்பிலான ஆய்வுரையை சமர்ப்பித்தார். மேலும் அங்கு நோர்வேயில் புலி ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். நானும் எனது என்ற ஆய்வுரையை சமர்ப்பித்திருந்தேன் . அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கருத்துப்பரிமாறலில் வ ஐ ச ஜெபாலன் எனது கருத்துக்கள் அங்கிருந்த தமிழ் தரப்பினருக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது . அப்பொழுது வ ஐ ச ஜெபாலன் இடை மறித்து நானும் அவரும் பால்ய சிநேகிதர் போல என்னை விளித்து எனது கருத்துக்களை நட்பு ரீதியில் , பின்னர் பேசிக் கொள்ளக் கூடிய விஷயம் போல சமாளிக்க முற்பட்டார். நான் மிகவும் உறுதியாக எனது நிலைப்பாட்டில் இருந்தேன். அங்கு கலந்து கொண்டவர்களில் ஒருவர்  சித்தி விநாயகம் எனும் நோர்வேயின் "பிரபல" புலி ஆதரவாளர், பிரபாகரனை நேரில் சந்தித்து பிரபாகரனுடன் தான் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை தனது வியாபார நிலையத்தில் காட்சிப்படுத்தி மகிழ்ந்தவர்.  அவர் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் பற்றிய எனது கருத்துக்களை கேட்டவுடன் ஆத்திரமுற்று பிஹாரி முஸ்லிம்களின் நிலையே எங்களுக்கு ஏற்படும் என்று கூறினார் (அதாகப்பட்டது பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழம் அமைத்தவுடன் நீங்கள் (முஸ்லிம்கள் ) சிங்கள நாட்டிலும் இல்லை , தமிழ் ஈழத்திலுமில்லை, நீங்கள் பிஹாரி முஸ்லிம்கள் போல் நாடற்றவர்களாக - பிரஜா உரிமை யற்றவர்களாகிப் போவீர்கள்  என்று குறிப்பிட்டார் . (பிஹாரி முஸ்லிம்கள் என்றால் பங்களாதேசம் பாகிஸ்தானில் இருந்து தனி நாடாகப் பிரிவுற்ற பொழுது நட்டாற்றில் விடப்பட்ட நாடற்ற மக்களின் கதை),

                       பாகிஸ்தான் 1947ல் இந்தியாவில் இருந்து பிரிந்து தனி நாடாகிய பொழுது பீகார் மாநிலத்தில் வாழ்ந்த பீகாரி முஸ்லிம்கள் பீகார் மாநிலத்துக்கு அண்மையில் இருந்த  அன்றைய இந்தியாவின் கிழக்கு வங்காளத்துக்கு சென்றார்கள் . கிழக்கு வங்காளம் பாகிஸ்தானின் ஒரு ஆட்சி பகுதியாக (கிழக்குப் பாகிஸ்தானாக ) இருந்தது . 1971 மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தானுக்கும் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாய் கிழக்கு பாகிஸ்தான் பங்காளதேசம் என சுதந்திர நாடாக உருவானது. இந்த யுத்தத்தில் கிழக்கு வங்கத்தில் (கிழக்கு பாகிஸ்தான் ) வாழ்ந்த பீகாரி முஸ்லிம் மக்கள்   மேற்கு பாகிஸ்தான் இராணுவத்துக்கு ஆதரவளித்தார்கள் , பாகிஸ்தான் இராணுவம் இவர்களைக் கைவிட்டுவிட்டு சென்று விட்டனர். தனி நாடான பங்காளதேசம் இவர்களை அரவணைக்கவில்லை , மொத்தத்தில் இறுதியில் இரு நாடுகளும் கைவிட்ட சமூகமாக இவர்கள் பிரஜா உரிமையற்ற ஏதிலிகளாக மாறிப் போயினர்.

                      ஜெயபாலன் தனது Globalization and Territorialisation ஆய்வில் மேற்குலக நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவிற்கும் வடக்கு தமிழர்களுக்கும் உள்ள உலகமயமாக்கல் நட்புக்குரிய உறவை பின்வருமாறு சுட்டிக் காட்டியிருந்தார்.  

                    தமிழர்கள் உலகமயமாதலின் (globalization) நண்பர்கள் . 1989 ஆம் ஆண்டு அவர்கள் அமெரிக்க மிஷன் தங்களின் மத கல்வி நிறுவனங்களை இஸ்தாபிப்பதனை வரவேற்றார்கள். அதனால் பயனும் பெற்றார்கள். 19ம் நூற்றாண்டின் தொடக்கங்களில் ஆங்கிலக் கல்வி அவர்களின் வாழ்க்கை வாழ்க்கை முறையையும் வரலாற்றையும் வடிவமைத்தது. 

                   (Tamils are globalization friendly people. The welcomed American mission in 1819 to build their religious and educational institutions and benefited by this in those early days. English education as early as in 19th century shaped up their life style and the history)
                 
                    ஜெயபாலனின் ஆய்வுக்  கட்டுரையிலிருந்து சில கருத்துக்கள்


                     சும்மா சொல்லக்கூடாது  பிரபாகரன் சொன்ன போராட்ட வடிவங்கள் மாறலாம் என்பதினை அவரையும் விட முன்னரே எதிர்வு கூறியவர் வ ஐ ச ஜெயபாலன். அதையும் விட ஒரு படி மேலே சென்று அப்படி பிரபாகரனை சிங்களவர்கள் வெல்லலாம் அப்படி வெற்றி கொண்டாலும்  நீண்ட காலத்தில் அவர்கள்   நாடு கடந்த  தமிழர்களிடமும் , புலம்பெயர் வலையமைப்பிடமும் தோல்வியைத் தழுவுவார்கள். ஆக அந்த புலம்பெயர் வலையமைப்பின் பிரதிநிநியாக சிங்களவர்களை தோற்கடிக்க வ.ஐ ச. ஜெயபாலன் போராடுவார் என்பதை அழுத்தம் திருத்தமாக ஜெயபாலன் குறிப்பிடுகிறார் என்பதை இங்கு புரிந்துகொள்ள எந்த சூத்திரமும் தேவையில்லை.  அப்படிப்பட்ட நோர்வே பிரஜை ஜெயபாலன் அந்த புலம்பெயர் சமூக வலைப்பின்னலில் தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட ஒருவர்  இலங்கையில் இனிமேல் சிங்களவர்கள் தோற்பார்கள் என்றவரை  இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல இலங்கை இராணுவம் உதவியிருக்கிறது.


                     (Sinhalese may win Parabaharan but loose the war in a long run to the Tans national and Diaspora Tamil network. I have had several long and detailed discussions with the ethnic militants, religious extremist and international terrorist supporters since the days of Vietnam War. The have diverse and opposite ideologies and goals. But they all have one strong believe in common. They believe that they have the sacred right of retaliation against the enemy countries and leaders militarily supporting the enemy to kill their kith and kins. Right of retaliation is the guiding philosophy behind all the territorial and ideological terrorism. )

                     பதில்தாக்குதல் நடத்தும் உரிமை என்பது சகல ஆள்புல கருத்தியல் பயங்கரவாதங்களின்  பின்னாலுள்ள வழிகாட்டும் சித்தாந்தமாகும்" என்றும் ஜெயபாலன் குறிபிட்டுள்ளார். இதன் மூலம் பயங்கரவாதத்தை உலகமயமாக்கி அவர் ராஜீவ் காந்தி உட்பட பல தலைவர்களைக் கொன்றதை "பதில் தாக்கும் உரிமை" என்று புலிகளின் நம்பிக்கையையும் நியாயப்படுத்துகிறார். இப்பொழுது இவர் எங்கே நின்றிருக்கின்றார், நிற்கிறார் என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொண்டிருப்பீர்கள்.

                        இன்னும் ஒரு படி மேலே சென்று "நான் வியட்நாம் யுத்த காலத்திலிருந்து இனக்குழும ஆயுதப் போராளிகள், மத தீவிரவாதிகள் சர்வதேச பயங்கரவாத  அதரவாளர்கள் என பலருடன்  நீண்ட விரிவான  கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளேன். அவர்கள் எல்லோரும் ஒரு பொதுவான நம்பிக்கைகையக் கொண்டிருந்தார்கள் . அவர்கள் எதிரி நாடுகளுக் கெதிராக , தங்களின் சொந்த பந்தங்களைக் கொல்லும் எதிரியை இராணுவ ரீதியில் ஆதரிக்கும் தலைவர்களுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தும் ஒரு புனித உரிமை தங்களுக்கு உண்டு என்று அவர்கள் நம்புகிறார்கள்,

                    (With my longstanding interaction with Tamil Tigers I have realised this long ago. Their only goal is self determination of the Tamils. Of their connection not related to any ideology. They are connected by tactics.  Some cases they were motivated by the vengeance and they believe of right to retaliation on the same manner)
                      எனது தமிழ் புலிகளுடனான நீண்ட கால இணைச் செயற்பாட்டினூடாக இதனை நான் நீண்ட காலத்துக்கு முன்பே உணர்ந்தேன். அவர்களின் ஒரே குறிக்கோள் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையாகும் .  அவர்கள் அதே வகையில் பதில் தாக்கும் உரிமையை கொண்டிருப்பதாக நம்புகிறார்கள்.
                      என்று கூறும் ஜெயபாலன்  பிறிதொரு இணையம் ஒன்றில் எழுதும் பொழுது 1996 தொடக்கம் 2006 வரை தான் புலிகளின் குகைக்குள் சென்ற கதைகளை கூறுகிறார் .
                    மேலும் புலிகளின் மீது மேற்குலக விதித்துள்ள பயங்கரவாத முத்திரையை கிழித்தெறிய தனது விநயமான வேண்டுகோளை தனது ஆய்வுக் கட்டுரையிலே ஜெயபாலன் பின்வருமாறு முன் வைத்தார். தமிழ்ப் புலிகள் மேற்குலகின் அக்கறைகளுக்கு நேர்மறையாக பதிலளிக்கிறார்கள் , அத்துடன் அவர்களின் மேற்குலக கூட்டொருமை நிறுவனங்களின் பதிவுகளை சீர்படுத்த ஆக்கபூர்வமான முயற்சிகளை எடுத்துவருவதாக தோன்றுகிறது. அவர்கள் சிறுவர்களை படையணியில் நிறுத்தி விட்டார்கள் , இது அமெரிக்க ராஜாங்க  நாடுகளின் 2007 மனித உரிமை செயற்பாட்டு அறிக்கையிலும் சொல்லப்பட்டிருக்கிறது.  
                     (Tamil Tigers are also responding positively to the concerns of the west and seems to take constructive steps to improve the records of their solidarity organisations in the west. They have stopped recruitment of child soldiers. This was noted by US State Department in Country Reports on Human Rights Practices - 2007.)


                       அமெரிக்க அரசின் ராஜாங்க நாட்டு அறிக்கையில் (Country Report) இலங்கை தொடர்பான அவதானங்களில் பிள்ளையான் பிள்ளை பிடிக்கிறார் என்று சொல்லப்பட்ருப்பதனையும் சுட்டிக் காட்டி "இது தமிழர்களுக்கு ஒன்றும் ஆச்சரியமானதல்ல , பிள்ளையான் ஜனாதிபதியும் அவரின் சகோதர்களும் நடத்தும் கிழக்கிலங்கை கம்பெனியின் பிரதான பங்காளி . உண்மையில் அரசாங்கமே தமிழ் சிறுவர்களை  படையணியில் சேர்க்கிறது " ( This is not a surprise to Tamils. Pillaiyan is the major partner of the East Lanka Company run by the President and his brothers. In fact government is recruiting Tamil children their paramilitary arms Pillaiyan group.)
                       என்று குறிப்பிட்டிருந்தார். இப்படியெல்லாம் சொன்ன ஜெயபாலன் புலிகளில் இருந்தபொழுது படுவான்கரையில் பிரபாகரனின் புலிக் கூட்டுத்தாபனத்தில் தமிழ் சிறுவர்களை பிள்ளையானோ அல்லது கருணாவோ பிடித்த பொழுது சொல்லவில்லையே!

                        அப்பொழுதுதெல்லாம்  தமிழ் சிறுவர்கள் பிடிக்கப்பட்டபொழுது பொட்டம்மான்,  சங்கர் , கருணா என்று தொடர்புகளை பின்னிக் கொண்டு செயற்பட்ட ஜெயபாலன் "அச்சமில்லை , அச்சமில்லை , அச்சமென்பதில்லையே " என்று பல இடங்களிலும் கர்சித்தவர் என்று கூறுபவர். இம்முறை இலங்கையில் இருந்த பொழுது கூட கர்சித்தவர் , அப்பொழுதெல்லாம் கப்சிப்பாக இருந்ததென் மர்மம்தான் என்ன. வரலாறுகள் பலரின் ஏடுகளை புரட்டிப் பார்க்கும் . அதுவரை பொறுத்திருப்போம். !

                      புலிகளை பையன்கள் என்று தனது ஆய்வில் உரிமை கொண்டாடும் ஜெயபாலன் புலிகளை மிக மென்மையாகவே சாடுகிறார்.
  
                      ஆனால் இறுதியாக ஒரு உண்மையை சொல்ல வேண்டும் முஸ்லிம் மக்களும் மலையகத் தமிழர்களும் வடக்கு கிழக்கு தமிழரின் ஆயுதப்  போராட்டத்தால் பாதிக்கப்பட்ட சமூகம் என்பதையும் முஸ்லிம்களின் உரிமைகளைப் பற்றி மொத்தத்தில் அது தமிழர்களுடன் பொது நலத்தில் (பொது எதிரிக் கெதிராகவேனும்  என்ற சால்ஜாப்பிலாவது )  சேர்த்தே பார்க்கும் ஒரு பார்வை மட்டும் ஜெயபாலனை தனித்து காட்டுகிறது.

                      மேற்குலகின் முகவர்களாக செயற்பட்டு இலங்கையின் இறைமைக்கு சவால்விடும் இலங்கையின் முன்னாள் பிரஜைகள் எவரும் இலங்கையில் விசா விதி முறைகளை மீறி  செயற்படுகிறார்களா என்பதில் இலங்கை அரசு கவனமாகத்தான் இருக்க வேண்டும் . ஆனால் ஜெயபாலன் பலத்த விசாரனைகள் இன்றி தப்பித்துள்ளார். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்று சொல்லலாமோ !


22/12/2013

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...