"இலங்கையிலும் தந்திக்கு மூடுவிழா'"இலங்கையிலும் தந்திக்கு மூடுவிழா'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 செப்டம்பர், 2013 - 15:51 ஜிஎம்டி

இந்தியாவை அடுத்து இலங்கையிலும் தந்திச் சேவை முடிவுக்கு வருகிறது. ஏனைய பல வசதிகள் வந்துள்ள நிலையில், அதன் தேவை அருகி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 155 ஆண்டுகளாக தபால் திணைக்களத்தினால் நடத்தப்பட்டு வந்த தந்திச் சேவை இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது.
இது குறித்து பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.


ஓய்வு பெற்ற தந்தி சேவகர் செய்யது முஹமது
தந்திச் சேவை கடந்த காலங்களில் பல வழிகளில் மக்களுக்கு உதவியதாகக் கூறும் முன்னாள் தந்திச் சேவகரான செய்யது முஹமது அவர்கள், ஆனால், அது முடிவுக்கு வருவதையிட்டு கவலைப்படத் தேவையில்லை என்றும், தற்போதுள்ள புதிய வழிகள் அதனை ஈடு செய்யும் என்றும் கூறுகிறார்.
இவை குறித்த தகவல்கள் அடங்கிய, மட்டக்களப்பு செய்தியாளர் உதரகுமாரின் செய்திப் பெட்டகத்தை இங்கே கேட்கலாம்.

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/09/130930_lankatelegram.shtml

Comments

Popular posts from this blog

“மறப்போம்! மன்னிப்போம்!! “

"வேர் ஆறுதலின் வலி " - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்

“ सत्यमेव जयति “ ( “சத்யமேவ ஜெயதே “ )