இலக்கியம்,அரசியல்,திரைப்டத்துறை,பெண்ணியம் பற்றிய கண்ணோட்டங்கள்; (3) இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்:


 
இலக்கியம்,அரசியல்,திரைப்டத்துறை,பெண்ணியம் பற்றிய கண்ணோட்டங்கள்;  (3)
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் வழங்கிய நேர்காணலிலிருந்து ஒரு பகுதி 

நேர்காணல்:
 
1. ஆரம்பத்தில் (2008) இலங்கை அரசுடன் பேச்சுவார்தை வைத்துக்கொள்ள நாங்களாகப் போகவில்லை.  2008ம் ஆண்டு, புலிகளுக்கும் அரசுக்கும் போர் நடந்து கொண்nருக்கும்போது, இலங்கை இனப் பிரச்சினையைத் தீர்க்க இலங்கை அரசு தங்களின் ஆயுத பலத்தை மட்டும் நம்பியிராமல் அரசியல் முன்னெடுப்புக்களையும் தொடர்ந்தார்கள். ஆனால் அவர்களுடன் பேசத் தமிழ்த் தலைவர்கள் முன்வரவில்லை. தமிழ் மக்களால் தெரிவு செய்யப் பட்ட தமிழ்த் தலைவர்கள் புலிகளுக்குப் பயந்து, இலங்கையில் பதவியிலிருந்தவர்களுடன் தங்கள் முரண்பாட்ட அரசியலைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். பெரும்பான்மையான புலம் பெயர்ந்த தமிழர்களும்,ஆயத பலத்தால் புலிகள் வெல்வார்கள் என்று நம்பினார்கள். எந்த விடுதலைப் போராட்டமும் எப்போதும் ஆயுத பலத்தை நம்பியிருக்குக் கூடாது, மக்களின் நன்மை கருதி பேச்சுவார்த்தைகள் தொடரப்படவேண்டும் என்று கருதும் லண்டன வாழ் சில சில தமிழர்களை இலங்கை அரசு நல்லிணக்கத் தூதுக்குழுவாக அழைக்கப் பட்டார்கள்..

 
17.2.08--  23.2.08 வரை , இலங்கை அரசின் அழைப்பில, பல தரப்பட்ட சிங்கள தமிழ்த் தலைவர்களையம் மந்திரிகளையும் சந்தித்து, 13வது திருத்த சம்பந்தமானவிடயங்கள பற்றிக் கலந்துரையாடுவதற்காக இலங்கைக்குச்; சென்றோம்.
இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்க்க 13வது திருத்துச்சட்டத்ததை அமுல் படுத்தும் விடயத்தில் முக்கிய மந்திரியாக நியமிக்கப் படடிருந்த போராசிரியர் திஸா வித்தாரணவைப் பல தடவைகள் சந்தித்து 13வது திருத்தச்சட்டத்தில் தெளிவாக இல்லாத பல பகுதிகளைப் பற்றிப் பேசினோம். 

 Rajeswary.B2

 அக்கால கட்டத்தில் புலிகளிடமிருந்த கிழக்குப் பகுதியின் பெரும்பான்மை இடங்கள் அரசகட்டுப்பாட்டில் வந்திருந்தது. அந்த இடங்களின் பாதுகாப்புக்கும் புனத்தாருண விடயங்களுக்கும் மந்திரியாகவிருந்த கரு ஜெயசூரியாவை சந்தித்து தமிழ்ப் பகுதிகளின் மீள்குடியிருப்பு, பாதுகாப்பு, புனருத்தாரணவேலைகள் பற்றிக் கலந்துரையாடினோம்.
அந்தக்கால கட்டத்தில் கொழும்.பு மானகரில் வெள்ளை வான் கடத்தல்கள், தமிழர்கள் காணாமற்போவது என்பன நடந்து கொண்டிருந்தன. அதுபற்றிப் பேச மனித உரிமை விடயங்களின் மந்திரியாகவிருந்த மஜந்த சமரசிங்க அவர்களைச் (21.-2.08)யும் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகளையும்(22.02.08) சந்தித்தோம்.
 யாழ்ப்பாணத்திலிருந்து 1990ல் புலிகளாற் துரத்தப் பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம் பகுதியில் அகதி முகாம்களில் இருந்தார்கள். அவர்களைச் சந்திக்கச் சென்று (19.02.2009) அவர்களின் துயர நிலைகளை அறிந்து கொண்டோம். யாழ்ப்பாணத்திலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம் மக்களில் வசதி படைத்தவர்கள்  வியாபாரம் போன்றவற்றில ஈடுபட்டுத் தெற்குப் பகுதிகளில் வாழ்க்கையமைத்துக்கொண்டாலும் பெரும்பாலான மக்கள் தங்கள் எதிர்கால நிலை குறித்து ஏங்கிக் கொண்டிருந்தார்கள் கணிசமான. இவர்களின் வாக்குரிமை வடபகுதியில் இருந்ததால, அரச சபையில் இருக்கும் மந்திரி;களோ அல்லது முஸ்லிம் அரசியல்வாதிகளோ தங்களுக்கு உதவுவதில்லை என்று குறைபட்டார்கள்.(அவர்களின் குறைகளை, எங்களின் இங்களது இரண்டாவது இலங்கை பயணத்தின்போத ஜனாதிபதியிடம் எடுத்துரைக்க அதைச்செவிமடுத்த ஜனாதிபதி புத்தளத்தில் அகதிகளாகவிருக்கும் முஸ்லிம்மக்களின் துயர்நீக்கு உடனடியாகப் பல உத்தரவுகளைப் பிறப்பித்தார்).
யாழ்ப்பாணத்திலுள்ள பொது மக்கள் அமைப்புக்களின் பிரதி நிதிகளைச் சந்தித்தோம்.
20.2.2008 அன்று யாழ்ப்பாண கத்தோலிக்க ஆயர் தோமஜ் சௌந்தரம் பிள்ளையவர்களைச் சந்தித்தபோது,  40-50.000 படைவீரர்கள் யாழ்ப்பாணத்தில் குவிந்திருக்கிறார்கள். அப்படியான 'சூழ்நிலையில்; ' அமைதி' பற்றிப் பேசவந்திருக்கிறீர்ளே என்று எங்களைப் பார்த்துப் பெருமூச்சு விட்டார். 'புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கைவாழ் தமிழரின் வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கிறார்கள். என்று வருத்தத்துடன் குறிப்பிட்டது மட்டுமல்லாது, வடபகுதியில் தொடரும் ' இனம் தெரியாத'(??)போர்வழிகளால் நடத்துப்படும் கொலைகள், ஆட்கடத்தல்கள் பற்றிய கொடுமைகளையும் விபரித்தார்.
 13வது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்வது இலங்கையின் இனப் பிரச்சினை தீருவதற்கு இன்றியமையாதது என்பதை எடுத்துச் சொல்ல யாழ்ப்பாண பொது மக்கள் அமைப்புக்களின் பிரதி நிதிகளையம் சந்தித்தோம்.

 எதிர்க்கட்சித்தலைர் ரணில் விக்கிமசிங்காவைச் சந்தித்தபோது (22.02.2008 பின்னேரம்), 13வது திருத்தச்சட்டம் தங்களது குழந்தை என்றும் அதைப் பராமரிக்கவும் வளர்க்கவும் தாங்கள் எப்போதும் தயாராகவிருப்பதாகக்கூறினார். 13வுது திருத்தச் சட்டம் யு. என். புp ஆட்சிக்காலத்தில் எழுதப் பட்டதால் அந்தத் திருத்தத்தைத்தாங்கள் கட்டாயம் ஆதரிப்போம் என்று அவர் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார்
 தமிழத் தலைவர்களில் ஆனந்த சங்கரி எங்களை சந்தித்து (21.02.2008) அவர் அங்கு நடக்கும் நிலைமைகளை விளக்கினார். ஜேவிபியின் தலைவர், சோமவன்சாவையும் அங்கத்தவர்களிற் சிலரையும் 22.02.2008) சந்தித்தோம்.
;  தமிழ்த்தேசியக் கூட்டத்தலைவர் திரு சம்பந்தனைச் சந்திக்கப்போய் மணிக்கணக்காகக்காத்திருந்தும் அவரின் தரிசனம் கிடைக்கவில்லை. அக்கால கட்டத்தில் மட்டக்களப்புக்கான தேர்தல் விடயங்கள் நடந்கொண்டிருந்ததால் கிழக்குக்குப் போக முடியவில்லை.
2. கிழக்கின் முதலமைச்சராகத் திரு சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவு செய்யப்பட்டதும் அவரின் அழைப்பில் கிழக்கைச்சேர்ந்த சிலர் திரு பஷீர் அவர்களின் தலைமையில் மட்டக்களப்புக்குச் சென்றோம் (23. 06 08-27.--08.2008)
இதன் காரணம், ஏற்கனவே, 13வது திருத்சட்டங்கள் பற்றிய கருத்தாடல்களுக்கு எங்களில் சிலர்  இலங்கை சென்றிருந்தும் பல தரப்பட்ட அமைச்சர்களுடன் 13வது திருத்தச் சட்டம் பற்றிக் கலந்துரையாடல்களை நடத்தியதுமாகும்.
 தான் முதல் அமைச்சராகவிருக்கும் மட்டக்களப்பு பிரதேச சபைக்குள்ள முழமையான அதிகாரம் என்னவென்பதைப் பற்றிக் கிழக்கின் முதலமைச்சர் எங்களுடன் கலந்துரையாட விரும்பியதுமாகும்.
அவர் முதல் அமைச்சராகவிருக்கும் மட்டக்களப்பு பிரதேச சபைக்குள்ள முழுமையான அதிகாரம் என்னவென்பதைப் பற்றிக் கிழக்கின் முதலமைச்சர் சந்திரகாந்தன் எங்களுடன் கலந்துரையாட விரும்பினார். மட்டக்களப்புக்குச் செல்ல முதல், 13வது திருத்தசட்டத்தில் மிகவும் முக்கியமானவரான் அமைச்சர் திஸா விதாரணையின் அழைப்பின் பேரில் அவரைச் சந்தித்து (22.08.2008) உரையாடி எங்கள் பயணத்தின் காரணத்தை விளக்கினோம்.
மட்டக்களப்பில் முதலமைச்சருடனும் அவருடனிருந்த முக்கிய பிரமுகர்களுடனும் 13வது திருத்தச்சட்டம் பற்றியும் அதில் உள்ள ஆதிக்கப் பரவலாக்கம் எவ்வளவு தூரம் பிரதேசசபைக்குப் பகிர்ந்தளிப்பது என்பது மத்திய அரசின் பொறுப்பு என்பது பற்றியும் பல மணி நேரங்கள் கலந்துரையாடினோம். இலங்கையின் ஜனநயகத்தேர்தலும் இலங்கையிலுள்ள எடடு முதலமைச்சர்களும்  13வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் நடந்தியிருந்தாலும் பிரதேசசபைக்கான முழு அதகாரத்தையும் மத்திய அரசு கொடுக்கவில்லை என்பது விவாதிக்கப்பட்டது.
இலங்கையின் மற்ற ஏழுபிரதேச முதலமைச்சர்களும் சந்திர காந்தன் அவர்களைத் தங்கள் தலைவராகப் பதவி கொடுத்து , பிரதேச சபைகளுக்கான அதிகாரப் பரவாக்கலைச் செயற் படுத்த, மத்திய அரசுடன் பேசும் அதிகாரத்தைக் கொடுத்திருந்தார்கள்.' இலங்கையின் பெரும்பாலான அதிகாரங்கள் மத்திய அமைச்சின் மந்திரிகளிக் கைகளில் இருப்பதாகவும் பிரதேச சபைகளுக்குரிய சட்டப்படியான அதிகாரங்களிற்கூட அவர்கள் தலையிடுவதாகவும்' கிழக்கின் கல்வி, சுகாதார அமைச்சராகவிருந்த திரு ஹிஸ்புல்லா அவர்கள் விசனப் பட்டுக்கொண்டிருந்தார்.
 மட்டக்களப்பு பிரயாணத்தின்போது காத்தான்குடியைச்சேர்ந்த சேர்ந்த முஸ்லிம் பிரமுகர்கள், கிழக்கு மாகாணசபை அங்கத்தவர்கள்,பொதுமக்கள், போன்றவர்களடன் பல விடயங்களைக் கலந்துரையாடினோம்.
மக்கள் மத்தியில் போராளியாக வாழ்ந்து கிழக்கின் முதலமைச்சராக வந்திருக்கும் சந்திரகாந்தன் அவர்களுக்கு தமிழ்-முஸ்லிம் மக்கள்  கொடுத்த மனமார்ந்த வரவேற்பு ஆச்சரியத்தைதத் தந்தது. மிகவும் எளிமையான வாழ்க்கை முறைகளுடன் மக்களோடு மக்களாய்த் தன்னைப்பிணைத்திரக்கும் முதலமைச்சர் கிழக்குக்கான முன்னேற்ற விடயங்களை எடுப்பதற்கப் பல தரப்பட்ட தடைகள் இருப்பதாக மக்கள் சொன்னார்கள்.
வாகரைக் கிராமத்திற்குந் சென்று சில போது சென்றபோது மிகவும் வறிய மக்களைச் சநதிக்க நேர்ந்தது. போராட்ட காலத்தில் புலிகளுக்கும் அரசபடையினருக்கும் இடையில் அகப்பட்டுத் துயர் பட்ட ஏழைத் தமிழர்களில் பலர் அங்கு வாழ்கிறார்கள் அரசபடைக் கொடுமைகள், புலிகள் வந்து தங்கள் பிள்ளைகளைப் பலவந்தமாகப் போர்முனைக்குப் பிடித்துக்கொண்டது போன்ற பல விபரங்கiயும் சொன்னார்கள்.
 2004ம் அண்டு ஆரம்பகாலத்தில் புலிகள்; இரண்டாய்ப் பிளவு பட்டபோது, பிரபாகரனின் புலிகள், அவர்களிடமிருந்து பிரிந்து போன கருணாவின் கூட்டத்தை;தேடியழித்த கொடுமைகளை விபரித்தார்கள் பிரபாகரனின் புலிகள் அவர்களிடமிருந்து பிரிந்துபோன கிழக்குப் பகுதிப் பெண்புலிகளுக்குச் செய்த பாலியற் கொடுமைகளும் சித்திரவதைகளையும் சொன்னால் தர்மம் தலைகுனியும் என்றழுதார் ஒரு கிழவர்.
 கிழக்கிலிருந்து கொழுப்புக்கு வந்தபோது, ஜேவிபி கட்சியைச் சேர்ந்த விமல் வீரவன்சாவைச் சந்தித்து, முரண்பாட்டு அரசியலை முன்னேடுத்துக்கொண்டிருப்புது இலங்கையின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் தடையானது என்பத பற்றிய கருத்துக்களைப்பறிமாறினோம்.
 எங்கள் பயணத்தின் முக்கிய விடயமாக, இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்சாவைச் சந்தித்து (27 06.08), கிழக்கு மக்களின், மீள்குடியேற்ற வேண்டுகோள',பாதுகாப்பு, பத்தள முஸ்லிம் மக்களின் பரச்சினை வரை பல விடயங்களைப் பேசினோம்.
 3. 2009ம் ஆண்டில்,இலங்கையில் தொடர்ந்து நடக்கும் போரின் காரணமாக தமிழ் மக்கள்படும் துயர்கள் சொல்லில் அடங்காதவையாகப் பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டிருந்த பல பகுதிகள் அரசதரப்பின. ஆளுமைக்குள் வந்துகொண்டிருந்தது. மக்களைத் தங்கள் பாதுகாப்புக்கருதிப் போர்க்கவசமாக்கிய புலிகள் அவர்கிளின் பிடியில் அகப்பட்டுக் கொண்டிருந்த மக்களைத் தங்களின் பாதுகாப்புப் பிரதேசமான இடங்களுக்க:ள வைத்துக்கொண்டுபோராடினார்கள். உலகெங்கும் வாழும் தமிழர்களில்; பெரும்பானமையான புலி ஆதரவாளர்கள் அவர்கள் வாழும் நாடுகளிலுள்ள அரச ஸ்தாபனங்களுக்கள் முன்னால் இலங்கையில் நடக்கும் போரை நடத்த சொல்லிப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள.  அரச படைகள் போரிற் புலிகளைத் தோற்படிக்கப்போகிறது என்பதை உணர்ந்த இலங்கை அரசு புலிகளின் போர்நிறுத்தக் கோரிக்கையைச் செவி மடுக்கவில்லை.
புலிகளுக்கும் அரச தரப்புக்கும் இடையில் அகப்பட்டத் தவிக்கும் மக்களை எப்படியும் விடுவிக்கும் முயற்சியில், அவஸ்திரேலியாவைச் சேர்ந்த தமிழ் பத்திரிகையாளரும் மனித உரிமைவாதியுமான டாக்டர் நடேசன், இலங்கைக்கு வந்து தமிழர்களுக்கு உதவ நினைக்கும் தங்கள் கோரிக்கையை இலங்கை வெளிவிவகார அமைச்சர் திரு பொகல்லாகம அவர்களிடம் தெரிவித்தாh.
அதைத் தொடர்ந்து எங்கள் செலவில் உலகின் பல பகுதிகளிலுமிpருந்து கிட்டத்தட்ட முப்பது தமிழர்கள் இலங்கை சென்றோம்.(24.3.3.09).இலங்கை அமைச்சர்களைச் சநதிக்க முதல்,திரு சம்பந்தர் கோஷ்டி தவிர்நத மற்றைய தமித் தலைவர்கள் எங்களைச் சந்தித்துப் பல கலந்துரையாடல்களை நடத்தினார்கள்.
பங்குனி 28,28ம் திகதிகளில் புலம் பெயர்ந்துநாடுகளிலிருந்து சென்றிருந்த பிரதிநிதிகளுக்கு கொழும்பு மவுண்ட்லவேனியா ஹொட்டெலில் உள்ள மண்டபத்தில் இலங்கைவெளிநாட்டமைச்சால் இருநாள் மகாநாடு நடத்தப்பட்டது. இதில், டாக்டர் பாலித கோகன, றோகித போகல்லகம, லலித் வீரதுங்க, பேராசிரியர் திஸா வித்தாரண,  அஜித் நிவார்ட் காப்ரால் ( பாங்க் ஒவ் சிறி லங்கா), திரு சுந்திர பெர்னான்டோ, திரு டியு குணசேகரா, திர சுகதா கமகே,திரு இராமானுஜம், திருமதி ஜெகராசசிங்கம்,   திருமதி விஜவார்த்தன,போன்றார் பல விடயங்கள் பற்றி சொற்பொழிவுகளாற்றியும் பங்குபற்றியிமிருந்தார்கள்.
அதைத் தொர்ந்து நடந்த விருந்துபசாரத்தில், உலகின் பன்னாட்டுத்தூதுவர்களையும்,(அமெரிக்கா, நேர்வே, இந்தியா போன்ற ) சந்திக்கும் வாய்ப்பும் போரால் இன்னல படும் மக்கள் நிலை குறித்துப் பேசவும் வாய்ப்புக் கிடைத்துது.
 புலம் பெயர்ந்து போன நல்லிணக்கதூதுக்குழுவின் பல கோரிக்கைகளில் புலிகளிடமிருந்து தப்பி ஓடிவந்து இலங்கை அரசிடம் சரணடைந்த இளம் போராளிகள்; வைக்கப்பட்டிருந்த  அம்பேபுச என்ற இடத்திற்குச் சென்றோம்.
அங்கு திரு பெர்னான்டோ என்ற போரில் வலது கையையிழந்த ஆர்மிக் கொமாண்டரின் மேற்பார்வையில் 80 இளம் தளிர்கள் இருந்தார்கள் 13-17 வயது வரைக்குட் பட்டவயதுடையவர்கள். அதில்  ஒரு பெண் இன்னும் கன்னிப் பருவம் அடையாத குழந்தை. இவர்களிற் பெரும்பாலோர் புலிகளால் பலவந்தமாகவும் பாடசாலைக்குப்போகும் வழியிலோ அல்லது பாடசாலையிலோ வைத்தப் புலிகளால் பிடிக்கப்பட்டதாகவும் சொன்னார்கள். பெருமபாலானவாகள் வன்னி, கிளிநொச்சி, முல்லைத்திவுப் பகுதியைச் சேர்ந்த ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் .
இவர்களுக்கு, இவர்களின் எதிர்காலத்திற்கு பயன்தரும் விதத்தில் ,மும்மொழியிலும் கல்வியும், தச்சுவேலை போன்ற தொழிற்கல்வியும், கொடுக்கப் பட்டிருந்தது. இப்படியான இளம் போராளிகள் தெல்லிப்பளை போன்ற சில இடங்களிலும்; இருப்பதமாகச் சொல்லப்பட்டது.

31.3.09 அன்று, போர் நடக்கும் பகுதியிலிருந்து இராணுவப் பகுதிக்குத் தப்பி வந்த தமிழ் மக்கள் தங்கியிருந்த வவுனியாவிலுள்ள காமினி வித்தியாலய முகாமுக்குச் சென்றோம். அன்று மட்டும், 5.000 மேற்பட்ட தமிழ் மக்கள் புலிகளிடமிருந்து தப்பி வந்து கொண்டிருந்தார்கள். குழந்தைகள், முதியவர்கள், வாலிபர்கள், குமர்ப் பெண்கள், காயம்பட்டோர், இரத்தம் வடிபவர்கள்; ஓடிவரும்போது செல்லடியில் அடிபட்ட இறந்த சொந்தங்களை நினைத்து கதறி அழுபவர்கள், என்ன நடக்கிறது என்பதையே மறந்து மனப்பித்துப் பிடித்தவர்கள், எதிர்காலம் என்னவாயிருக்கும் என்று தெரியாத, புரிந்து கொள்ள முடியாத நிலையில் விரக்தியுடன் விம்முபவர்கள் என்று பல தரப்பட்ட காட்சிகள் மனதைப் பிழந்தன. ஓரு சில வெளிநாட்டு மனித உரிமை அமைப்புக்கள் அங்கு இருந்தன. ஆனால் பெரும்பாலான உதவிகளை ஆமிக்காரரும்,அரச உத்தியோகத்தர்களும் செய்துபொண்டிருந்தார்கள்.
அமைச்சா பசில் இராஜபக்சாவுடன் நடந்த சந்திப்பல், எதிர்வரவிருக்கும் தமிழ் சிங்கள் புத்தாண்டை முன்னிட்டாவது, இரண்டு நாட்கள் போரை நிறுத்தி புலிகளிடம் அகப்பட்டுக்கொண்டிருந்த தமிழ் மக்கள் வெளியில் வர உதவவெண்டும் என்று கேட்டுக்கொண்டோம் சில நாட்களின் பின் இரண்டு நாட்களுக்குப் போர்நிறுத்தப் பிகடனத்தை அரசு செய்தது.  ஆனால் மக்களைப் புலிகள் வெளியில் வரவிடவிலலை. போர் தொடர்ந்தது. சித்திரை வருடத்துக்கு ஒரு சில நாட்களுக்கு முன் (சித்திரை 11ம் திகதி என்று நினைக்கிறேன்) இலங்கை ஐ.ரி.என் வானொலியில்' நிங்கள் தொடர்ந்து நடத்தும் போரில் வெல்லமுடியாது. தமிழ் மக்களைக் கேடயமாகப் பாவிக்க வேண்டாம் தயவு செய்து அவர்களைப் போக விடுங்கள்' என்று நான் புலிகளிடம் கெஞ்கினேன்.
போர்தொடர்ந்த பொது புலிகளிடமிருந்து தப்பிவந்த மக்களுக்கு உதவ கொழும்பிலுள்ள சகல மத மக்களும் எந்த விரோத மனப்பான்மையுமின்றி பிஸ்கெட், பால்மா போன்றவற்றைச் சேகரித்துக் கொடுத்ததைப் பார்த்தபோது இலங்கையில் சுனாமி வந்தபோதும் இப்படித்தான் இலங்கை மக்கள் ஒருத்தொருக்கர் உதவி செய்தார்கள் இதுதான் மனிதம், என்று ஆனந்தக் கண்ணீர் வந்தது.
 லண்டனுக்கு வந்ததும் உலகில் பிரசித்திபெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் (05.06. 09) இலங்கை பற்றி நடந்த விவாதத்தில லண்டனைச் செர்ந்த பஷீர் அவர்களுடனும், இலங்கையிலிருந்து வந்திரந்த அமைச்சர் ரஜீவிஜயசிங்காவுடனும் இலங்கையில் முன்னேடுக்கப்படும் நல்லிணக்க விடயங்கள் பற்றியும் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு இலங்கையின் இன ஒற்றுமை பற்றியும் பேசினேன்.
4. போர் முடிந்த பின் இன்னோரு (08.07.2009).பிரயாணத்தை மேற்கோண்டோம். போர் முடிந்து, 300.000 தமிழர்கள் முகாம்களில் வைக்கப்பட்டிருந்தபோது, அவுஸ்திரேலியாவிலிருந்து டாக்டா நடேசன், சிவானந்தன, கனடாவிலிருந்து மனோரஞ்சன், இலங்கையிலிருந்து டாக்டர் நரேந்திரன் போன்றவர்கள், அவதிப்படும்  தமிழர்களுக்கு உதவும் நோக்கில் இலங்கை சென்றோம். அந்தப் பிரயாணத்தின்போது, இலங்கை நீதியமைச்சு (கைதாகிப் பலகாலமாய்ச் சிறையிலிருக்கும் தமிழ்க் கைதிகள் பற்றி), கோதபாய இராஜபக்சாவுடன், இராணுவ முகாம்களை மக்கள் குடியிருப்பகுதிகளிலிருந்து அகற்றுவது பற்றிப் பேசினோம்.
 இலங்கையில் தமிழ் அகதிகளுக்காகப் பணி புரிந்து பொண்டிருந்த பல தரப்பட்ட மனித உரிமை அமைப்புக்களுடனும், தமிழர்கள் வாழும் நாடுகளிலுள்ள தூதுவராலயங்களுடனும் ( அமெரிக்கா,அவுஸ்திரேலியா, பிரி;தானியா,கனடா), இலங்கை சமயத்தலைவர்கள் (மல்வத்தNதுரோ, அஸ்கிரிய தேரோ, கொழும்பு பிஷப்),போன்றோரிடமும் பேச்சுவார்ததைகள் நடத்தி இடம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு உதவி கோரினோம்.
அத்துடன் நானும் நடேசனும் மனித உரிமை எழுத்தாளர்கள் என்ற தகுதியில் இந்தியா சென்று அன்று தமிழ்நாட்டின் முதல்வராகவிருந்த கருணாநிதியின் மகளும் எழுத்தாளருமான கனிமொழியைச் சநதித்து (23.07 09), இலங்கையில் தமிழர் படும்பாட்டை எடுத்துச் சொல்லி மத்திய அரசின் அனுமதியுடன்  இலங்கைத் தமிழர்களுக்கு உதவும்படி உருக்கமாகக்கேட்டுக் கொண்டோம். அதைத் தொடர்ந்து அவர் பலருடன் இலங்கை வந்து மத்திய அரசின் உதவியைப் தமிழர்களுக்குப் பெற்றுக்கொடுத்தார்.

 5. 2012மு; மாசி மாதம் தொடங்கிய மனித  உரிமைகள்பற்றிய ஜெனிவா அமைர்வுபு; பார்வையாளர்களாக இலங்கை அரசால் நானும் நடேசனும் அழைக்கப் படடோம். இப்படியாகப் பல பணிகளைத்  தமிழ் மக்களுக்காகச் செய்கிறேன் மற்றவர் தூற்றுவது பற்றி யோசித்தால மனித உரிமைப்பணிகளைச் செய்ய முடியாது. தன்னை வைத்துத்தான மனிதன் மற்றவனை எடைபோடுகிறான் என்பமைப் புரிந்து கொண்டாற் சரியென நினை;கிறேன்.

இலங்கை அரசிடம் நிதி பெறும் விடய மாக: எந்த அரசும் தூதுக்;குழவாக அரச தரப்பால் அழைப்பர்களுக்குப் பிரயாணச் செலவும் தங்குமிட வசதியும் செய்து கொடுப்பார்கள் அது எங்களுக்கும் 2008லும்(இலங்கை)  2012லும் (ஜெனிவா)  நடந்தது. இலங்கை அரசோ அல்லது  உலகத்தில் எந்த அரசும் தூதுக்குழக்களுக்குப் 'பணம்' கொடுப்பதில்லை. அப்படிப் பணம் கேட்கும் (இலங்கை ருபாயில்!)  பிச்சைத்தனத்தில் கடந்த 42 வருடங்களாக வாழ்க்கை லண்டனில் நடத்தவில்லை. மிகக் கஸ்டப்பட்டப்படித்துப் பட்டங்கள் பெற்று எடுத்த கவுரமான உத்தியோகத்திலிருந்து (குழந்தை நல அதிகாரி) ஓய்வு பெற்றவள். அத்தடன் என்னைப் பராமரிக்க பரவாயில்லாத உத்தியோகத்தில்; மூன்று மகன்களும் மருமகளும்; இருக்கிறார்கள்!;
11. இலங்கை அரசு பெரிய மனித உரிமை மீறல்களையும் இனப் படுகொலைகளையும் செய்தது குறித்து....
 எந்த கால கட்ட்ததை மையமாக வைத்துப்பேசுகிறீர்கள் என்று விளங்கவில்லை. 1958ம் ஆண்டிலிருந்து பதவிக்கு வந்த எந்த இலங்கை அரசும் தமிழர்களக்குப் பேரழிவுகளைச் செய்திருக்கிறார்கள். அமைதிப்படை என்று வந்த இந்திப் படை இலங்கை அரசை விடப் பயங்கரமான கொடுமைகளைத் தமிழர்களுக்குச் செய்தது.
விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் புலிகள் ஆயிரக்கணக்கான தமிழரைக் கொன்று குவித்தார்கள். இந்தியப்டை இலங்கை வரக்காரணமாகவிருந்த யுஎன்பிக் கட்சியுடன் சேர்ந்து மாற்ற இயக்கத்தினரை மிருகங்கள் மாதிரி வேட்டையாடிப் புலிகள் அழித்தார்கள்;. இலங்கை அரசுக்குக் குறிவைப்பவர்கள் தமிழர்களின் உயிரைப் பறித்த மற்றவர்களைப் பற்றிப் பேசாதது ஏன்?. தமிழ் மக்களுக்குப் பல வித்திலும் பல தரப் பட்ட கொடுமைகளை மேற் கொண்ட புலிகள் இன்று மனித உரிமைவாதிகள் வேடம் போட்டு அரசைப் பழிவாங்க நினைக்னிறார்கள். தமிழ் விடுதலை என்ற பெயரில,;உலகத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாத வயதிலுள்ள சிறுவர்களைப்; போர்ப் பலி 'செய்த மனித மிருகங்களின் இன்றைய 'மனித உரிமைப்போர்' நடத்துவது கேவலமானது.
இலங்கையில் நடந்த கடைசிப்போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இறந்ததாகச் சொல்லப் படுகிறது. போர் நடந்த இடத்தில யாரும் 'கணக்காளர்களாகப' பணிபுரியவில்லை; பத்திரிகையாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் அனுமதிக்கப் படவில்லை. பழிதீர்ப்பதற்காக, முக்கியமாகப் பலிகளைக் கூண்டொடழித்த (இராஜபக்சா சகோதர்களை ) பதவியிலிருந்து அகற்றுவதற்காகப் புலம் பெயர்ந்து வாழும் புலி ஆதரவாளர்கள்  ஓடித்திரிகிறார்கள்.
பல மேற்கத்திய அரசுகளுக்கு இராஜபக்சா சகோதரர்களின் ஆட்சி பிடிக்காது. அவர்களின உதவியுடன், புலிகள், மேற்கத்திய சக்திகளின் நண்பர்களான யுஎன்பியைப் பதவிக்குக் கொண்டு வந்து ,தங்களுக்குப் பிடிக்காவர்களைப் பழையபடி களைபிடுங்கப் பார்க்கிறார்கள்

  புலம் பெயர்ந்த புலிகள் முன்னெடுக்கும் 'மனித உரிமைக்கோஷம்' இலங்கையில் துயர் படுத் தமிழரின் துயர் தீர்க்கவல்ல.தமிழர்களின் எதிhகால வளர்ச்சிக்கு உதவுவதற்குமல்ல. அகதிகளாகத்தமிழர்கள்  கஷ்டப் படும்போது ஓரு நேர சோறு போடாதவர்கள் அவர்கள். போதிய அளவு உண்ண உணவும் இன்றிச் உடுக்கச் சரியான உடையுமின்றிப் பல தமிழர்கள் இலங்கையிற் துயர் படுகிறார்கள் அந்தக் காட்சிகள் புலம் பெயர் புலிகளுக்குத் தெரியாது.

 2009 ல், இலங்கையில் நடந்தது,நாட்டைக் கெடுத்துக் கொண்டிருக்கும் பயங்கரவாதிகளை அழிக்க, மக்களாற் தெரிவு செய்யப்பட்ட அரசு முன்னெடுத்த போர்.தங்களுக்கு எதிராக ஆயுதம் எடுப்பவர்களை அழிக்க மற்ற நாடுகள் என்ன நடவடிக்கைகள் எடுக்குமோ அவற்றைத்தான் இலங்கை அரசும் செய்தது. புலிகள் சொல்வது போல் அரச திட்டமிட்ட இன அழிப்பு முயற்சியல்ல. புலிகள்தான, தமிழர்பிரச்சினையைப் போர்மூலம் தீர்க்கச் சவால் விட்டவர்கள்.
 1983 இனக்கலவரம் ;இனப்படுகொலையின்' பல பரிமாணங்களைக்கொண்டது. ஆங்கிலேய புத்திஜீவிகளின் ஆலொசனையின்படிதான் ,இனச்சுத்திகரிப்பின் பரிமாணங்களைக் காட்டி எனது டொக்குயுமெனரரியான, ' எஸ்கேப் புறம் ஜெனசைட்ஸ(;' இனப்படுகொலையிலிருந்து தப்பி) எடுக்கப்பட்டது. அன்று, இலங்கை அரச உத்தியோகத்தர்களின உதவியுடன், சிங்கள வெறியர்கள் தமிழர்களின் பெயர்கள் கொண்ட அட்டவணைகளுடன் தமிழர்களின் வீட்டைத்தேடித்தேடிக் கொலை செய்தார்கள். அதற்குச் சிலவருடங்களுக்கு முன்னே தமிழரின் பண்டைய,கலாச்சார, சமய, சரித்தித் தகவல்களை வைத்திருந்த யாழ்ப்பாணம் எரித்தார்கள்( இனச் சுத்திகரிப்பின ஒரு அங்கம்);. ஆயிரக்கணக்கான தமிழர்களைச் சிறை பிடித்தார்கள். பலரை உயிருடன் எரித்தார்கள். உயிருடன் பலரைப் புதைத்தார்கள் ('சுற்றி வளைப்புூ சிறு கதையில் வரும் அந்தத் தகவல் உண்மையானது). கோழும்பில், கலலவரம் தொடர்ந்து நடந்தும் அதை அடக்க இலங்கை அரசு எந்த நடவடி;கையும் எடுக்கவில்லை. சுpங்களப் பொதுமக்கள் தமிழர்களைக் காப்பாற்றினார்கள். அது இன ஒழிப்பு!

2009ம் ஆண்டு போர் நடந்து கொண்டிருக்கும்போது, புலிகள் தரப்பில் போர்க் கவசங்களாக கிட்டத் தட்ட மூன்று இலட்சம் தமிழ் மக்களைப் பாவித்தார்கள. ஓரு சிறு இடத்தில பெருந்தொகையான மக்கள் புலிகளால் அடைக்க வைக்கப் பட்டுப் பலவித துன்பங்கiளும் அனுபவித்தார்கள்;. புலிகளிடமிரந்து மக்களை விடுவிக்கககோரிக் காப்பாற்ற அரச தரப்பிலிருந்தும் மனித உரிமை வாதிகளான எங்களிடமிருந்தும பல தடவைகள் வேண்டுகோள்கள் புலிகளுக்கு விடப்பட்டன.அதைப்  புலிகள் செவி மடுக்காதது மட்டுமல்ல, தங்களிடமிருந்து தப்பி ஓடிய மக்களைக் கொன்று குவித்தார்கள்.

இடம் பெயர்ந்த தமிழ் மக்களின் முகாமுக்கு நாங்கள் சென்றபோது மக்கள் தங்களின் துயர் கதைகளைச் சொன்னார்கள். தாங்கள், அரச பகுதிக்குத் தப்பி ஓடும்போது புலிகளிடம் சூடுவாங்கிய காயங்களைக் காட்டினார்கள். பெரும்பானமையான காயங்கள் மக்களின் தலை, முதுகு, கால் கைகளின பின புறத்தில் இருந்த துப்பாக்கிச் சூட்டுக்காயங்களாகும். இலங்கை அரசு பல'றிசிவிங்' இடங்களை அமைத்துப்புலிகளிடமிருந்து தப்பி வரும் பொது மக்களைக் காப்பாற்றினார்ள். ஆனந்த சங்கரி ஐயாவின் தகவலின் படி 2.8000 மக்கள் அவ்விடம் வந்தார்கள் (தேனி 08.05.13). தப்பி ஓடிவந்த தமிழ் மக்களுக்கு உணவு வசதி மருத்துவ வசதி உடனடியாக வழங்கப் பட்டது. இவை' இனச்சுத்திகரிப்பின்' பரிமாணங்களல்ல.
போரின் கடைசிக்கட்டத்தில் புலித்தலைவர்களுக்கு என்ன நடந்தது, எப்படி இற்தார்கள் என்று எனக்குத் தெரியாது.  போர்க்குற்றம் சாட்டுபவர்கள் முழுமையான சாட்சி தகவல்களுடன் 'இனப்படுகொலைக்கான' கொடுமைகளுக்குத் தண்டனை கொடுக்கச் சொல்லி வாதாடலாம்.
12. வடக்கிலிருந்து கிழக்கு சட்ட ரீதியாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது, கிழக்கு மக்களும் இந்தப் பிரிவினையை ஆதரிக்கிறார்கள் எனக் கருதுகிறுர்களா?

 வடக்கும் கிழக்கும் 1989ம் ஆண்டு இந்திய ஒப்பந்தத்தால், யாழ்ப்பாணத்துத் தமிழ்த்தலைவர்களால் ஒன்றாக இணைக்கப்படும் வரைக்கும் ஒரு அமைப்புக்குள் (வடக்கின்);  ஆளப்படவில்லை. மட்டக்களப்பின் நீண்டகால சரித்தரத்தைப் பார்த்தால், அந்தச் சரித்திரத்தில் குறுநில தமிழ் மன்னராட்சிகள் ஆதிகாலமிருந்து இருந்திருக்கின்றன. கொக்கட்டிச்சோலையுள்ள சிவன்கோயில் கிட்டத்தட்ட இரண்டாயிர வருட சரித்திரமுள்ளதான சாட்சியங்கள் இருப்பதாகச் சொன்னார்கள். இலங்கைக்குப் புத்தமதம் வரமுதல், எல்லாளன் துட்டகைமுனுவடன் போர் புரிய முதல் கிழக்கில குடியேறிவர்கள் மட்டக்களப்புத் தமிழர் என்பதற்குப் ) சரித்pரத் ( அசோக மன்னருக்கும் கலிங்க அரசருக்கும் நடந்த போர்) தடயங்கள் இருக்கின்றன. இதன் விளக்கம் பின்னர் தரப்பட்டிருக்கிறது.

  மண்முனைப் பகுதியில்,  உலகநாட்சி என்ற பெண்ணரசியும் ஏறாவூர்ப பகுதியில் வன்னி நாட்சியாhர் என்ற பெணணரசியம் ஆட்சியிலிருந்திருக்கிறார்கள். திருகோணமலையில் இராஜ இராஜ சோழன்வழி வந்த குளக்கோட்டன மகராசா ஆட்சி செய்திருக்கிறான் ( தற்போதையத் தமிழ்த் தேசியத் தலைவர் திரு சம்பந்தரின் மூதாதையர் இந்த மன்னன் என்ற சொல்லப் படுகிறது). மட்டககளப்பு, ஆதிகாலத்திலிருந்து தனித்துவமான நிhவாகத்தில் இருந்தது என்பதற்குப் பிரித்தானிய மியுசியத்தில் முதலாம் நூற்றாண்டில் மட்டக்களப்பு மன்னால் பாவிக்கப்பட்ட தங்கத்திலான நாணயம் இருக்கிறது. (லண்டனில் வாழ்பவர்கள் முடிந்தாலத் ;தயவு செய்து போய்ப் பாருங்கள்!). ம்டக்களப்பின் குறுநில மன்னர்கள் பற்றிய தகவல்களைத் தங்கேஸ்வரி எழுதிய ஆராய்ச்சிப் புத்தகத்தில் இ.ருக்கிறது.
 1564ல் மதுரைநாயக்கர்கள் மண்டி மன்னனுடன போரிட்டு(புத்தளம் பகுதியில) வெற்றி கொண்டார்கள். கண்டி அவர்களின் ஆடசிக்கு வந்தது.
1766ல் ஒல்லாந்தர் மட்டக்களப்புப் பகுதியைக் கண்டி மன்னனிடமிருந்துத் தங்கள் வசமாக்கினர்.........


நன்றி: 

 http://www.thenee.com/html/270813-1.html


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...