சமாதான பேச்சுவார்த்தையும் முஸ்லிம்களின் நிலையும் -தேசம் -ஜனவரி 2003


 தொகுப்பு ஜெயபாலன்

தற்போதைய சமாதான நடவடிக்கைகளில்முஸ்லிம்களின் நிலை என்ன என்பது பற்றியும் முஸ்லிம் தமிழ் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு பற்றியுமான சந்திப்பும் கலந்துரையாடலும் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் சமூகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. டிசம்பர் 7ம்திகதி (2003) மனோர்பார்க் போர்ட் சென்ரரில்இடம்பெற்ற இக்கூட்டத்திற்குபேராசிரியர் ஜனாப் எம்.வை.எம்.சித்தீக் தலைமை தாங்கினார். எஸ்.எம்.பாரூக், சட்டவல்லுனர் எஸ்.எம்.எம். பசீர் ,  ஜலால்தீன் தேசம் ஜெயபாலன் ஆகியோர் இதில் உரையாற்றினர் . சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஆலோசகராகக் கலந்து கொண்ட எம்.ஐ.எம். மொய்தீன் இச்சந்திப்பில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு இலங்கைச் சமாதானப் பேச்சுக்களும் முஸ்லிம்களின் நிலையம் என்பது பற்றிப் விளக்கினார்.கூட்ட  முடிவில் கலந்துரையாடலும் இடம் பெற்றது.


வேற்றுமையில் ஒற்றுமை:

"இரண்டு பேரினவாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என் தனது பேச்சைஆரம்பித்த பசீர் ஆயதப் போராட்டத்துக்குப் பின் முஸ்லிம்கள் மிகவும் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். மறப்பதும் மன்னிப்பதும் அன்ரன் பாலசிங்கத்தின் உரிமையல்ல எனக் குறிப்பிட்ட பசீர் புலிகளின் தலைவருடன் பேசினாலும் பேசலாமே அல்லாமல் அன்ரன் பாலசிங்கத்துடனோ தமிழ் சங்கங்களின் பிரதிநிதிகளுடனோ பேச முடியாது எனச் சாடினார். சமாதானம் எங்கள் தலைமுறைக்கும் விட்டுச் செல்ல வேண்டிய ஒன்று எனக் குறிப்பிட்ட பசீர் வேறுபாட்டில் ஐக்கியம் காண வேண்டும் எனத் தெரிவித்தார், அதற்கு கீழ் மட்ட அளவில் வேலைத் திட்டங்கள் முன் வைக்கப்பட  வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
 இறுதியில் ரணில் விக்கிரமசிங்காவும் பிரபாகரனும் கைகுலுக்கலாம் என்றால் தமிழர்களும் முஸ்லிம்களும் சேரலாம் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்,"


 படம்: எஸ்.எம்.எம்.பஷீர் , எம்.ஐ.எம்.மொஹிதீன் , எம். வை.எம்.சித்தீக்

"தான் அரச சார்பில் கலந்து கொண்ட  ரவுப் ஹக்கீமிற்குஆலோசகராகவே கலந்து கொண்டதாகவும்  அதனால் பேச்சுவார்த்தைகளில் பின் வரிசையிலேயே அதுவும் பலத்த போராட்டத்திற்குப் பின் அமர்த்தப்பட்டதாகவும் கூறிய மொய்தீன் இது முஸ்லிம்களை அவமதித்த செயல் எனக் குறிப்பிட்டார்.


முஸ்லிம்களது உரிமைககள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஆணித்தரமாகக் கூறிய மொய்தீன் புலிகள் ஆயதங்கள வைத்துக் கொண்டு எங்களுக்கு பூச்சாண்டி காட்டக் கூடாது எனத் தெரிவித்தார். உரிமைகள் மறுக்கப்பட்டால் புலிகளுக்கு 20 ஆண்டுகள் எடுத்த விடயத்தை முஸ்லிம் இளைஞர்கள் பத்தாண்டுகளில் முடிப்பார்கள் எனத் தெரிவித்தார்.  மொய்தீனின் வார்த்தைப் பிரயோகங்களை அருகில் இருந்த பசீர் கட்டுப்படுத்த முயற்சி எடுத்துக் கொண்டார். மொய்தீன் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை வெளியிட்ட போதும் முஸ்லிம்கள் ஆயுதம் தூக்குவது விவேகமாகாது என்பதும் ஜனநாயக ரீதியில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து போராட வேண்டுமெனவும் மொய்தீன் பின்னர் கருத்துத் தெரிவித்தார். "

கூட்டத்தில்   முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்கள் மொய்தீன் அவர்கள் கட்சியை அவமதிப்பதாக கருத்து வெளியிட்டனர். ஆனால் அவர்களுடைய கருத்து உடனடியாக மறுதலிக்கப்பட்டது.

தேசம் ஜனவரி 2003

No comments:

Post a Comment

Media Release- National Peace Council of Sri Lanka

National Peace Council of Sri Lanka 12/14 Purana  Vihara Road Colombo 6  Tel:  2818344,2854127, 2819064 Tel/Fax:2819064 E Mail:   npc@sltnet...