"ஒன்று சேர்ந்து இந்த மரணங்களை எதிர்ப்போம்" - சையட் பஷீர்

சையட் பஷீர் : ஸ்ரீ லங்கா முஸ்லிம் தகவல் மையம் (லண்டன்)
ஒன்று சேர்ந்து இந்த மரணங்களை எதிர்ப்போம்

மகேஸ்வரியை எனக்குத் தெரியாது .ஆனால் வழக்கறிஞர் என்ற முறையில் அவர் மனித உரிமைகளுக்காக எடுத்துக் கொண்ட சிரமங்களும் வேலைப்பாடுகளும் எனக்குத் தெரியும். அவரின் சேவையைப் பாராட்டி புலிகளின் ஊடகமான லண்டனைச் சேர்ந்த ஐபீசீ வானொலி மகேஸ்வரியைப்  புகழ்ந்து பேட்டி  எடுத்தது. அப்போது புலிகளுக்கு மகேஸ்வரி எதிரியாகத் தெரியவில்லை . மகேஸ்வரி ஈ பீ டி பியுடன் இணைந்து மக்களுக்கு வேலை செய்யத் தொடங்கியதும் எதிரியாக்கி கொலை செய்து விட்டார்கள்.



புலிகளால் தமிழர்  மட்டுமல்லாமல் முஸ்லிம் சிங்கள மக்களும் நூற்றுக்கணக்கில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.சமூக நலவாதியான ஒரு பெண் என்பதால் மகேஸ்வரி கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.இவரும் புலிகளாற் கொலை செய்யப்பட்ட சரோஜினி யோகேஸ்வரன் மாதிரிப் புலிகளுக்கு ஒரு சவாலாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

இன்று  புலிகளாற் தொடக்கிவைக்கப்பட்ட" துரோகி" என்ற வார்த்தை சிங்கள. முஸ்லிம், அரசியல்வாதிகளாலும் பாவிக்கப்படுகிறது..ஒருத்தரை அழித்தொழிக்க முதல் "துரோகி" என்ற பதம் பாவிக்கப்படுகிறது. கொலைகளுக்குக் கண்டனம் தெரிவிக்க முடியாத அளவு தமிழ்த் தலைவர்களின் நிலை இருக்கிறது.

ஒரு தடவை டக்லஸ் தேவானந்தாவைப் புலிகள் கொலை செய்ய முயற்சித்து தோல்வியடைந்த காலகட்டத்தில் லண்டனுக்கு வந்திருந்த சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் ஏன்  நீங்கள் இதுபற்றி கண்டனம் தெரிவிக்கவில்லை என்று நான் கேட்ட போது எங்கள்  தலைவர் சம்பந்தர்   அமெரிக்காவில் இருக்கிறார். அவர் வந்தபின் அதுபற்றி யோசிப்போம் என்றார். இந்த நிலையில்தான் இன்றைய தலைமைகள் இருக்கின்றன.

சிலரால் சில மரணங்களுக்கு அஞ்சலி   நடத்தப்படும் அதே நேரம் அதே மரணங்கள் சிலரால் கொண்டாடப்படும் நிலையும்  இருக்கிறது. கொலையையும் மரனத்தையும் கொண்டாடும் கூட்டமாக சமுதாயம் பின்னடைந்து போய்விட்டது. சமூகம் மரணங்களைத் தடுக்க முடியவில்லை தைரியமாக வந்து புலிகளின் கொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்காத வரைக்கும் இவை தொடரும் 

எதிர்வரும் சில தினங்களில் லண்டனுக்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப் புலிகளும் முற்போக்குவாதிகள் என்று சொல்வோரும் முன் வருகிறார்கள் .இலங்கையில் குழந்தைகளையும் அப்பாவிப் பொதுமக்களையும் கொலை செய்யும் புலிகள் பேச்சுவார்த்தை என்று வெளிநாட்டுக்கு வந்த காலகட்டத்தில் புலிகளுக்கு எதிராக யாரும் ஏன் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை ,

நன்றி : மகேஸ்வரி வேலாயுதத்தை  புலிகள் கொலை செய்ததையிட்டு   தேசம் சஞ்சிகை இலண்டனில் நடத்திய கண்டனக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி 
 
தேசம்  2008

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...