"நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் ! " -எஸ்.எம்.எம்.பஷீர்




"ஊரில் அக்கறை உள்ளவர் நடப்பாய்
மாரித் தவளை முகாரி எடுப்பாய்
நாரியுந் தெறிக்க முழக்க மிடுவார்
சேரியைச் சுற்றி சேவையும் தொடுப்பார்"
                                                             
கவிஞர் அனலக்தர்

முஸ்லிம் காங்கிரஸ் உட்பட்ட சகல முஸ்லிம் கட்சிகளும் இவ்வருட  ரமலான் மாதத்தில் அரசியல் நன்மைகளை கொள்ளை கொள்ள தங்களின் மாகான சபைத் தேர்தல் பணிகளை  பிள்ளையார் சுழி போட்டு , மன்னிக்கவும்  786 போட்டு ( இந்த இலக்கம் எண்ணியல் படி இறைவனின் பெயரால் ஆரம்பிப்பதாக உள்ள அரபு சொற்றொடரான " பிஸ்மில்லா .. " எனும் சொற்றொடரின் எழுத்துக்களின்  எண் கூட்டுத் தொகையே  786 என்று கூறப்பட்டாலும் இது ஒரு பிழையான சமாச்சாரம் என்பது ஒருபுறமிருக்க ) தங்களின் தேர்தல் பணிகளை பூர்வாங்கமாக ஆரம்பித்து வைத்துள்ளார்கள் .    எதுவாயினும் நமது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பிழையான சுயநல வியாபார அரசியலுக்கு பிழையானதே சரியானதுதான்.

புலிகளின் இணையத்தள பிரச்சாரத்துக்கு புத்திஜீவிகள் கண்டனம்-நவமணி

நவமணி: 19.02.2006

நவமணி செய்தியாளர்

லண்டனிலுள்ள இலங்கை முஸ்லிம் நிலையத்தின் பணிப்பாளரான கிழக்கு மாகான சட்டத்தரணி பஷிரை ஒஸாமா அணியுடன் இணைத்து புலிகளின் இணையத்தளம் பிரசாரம் செய்தததை முஸ்லிம் புத்திஜீவிகள் கண்டித்துள்ளனர்.

வடக்கு - கிழக்கு முஸ்லிம்களின் பிரித்தானிய ஒன்றியம் நோர்வே தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு-வீரகேசரி 28/04/2006



தீர்வு ஆலோசனைகளில் முஸ்லிம்களின் நலன்களையும் உள்ளடக்க வலியுறுத்து

வீரகேசரி 28/04/2006

வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் பிரித்தானிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவொன்று பிரித்தானியாவில் உள்ள நோர்வே தூதராலய உயர் அதிகாரிகளை கடந்த   19 ஆம் திகதி வியாழக் கிழமை காலை லண்டனில் சந்தித்து, இலங்கை தேசிய இனப்பிரச்சினை தீர்வு ஆலோசனைகளில் இலங்கை முஸ்லிம்களின் நலன்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

சமபந்தி போஜனமும் சம்பலும் சோறும்” - குறு நாடகம்





எஸ்.எம்.எம்.பஷீர்



இடம்: மஹிந்த மாமன்னரின்  அரச சபை



பாத்திரங்கள்: மஹிந்த மாமன்னர் , காவலாளி , பிரதம அமைச்சர். 
காவலாளி : “ ராஜாதி ராஜ,ராஜ மார்த்தாண்ட,ராஜ கம்பீர,ராஜ குலத்திலக மாமன்னர் மஹிந்த ராஜா வருகிறார் வருகிறார் வருகிறார்” 



( அரசபைக் காவலன் அரசனின் வரவை கட்டியங் கூற மந்திரி சபையில் அனைவரும் எழுந்து நிற்கிறார்கள். மஹிந்த மா மன்னன் அனைவரையும் நோக்கி கும்பிட்டு ஆயபோவன்,வணக்கம் , அஸ்ஸலாமு அழைக்கும் என்று முகமன் கூறி அமர்கிறார். மந்திரி சபையிலிருந்து அரசருக்கு பதில் முகமனாக ஆயுபோவன் , வணக்கம் . வஅழைக்குமுஸ்ஸலாம் என்று ஒரு சேரக் கூறுவது குரல்களின் சங்கமத்தால் என்னவோபோல் எல்லாம் சேர்ந்து ஒரு புதிய சொல்லாய் , கதம்பமாய்  எதிரொலிக்கிறது. மன்னன் அனைவரையும்  அமரும்படி தலையசைக்கிறார்.மன்னர் தனது அரசவை உள்நாட்டு பிரதம அமைச்சரைப் பார்த்து , நாட்டு நடப்புகளைக் கூறுமாறு பணிக்கிறார். அமைச்சர் எழுந்து நின்று அரசனை சம்பிரதாய பூர்வமாக விளித்து

பிரதம அமைச்சர்: "மா மன்னரே இன்று பலபல சங்கதிகள் உண்டு என்றாலும்  தற்போது  சூடு பிடித்துள்ள உள்நாட்டு விவகாரமான நமது கிழக்கு நாட்டின் தேர்தல்கள் பற்றி கூறலாம் என்று நினைக்கிறேன். மா மன்னர் அதற்கு அனுமதியளிக்க  வேண்டும் ( மன்னரின் அனுமதியை எதிர்பார்த்து அமைச்சர் நிற்கிறார்) 

"விக்கிலீக்ஸ்" அசாஞ்சேயின் ராஜீய புகலிடமும் அரசியல் தஞ்சமும் ! எஸ்.எம்.எம்.பஷீர்


“ஒன்றில் நீயும் எல்லோரும் சொல்லும் மரபுக் கோட்பாடுகளையே திரும்பத் திரும்பச் சொல்லுகிறாய், அல்லது நீ ஏதும் உண்மையை சொல்லுகிறாய் , அது நெப்டியூன் கிரகத்திலிருந்து சொல்வது போல் தோன்றுகிறது . “     
-   நோம் சொம்ஸ்கி        ( Noam Chomsky )
சென்ற 19ம்   திகதியிலிருந்து எக்குவடோர் தூதுவராலயத்தில் இன்றுவரை தஞ்சமடைந்துள்ள விக்லீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே எதிர்நோக்கும் சவால்கள் சாதாரணமானவைகளல்ல.  மேற்குலகின் சாதாரண நிகழ்வு இன்று அவருக்கு சிம்ம சொப்பனமாக மாறியுள்ளது. அவரைத் தொடரும் அமெரிக்க அரசுக்கு அனுசரணையாக தொடரும் மேற்குலக சதுரங்கத்தில் தன்னை காயாக வைத்துள்ளார் அசாஞ்சே.!


மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...