பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய காங்கிரஸ் அங்குரார்பணமும் தமிழ் பயங்கரவாதமும் !!


 எஸ்.எம்.எம்.பஷீர்
  
இலங்கைத் தமிழ் கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டதாக பிரகடனப்படுத்தப்பட்ட  தமிழ் தேசியக் காங்கிரஸ் எனும் அமைப்பின் அங்குரார்பண நிகழ்வு  30 ஏப்ரல்  2012ல் பிரித்தானிய நாடாளுமன்ற குழு அரை இலக்கம் பத்தில் என்பீல்ட் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் அன்டி லவ் தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் வட அயர்லாந்தின் துணை முதல் மந்திரி மார்டின் மக்கினஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார் என்று அறிவிக்கப்பட்ட போதும் அந்நிகழ்வில் அவர் கலந்து கொள்ளவில்லை ! மாறாக  நியூஹாம் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரிபன் ரிம்ஸ் கலந்து கொண்டார். பொன்னாடை போர்த்தி கவுரவிக்கவும் பட்டார் .
 படம்: பிரித்தானிய நாடாளுமன்ற தமிழ் தேசிய  காங்கிரஸ் அங்குரார்ப்பன நிகழ்வு 

இந்நிகழ்வு சுமார் ஓராண்டு காலமாக இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகளின் லண்டன் கிளைப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மூலம் பெரும்பாலான கட்சிகளிடையே குறைந்தபட்ச புரிந்துணர்வு எட்டப்பட்ட பின்னரே நடைபெற்றது என்றும் அவ்வாறான    முயற்சிகள் புலம்பெயர் நாடுகளில் எடுக்கப்படுவதை புரிந்துணர்வை எட்டியுள்ள கட்சிகளின் லண்டன் கிளைகளும் அக்கட்சிகளின் தாயகத் தலைமைகளும் வரவேற்றதாகவும் , அதனடிப்படையிலே அந்நிகழ்வு நடைபெறுவதாகவும் -நடைபெற்றதாகவும்- செய்திகள் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டன. 

இலங்கைத் தமிழரசுக் கட்சி(ITAK) – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE) – தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) – தமிழர் விடுதலைக் கூட்டணி(TULF) – ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பு (EROS) ஆகிய கட்சிகள் இக்கலந்துரையாடல்களில் தொடர்ச்சியாகப் பங்குபற்றி குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டின என்றும் ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி(ENDLF) – ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (நாபா அணி) ஆகிய கட்சிகளும் இக்கலந்துரையாடல்களில் பங்குபற்றி இருந்தன என்றும் வேறு அறிக்ககைகள் ஊடகங்களை அலங்கரித்தன. மேலும் "இக்கட்சிகள்"   குறைந்தபட்ச வேலைத்திட்டம் ஒன்றில்  வந்தன. குறிப்பாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான தீர்வுகளை முழுமையாக அமுல்படுத்தல் அதிகார பரவலாக்கம் அதிகார பகிர்வு என்பவற்றின் அடிப்படையில் ஜனநாயக உரிமைகளை வழங்குதல் போன்றவற்றில் செயற்பட இணக்கத்திற்கு வந்தனர் என்றும் கூறப்பட்டது.

ஈஸ்ட்காம்  கவுன்சிலர் போல் சத்திய நேசன் மின்னஞ்சல் மூலம் எனக்கும் ஈஸ்தாம் ஒப்பந்தம் எனப்படும் ஆவணத்தின் இறுதிப் பிரதி ஒன்றை இணைத்தனுப்பியிருந்தார். அந்த மின்னஞ்சலிலே பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள தமிழ் தேசியக் காங்கிரசின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் அவ்வாவணம் வெளியிடப்படுவது பற்றியும் குறிப்பிட்டிருந்தார். பின்னர் ஈஸ்ற்காம் கவுன்சிலர் போல் சத்திய நேசனால் அச்சிடப்பட்ட அழைப்பிதல் ஒன்றும் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.  அவ்வழைப்பிதல்  கிடைக்கப் பெற்ற பின்னர்  , தமிழ் தேசிய காங்கிரஸ் பற்றி அவ்வாறான அழைப்பிதழ் கிடைக்கபெற்ற ஒரு சிலரிடம் ஈஸ்ற்காம் ஒப்பந்தம் பற்றி உசாவியபோதும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.

பின்னர் ஒப்பந்தத்தை வாசிக்க முடிந்தபோது. அதில் பல "அரசியல் கட்சிகள்" அதன் உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்ததும்
, அதன் தமிழ் தேசிய காங்கிரசின் நோக்கங்களுக்கு அங்கீகாரம் அளித்திருந்ததாக எழுதப்பட்டிருந்தது. அவற்றில் ஈ.பீ தீ பீ யின் (E.P.D.P) பெயரும் இருந்தபடியினால் , அது தொடர்பில் நான் எனக்குத் தெரிந்த ஈ பீ தீ பீ ஐரோப்பிய முக்கிய பிரமுகர் ஒருவருடன் தொடர்பு கொண்டு கேட்டபொழுது , அவர்
ஈஸ்ட்காம்  ஒப்பந்தம் (EASTHAM AGREEMENT) என்று ஒன்றில்லை , ஆனால் பொதுவான ஒரு புரிந்துணர்வு மாத்திரம் தமிழ் கட்சிகள் சேர்ந்து கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக நடத்திய கலந்துரையாடல்கள் மூலம் எட்டப்பட்டதென்றும் , அப்போது ஈ.பீ தீ பியின் இலண்டன் பிரமுகரான தவராஜா ஈ.பீ தீ பீ சார்பில் அக்கலந்துரையாடல்களில் ஈடுபட்டதன் அடிப்படையில் அப்புரிந்துணர்வு ஏற்பட்டதாகவும் அறிய முடிந்தது. ஆனால் அது தொடர்பில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவுடனும் தவராஜாவுடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பின்னணியில் ஈஸ்ட்காம்  ஒப்பந்தம் ஒன்று இல்லை என்பதை உறுதி செய்ய முடிந்தது. ஈஸ்ட்காம்  கவுன்சிலர் போல் சத்திய நேசன்  ஈஸ்ட்காம்  ஒப்பந்தம் என்று தனது கவுன்சில் பிரதிநித்துவத்தை சர்வதேச இடம் சார்ந்த ஒப்பந்தப் பிரேமையை ஏற்படுத்தும் நோக்கிலும் அதனூடே தானும் காலம் காலமாக நினைவு கூறப்படல் வேண்டும் என்ற நோக்கிலும் , அதற்கான கூட்டங்கள் ஈஸ்ட்காம்  தளமாக கொண்டு நடைபெற்றதால் , தமிழ் தேசியக் காங்கிரசுடன் ஈஸ்தாமை சேர்ந்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. எனவேதான் இந்த தமிழ் காங்கிரசின் அங்குரார்ப்பன  நிகழ்வுக்கு அழைப்பிதல் அனுப்பிய போல் சத்தியநேசன்  ஈஸ்தாம் ஒப்பந்தம் என்ற பதம் பிரயோகிக்கப்படக்  கூடாது என்ற ஈ.ப தீ பீ யின் ஆட்சேபனை கெதிராக அந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதை அறிய முடிந்தது.  போல் சத்தியநேசன் ஈஸ்ட்காம்  என்ற சொல் நீக்கப்படுவதை ஆட்சேபித்திருந்தார். போல் சத்தியநேசன் ஒருவேளை அதனூடாக பிரித்தானிய நாடாளுமன்றத்துக்குள் பிரதிநிதியாக நுழைவதற்கும் ஒரு வியூகம் வகுத்திருக்கலாம் என்று என்னவும் தோன்றுகிறது.

ஈ.பீ தீ பீ , ஈஸ்ட்காம்  ஒப்பந்தம் என்ற சொல் அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது என்பதனை கேள்வியுற்றவுடன் தவராஜா கடுமையான ஆட்சேபனையை கொழும்பிலிருந்து கட்சியின் செயலார் நாயகம் டக்ளசின் கருத்துப்படி எழுப்பியிருந்தபடியால் , அது தொடர்பில் விவாதிக்க நீண்ட இரவு நேர கூட்டங்களும் இலண்டனில் இடம்பெற்றன என்பதயும் அறிய முடிந்தது. .       
 

எப்படியோ இறுதியில் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பேசிய ஈ பீ தீ யின் பேச்சாளரென அறிமுகப்படுத்தப் பட்ட விக்னேஷ் என்பவர் , தமது கட்சி ஈஸ்ட்காம்  ஒப்பந்தம் என்று ஒன்று இடம்பெறவில்லை என்பதை ஆங்கிலத்திலும் தமது தலைவரின் நிகவு தொடர்பான உரையையை தமிழிலும் வாசித்தார். இந் நிகழ்வில் டெலோ இயக்க முன்னாள் பிரமுகர் . "திம்பு பேச்சு வார்த்தை புகழ் பெற்ற" சார்ள்ஸ் என்பரும்  உரையாற்றினார். அவர் முஸ்லிம்களுக்கு சிங்களவர்கள் 1915 ஆம் ஆண்டு இழைத்த அநீதி பற்றி பெரிதாக பிரஸ்தாபித்தார். இவர் மட்டக்களப்பு தாண்டவன்வெளியை சேர்ந்தவர். முஸ்லிம்கள் தொடர்பில் அவர்களின் தனித்துவம் குறித்து மொழிக் கோட்பாடுகளை வைத்துக் கொண்டு அவர்களை தமிழர்களாக்குபவர் மறுபுறத்தில் இப்போது வேறுவித முஸ்லிம் அனுதாப அரசியல் செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் இலங்கையில் காத்தான்குடியிலிருந்து அமேரிக்கா சென்று விருது பெற்று வந்த முஸ்லிம் அரசியல் பெண்மணி ஒருவர் இலண்டனில் சில நாட்கள் தங்கிச் சென்ற போது , அவரிடம் முஸ்லிம் தேசிய கருத்தியலை தூண்ட முயற்சித்தவர். நாங்கள் கண்ட கேட்ட அனுபவித்த புலிப் பயங்கரங்களை முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதுபோல் மறைத்து விட்டு   சிங்களவர்கள் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு 1915 ஆம் ஆண்டில் செய்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை மட்டும் நினைத்து எங்களுக்காக புலம்புகிறார். புலிகள் உட்பட எல்லாத் தமிழ் ஆயுத இயக்கங்களும் (அவருடையது உட்பட ) முஸ்லிம்களுக்கு இழைத்த கொடூரமான மிலேச்சத்தனமான அநீதிகளை பற்றி சார்ல்ஸ் போதகர் மறந்து போனார்.

அதன் பின்னர் பேசிய எந்தப் தமிழ் பேச்சாளரும் முஸ்லிம்கள் பற்றி மூச்சே திறக்கவில்லை
, ஆனால் வெள்ளைக்கார மனுஷன் , எம்.பீ அண்டி லவ் , முஸ்லிம்களைப் பற்றி ஓரிரு தடவை முஸ்லிம்களுடனான கலந்துரையாடல் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டினார்.

சபையோர் கருத்துப் பகிர்வில் நான்
ஈஸ்ட்காம்  ஒப்பந்தம் ஒன்று என்று இல்லை என்றும் அதனை அக்கட்சியின் அன்றைய கூட்ட நிகழ்ச்சிப் பேச்சாளர் குறிப்பிட்டதையும்அங்கு போல் சத்தியநாதனின் சமூகமின்மையையும்  தொட்டுக் காட்டி, அவ்வொப்பந்தம்
எம்.பீ அண்டி லவ்வின்  (Andy Love M.P)உரையில்  ஓரிடத்தில் குறிப்பிட்டவாறு ஒரு அறிக்கை என்றே கருதப்படல் வேண்டும் என்றும். அதுவே நான் டக்ளசுடன் தொடர்பு கொண்டதன் மூலம் அறிய முடிந்ததென்றும்   அந்த ஒப்பந்தம் எனப்படும் அறிக்கையில் முஸ்லிம்கள் இன்று இலங்கையின் சனத் தொகையில் மிக முக்கிய  சமூகமாக இருப்பதாக அண்மைய குடித்தொகை புள்ளிவிபரங்கள் சுட்டிக் காட்டுவதாக கூறப்படும் பின்னணியில் , கிழக்கின் முதலமைச்சராக முஸ்லிம் கூட வரலாம் என்ற நிலை காணப்படுகின்ற நிலையில், முஸ்லிம்கள் பற்றி காத்திரமான வகையில் குறிப்பிடப்படவில்லை என்றும, முஸ்லிம்களை புறக்கணிக்கும் வகையில் ஒப்பந்தம் எனப்படும் அறிக்கை காணப்படுகின்றதென்றும் அங்கு நான் குறிப்பிட்டேன். அத்துடன் அந்த ஒப்பந்தம் எனப்படும் அறிக்கையில் சொல்லப்பட்ட ஈ. என்.தீ எல்.எப் , ஈரோஸ் , புளட்  ஆகியன இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அல்ல வென்றும் ஈ.பீ .ஆர் எல் எப் சுரேஷ் அணி மாத்திரமே பதிவு செய்யப்பட்டதென்றும் அறிக்கையில் ஈ பீ ஆர் எல் .எப்  என்று மட்டும் குறிப்பிட்டுள்ள  ஈ பீ ஆர் எல்.எப் அணி  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லவென்றும் மேலும் பல முஸ்லிம் தமிழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அந்த அறிக்கையில் இல்லை என்றும் , இதன் மூலம் பிரித்தானிய நாடாளுமன்றத்தையும்  சர்வதேசத்தையும்  தவறாக வழிநடத்தும் வகையில் அந்த அறிக்கை உள்ளதென்றும் சுட்டிக் காட்டினேன்.

எனது கருத்துரைக்கு பதிலளித்த வைத்தியர் நிக்கலஸ் பிள்ளை அவர்கள்
,கடந்த கால முஸ்லிம் தமிழ் அரசியல் பற்றி மேடையிலிருந்து   பாலபாடம் நடத்தத் தொடங்கினார். மேலும் தமிழ் தேசிய கட்சி யாழ் மையக் கட்சியல்ல மட்டக்களப்பான் என்றேளெல்லாம் இல்லை என்று வேறு வியாக்கியானம் தந்தார். இவர் முஸ்லிம்கள் தமிழரே என்று என்னிடமே முன்னர்
வாக்குவாதப் பட்டவர்

பின்னர் உரும்புராய் சிவகுமாரனின் சகோதரர் சிவா என்றே எனக்கு தெரிந்தவர்  அஸ்ரப் கூட்டணி உறவு பற்றி எனக்கு வரலாற்றுப் பாடம் நிகழ்த்த முனைந்தார். அந்த நிலையில் கூட்டத்தில் முஸ்லிம்கள் பற்றி விவாதம் கருக்கொள்ள முற்படும் சூழல் உருவாகியது. அப்போது நான்
  கிழக்கிலே உள்ள (கிழக்குத்) தமிழர்களின் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை நீங்கள் அங்கீகரிக்கவில்லை , அதன் மூலம் கிழக்கு தமிழர்களை அவர்களின் கட்சியை அங்கீகரிக்க நீங்கள் தயாராக இல்லாதபோது எப்படி முஸ்லிம்களை உள்வாங்க தயாராக இருப்பீர்கள் என்ற பொழுது மேடையிலிருந்த வைத்தியர் நிகலஸ் பிள்ளை இங்கே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இருக்கிறார்கள் என்று முன்னாள் டெலோவின் சில வருடங்களுக்கு முன்பு த. ம,,வி.புலிகளின் கட்சி (T.M.V,P) உருவாக்கத்தில் பங்கு பற்றி அக்கட்சியில் செயலாளராகவிருந்த கிருஷ்ணா என்பவரை விரல் சுட்டிக் காட்டினார்.

நான் அக்கருத்துக் கெதிராக கிருஷ்ணா த.ம.வி.பு
(T.M.V.P )கட்சியில் இல்லை என்றென்று குறிப்பிட்டேன் ஏனெனில் அவரைக் கட்சியிலிருந்து தள்ளிவிட்டார்கள் என்பதை த.ம.வி.புலிகளின் உயர்மட்ட ஐரோப்பிய கட்சி ஆலோசகர்கள் முன்னரே எனக்கு குறிப்பிட்டிருந்தார்கள் , மேலும் கட்சியின் செயலாளராக இப்போது பதிவு செயயப்பட்டுள்ள பெயர் கைலேஸ்ராஜா என்பதாகும்.
மேலும் அவர் தமிழரசுக் கட்சி தமிழ் பேசும் மக்களை என்றே முஸ்லிம்களை உள்வாங்கி செயற்பட்ட  பழங்க கதையையும் சொன்னார்.  தமிழ் பேசும் மக்கள் என்ற சொல் அவர்களின் அறிக்கையில்  எங்கும் காணப்படவில்லை என்றும் நிக்கலஸ் பிள்ளை எனது முகத்தைக் கண்டதும் தமிழ் பேசும் மக்கள் என்று குறிப்பிடுவதையும் நான் சுட்டிக் காட்டினேன். அவ்வறிக்கை தமிழ் தேசிய வாத அடிப்படைவாத கருத்தியலை உட்கிடையாக கொண்ட நிகழ்சி நிரலைக் கொண்டது உள்ளது என்றும் நான் கருதுவதாகக் குறிப்பிட்டேன். 


(படம்:  இலங்கை அரச ஏற்பாட்டில் 2008 இலங்கை சென்ற புலம் பெயர் தமிழ் முஸ்லிம் தூதுக் குழுவில் இடமிருந்து வலமாக :நஜா முஹம்மத் ,  சச்சிதானந்தன், ஆர்.ஜெயதேவன் , யாழ் ஆயர் தாமஸ் சௌந்தரநாயகம் ,கிருஷ்ணா , ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் ,பஷீர் ,விவேகானந்தன் ) 
     
அன்று லவ் கலந்துரையாடலை தொடருங்கள் என்று ஆள் மாறி விட்டார். கூட்டம் கலையத்தொடங்கியது. திடீரென்று நான் ஆசனத்திலிருந்து வெளியேறிச் செல்ல முற்பட்ட போது எனக்கு முன்னாள் எனது கைகளை பிடித்து குசலம் விசாரிக்க வருகிறார் கிருஷ்ணா என்று நான் நினைத்து எங்கே உங்களை காணவில்லை அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தீர்களோ (அவரின் குடும்பம் அங்கிருப்பதாக சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன் )
  என்று கேட்ட கணத்தில் என்னை தள்ளி (பலத்தினைப் பிரயோகித்து) எப்படி நான் அவர் த.ம.வி.புலிகள் கட்சியில் இல்லை என்று கூறமுடியுமென்று கேட்டார், நான் மேற் குறிப்பிட்டவற்றை சொன்னேன். தான் அக்கட்சியின் உறுப்பினர் என்று தெரியமா என்று கேட்டார் , அதில் நீங்கள் உறுப்பினர் என்று எனக்குத தெரியாது அதில் நீங்கள் முக்கிய பதவியில் இல்லை என்பது எனக்கு தெரியும் என்றவுடன் எனது வயிற்றில் தனது சுட்டு விரலால் ஊன்றி எனது காலாணி அணிந்த காலின் முற்பாகத்தை தனது காலனி கொண்டு மிதித்து தெரியாமல் (நீங்கள்)  எப்படி சொல்ல முடியும் என்று கேட்டார். இங்கு நாங்கள் கதைப்பது த. ம. வி.புலிகள் கட்சியின் சார்பில் கருத்துரைக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்பதுதான். அப்படியானால் ஏன் அறிக்கையில் கட்சியின் பெயரை நீங்கள் குறிப்பிடவில்லை என்று நான் கேட்டுக் கொண்டே என்னை ஏன் தள்ளுகிறீர்கள் என்று கேட்டுக் கொண்டே அவரை முன்னோக்கி தள்ளி என்னை விடுவித்தாலும் அவர் மீண்டும் என்னை நோக்கி நெருக்கும் வகையில் முன்னேறுவதை உணரக் கூடியதாகவிருந்தது தான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மாநாட்டுக்கு போனது தெரியுமா என்று கேட்டார். நான் தெரியாது என்று சொன்னேன்.


கட்சிகள் என்று அறிக்கையில் பெயரிட்ட வேளையில். உங்களுக்கு அதிகாரமில்லாத போது கட்சின் பெயர் இல்லாதபோது நான் அப்படித்தான் குறிப்பிட முடியும் என்று கூறினேன். முகத்திலே மென்மையான நயவஞ்சக சிரிப்பு மெதுவாக மாறத்தொடங்கியது
, கிருஷ்ணா என்னைத்  தள்ளி , எனது வயிற்றில் தனது சுட்டுவிரலைப் புதைத்து (வயிற்றில் துப்பாக்கி முனையை வைத்து அளுத்துவதுபோல்) இனிமேல் கதைத்தால் என்று என்னை நெருக்கினார். எனக்கு  உடல் பலத்தை பிரயோகித்து துப்பாக்கி போல் விரலைப் பாவித்து , நெருக்கி எச்சரிக்கை செய்த முறையில் உள்ள அடாவடித்தனம் கண்டு நான் ஒரு புறம் ஆத்திரமும் மறுபுறம் ஆச்சரியம் அடைந்தேன்.  என்ன
கொல்லவா போகிறீர் ( Are You going to kill me) என்று சத்தமிட்டே கேட்டேன். ஏனென்றால் அவர் பக்கத்தில் உள்ளவர்கள் நாங்கள் இருவரும் பெசுப்வதுபோல் தெரியுமாறு நடந்து கொண்டார் என்று சொன்னார்கள். ஆனால் என்னை தனிப்பட்ட முறையில் சந்திக்கவென இரண்டு முஸ்லிம் மாணவர்கள் (அவர்கள் இருவரும் தமக்கு தெரிந்த ஈ பீ தீ பீ கட்சியியைச் சேர்ந்த டூட்டிங் எனுமிடத்தில் உள்ள ஒருவரின் அனுசரணையுடன் பிரித்தானிய நாடாளுமன்றத்தை பார்க்கும் அவாவில் வந்திருக்கிறார்கள். அவர்கள் அங்கு கிருஷ்ணாவின் அநாகரீகத்தை பயங்கரவாத செயலையும் சற்று கவனிக்கத் தவறவில்லை ) மறுபுறத்தில் நண்பர் சச்சி அவர்கள் கிருஷ்ணா என்னை எச்சரித்ததை கேட்டிருக்கிறார், அது மட்டுமல்ல நீங்கள் கிருஷ்ணாவின் கேள்விக்கு ஏன் என்னைக்   கொல்லப் போகிறீரா என்று பதிலளித்து முந்திக் கொண்டீர்கள் என்று அன்புடன் கடிந்து நீங்கள் அவரை (கிருஷ்ணாவை ) அதற்கான பதிலை சொல்ல சந்தர்ப்பம் அளித்திருக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டார். அதன் மூலம் கிருஷ்ணா தன்னை சுயமாகவே வெளிக்காட்டியிருப்பார் என்பது அவரின் அபிப்பிராயம்.  

நான் அங்கிருந்து இவரின் செயலை பயங்கரவாத செயலாக கண்டித்து வெளியேறினேன். அறையின் வெளியே காவல் கடைமையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் போலீசார் இருப்பதையும் சுட்டிக் காட்டி கிருஷ்ணாவை நான் விட்டுவிட்டு செல்வதாக என்னை அனுகியோருடன் தெரிவித்தே வெளியேறினேன். ஏனெனில் கிருஷ்ணா சுமார் அறுபது வயதில் இருப்பவர் அவருக்கென்று குடும்பமுண்டு என்பதற்கப்பால் நாங்கள் இலங்கை அரசின் அனுசரணையுடன் முதன் முதல் இலங்கைக்கு சென்ற புலம் பெயர் குழுவில் அங்கத்துவம் வகித்தவர் கிருஷ்ணா. எனது அலுவலகத்துக்கும் வந்தவர் ஓரிரு தடவைகள் நட்புடன் பழகியிருக்கிறார். ஆகவே ஒரு மனிதாபிமான அடிப்படையில் அவரை விட்டு விடுவோம் என்று எனது உள்மனம் சொன்னதால்
, அவரை நான் விட்டு வைத்தேன். ஆனால் தமிழ் சமூகத்துள் புரையோடிபோயிருக்கும் ஆயுத அதிகார , ஜனநாயக மறுப்புக் கலாச்சாரத்தின் சொச்சங்கள் இவர்கள் என்பதையும் இவர்கள் பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் தங்களின் கைவரிசையை கட்டத் தயங்க மாட்டார்கள். என்பதை சொல்வதே இக்கட்டுரையின் நோக்கம். 

 இன் நிகழ்வின் பின்னர்  

கிருஷ்ணா என்பரின் கட்சி அதிகார நிலை பற்றி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கிய உறுப்பினர் எனப்படும் கிழக்கு மாகான சபையின் உறுப்பினர் பிரசாந்தனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தபொழுது கிருஷ்ணா தமது கட்சியின் கடல்கடந்த உறுப்பினர் என்று கூறினார்
, தானே தற்போதைய கட்சி செயலாளர் என்றும் குறிப்பிட்டார் ஆனால் கிருஷ்ணாவுக்கு உங்கள் கட்சியின் சார்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்று கேட்டபொழுது தொலைபேசி சடுதியாக துண்டிக்கப்பட்டது. அது தற்செயலாகா இடம்பெற்றதா அல்லது திட்டமிட்டு செய்யப்பட்டதா என்பதை சொல்லமுடியவில்லை. எனினும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தலைவர் கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தனின் செயலாளர் ஆசாத் மவுலானா என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இங்கு நடந்தது பற்றியும் கிருஷ்ணாவின் செயல் குறித்தும் தமக்கு ஐரோப்பிய ஆலோசகர் அறிவித்ததாகவும் அது பற்றி தெரிந்து கொள்ள சந்திரகாந்தன் தன்னை பணித்ததாகவும் முதலமைச்சர் பின்னர் என்னுடன் கதைப்ப்பார் என்றும் கூறினார். பின்னர் ஐரோபிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆலோசகர் எனக்கு தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு கிருஷ்ணா அண்மையில் நடைபெற்ற தங்களின் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டதாகவும் அவரை முன்பு தங்களுக்கு உதவியவர் என்ற வகையில் வெறும் போஷகர் பதவி பெயருக்கு வழங்கப் பட்டதாகவும் அவருக்கும்டி தங்களின் கட்சியின் சார்பில் கதைக்க அதிகாரமில்லை என்றும் மதி குமாரதுரையே தங்களின் சர்வதேசப் பொறுப்பாளர் என்றும் இலங்கையில் தமிழ் அரங்கம் போல் ஒரு அமைப்பு என்ற வகையிலே  புலம் பெயர் தேசங்களில் உருவாக்குவதையே தமிழ் தேசிய காங்கிரஸ் நோக்கமாக கொண்டிருந்ததென்றும் , அது தொடர்பில் தங்களையும் அரவிந்தன் அணுகியது பற்றியும் , அது தொடர்பில் தங்கள் பங்களிப்பு செய்யவில்லை என்றும் ஆனால் கிருஷ்ணாவின் செயற்பாடுகள் கட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் உள்ளவர் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சி என்றும் குறிப்பிட்டார். எதோ ஒரு விதத்தில் கிருஷ்ணா தமிழ் மக்கள் விடுதலைப்  புலிகளின்   சார்பில் குரல் தர வல்லோர் அல்ல என்பதை கட்சியின் தலைவர் சந்திரகாந்தனோ அவரின் கட்சிச் செயலாளர் பிரசாந்தனோ இதுவரை தெரிவிக்கவில்லை  ஆனால் அவரின் அநாகரீக பயங்கரவாதச் செயல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் குரல் நெரிக்க வல்லோர் இவர் என்பதையும் சொல்லாமல் சொல்லி நிற்கிறது!

இந்நிலையில் டக்லஸ் தேவானந்தாவின் வாழ்த்துச் செய்தி இந்த அறிக்கையின் தாயகம் மற்றும் முஸ்லிம் சமூகம் பற்றிய புறக்கணிப்பு என்பவற்றுக்கு மத்தியில் வேறு ஒரு தொனியில் சமூக இணக்கம் பற்றிக் கூறுகிறது. அறிக்கையில் ஆங்காங்கே தெரிகின்ற மீளினக்க செயற்பாட்டுக்கு
மொத்த அறிக்கையிலும் அவரின் கட்சி நிலைப்பாட்டுக்கு அறிக்கையில் ஒத்துவராத சில இடங்கள் உண்டு என்று கருதும் வகையில் அறிக்கை உள்ளது. அத்துடன் அரசின் பங்காளியான கட்சிக்கு சங்கடமூட்டும் சில அம்சங்களும் அதில் உண்டு என்றும் அவரின் கட்சி அக்கறையாளர்கள் சிலர் கருதுகிறார்கள். மொத்த தமிழ் நலனும் இன்றைய இலங்கையின் யதார்த்த நிலையையும் கருத்திற் கொள்ளாத எந்த ஒப்பந்தமும் அல்லது அறிக்கையும் மீண்டும் தமிழ் சமூகத்தை ஏமாற்றும் கைங்கரியமே . முஸ்லிம்களை விட்டு தீர்வே இல்லை என்ற இலங்கையில்   தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேசும் நிலையில் இப்போது நாங்கள் ஒன்று படுவோம் பின்னர் முஸ்லிம்களுடன் பேசுவோம் என்று " தாயகத்தை" பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சி உறுப்பினர்  சிலர் இலண்டன் (ஈஸ்ற்காம் ) தேசிய தமிழ்  காங்கிரசுக்குள் முனுமுனுத்ததாகவும் செய்திகள் கசிந்தன. இந்த மாநாடு கங்கையிலிருந்து தனது எழுச்சி ஊற்றைப் பெற்று தேம்ஸ் நதியில் சங்கமித்திருக்கிறது.http://www.thenee.com/html/060512-11.html

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...