ஜனாதிபதி தேர்தலும் இனப்பிரச்சினை எனும் மாயமான் வேட்டையும் -பாகம் 2

  ww.lankamuslim.lk
  
                              எஸ்.எம்.எம்.பஷீர்

புலிகளின் முன்னாள் முக்கிய உறுப்பினர் கே. வே பாலகுமாரன் புலிகளின் குரல் வானொலியில் மார்ச் மாதம் 2004 ம் ஆண்டு நிகழ்ந்த அரசியல் அரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது ஜே வீ பீ யின் எதிர்ப்புத்  தன்மையை இல்லாதிருக்கச்  செய்ய ஜே வி. பி யை தனித்து விட்டு ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஜே வி. பியின் அரசியலுக்கு எதிராக செயற்படுதல் என்பதுதான் அந்த உத்தி. ஜே. வி. பி யின் எதிர்ப்பை சமாளிப்பதற்காக , இந்தியாவை வெளியேற்ற விடுதலைப் புலிகளுடன் பிரேமதாசா உடன்பாட்டுக்கு வந்தாரோ அதைப்போல மகிந்தர் ( பாலகுமாரன் மகிந்தவை எப்போதும் "செல்லமாக" மகிந்தர் என்று தான் குறிப்பிடுவார்!! ) செயற்படுகிறார் வென்று குறிப்பிட்டார் .

அரசியல்வாதிகள் எல்லாம் இப்படி இருந்துவிட்டால் ,,,!

எஸ்.எம்.எம்.பஷீர்



“இந்த உலகத்தில் அநீதி தலையெடுக்கிற போதெல்லாம் கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி நடுங்குவாயானால் நாம் இருவரும் தோழர்கள். அதுதான் முக்கியமான விஷயம்.” 
                                                       
                                               எர்னஸ்டோ         சேகுவாரா




முன்னாள் மொரட்டுவ நாடாளுமன்ற உறப்பினர் மெர்ரில் பெர்னாண்டோ (Merryl Fernando) அண்மையில் காலமானார்; அவரது மறைவினை தொடர்ந்து மொரட்டுவ பல்கலைகழகத்தின்   முன்னால் துணை வேந்தர் க. பிரான்சிஸ் த சில்வா (G.T. Francis De Silva) அவர்கள் நினைவு கூர்ந்த சம்பவங்கள் ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாகும்.

 இப்போதெல்லாம் நாம் காண்கின்ற அரசியல்வாதிகளில் ஒரு சில இடதுசாரி அரசியல் வாதிகள் மற்றும் அபூர்வமாக ஏனைய அரசியல் கட்சிகளின் சில அரசியல்வாதிகள் தவிர , பொதுவாக மக்களின் வாக்குகளால்  தெரிவானபின் , தமக்கு கிடைத்த நாடாளுமன்ற அங்கத்துவம்  திருடுவதற்கும் சுயமேம்பாட்டுக்கும் வழங்கப்பட  உரிமம் ( LICENSE) என்பதுபோல்  தான் இன்றைய அரசியல்வாதிகள் செயற்படுகின்றர்கள். 

ஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும்(பாகம் மூன்று) எஸ்.எம்.எம்.பஷீர்

hakeem_prabhaHakkem/
அரசியலில் தன்னை சமூகத்தின் பெயரால், நாட்டின் பெயரால் தக்க வைக்கின்ற செயற்பாடு என்பது அரசியலில் பொதுவானது ஆனால் சிறுபான்மை சமூகங்களின் அரசியலில் தன்னை தமது கட்சியை தக்க வைக்கின்ற செயற்பாடு சிலவேளைகளில் சமூகத்திற்கு பல தீமைகளும் இழைத்துவிடுகிறது. அந்த வகையில் தான் சில இன அடிப்படையிலான அரசியல் கட்சிகளின் தலைமைத்துவங்கள், கட்சிகள் என்பன செயற்படுகின்றன.

அதற்கான காலச் சூழல்கள் “இனப்பிரச்சினை” தொடர்பான போராட்டங்களுடன் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இனரீதியான அரசியல் அமைப்புக்கள் இன்றைய இலங்கையின் அரசியல் சூழலில் மிக ஆழமாக புரையோடி போயிருக்கும் அச்ச உணர்வின் மீது தமது தளத்தினை கட்டமைத்து, போஷித்து வருகிறது. இவ்வாறான சூழலில் சக சிறுபான்மை இனத்துடனான அரசியல் கூட்டுக்களும் பல சந்தர்ப்பங்களில் சந்தர்ப்பவாதக் கூட்டாகவே அமைகின்றன என்பதை வரலாறு நெடுகிலும் காணக்கூடியதாகவுள்ளது.

இன்றைய முஸ்லிம்காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் அவரது முன்னாள் தலைவர் போலல்லாது போதிய எச்சரிக்கை எடுக்காமல் சகட்டு மேனிக்கு தான் செயற்படுவதாகக் காட்டிக்கொண்டு பல பிழையான முடிவுகளை தான் கிழக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆயுட்காலத் தலைவராக இருக்கவேண்டும் என்பதற்காக தனக்கு ஆதரவளிக்கும் ஒப்பீட்டு ரீதியில் அவரை விடவும் கல்வி கேள்விகளில் குறைந்த பலரின் ஒத்தாசையுடன் எடுத்து வந்திருக்கிறார், எடுத்தும் வருகிறார். மறு புறத்தில் புலிகளின் புலம் பெயர் சக்திகளின் செல்வாக்கும் மேனாட்டு சக்திகளின் வழிநடத்தல்களுக்கு இணங்கவும் செயற்பட்டு வருகிறார். இவர் பிரபாகரனை சந்தித்ததும அவ்வாறுதான் நிகழ்ந்தது.

“மிகவும் இன்முகத்துடன் எங்களை வரவேற்ற ஒருவராக மிகவும் சிநேகமான புரிந்துணர்வுடன், திறந்த மனதுடன் கதைக்கின்ற ஒருவராக அவரை நாங்கள் பார்த்தோம்; எதிர்பார்த்ததைவிடவும் எந்தக்கடினப்போக்குமில்லாமல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் ஒரு நெருங்கிய நட்பை ஏட்படுத்திக்கொள்ள வேண்டுமென்கின்ற வாஞ்ஞையுடன் இருப்பதாக அவரை நான் பார்த்தேன்; எதிர்பார்த்ததைவிடவும் இந்தச்சந்திப்பு எங்களுக்கிடையே இருக்கின்ற சந்தேகங்களை களைய உதவியிருக்கிறது.”

இதுதான் முஸ்லிம்களை வேரறுத்த இன சம்ஹாரம் செய்த பிரபாகரனைப் பற்றி அவரை சந்தித்தபிறகு ஹக்கீம் முன்வைத்த அபிப்பிராயம் . இப்படிச்சொல்லி சில மாதங்கள் கடக்கவில்லை மூதூரும் வாழைச்சேனையும் புலிகளின் வன்முறையில் முஸ்லிகளை சமாதானத்தின் பெயரால் பலிபீடத்திற்கு அனுப்பியது. மூதூரில் நடந்த கலவரத்தின் பின்னர் முஸ்லிம்கள் மீது புலிகள் சமாதானத்துக்கான விலையை பெற்றுக்கொள்ள ஆரம்பித்த பின்னர் ரணில் என் காலடிக்கு வரவேண்டும், தனது கோரிக்கை நிறைவேற்றவேண்டும் என்று ஹக்கீம் அன்று அரசியல் அடம்பிடித்தும், ரணில் “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் ” கதையாய் இவருக்கு அசையவில்லை; இப்போது  ஹக்கீம் பொன்சேகா புராணம் பாடுகிறார். மூதூரில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தான உடனேயேமுஸ்லிம்கள்   மீது தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை புலிகள் விஸ்தரித்தபோது ஹக்கீம் தனது நோர்வே அரசின் தரகு முதலாளியாக விசுவாசத்துடன் செயற்பட்டு அன்று அங்கு ஏற்பட்ட இன முறுகலுக்கு சமாதானத்தை விரும்பாத, சமாதானத்துக்கு எதிரான முஸ்லிம் சக்திகளும் தான் காராணம் என்றுஅறிக்கையிட புலிகளின் தமிழ் நெட் இணையம் ஆஹா இதுவல்லவோ செய்தி என்று ஆர்ப்பரித்ததும் இன்னும் பதிவில் இருக்கிறது.


அரசியலில் ‘யு டேன்” (U Turn)

அரசியல்வாதிகள் கட்சி மாறுவது என்பது மிகச்சாதாரணமான நிகழ்வு என்பது ஒருபுறம் இருக்க எதிரும் புதிருமான கொள்கை கொண்ட கட்சிகள் பல ஒரு நேர்கோட்டில் பயணிப்பது என்பது சாத்தியமானதல்ல என்பதை இப்போது இலங்கையில் ஒரே கூட்டணியில் இணைந்திருக்கின்ற அரசு எதிர்க் கூட்டணியினருக்குள் முரண் கருத்துக்கள் முளைவிடத்தொடங்கிவிட்டன. இந்தக் கூட்டில் சில பிரிவினர் தமது வஞ்சத்தை தீர்த்துக்கொள்ள முற்படுகின்ற அடிப்படையில் மட்டுமே இணைந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில்தான் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமது கட்சி முடிவு குறித்து தடுமாறி புலிகளின் காலாவதியான பகிஸ்கரிப்பு முடிவை மீளப்புதுப்பித்து அற்க்கையிட்டு சில தினங்களுக்குள் அவரின் கட்சி ‘யு டேன்” எடுத்துள்ளது. அகில இலங்கை தமிழ் காகிரசின் பேச்சாளர் அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி இலங்கையில் நாடாளுமன்ற மனித உரிமை சட்டத்தரனியாக பணிபுரிந்து நூற்றுக்கணக்கான இளைஞர்களை சிறை மீட்கும் பணியில் பெருமளவில் ஈடுபட்டவர்.


பிரித்தானிய அரசுக்கு அதன் நீதித்துறைக்கு புகலிடம் கோரும் தமிழர்களுக்கு இலங்கை அரசை மிலேச்சத்தனமான அரசாகக் காட்டி அவ்வரசின் நாடுளுமன்ற அங்கத்தவர் என்ற ஊதியத்துடனும், பாதுகாப்புடனும், புலிகளின் மனித உரிமை மீறல்களை பொறுத்தவரை கபோதியாக இருந்து ஒரு தலைப்பட்சமாக மனித உரிமையை புரிந்துகொண்டவர். இவர் சில வாரங்களுக்கு முன்னர் தேர்தலை புலிகள் செய்ததுபோல் அதே எதிபார்ப்புடன் தமது கட்சி தேர்தலை பகிஸ்கரிக்கும் என தீர்மானம் நிறைவேற்றி பகிரங்கப்படுத்தினார். சில தினங்களுக்குள் அவ்வாறு செய்தால் மீண்டும் மஹிந்த வருவதற்கு வழிசமைத்துவிடும் என்று அவர்கள் மீது விடுக்கப்பட்ட புலம் பெயர் அழுத்தங்கள் மூலம் நேரெதிர் முடிவினை எடுத்தவர்கள்.
இவ்வாறான ஒரு நேர் எதிர திருப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் 1988 ஜனாதிபதித் தேர்தலில் எடுத்தது.


(தொடரும்)


பயங்கரவாதத்தின் பின்னர்: இலங்கையின் முரண்பாட்டுப் பிரதேசங்களில் மீள் நிர்மாணமும் ஜனநாயகமயமாக்கலும் குறித்து ஒரு பகுப்பாய்வு



(பயங்கரவாதத்தின் பின்னர்: இலங்கையின் முரண்பாட்டுப் பிரதேசங்களில் மீள் நிர்மாணமும் ஜனநாயகமயமாக்கலும் குறித்து ஒரு பகுப்பாய்வு எனும் தலைப்பில் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக் கழகத்தில் 5 யூன் 2009 . இடம்பெற்ற நிகழ்வில் எஸ் .எஸ். எம் பஷீர் ஆற்றிய உரை)


இன்று பிரச்சினைக்கு உட்பட்ட பிரதேசங்களில் மீள் நிர்மாணமும், ஜனநாயக மயப்படுத்தலும் என்பது தொடர்பான இன்றைய நிகழ்வில் முஸ்லிம் மக்களின் கண்ணோட்டத்தினை வெளிப்படுத்த கிடைத்த இச்சந்தர்ப்பம் ஒரு சிறப்புரிமையாகும். கிழக்கில் புலிகளினால் துன்புறுத்தப்பட்டு பேச்சு சுதந்திரம், நடமாடும் சதந்திரத்திற்காகவும் போராடியவர்களில் நானும் ஒருவன். நாங்கள் ஜனநாயக நிலைப்பாடுபற்றி பேசும்போது பேச்சுரிமையும், நடமாடும் உரிமையும் பிரச்சினைக்கு உட்பட்ட பிரதேசங்களில் அடைந்திருக்கின்றோமா என்பது தொடர்பில் பேசுவது முக்கியமானதாகும். புலிகளால் சுதந்திரமான நடமாட்டமும், பேச்சுரிமையும் மறுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து நானும் வந்தவன். ஒரு காலகட்டம் இருந்தது முஸ்லிம் பிரமுகர்கள் எவரேனும் வெளிப்படையாக புலிகளை விமாச்சித்தபோது அவர்கள் கடத்தப்பட்டு ஈவிரக்கமின்றி கொன்றொழிக்கப்பட்டனர். இத்தகைய சம்பவங்கள் ஒன்றல்ல நூற்றுக்கணக்கில் இடம்பெற்றன. ஒரு தடவை ஒரு வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினரை அடித்து குற்றுயிரும், கொலையுயிருமாக கடத்தியபோது நாங்கள் சட்டச்சிக்கல் காரணமாக வைத்தியசாலையின் பொறுப்பதிகாரிக்கு எதிராக ஆட்கொணர்வு மனுவினை கொழும்பு நீதிமன்றத்தில் கொண்டுவர நேர்ந்தது. அதன் விளைவாக எச்சரிக்கைத் தொலைபேசி எனது வீட்டிற்கு விடப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில்தான் நாங்கள் வாழநேரிட்டது. நாங்கள் அடிமைகள்போல புலிகளின் கட்டுப்பாட்டில் வாழவேண்டிய நிலை எற்பட்டது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்டார்கள். அவர்கள் 24மணித்தியாலத்திற்குள் 500ரூபாய் பிரித்தானிய நாணயத்தில் 2பவுணுடன் வெளியேற்றப்பட்டார்கள். இந்த துக்ககரமான சம்பவம் மன்னிக்கப்படலாம் ஆனால் இலகுவாக மறக்கப்படக்கூடியதல்ல. இது தமிழ் சமூகத்தினால் செய்யப்படவில்லை, புலிகளினால் செய்யப்பட்டது. நான் பிறந்த கிராமத்திலும் மற்றும் ஏனைய முஸ்லிம் கிராமங்களிலும் கிழக்கிலே முஸ்லிம்கள் புலிகளால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார்கள். எனது அயலவர்கள் கொல்லப்பட்டாhகள். புலிகளுக்கு சற்று கூடுதலான நேரம் கிடைத்திருந்தால் சுமார் 200கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் வாழ்ந்த எமது குடும்பமும் பலியாகிப்போயிருக்கும். நான் கொழும்பில் வாழ்ந்தபடியினால் புலிகளிடமிருந்து அக்கால கட்டத்தில் தப்பிக்கமுடிந்தது. காத்தான்குடி பள்ளிவாசல்களிலும், முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள், எனது உறவினர்களும் அதில் கொல்லப்பட்டார்கள். புலிகளினால் பல பள்ளிவாசல்கள் தாக்குதல்களுக்கு இலக்குகளாக திகழ்ந்தன. நாங்கள் இவ் அனுபவங்களைத் தாண்டி இப்போது உயிருடன் இருக்கின்றோம். எமது சமூகத்தின் சார்பாக குரல் கொடுக்கும் சந்தாப்பம் இன்றும் எனக்கு கிடைத்திருக்கின்றது. எனது நண்பா (ஈ.பி.டி.பி ) சார்பில் கலந்துகொண்ட எஸ் தவராஜா சொன்னார் நேற்று அமைச்சர் திரு போகொல்லாகம அவர்களுடனான லண்டன சந்திப்பின்போது; அமைச்சர் யுத்த வெற்றிகுறித்து உரையாற்றியபோது அங்குவந்திருந்த எந்தத் தமிழரும் கரகோசம் எழுப்பவில்லை எனக் குறிப்பிட்டார். நண்பர் தவராஜா தமது தலைவருக்கு என்ன நடந்தது என விபரித்திருந்தார். ஆனால் அத்தகைய துன்பங்களை ஏற்படுத்திய அந்த மனிதன் இறந்தவிட்டான். என்பதையிட்டு அவர் கைதட்டுவதற்கு தயாராக இருக்கவில்லை. இது ஒரு முரண்நகை நிலைப்பாடாகும். (இங்கு உரையாற்றிய தவராஜா அவர்கள் தமது தலைவர்மீதும் தன்மீதும் எத்தனித்த கொலைமுயற்சிகள் பற்றியும் தாங்கள் அவற்றில் தப்பித்தமை பற்றியும் குறிப்பிட்டிருந்தார். நான் பகிரங்கமாகவே மகிழ்ச்சியடைகின்றேன் என்பதனை தெரிவிக்க விரும்புகின்றேன். என்னிடம் தமிழ் தலைவரின் (பிரபாகரன்) இறப்புப் பற்றியும் புலிகளினுடைய அழிவுபற்றியும் மகிழ்ச்சியடைந்தாக கூறிய தமிழர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் சொன்னார்கள் இதுதான் பயங்கரவாதத்தின் முடிவு எனச் சொன்னார்கள். ஏனெனில் அவர்களை (புலிகளை) எதிர்த்தவர்கள் அங்கு வாழமுடியவில்லை. அவர்கள் அங்கிருந்து ஒடிவந்து மேற்குலகிலே வாழவேண்டி நேரிட்டது அவர்கள் இப்போது அவ்வாறான பயங்கரத்திலிருந்த விடுபட்டு சுதந்திரமாக வாழ்கின்றார்கள.; அத்துடன் அங்கு சுதந்திரமாக போகமுடியுமெனவும் நம்புகின்றார்கள்.. இப்போது நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோமா எனக் கேட்கப்படுமானால் அதற்கான பதில் ஆம் என்றுதான் இருக்கும.; அதனை அங்குள்ள மக்கள் உறுதிசெய்கின்றார்கள். அவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடமுடியுமென்பது குறித்து மகிழ்ச்சியடைகிறார்கள். நான் கிழக்க மாகாண முதலமைச்சரையும் அவர்களுடன் உள்ளவர்களையும் சந்தித்தபொழுது ஏன் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்தீர்கள் என்று கேட்ட பொழுது அவர்கள் நாங்கள் சாதாரண சிப்பாய்கள் எங்களுக்கு வன்னியிலிருந்து விடப்படும் தலைமைத்துவத்தின் ஆணையினை நிறைவேற்றாமல் இருக்கமுடியாது எனவும் அதற்காக வருந்துவதாகவும் மன்னிப்பும் கோரினார்கள். 1990களில் புலிகளால் இளைக்கப்பட்ட அநீதிகளுடன் 1915ம் ஆண்டு சிங்கள –முஸ்லிம் வன்முறையை ஒப்பிட்டால் சில வருடங்களில் சிங்கள –முஸ்லிம் உறவுகள் மீளமைக்கப்பட்டதுடன் இன்று இலங்கையின் மத்திய பிரதேசத்திலே முஸ்லிம்கள் அரசியலிலும், பொருளாதாரத்திலும் செயற்திறன்மிக்க சமூகமாக திகழ்கின்றார்கள். ஆனால் 18வருடங்களாக வடக்கிற்கு மீளப்போகமுடியாமல் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் அகதி முகாம்களில், குடிசைகளில், கொட்டில்களில் புத்தளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் சிங்கள மக்களுடனும், தமிழ் மக்களுடனும் வாழ முடிந்தது. இதற்கு தடையாக இருந்தவர்களே புலிகள்தான். இங்கே தமிழ் பேசும் மக்கள் என்ற பதம்குறித்து ஒரு தவறான புரிதல் உண்டு. எனெனில் தமிழ் அரசியல்வாதிகள் நாங்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்ற ஒரே மக்கள் என்ற அடிப்படையில் பயன்படுத்தினர். ஆனால் அது உண்மையல்ல. அப்பிரயோகம் அரசியல் இலாபத்திற்காகவே உபயோகிக்கப்பட்டது. அது உண்மையாக இருந்திருக்குமானால் ஆயிரக்கணக்கான வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் யாவரும் ஒரே மொழி பேசுபவர்களாயின் ஏன் வெளியேற்றப்பட்டார்கள். நாங்கள் பயங்கரவாதத்தின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியாது, ஜனநாயக வழிமுறைமூலமே போராடவேண்டும் சிறுபான்மைச் சமூகங்களைப் பொறுத்தவரை இலங்கை பூரணத்துவமாக நடந்து வருகின்றது என நான் சொல்லவில்லை நாங்களும் சிறுபான்மை என்ற மனப்பதிவிலிருந்து விடுபடுவது எவ்வாறு என்பது குறித்தும் கவனத்தை குவிக்கவேண்டியுள்ளது. எவ்வாறு நாங்கள் இலங்கையனாக அடையாளங் காண்பது எனவும் சிந்திக்கவேண்டும் .இலங்கையை பிரித்தானியர் விட்டுச்சென்றபோது அவர்கள் அறிமுகப்படுத்திய பிறப்புச் சான்றுப்பத்திரத்தினை எடுத்துக்கொண்டால் அது இனரீதியாக மக்களை தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என வகைப்படுத்தியிருந்தது. ஆனால் பிரித்தானியாவில் அவ்வாறு இனரீதியாக அடையாளப்படுத்தும் பிறப்புச்சான்றிதழ் பத்திரம் இல்லை. ஒரு குழந்தை பிறந்தவுடன் எந்த இனத்தைச்சேர்ந்தது என்பதனை இங்கு பிறப்புச்சான்றிதழ் பத்திரத்தில் காட்டப்படுவதில்லை. பிரித்தானியரே இதனை எமக்கு அறிமுகப்படுத்தினர். இதிலிருந்தும் நாம் விடுபடவேண்டும். இந்த வேண்டுகோளை இந்த அவையிலே இருக்கின்ற அமைச்சரிடம் (டொக்டர் சரத் அமுனுகம) நான் வேண்டிக்கொள்கின்றேன். வேறு வழிமுறையில் இன அடையாளத்தினை சுட்டிக்காட்டும் படிவத்தினை அறிமுகப்படுத்துங்கள். (பிரித்தானியாவில் இருப்பதுபோல்) அந்தப் படிவத்திலிருந்து இனத்தினைத் தேர்ந்து எடுத்தக் கொள்ளலாம். இனத்தினைக் குறிப்பிட விரும்பாதவர்கள் வேண்டுமானால் ” ஏனையோர்” (ழுவாநசள) என்று குறிப்பிடலாம்” நாங்களும் முஸ்லிம்களும் புலிகளின் அதிகாரத்தின்கீழ் வாழ நேரிட்டபோது பல்வேறுபட்ட பிரேரணைகளை தனியான மாகாணசபை போன்ற தீர்வுகளை தமிழ் தாயகக்கோட்பாட்டுக்கு எதிராகவே முன்வைக்கவும் நேரிட்டது. நாங்கள் ஒத்துழைக்காவிட்டால் பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம்; பிரிந்தபோது இடையில் அகப்பட்ட பாகிஸ்தானின் நாடற்ற பிஹாரி முஸ்லிம்களை ஒத்தநிலை எமக்கு எற்படுமென தமிழ் தரப்பினரால் எச்சரிக்கை விடப்பட்டது. முஸ்லிம் தலைவர்கள் சிலர் இந்தியாவிற்குச் சென்று புலிகளின் பிரதிநிதிகள் கிட்டுவுடன் முஸ்லிம்களின் துன்பங்களுக்கு தீர்வுகாணுமுகமாக ஒரு கருத்தொருமைப்பாட்டினை அடைய எத்தனித்தனர். முஸ்லிம் மாகாணசபை கோரிக்கை என்பதும் தமிழர்களின் தாயகக்கோட்பாட்டு கோரிக்கைக்கு எதிராக முஸ்லிம் அரசியல் கட்சியினால் முன்வைக்கப்பட்டதுதான். ஆனால் அத்தகைய கோரிக்கை இன்று இல்லை. இவைகள் எல்லாம் எதிர்விளைவு (உழரவெநசிசழனரஉவiஎந) கோரிக்கைகளாகவே ஏற்பட்டன. இப்போது 13 வது திருத்தச் சட்டத்திற்கு மேலாக இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இன்று நடைமுறையிலிருக்கும் மாகாண சபையினை மேல் தரமுயர்த்தும் அதிகாரங்கள் தேவைப்படலாம். ஆனால் அவை ஜனநாயக செயல்முறையூடாகவே அடையப்படவேண்டும். முப்பது வருடங்களுக்கு முந்திய மூலப்பிரச்சினைகள் இன்றில்லை அக்காலகட்டத்திற்கு நாங்கள் திரும்பிப்போக முடியாது.. பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தங்களுடைய துன்பங்களுக்க தீர்வுகாணப்படவில்லை என்று உணர்ந்ததால்தான் ஆயதப் போராட்டம் உருவானது. இன்றும் அப்பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என அவர்கள் உணர்வார் களேயானால் அவர்கள் இப்போது என்ன செய்யப்போகின்றார்கள் என்னும் கேள்வி எழும்புகிறது. இன்றைய வெற்றி குறித்து அனைத்து தமிழ் மக்களும் மகிழ்ச்சி அடையவில்லை என்ற பார்வை ஒரு சரியான கருத்தாக அமையாது. தரப்படுத்தல்பற்றிய அங்கலாய்ப்புக்கள் பொருத்தமான காரணியாக அமையாது. தரப்படுத்தல் அதிகளவில் யாழ்ப்பாண மாவட்டத்திலே எதிர்க்கப்பட்டது. மாறாக தமிழ் மக்கள் வாழ்கின்ற வவுனியா, மன்னார் திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் பெரிதும் பயனடைந்தனர். இன்று சர்வதேசப் பாடசாலைகள், கல்விநெறிகள் மிகுந்திருக்கின்ற காலம். இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ் பிரச்சினைகளுடன் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளும் இருந்து வந்திருக்கின்றது. ஏனெனில் நாங்களும் தமிழ்பேசும் சமூகம் என்று பொதுவான வகைப்படுத்தப்பட்டோம். இதன் அடிப்படையிலே முஸ்லிம்களுக்கான தனிக்கட்சி உருவானது நான் அந்தக் கட்சியின் ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் செயலாற்றியுள்ளேன். இன்று பிரித்தானியாவில் என்ன நடக்கின்றதென்றால் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளர் தொழில் கட்சிக்கோ, அல்லது மரபுவாதக் கட்சிக்கோ அல்லது ஏனைய கட்சிகளுக்கோ வாக்களிக்காமல் தங்களுடைய வாக்குகளை தமிழ் வேட்பாளர் கபளீகரம் செய்துவருகின்றார். கட்சிகளிலாயினும் தமிழர்களுக்கு தமிழர்களே வாக்களிக்கவேண்டும் என்கிற பிரிவு மேலோங்கி வருகின்றது. இது ஜனநாயகத்திற்கு எதிரான, சமூக ஒருங்கிணைப்பிற்கு பெரும் ஆபத்தான விடயமாகும். இது இனரீதியான பிரிவினைக்கே இட்டுச் செல்லும். நாங்கள் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என்னும் சமூக ஒற்றுமைக்கு தடைபோடுகின்ற காரணங்களை அடையாளங்கண்டு அணுகவேண்டும். இன்றைய அரசாங்கம் பயங்கரவாதத்தினை ஒழித்திருக்கின்றது ஆனால் ஊழல், பாதாள உலகம், வெள்ளைவான் கடத்தல் என்பவற்றிற்கெதிராய் யுத்தத்தினை முன்னெடுக்கவேண்டியிருக்கின்றது. நான் நேற்று அமைச்சருடன் கதைத்தபொழுது கிழக்கிலே இரவில் முஸ்லிம்கள் கடத்தப்பட்டும் ஒருவர் விடுவிக்கப்பட்டும் ஒருவர் விடுவிக்கப்படாமலும் இருப்பதனை சுட்டிக்காட்டினேன். இந்த நிலைமை தொடரக்கூடாது நாங்கள் இலங்கையராக இருப்பதிலே மகிழ்ச்சியடைகின்றோம்.


Mahavali. Thenee and Unmaikal

எந்த வழியால் நுழைந்து எந்த வழியால் வெளியேற …?

முஸ்லிம் அரசியல் நடப்புகள்.

23/12/2009
 
படம்: ரவூப் ஹக்கீம் கண்டி தலதா மாளிகை பீடாதிபதியிடம் ஆசி பெறுகிறார்


எஸ் எம்.எம்.பஷீர்


1989 பொதுத்தேர்தல் கூட்டங்களில் “சிங்கள பேரினவாதம்” “ தமிழ் பேரினவாதம்” ஆகியவற்றிற்கெதிராக முஸ்லிம் காங்கிரசின் அரசியல் பிரச்சாரங்கள் முஸ்லிம் காங்கிரசின் மேடைகளில் அதிகளவில் முடுக்கிவிடப்பட்டன.
இலங்கையின் பிரதான கட்சிகளில் அங்கத்துவம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள் உறுப்பினர்களின் குற்றங்கள் மேடைகளில் சிலாகித்து பேசப்பட்டன ; முஸ்லிம் காங்கிரசின் அரசியல் யாப்பு குர்ஆண் ஹதீஸ் என்பவற்றின் அடிப்படையில் தான் செயற்படும் என்று பாமர முஸ்லிம் மக்களினை மதத்தினூடாக உள்வாங்கும் தமது அரசியல் பிரவேசத்துக்கு சுருதி சேர்க்கும் செயற்பாடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பிரச்சாரங்களை முன்னெடுத்தது.
முஸ்லிம் மத நம்பிக்கையின் அடிப்படைக்கு சில முஸ்லிம் அமைச்சர்கள் எதிராக செயற்படுகிறார்கள் என்ற முஸ்லிம் காங்கிரசின் பிரச்சாரத்தில் முன்னால் வணிக வியாபார துறை அமைச்சர் ஏ .ஆர்.எம். மன்சூர் ஒருதடவை 1980 களில் தலதா மாளிகைக்கு சென்று அங்கு மல் பூஜா எனப்படும் மலர் தட்டினை காவிச் சென்றார் என்ற குற்றச்சாட்டை வைத்து இவ்வாறு பேரின வாதிகளுக்கு அவர்களது சமயச்சடங்குகளில் கூட கலந்து தனித்துவம் இழந்து, முஸ்லிம் அரசியல் வாதிகள் அவர்களது மத நம்பிக்கையினை கைவிட்டு செயற்படுவதாகவும்- தட்டு தூக்குவதாகவும் பரிகாசம் செய்தனர் ,

இவ்வாறான மதத்தினை அடிப்படையாகக்கொண்ட பிரச்சாரங்கள் இலகுவில் ஏற்கனவே செல்வாக்குப்பெற்றிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது எதிர்ப்புனர்வையும் ஏற்படுத்தியது. ஒருதடவை ஏ .ஆர். எம். மன்சூர் அவர்கள் அஷ்ரப் நாடாளுமன்றத்தில் அரபு மொழி பிரார்த்தனையுடன் தனது உரைகளை ஆரம்பிப்பதுபோல் தங்களுக்கும் முடியும் ஆனால் அவை எல்லாம் தந்திர வேலை (gimmick) என்று என்னிடம் குற்றம் சாட்டினார்.

ஆனால் சுமார் பத்து வருடங்களின் பின்னர் ( ஜூலை 1997 ) முஸ்லிம் காங்கிரஸ் பரிகசித்த, குறைகண்ட அதே சம்பவம் அஷ்ரபினால் செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டு அஸ்ரப் அமைச்சராக இருந்தபோது முவைக்கப்பட்டது .

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் ரூபவாகினி பின்னிரவு தமிழ் நிகழ்வொன்றில் தான் தவறு விட்டதை ஏற்றுக் கொண்டார், ஆயினும் தான் மலர்கள் எதனையும் சிலைகளுக்கு முன்பாக கொண்டு செல்லவில்லை – வைக்கவில்லை-என்று குறிப்பிட்டார். சட்டத்தில் துளை ( Loophole) கண்டு வாதடுவதுபோல் அஸ்ரப் மலர் பூஜாவுக்கு தான் தட்டு தூக்கியது பற்றி கூறாமல் தான் சிலைக்கு முன்பாக கொண்டு செல்லவில்லை என்று குறிப்பிட்டார் ஜம்மியத்துல் உலமா சபை (மத அறிஞர்களின் சபை) சார்பாக மௌலவி ரியால் அவர்கள் இஸ்லாத்துக்கு முரண்பட்ட சமயச் செயலில் பங்கு கொண்டமைக்காக பச்சாதபம் கொள்ளக் கோரி . கடிதம் எழுதி இருந்தார். இக்கடிதத்தில் அவர்கள் திகவாபிய பிரதேச புனருத்தாருண சம்பிரதாய நிகழ்வுகளில் மல் பூஜா எனப்படும் மலர் பூஜை செய்யும் -மலர் தட்டினை காவிச்செல்லுதல்- என்ற குற்றச்சாட்டுடன் அந்நிகழ்வு நடைபெற்ற தினமான வெள்ளிக்கிழமை கட்டாய ஜஉ ம்மா தொழுகையிலும் கலந்து கொள்ளவில்லை என்பதையும் முக்கிய தவறாக குறிப்பிட்டிருந்தார். .
 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மஜ்லிஷுள் சூரா எனும் ஆலோசனை குழுவின் இரண்டு பிரதிநிகளில் ஒருவர் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வின் பிரதிநிகளில் ஒருவராக இருப்பதனை கட்சியின் யாப்பு விதந்துரைக்கிறது அதன. அடிப்படையில் அதிகாரத்திலுள்ள கட்சியின் அமைச்சரினை உலமா உடனடியாக கேள்விக்குட்படுத்தவில்லை , மாறாக அழுத்தங்களின் காரணமாக அவர்கள் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு அன்று அவர்கள் மீதும் சுமத்தப்பட்டது. ஆனால் மறுபுறம் அன்று கலந்துகொண்டவர்களுக்காக தனியாக பிறிதொரு ஜஉம்மா தொழுகையை தென் கிழக்கு பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய கற்கை துறையின் தலைவர் டாக்டர் எம். கே. காலிதீன் நடத்தியதாகவும் கூறப்பட்டது…அஸ்ரப் தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு புதிய ஷ்ரியா கவுன்சிலை அமைக்க முற்பட்டார், ஆயினும் அது நடைமுறையில் செயற்படமுடியவில்லை ..இவ்வாறு செய்வது ஒரு பௌத்த நாட்டில் தவிர்க்கமுடியாதது என்று நியாயம் வேறு இப்போது கற்பிக்கும் சிலரைக் காணமுடிகிறது. இவர்கள் யாரும் மன்சூரும் முஹம்மதுவும் செய்தபோது மட்டும் மத நம்பிக்கைக்கு எதிரானதாக இதனை கண்டனர் இப்போது இதை கண்டுகொள்ளகூடாது என்பது முஸ்லிம் கட்சிக்காரர்களின் புது அனுகுமுறைபோலும்.
. .
அவ்வாறான விமர்சனம் மீண்டும் சுமார் ஒரு தசாப்தத்தின் பின்னர் இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மீதும் அவரின் அண்மிய தலதா மாளிகை விஜயத்தின் பின்னர் எழுந்திருக்கிறது. அஸ்ரப்பும் ஹக்கீமும் .மத சமூக அரசியல் விழிப்புணர்வு இயக்கம் என்று சொல்லப்படும் ஜமா அத்  தே இஸ்லாமி ஸ்தாபனத்துடன் ஆரம்பத்தில் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டவர்கள் என்பதும் இங்கு குறிபிடத்தக்கது. நிகழவிருக்கும் ஜனாதிபதிதேர்தலில் குதிப்பதற்காக ஐ.தே.க வுடன் கூட்டு ஏற்படுத்தியவுடன் சம்பிரதாய பூர்வமாக தமது கூட்டினை  அங்குரார்ப்பணம்  செய்யும் நிகழ்வாக ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹா கண்டியிலுள்ள .தலதா மாளிகைக்கு விஜயம் செய்து அங்குள்ள பௌத்த பிரதம மதகுருவின் ஆசீர்வாதம் பெற்றபோது ஹக்கீமும் அவருடன் சென்று அதே விதமான ஆசீர்வாததினை பெற்றுக்கொண்டார் . ..இது சிறு சலசலப்பைத்தான் ஏற்படுத்தி இருக்கிறது

கொழும்பு ஜாவத்த ஜும்மா பள்ளிவாசலில் தமது கட்சித் தீர்மானங்கள் கிழக்கு மாகான சபை தேர்தலின்போது அஸ்ரப் அடக்கம்  செய்யப்பட்டிருக்கும்  இடத்திற்கு சென்று வெளிப்படுத்தி பிரச்சாரங்களை முன்னெடுத்தமை அங்கு அவர்கள் அஸ்ரப் அடக்கம் செயப்பட்ட இடத்திற்காக -முக்கியத்துவமளித்து- தமது தேர்தல் பணிகளை முடுக்கி  விட்டிருந்தால் அவை நிச்சயமாக இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளுக்கு முற்றிலும் எதிரானதாகும்.

இன்று இலங்கையில் பல முஸ்லிம் அரசியல் கட்சிகள் பல்வேறு இடங்களில் பல்வேறுபட்ட அரசியல் நிர்வாக கட்டமைப்புக்களில் தங்களது பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டி அங்கத்துவம் வகிக்கும் சூழலில் அவர்களில் எவரும் வேருவளை  சம்பவங்கள் குறித்து மௌனமாகவிருந்து தமது செல்வாக்குகளை இழந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.
ஆனால் முஸ்லிம் காங்கிரஸின்  ஆரம்பத்திற்கு முன்னர் ஒரு சில முஸ்லிம் அரசியல் வாதிகள் அமைச்சர்கள் இவ்வாறான பிற மத சடங்குகளில் சில இறுக்கமான இஸ்லாமிய வரம்புகளை மீறி பங்குபற்றி இருக்கிறார்கள்

ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கையான ” கலிமா ” வை தனது கட்சி கொடிகளில் பொறித்து இஸ்லாமிய மதக்கட்சியாக முஸ்லிம் மக்களுக்குள் அடையாளப்படுத்தி முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிப்பது கூட ஒரு மதக்கடமை போல் காட்டி வந்திருக்கிறார்கள். முதன் முதலில் 1987 மாகாணசபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்காவிட்டால் அவர்கள் மறுமையில் பதில் சொல்லவேண்டிவரும் என்றவாறான எச்சரிக்கைகளை சேகு இஸ்ஸதீன் போன்ற முஸ்லிம் காங்கிரஸ் ஜாம்பவான்கள் விட்டிருக்கிறார்கள் என்பதை இன்னமும் மக்கள் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் விட சென்ற கிழக்கு மாகான சபை தேர்தலின்போது ஓட்டமாவடியில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டங்கள் நடைபெறுவதில் பல தடைகளை அங்குள்ள அமைச்சர் அமீர் அலி போட்டதால் அவற்றை தாண்டி நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் தனது உயிருக்கு ஆபத்து உண்டென்றும் அவ்வாறு அங்கு மரணிக்க நேர்ந்தால் ஹக்கீம் " தான் கட்சின் தொப்பியுடனும் சால்வையுடனும் மரணித்தால் அது தனது பாக்கியமாகும்"  என்று  சூளுரைத்தார்.

இதுவெல்லாம் முஸ்லிம் அடிப்படை நம்பிக்கை களுக்கு முரணான கருத்துக்களாகும் என்பதை யாருமே சுட்டிக்காட்டதவரை முஸ்லிம் மக்கள் இம் முட்டாள்தனமான கருத்துரைகளை கேட்டு ” அல்லாஹு அக்பர்” ” சிந்தா பாத்” என்று மட்டும் தாராளமாக சத்தமிடப் போகிறார்கள் .

lankamuslim.net(13/12/2004)

i

கொலையும் விலையும் !




                     எஸ்.எம்.எம்.பஷீர்

“சுட்டதென்னவோ அவர்களைத்தான்
விழுந்ததென்னவோ நாங்கள்தான்”
                                  ஏ. கந்தசாமி

அண்மையில் பாராளுமன்றத்துக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் யாழ்ப்பான மாவட்டத்தில் போட்டியிட்டு வென்று பாராளுமன்றம் செல்லும் முதல் தமிழ் பெண்மணி விஜயகலா மகேஸ்வரன் தனது கொல்லப்பட்ட கணவனின் அரசியல் வழியில் கட்சியில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்றிருக்கிறார். அதேபோல் கம்பஹா மாவட்டத்தில் சுதர்ஷினி பெர்னாண்டோபிள்ளை தனது கணவனின் வழியில்  போட்டியிட்டு வெற்றி ஈட்டியுள்ளார். ஆனால் இலங்கை வரலாற்றில் வேறு சில தமிழ் பெண்மணிகளும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்கள். சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்றத்தில் உறுப்பினராகவிருந்த தங்கேஸ்வரி , பத்திமினி சிதம்பரநாதன் தவிர தனது வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் எம். பீ ஆகவிருந்த கே .டி புலேந்திரன் புலிகளால் கொல்லப்பட்டபின் (19.10.1983)அவரது மனைவி திருமதி புலேந்திரன் தனது கணவனது இடத்துக்கு அன்றைய ஐக்கிய தேசிய கட்சியில் அரசில் எம் .பீ யாக நியமிக்கப்பட்டார். அவர் துணை கல்வி அமைச்சராகவும் பதவி வகித்தார். குலேந்திரன் வீட்டில் குடும்பத்தாருடன் தொலைக்கட்சி பார்த்துக்கொண்டிருந்த போது புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் . இவரது மனைவியின் சகோதரர் (மைத்துனர்) புலிகளை அதிகம் கண்டிப்பதை தவிர்த்துக்கொண்டார் (ஒருவேளை பயமாகவிருக்கலாம்) ஆனால் பின்னர் அவர் தீவிர சிங்கள எதிர்ப்புக் கருத்துக்களை கொண்டவராகவே எனக்கு அறிமுகமானார்.

Bazeer denies charges leveled against him by LTTE


By Udara Soysa Reporting to Asian Tribune

[b]London, 13 December, (Asiantribune.com): [/b]Nitharsanam, the official online news outlet of the LTTE’s intelligent group led by Pottu Amman alias Sivasankaran, in its latest bid to create more tension between the Tamil and Muslim communities, has kicked started a new campaign targeting prominent Muslim individuals in the East.
S.M.M Bazeer, a lawyer by profession and a prominent political commentator from the Eastern Sri Lanka, currently residing in UK has become the first victim of the devious propaganda as the LTTE web site claimed that Bazeer as the Osama Bin Laden's man in Eastern Sri Lanka.
Bazeer at presently resides in London in a statement issued to Asian Tribune denied the allegation made by the LTTE’s intelligence agency’s website hosted in the cyber space by a proxy server.
Bazeer in his statement said, "I condemn the fictitious news that appeared in the Nitharsanm Web on 9th December 2005 that I am connected to the Osama Group based in the eastern part of Sri Lanka, and I was in the background of a plot to issue handbills in Jaffna Peninsula to evacuate Muslims."
By courtesy: http://www.asiantribune.com/show_news.php?id=16425 (13.12/2005)

பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாடல்



எஸ்.எம்.எம்.பஷீர்



" ராஜீவ் காந்தி இரண்டு அங்குல வித்தியாசத்தில் உயிர் தப்பினார். நான் இரண்டு நிமிட வித்தியாசத்தில் உயிர் தப்பினேன். அதனால் இன்று உங்கள் முன்னிலையில் நாம் இருவரும் காட்சி தருகிறோம்" 
                            ஜே ஆர் ஜெயவர்த்தனா

                            ( நன்றி : தகவல்: அநாமிகன்) 

  (காட்மண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் ஜே ஆர் ஜெயவர்த்தனா ராஜீவை  இலங்கையில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பின் போது  விஜித ரோகன துப்பாக்கியால் அடித்து கொல்ல முற்பட்டதையும் , அதன் பின்னர் தனக்கும் நாடாளுமன்றத்தில் குண்டு எறிந்து   கொல்ல முற்பட்டதையும் பற்றி குறிப்பிட்டு  கூறியது.)


இந்திய அதிகாரத்துடன் வல்லாதிக்க மனோபாவத்துடன் செய்விக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பத்தத்தின் அடிப்படையில் உருவான  பதின்மூன்றாவது அரசியல் அமைப்பு திருத்தச்சட்டம் பற்றி திரும்பிப் பார்க்கும் போது இந்திய  இதிகாசமான மகாபாரதத்தில் பதின்மூன்று வருடமும் பதிமூன்றாவது நாள் பாரதப் போரும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதும் எனது ஞாபகத்துக்கு வருகின்றதையும் மீட்டிக்கொண்டு இக்கட்டுரை தொடரை நகர்த்த விரும்புகிறேன்.

மகாபாரதத்தில் தருமன் கவ்ரவருடன் சூதாடி தோற்றவுடன் பாண்டவர்களுக்கு விதித்த நிபந்தனையின்படி , பாண்டவர்கள்   பன்னிரு ஆண்டுகள் வனவாசமும், ஒரு வருடம் அஞ்ஞாதவாசமும் செய்ய வேண்டும். அந்த ஒரு வருடத்தில் அவர்கள் வெளிப்பட்டால் மறுபடியும் வனவாசம் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.

பதின் மூன்றாவது திருத்தச்சட்டத்தை இலங்கையின் அரசியல் அமைப்பில் அங்கமாக்க இந்திய அரசினை தூண்டியவர்கள், மற்றும் அந்த அடிப்படையில் அமைந்த வட கிழக்கு மாகான சபையில் ஆயுத அடாவடித்தனம் புரிந்து அங்கிருந்தது தப்பி ஓடியவர்கள் தமிழ் தேசிய அரசியல் அங்காடி வியாபாரிகள் என பலர் இப்போது தமது வனவாசம் முடித்து அதற்கு மேலும் சில ஆண்டுகள் அஞ்சாதவாசமும் புரிந்து மீண்டும் அரசியல் செய்ய புலம் பெயர் தேசங்களில் அதிலும் குறிப்பாக ஐக்கிய ராச்சியத்தில் ஏற்பட்டுள்ள புலிகளின் தொல்லையற்ற அரசியல் இடைவெளியை  நிரப்ப கங்கணம் கட்டி வியூகம் அமைத்திருக்கிறார்கள். இந்த அணியில் முன்னாள் தமிழ் ஆயுத இயக்க பிரகிருதிகளும் தமிழ் அரசியல் கட்சி பிரகிருதிகளும் அடங்குவர் இவர்கள் தமது தங்களின் அகங்காரங்களை மறந்து  ஒன்று சேர்ந்திருக்கிறோம் என்று வேறு பிரகடனம் செய்திருக்கிறார்கள். இவர்களின் கூட்டுக்கள் நிலைக்குமா என்பது குறித்த கேள்வி இவர்களின் தலைவர்களின் செல்திசைகளில் தான் தங்கியுள்ளது. மொத்தத்தில் எல்லா மாற்று இயக்கங்கள் தமிழ் அரசியல் கட்சிகள் புலிகளை எதிர்த்தாலும் தங்களை அரசுடன் சேர்ந்து அவ்வப்போது பாதுகாத்து கொண்டாலும் ,புலிகளின் தனி நாட்டு  கொள்கையை புலிகள் எப்படியும் வென்றுவிட வேண்டும் என்று மானசீகமாக பிரார்த்தித்த பலரும் இப்போது கூடி மீண்டும் பதின்மூன்றாவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுகோள் விடுக்கிறார்கள். ஆனால் அவ்வப்போது தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரும் ,  தமிழ் தேசியவாத ஊடகங்களும் (தமிழர் முற்போக்கு  இயக்கங்கள் அரசியல் கட்சிகள் உட்பட) இந்திய இலங்கை ஒப்பந்தத்தினையும் அதனால் விளைந்த அரசியல் அமைப்பு திருத்ததினையும் தமது அடிப்படையான    திம்பு கோட்பாட்டுக்கு எதிரானதென்ற கருத்துக்களையும் முன் வைத்து வந்திருக்கிறார்கள்.

 இந்திய அமைதிப்படைக்கும் புலிகளுக்குமிடையே இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகி சில மாதங்களுக்குள் முரண்பாடுகள் வலுத்து பரஸ்பரம் ஆய்த தாக்குதல்கள் ஆரம்பித்தபின்னர் புலிகளுக்கான புலம் பெயர் ஆதரவுத்தளங்கள் தீவிரமாக செயற்பட்டு 1988  ஏப்ரல் இறுதி நாளிலும் மே முதலாம் நாளும் சர்வதேச தமிழ் மாநாட்டை ( International Tamil conference)  "தமிழ் தேசிய போராட்டமும் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தமும்" ( Tamil National struggle and Indo-Lanka Peace Accord)  என்ற தலைப்பில்   உலகத் தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பினூடாக இலண்டனில் நடத்தினர். இந்த மாநாட்டில்தான்  தென்னிந்திய அரசியல் தலைவர் புலிகளின் பிரச்சாரகர் வை .கோபாலசாமி , ஓய்வு பெற்ற இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர் கிருஷ்ண ஐயர் , புலிகளின் இன்னோமொரு பிரபல ஆதரவாளர் நெடுமாறன் ஆகியோர் உட்பட இன்னும் சிலரும் இந்தியாவிலிருந்து கலந்து கொண்டதுடன் அமெரிக்காவின் மனித உரிமை சட்டத்தரணி கரேன் பார்கர் (Karen Parker) என்பரும் கலந்து கொண்டார். (கரன் பார்க்கருக்கு இந்நாள்வரை புலிகளின் மனித உரிமை மீறல்கள் பற்றி மட்டும் எதுவும்     தெரியாது ) இந்த மாநாட்டின் சூத்திரதாரியாக செயற்பட்டவர் என். சீவரத்தினம் , பிரபல புலி ஆதரவு சட்டத்தரணியும் முன்னாள் டெலோ பேச்சாளருமான என்.சத்தியேந்திரா. இந்த கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் சகல நாடுகளையும் அங்கீகரிக்க கோரி மேற்கொள்ளப்பட்ட மூன்று பிரதான தீர்மானங்களில் இரு  தேச அடிப்படையிலான  தீர்வும் , தமிழ் தேசத்தின் உண்மை தலைவனாக எழுந்து நிற்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனை  அங்கீகரித்தலும் , உடனடி யுத்த நிறுத்தமும் திம்பு அடிப்படையிலான பேச்சுவார்த்தை அடிப்படையில் அரசியல் தீர்வு காண்பதுமாகும்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் புலிகளின் ஆயதக்களைவு நிபந்தனையால் புலிகளால் திட்டவட்டமாக செயலிழக்க செய்யப்பட்டதுடன் , அதன் பின்னணியில் ஆரம்பித்த சர்ச்சைகள் அதற்கான சூழ்நிலையை புலிகளின் குமரப்பா புலேந்திரன் உட்பட்ட குழுவினரின் தற்கொலையுடன்  எவ்வாறு அன்றைய தேசிய பாது பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி கூட அரசியல் தந்திரோபமாக  புலி இந்தியப்படை மோதலை எதிர்பார்த்திருந்தார் என்பது குறித்து லலித் தனது தனது ஆங்கில பிரித்தானிய நண்பருடன் செய்த ஒரு உரையாடல் நெருக்கடியான அரசியல், இராணுவ காய் நகர்த்தல்  அரசியல் அணுகுமுறையின் பிறிதொரு அம்சம் என்பதை சுட்டிக்காட்டுகிறது.   அது பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

"ஆவதறிவது " கவிதை நூலுக்கு பேராசிரியர் எம். ஏ. நுஃமானின் அணிந்துரை

அணிந்துரை

1950ää 60களில் ஈழத்தில் நவீன தமிழ்க் கவிதை எழுச்சியடைந்தபோது அதன் முக்கிய தூண்களுள் ஒன்றாக நிமிர்ந்து நின்றவர் புரட்சிக்கமால். ஐரோப்பாவின் நோயாளி என்று கருதப்பட்ட துருக்கியை மதச்சார்பற்ற ஒரு நவீன துருக்கியாக மாற்ற முயன்ற முஸ்தபா கமாலை ஆதர்சமாகக் கொண்டு சாலிஹ் என்ற தன் சொந்தப் பெயருக்குப் பதிலாக புரட்சிக் கமால் என்று புனைபெயர் பூண்டபோதிலும்ää முஸ்தபா கமால்போல் மதச்சார்பற்ற மேலைமயமாக்கலின் ஆதரவாளராக அன்றி ஆழ்ந்த இஸ்லாமிய உணர்வுமிக்க சமூக சீர்திருத்தக் கவிஞராகத் தன்னை நிலைநாட்டிக்கொண்டவர் புரட்சிக் கமால். 1950ää 60களில் ஈழத்து முஸ்லிம்கள் மத்தியில் இனத்துவ உணர்வு ஸ்தாபனமயப்பட்ட சூழலில் அதன் கவித்துவக் குரலாக ஒலித்தவர் இவர்.

தம்பி நீ எழுவாய்! இங்கிருப்பது பயனிலை!! சென்று வருவது செயற்படுபொருள்!!!

-எஸ்.எம்.எம் பஷீர்-

நாட்டை எல்லாந் தொலைத்தாய்;:--அண்ணே!

நாங்கள் பொறுத்திருந்தோம்

மீட்டும் எமை யடிமை –செய்தாய்,

மேலும் பொறுத்திருந்தோம்”

-சுப்பிரமணிய பாரதியார் -

British Prime Minister’s perception on the implementation of Ceasefire Agreement in Sri Lanka disputed

London, 19 March, (Asiantribune.com): Sri Lankan Muslim Information centre in the United Kingdom while welcoming the British Prime Minister’s concern about the resolution of the Sri Lanka’s national question has expressed their disappointment over his observation, that the only realistic way to solve Sri Lanka’s national question is to fully implement the Ceasefire Agreement (CFA).

The statement revealed, “We, the Muslims from the North and East of Sri Lanka have also been the victims of war because of the civil war in Sri Lanka between the Tamil militants and the Government of Sri Lanka (GOSL).”

“The LTTE expelled hundreds of Muslims from their traditional lands in the North and killed scores of them in the East in mosques and villages in order to establish their mono ethnic Tamil home land, Sri Lankan Muslim Information centre in UK pointed out.

The statement explained how the LTTE and the former Sri Lankan Prime Minister, Ranil Wickramasingha conveniently sidelined the Muslim factor by merely referring them to as “groups” in the CFA and consistently refused a third party recognition to a any subsequent peace talks. It further added, “The Muslims who have been expelled from the Northern Province have still been languishing in Refugee camps for well over 16 years. “

The statement further revealed: “The space created by the CFA has not lasted long by the systematic breaches of the LTTE and reprisal action of the Sri Lankan Government. The CFA has literally come to extinction and the Muslims and Tamils of the East have been released from the clutches of the LTTE. A new climate of co existence among the Tamils Muslims and Sinhalese is largely felt across the towns and villages of the eastern province. In the circumstances it is incumbent on the international community, including Britain to urge the Sri Lankan government to address the issues relating to exodus of Tamil refugees in the East and the political aspirations of the people with the consensus of all the political parties and civil societies. “

Sri Lankan Muslim Information centre of UK in conclusion appealed to the prime minister of Britain to curb the pro LTTE activities in the UK under the existing terrorism laws and step up Britain’s support to a political solution with the current realities.

By courtesy: - Asian Tribune -19/03/2007

"கடை விரித்தேன் கொள்வாரில்லையே"

எஸ்.எம்.எம்.பஷீர்-


ஒரு சமூக பிரச்சினையின் அதிர்வலைககளும் அணுகுமுறைகளும்.

ஏறாவூர் பழைய சந்தை முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஏறாவூரின் மூன்றாம் குறிச்சி பகுதியில் அமைந்திருகிறது. இதில் முஸ்லிம்களே காலங்காலமாக வியாபாரம் செய்து வருகிறார்கள், .எனினும் இச்சந்தையின் இடம்போக்கின்மை வளர்ந்துவரும் சனப்பெருக்கம் சிங்கள வியாபரிகளின் அதிகரித்த பொருளாதார நடவடிக்கையாலும்; சிங்கள சமூகம் ஏறாவூர் பிரதேசத்திற்குட்பட்ட சவுக்கடி தளவாய் புன்னைக்குடா பிரதேசங்களில் வாழ்ந்தமையினாலும் தமிழர்கள் தங்களுக்கென ஒரு தனியான சந்தையை கொண்டிராமையினாலும் தமிழர்கள் அதிகம் வாழும் ஏறாவூர் நாலாம் குறிச்சி பகுதியில் புதிய சந்தை எழுபது 1970 களில் நிர்மானிக்கப்பட்டு செயற்படத் தொடங்கியது. எனினும் முஸ்லிம் வியாபாரிகள் முஸ்லிம் மக்கள் தங்களது பிரதேசத்துக்கு தூரமான புதிய சந்தைக்கு இடம் பெயர்வதினை ஆதரிக்கவில்லை.

மூவின சமூகத்தினரையும் கொண்ட வியாபாரிகளை கொண்ட புதிய சந்தை முழுமையாக கைவிடப்பட்டது. இச்சந்தை பகுதியில் அருகாமையில் அமைந்துள்ள காளிகோயில் வீதியில் உள்ள விகாரையின் புத்தபிக்கு புலிகளின் உளவுப்பிரிவின் தலைவர் பொட்டு அம்மானால் நெற்றிப்பொட்டில் 1985 அளவில் சுடப்பட்டு கொல்லப்பட்டார், மேலும் இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட பதட்டமும் அன்று கிழக்கில் காணப்பட்ட சிங்களவர்களுக்கு எதிரான புலிகளின் செயற்பாடுகள் காரணமாக சந்தை வியாபாரிகள் மீண்டும் ஏறாவூர் பழைய சந்தைக்கு இடம் பெயர தமிழ் சந்தை வியாபாரிகள் செங்கலடிக்கு இடம்பெயர்ந்தனர்.ஆனால் இன்று ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சூழ்நிலைகள் காரணமாக அங்கு காணப்படும் சிங்கள வியாபாரிகளின் அதிகரித்துவரும் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் சிங்கள மக்கள் தங்களது முன்னைய வியாபார தலங்களையும் , பாடசாலைகளையும், வணக்கத்தலங்களையும் புதுப்பிக்கின்ற, இச்செயற்பாடுகளால் மீண்டும் குடியேறுகின்ற நிலைமை இன்று கிழக்கின் பல பிரதேசங்களில் காணப்படுகிறது. அவ்வாறான சில மீள் குடியேற்றங்கள் சில வேளைகளில், சில பிரதேசங்களில் முஸ்லிம் தமிழ் மக்களின் அதிருப்திக்கு காரணமானாலும் இன அரசியல் செய்யும் சக்திகளுக்கும் கட்சிகளுக்கும் தம்மை இனத்தின் பிரதிநிதிகளாக தக்க வைத்து கொள்வதற்குகும் இச்செயற்பாடுகள் பெரிதும் துணை புரிகின்றன.




மறுபுறம் அதிகாரத்திலுள்ள காவல் துறையினரும் இத்தகைய செயற்பாடுகள் குறித்த முறைப்பாடுகளில் காட்டுகின்ற அலட்சியம் , அதிகார துஸ்பிரயோகம், பக்கச்சார்பு என்பன காலங்காலமாக "சிங்கள ஆக்கிரமிப்பு" குறித்த கருத்துக்களை உள்வாங்கி, அவ்வாறான அனுபவங்களையும் சில காலகட்டங்களில் கொண்டிருக்கின்ற சமூகத்தில் இந்த புதிய சந்தை கடைகளை முழுமையாக சிங்கள வியாபாரிகள் கைக்கொள்ளும் நிலைமை அங்கு வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் ஆட்சேபனைக்கு உள்ளாகியுள்ளது.

ஆனால் சிங்கள வியாபாரிகள் மற்றும் மீண்டும் தங்களது வியாபாரங்களை பாடசாலைகளை, ஆலயங்களை ஆரம்பிபதற்கு பூரண உரித்துடையவர்கள் என்பதில் நியாயமுண்டு ஆயினும் அவை சட்டபூர்வமான உரிமை பிரயோகமாக அமைதல் வேண்டும். இங்கு அதிகளவான அல்லது சகல் கடைகளையும் சிங்கள வியாபாரிகள் எடுப்பதென்பது உள்ளூர் பிரதேச  சபாவின் அதிகாரத்தினை மீறும் செயல் என்பதால் அதனை சட்ட ரீதியாக தடுப்பதற்கான அல்லது சட்டரீதியாக உரிமம் வழங்க உள்ள நடைமுறைகளை செயற்படுதுவதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.

இன்னுமொரு சுவாரசியமான ஒரு விடயம் இங்கு கடைகளை ஆரம்பித்துள்ள வியாபாரிகள் அதிகம் மலிவாக பொருட்களை விற்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறாயின் இச்சிங்கள கடைவிரிப்பாளர்கள் அப்பிரதேச வியாபாரிகளுக்கும் போட்டியாக அமைவதினை மறுக்கமுடியாது. இங்கு வள்ளலார் சொன்னதுபோல் " கடை விரித்தேன் கொள்வாரில்யே " என்ற தத்துவார்த்த கடை விரிப்பல்ல. இது மாறாக இந்த விலைக்குறைப்பு கடை விரிப்பு மறுபுறம் கொள்வார்களை கூட்டியிருக்கிறது. ஆயினும் முறைகேடான ஆக்கிரமிப்புக்கள் சட்டபூர்வமாக வேணும் தடுக்கப்படவேண்டும், இவற்றை வைத்து அரசியல் செய்யாமல் மக்கள் சக்திகள் திரட்சியுற்று கோரிக்கை விடவேண்டும் அல்லது மக்களின் வரிப்பணத்தில் நிர்வாகம் பண்ணும் அதிகார சபைகள் மக்களின் உரிமைகளுக்க உரிய தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

இன்னுமொரு விடயம் சட்டபூர்வமான உரிமை உடையவர்கள் பல வருடங்களுக்கு பின்னராயினும் தமது இடங்களுக்கு திரும்புவதற்கு உரிமையுடையவர்கள். வடமாகான கிழக்கு மாகான தமிழர்கள் முஸ்லிம்கள் மீண்டும் தகலாது பிரதேசங்களில் மீள் குடியேற்றம் செய்வதற்கு உரித்துடையவர்கள். அவ்வாரே சிங்களவர்களும் உரித்துடையவர்கள்.
கிழக்கிலே முஸ்லிம்கள் மீண்டும் உன்னிச்சை , கரடியனறு ,வேபங்காடு , கோபாய்வெளி , காயன்குடா, கித்துள் உறுகாமம் போன்ற பிரதேசங்களில் தங்களது பயிர்செய்கைகளியும் குடியிருப்புக்களையும் மீண்டும் தொடங்க முடியுமென்றால் சிங்களவர்களுக்கும் அது முடியும் என்பது ஒரு கசப்பான யதார்த்தமாகும். மறுபுறம் உறுகாமத்தில் புலிகளால் தரைமட்டமாக்கப்பட்ட முஸ்லிம் பாடசாலையை  இன்று மீள் நிர்மாணம் செய்யப்பட வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளிவாசல் புனர் நிமானம் செய்யப்பட்டுள்ளது , முஸ்லிம் மக்கள் தமிழ் மக்கள் தங்களை மீண்டும் புரிந்து கொண்டு வாழத் தொடங்கிவிட்டார்கள், சிங்களவர்கள் தொடர்பான வெறுப்புக்களில் உள்ள சரி பிழைகள் நேர்மையாக சீர்தூக்கி பார்க்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது நிகழும் அதிகாரத் துஸ்பிரயோகம் சட்டபூர்வமாக தடுக்கப்பட வேண்டும். சந்திரிகா அரசில் கொண்டு வரப்பட்ட அரசியில் சீர்திருத்த சட்ட மூலம் 1983 கு முன்னர் உள்நாட்டில் அகதியான இடம்பெயர்ந்த அணைத்து மக்களையும் மீள் செல்லும் -குடியேறும்- உரிமையையும் அவர்களுக்கு அதற்கான உதவிகள் நஷ்ட ஈடுகள் வழங்க வேண்டும் என்று கூறுகிறது. 1987 ஜனவரியில் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி பாராளுமன்றத்தில் 73000 முஸ்லிம்கள் அகதிகளாக இருப்பதாக தகவல் வெளியிட்டார். இது 1990 ல் வடமாகான முஸ்லிம்கள் வெளியேற்றப்பட முன்னராக கணக்கெடுக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் உள்ளக இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் 1987 தொகை மாத்திரமேயாகும். இன்று இன்னிலை இல்லாதொழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் சூழலில் மீண்டும் இன முரண்பாடுகள் கவனத்துடன் அதேவேளை உரிமையுடன் சரியான முறையில் கைக் கொள்ளப்படல் வேண்டும் .


Thenee, Mahaveli, Lankamuslim, Unmaikal,alai, Muslim guardian December 2009

தீவிர தமிழ்த் தேசியவாதத்தை சியோனிசத்தைவிட பயங்கரமாகப் பார்க்கிறேன்

சட்டத்தரணி எஸ்.எம்.எம். பஸீர்

சட்டத்தரணி எஸ்.எம்.எம். பஸீர் அவர்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளரா கவும் மனித உரிமைச் சட்டத்தரணியாகவும் பணியாற்றி வருபவர்.

முஸ்லிம் களின் மனித உரிமை மீறல்களை, அவர்களது பிரச்சினைகளை சர்வதேச தரத் திற்கு நகர்த்தியதில் சட்டத்தரணி பஸீர் அவர்களுக்கு பெரும் பங்குள்ளது. அந்தப் பணியை அவரது உயிருக்கு ஆபத்து இருந்த போதிலும் அவர் செய் தார். இன்றும் அதனை அவர் செய்து வருகிறார். மனித உரிமை மீறல்களுக்கு எதிராக துணிந்து குரல் கொடுப்பவர்களில் பஸீர் முக்கியமானவர்.

பிரதேசவாதம் உண்மையும் கற்பனையும்.

-- எஸ். எம். பசீர்


"என்னைத் துரோகியென்று சொல்லும் எல்லோருக்கும் சொல்லுவேன். நான் செய்ததையிட்டு நான் பெருமைப்படுவேன்."
--திரு. எம்.வாணுறுää இஸ்ரவேல் அணுகுண்டுத் திட்டத்தின் ஊதுகுழல் தனது 18 வருட சிறைவாசத்தின் பின் இவ்வாறு கூறினார்.

பிரதேசவாதம் யதார்த்தமோ கற்பனையோ?

இலங்கையில் எப்பவோ சொல்லப்பட்ட ஒரு செய்தி என்னவென்றால் ;மலைநாட்டுச் சிங்களவருக்கும் கரையோரச் சிங்களவருக்குமிடையே வித்தியாசங்கள் உண்டு. அவர்களது புவியியல் சார்ந்த  வாழ்விலும் சாதிரீதியிலும் இனரீதியிலும் வித்தியாசமானவர்கள். இந்த வித்தியாசம் இந்த இரணடு பிரதேசங்களதும் நாளாந்த வாழ்வில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. கண்டிய ரத்வத்தை குடும்பம் தெற்கின் பண்டாரநாயக்காவை இரண்டு பரம்பரைக்கு முன்பு மணம் முடித்து இருந்த போதும் வடக்குத் தமிழர்களுக்கும் கிழக்குத் தமிழர்களுக்குமிடையே வித்தியாசம் இருப்பதாகக் கூறப்படுகிறது. கீழ்மாகாணத் தமிழர்கள் வடமாகாணத் தமிழர்களால் வஞ்சிக்கப் பட்டார்கள் என்று விளக்கங்கள் கூறப்படுகின்றன. வடமாகாணத்தவரின் உயர்கல்விச் சாதனை,  பொருளாதார வளர்ச்சி போன்றன இதனைக் காட்டுவதாக எடுத்தியம்பப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக வடமாகாணத்தார் கீழ்மாகாணத்தாரை அடக்கி ஆளுவதாக உணரும் மனத்துன்பங்கள் நிலவுகின்றது. கருணாவின் கீழ்படியாமையும் கிளர்ச்சியும் இந்த அடக்கி ஆளுகைக்கு எதிராக ஏற்பட்டதென்று ஒரு பகுதியினர் உணருகின்றனர். இந்த மனவேதனையானது. கீழ்மாகாண சமூக உற்பத்திச்சாலையில் பலதசாப்தமாக உற்பத்தி செய்யப்பட்ட சமூக விளைபொருள் ஆகும். கருணா இந்தப் பிரச்சனையை தனது இராணுவ அங்கீகாரத்தின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளார். வட கீழ் மாகாணத் தமிழரிடையே நிலவும் மனக்கிலேசமானது பலசங்கதிகளாக பிரதிபலித்துள்ளது.

மறைந்த நவீன கவிஞனான வி.ஆனந்தன் இதை வெளிப்படுத்தும் கவிதையொன்றை எழுதியுள்ளார்.

"வந்தாரை வாழ வைத்து
சொந்த மண்ணில் பிறந்தாரை
சாகடிக்கும் சிங்காரமான
மட்டக்ககளப்புச் சீமையான்
வேறு என்ன சிரைப்பான்"

இந்தக் கவியானது மட்டக்களப்பு மக்கள் வந்து குடியேறுவோருக்கு இரக்கமுள்ளவர்களாக நடக்கும் அதே வேளையில் அங்கே பிறந்தவர்களை கொல்லும் மனப்பான்மை உடையவர்கள். இது வடக்கிலிருந்து குடியேறியவரை வாழவைத்து குறிப்பாகப் படித்தவர்களை வாழ வைத்தது.

1995 ஆயுதப் போராட்டம் நிலவிய நாட்களில் துக்ளக் ஆசிரியரான சோ இராமசாமி 1-14 டிசம்பர் துக்ளக் இதழில் பின்வருமாறு எழுதினார்.
"கீழ்மாகாணத்தில் வாழும் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லை". இருந்தபோதும் இந்தப் பிரிவினையானது மேலுக்குத் தலைகாட்டவில்லை. தமிழர்களின் ஆயுதப் போராட்டம்  அரசியல் மேடையில் துளிர்த்த இந்த வித்தியாசத்தை மேவி அமத்தி வைத்தது. "கருணாவினது பிரதேசவாதமானது திரு ஹக்கீமது தலைமை சம்பந்தமாக விமர்சித்த பொழுதே தெரிந்தது. 2003 பாரிஸ் கூட்டத்திற்குப் பிறகு அவர் ஒரு வெளிநாட்டு ஊடத்திற்குக் கூறிய பொழுது " சிறீலங்கா முஸ்லீம் தலைவர் ஹக்கீம் கீழ்மாகாணத்து முஸ்லீம்களைப் பொறுத்த மட்டில் ஒரு வெளியார். கீழ்மாகாணத்து முஸ்லீம்கள் தங்களது கீழ்மாகாணத்து மகனொருவனே தங்களுக்குத் தலைவராக வரவேண்டும் என்று விரும்புகின்றனர்." இந்த மனோபாவமானது அவர் வன்னித் தலைமையைப் பகைத்து தனது தலைமைக்குக் கீழ் வரவேண்டுமென்பதிலே தெளிவாகியது.

மட்டக்களப்பைச் சேர்ந்தவரான எம்.ஏ.சீ.ஏ. ரகுமான் ( பழைய ஏறாவூர் நகரசபைத் தலைவர்) வீ.எல்.எம்.ஏ. காதர்(பழைய அதிபரும் சமூகத் தொண்டரும்) இருவரும் ஏறாவூரைச் சேர்ந்தவர்கள்  திரு. அகமட் லெப்பை (பழைய காத்தான்குடி நகரசபைத் தலைவர்) போன்றோர் முஸ்லீம் தமிழ் சமூகங்களின் ஐக்கியத்திற்காகப் பாடுபட்டோராவர். இவர்கள் முஸ்லீம் மக்கள் சம்பந்தமான அரசியல் விடயங்கள் அடையாளம் காணப்பட்டுச் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும் என்று பாடுபட்டவர்களாவர்.. முஸ்லீம் தமிழ் சமூகத்தலைவர்களை இதிலே ஈடுபடுத்தப் பாடுபட வேண்டுமென்று இதை எழுதுபவரோடு கலந்துரையாடினார்கள்.

திரு .வேணுதாஸ் புலியிலுள்ள மற்றய அங்கத்தவர்களிலும் பார்க்க முஸ்லீம் பிரச்சனைகளை விளங்கியவராகும். அவர் மேலும் ஒன்றைச் சொன்னார். 1987 இல் பிரேரிக்கப்பட இருந்த வடகீழ்மாகாண இடைக்கால நிர்வாகத்தில் ஓர் அங்கத்தவராகத் தானும் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறினார். இது நிதர்சனமாகவில்லை. 1987 ஒக் டோபரில் புலிக்கும் இந்திய சமாதானப் படைக்கும் போர் தொடங்கியது. அவர் பிற்காலத்தில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டார்.

கருணாவும் முஸ்லீம்களும்

பரீஸ் கூட்டத்திற்குப் பின்பு முஸ்லீம்கள் சம்பந்தமாகக் கருணாவைக் கேட்டபொழுது "அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் புலிகளே முஸ்லீம்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவார்கள். அதன் பின்பு புலிகள் முஸ்லீம்களோடு பேசி அவர்களின் தேவைகளை அறிவார்கள்" புலிகள் முஸ்லீம்கள் சம்பந்தமாகத் தசாப்தங்களாக வைத்திருந்த நிலைப்பாடே கருணாவினது நிலைப்பாடாகும்.

இதை எழுதியவர் ஒரு தடவை கருணாவைப் புலிகளின்; காரியாலயத்தில் சந்தித்தபொழுது ( அதன்முரண்நகை என்னவென்றால் அது பழைய மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.இராஜன் செல்வனாயகத்தின் வீடு.அவரே வடமாகாண விரோதத்திற்குப் பேர்போனவர்.) அது மட்டக்களப்பில் யூலை-ஆகஸ்ட் 1987 இந்திய சமாதானப் படை வந்தபின்பு. கருணா இதை எழுதியவருக்குப் பின்வருமாறு சொன்னார்.:-புலிகள் முஸ்லீம்களின் ஆசை அபிலாசைகளை அறிவதற்காக அவர்களோடு கலந்துரையாடுவார்கள் என்று சொன்னார். இது ஒரு சின்னச் சந்திப்பே. இந்தச் சந்திப்பானது இவரின் நண்பரான திரு வேணுதாஸ் சட்டத்தரணியின் மூலம் ஒழுங்கு செய்யப் பட்டது. இருந்தபோதும் திரு . வேணுதாஸ் 1987இல் வட கீழ் மாகாணங்களுக்கான இடைக்கால நிர்வாகத்திலே முஸ்லீம் பிரதிநிதிகள் சேர்க்கப்பட வேண்டும் என்பதை இதை எழுதுபவரோடு கலந்துரையாடியுள்ளார். இது 1987 முடிவில் அமைக்கப்படப்போவதாகப் பிரேரிக்கப் பட்டது. எங்கள் எல்லோருக்கும் தெரியும்ää புலிகளின்; துப்பாக்கிகளும் கொடுவாள்களும் எப்படி வடகீழ் மாகாணத்து முஸ்லீம்களோடு பேசியதென்று.
குறிப்பாக இந்திய அமைதிப்படை போனபின்பு எப்படிப் பேசியதென்று எல்லோருக்கும் தெரியும்.

கருணாவின் அறிகையானது தசாப்தங்களாக வேறுமாதிரி இருக்கவில்லை. இனப் பிரச்சனை கூர்ப்படைந்த போதும் அது வேறுமாதிரி இருக்கவில்லை. புலித்தலைவர் பிரபாகரனும் அவர்போன்றுதான். 1993 மார்ச் 2 இல் பி.பி.சீ பிரபாகரனைப் பேட்டிகண்ட பொழுது முஸ்லீம்கள் சம்பந்தமாக உங்களது நிலைப்பாடு என்னவென்று கேட்டபொழுது திரு. பிரபாகரன் சொன்னார்:-
"நாங்கள் இந்தப் பிரச்சனையை இப்படிப் பார்க்கிறோம். முஸ்லீம்கள் ஒரு தேசிய இனக் குழு. அவர்களுக்கென்று ஒரு கலாச்சார அடையாளமுண்டு. அவர்களின் கலாச்சார அடையாளத்தையும் காணி வைத்திருக்கும் உரிமையையும் பாதுகாக்கும் அதே வேளையில் அவர்கள் தமிழ் மக்களோடு ஐக்கியப்பட்டு சேர்ந்துவாழ்வதன் மூலம் மாத்திரம்தான் அவர்களது சமூக அரசியல் பொருளாதார நலன்கள் பாதுகாக்கப்படும். சிங்களவர்களும் சுயநல முஸ்லீம் அரசியல்வாதிகளுமே தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையே பிரச்சனையை உருவாக்கப் பார்க்கிறார்கள்"

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் புலிகளின் வரிகள் என்னும் மாறவில்லை என்பதே. கருணாவின் யூனியர் கொமாண்டர் றமேஸ்; இதை மீளவும் உறுதி செய்தார். வன்னியோடு முரண்பாடுகள் வருவதற்குச் சில மாதங்கள் முன்புää முஸ்லீம்களும் தமிழர்களும் ஒன்றேயென்று அவர் சொன்னார். சிங்கள அரசியல்வாதிகளும் சில வெளிச் சக்திகளும் முஸ்லீம் தலைவர்களினூடு பிளவுபடுத்துவதன் மூலம் போராட்டைத்தைப் பலவீனப்படுத்த முனைகிறார்கள். முன்பு முஸ்லீம்களும் தமிழரும் ஒன்றேயென்று சொன்ன கருணா அதை மறுதலித்து வன்னிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். ;இதுதான் கருணா இன்று வன்னித் தலைமையால் குற்றஞ்சாட்டுப்பட்டுள்ளது: பழிக்குப் பழி.

ஹக்கீம் தலைமையும் பிரதேசவாத அரசியலும்.

ஹக்கீம் எப்பொழுதுமே ரணில் விக்கிரமசிங்காவிலும் பிரபாகரனிலும் நம்பிக்கையுள்ளவராகவே தன்னைக் காட்டிக் கொண்டார். அவர்கள் இருவருமே இவருக்கு எப்பொழுதும் உறுதி அளித்துள்ள மனிதர்கள். இரணடாம் கட்ட தாய்லாந்துப் பேச்சுவார்த்தை முடிந்தபின்பு ஹக்கீம் சொன்னார் "கருணாவுக்குப் பிரபாகரன்மேல் அளவற்ற விசுவாசம் இருக்கிறது. பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் கருணாசெய்த பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாதென்று கூறியுள்ளார்" முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் துப்பாக்கிக்கு மேலாகப் பாய்ந்து முஸ்லீம்களுக்கு உறுதி அளித்து பிற்காலத்தில் நடந்து முடிந்த சம்பவங்களை ஏதோவிதத்தில் நியாயப் படுத்தி விடுவார். கிழக்கு முஸ்லீம்களைப் பொறுத்தமட்டில் கிழக்கிலே நடைபெற்ற முஸ்லீம்களின் படுகொலைக்கு கருணாவும் கரிகாலனும் பொறுப்பாளிகள் என்ற நிலைப்பாடே உள்ளது. காத்தான்குடி ஏறாவூர் முஸ்லீம்கள் மேலான தாக்குதலின்போது கருணா மட்டக்களப்பில் இல்லாமல் வன்னியிலேயே இருந்ததாக இலங்கை ஆயுதப்படைகளின் உளவாளிகள் கூறியிருக்கிறார்கள். அவர் தனது போராளிகளுக்கு வௌ;வேறு கட்டளையிட்டு தொலைபேசித் தொடர்புகளை குறுக்கிட்டுக் கேட்டிருக்கிறார்கள்.

ஓர் ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரி இதை எழுதுபவரோடு  கதைத்தபொழுது காத்தான்குடி ஏறாவூர் படுகோலைகளின்போது கருணா ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகுத்ததை அவரால் உறுதிப்படுத்த முடியாமலே இருந்தது. ஆனால் அவரின் உக்கிரமான கட்டளைகளையும் கொடூரமான மொழிப்பாவனைகளையும் விமர்சித்திருக்கிறார். கருணாவினது குழுவிற்குக்குறிப்பெயர் கிலோ நவெம்பர். அவரது செய்திகள் ஒட்டுக் கேட்கப்பட்டன. நியூட்டன் என்பவர் கருணாவினது கட்டளையைக் கேட்டுக்கொண்டிருந்தர்ர். நியூட்டன் என்பது கரிகாலனது குழுக்குறிப்பெயர். கரிகாலன் அந்நாளில் கிழக்கைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்.
இவர்களுக்கு மாறாக கிழக்கு முஸ்லீம்கள் எப்பொழுதுமே தெற்கிலிருந்து வந்தவர்களைத் தமது பிரதிநிதிகளாக வரவேற்றிருக்கிறார்கள். பேரியல் அஸரறப்பும்ää றவ் ஹக்கீமும் டிக்கமாதுளைப் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப் பட்டிருக்கிறார்கள். இருவருமே கண்டியிலிருந்து வந்தவர்கள். பரிதாபகரமாக இப்படியொரு அதிஷ்டம் கிழக்குமாகாண முஸ்லீம்களுக்குக் கிட்டியதில்லை. தெற்கிலுள்ள முஸ்லீம்களே தெற்குமுஸ்லீம்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தெரிவு செய்யப் பட்டுள்ளார்கள். பல்தேசிய இனங்கள் வாழும் கொழும்பில் வரலாறு சிறிது பிரத்தியேகமானது. சேர் மாக்கான் மாக்கார்,  சே றாசீக் பாரீட்,  கலாநிதி பதியுதீன் முகமது போன்றவர்கள் கிழக்கிலே இலகுவாக வெற்றியீட்டக் கூடியவர்கள் என்று தெரிவு செய்யப் பட்டவர்களாகும்: ஆனால் கிழக்கு முஸ்லீம்கள் வேண்டப்படாதவர்களாக ஒதுக்கப் பட்வர்களாகும். நாற்பது வருடங்களுக்கு; முன்னர் மட்டக்களப்பிலே மாக்கான் மாக்காரின் ஏஜண்டுகள் எவ்வாறு வறிய முஸ்லீம்களுக்குக் காசுகொடுத்து வாக்குகள் விலைக்கு வாங்கப் பட்டதை ஞாபகத்தில் வைத்துள்ளனர். மற்றய தென்னிலங்கை வேட்பாளர்களிலும் பார்க்க ஹக்கீம் வித்தியாசமானவர். அவர் திரு அஸ்ரப்பின் மரணத்தின்பின் இலங்கை தழுவிய முஸ்லீம்களின் தேசியத் தலைவர் என்ற அந்தஸ்தைப் பெற்றவராகும். தான் எங்கு தேர்தலில் போட்டியிடுவது என்று நிர்ணயிப்பது தனது பிரத்தியேக உரிமை என்றும் சொநத ஊரில் உள்ளவர்களோடு கலந்தாலோசித்து முடிவெடுக்கவேண்டிய கடமை தனக்கு இல்லையென்றும் அடித்துக் கூறியுள்ளார்.

அரசியல் அதிகாரமும் அரசியற் கீழ்படிவும்

"அரசியற் கீழ்படிவு இல்லாமல் ஒருவர் அரசியல் அதிகாரத்தைப் பெற முடியாது. ஒரு தேசிய அடையாளமில்லாமல் ஒருவரால் ஒரு பலமான தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்த முடியாது." மானிட முன்னோக்குக்கான தேடல் என்ற புத்தகத்தில் றொபேட் ஹைல்புறோனர்.
இதுவே கருணாவுக்கும் பிரபாகரனுக்கும் பொருந்தும். கீழ்படியாத வெறுக்கின்ற கிழக்குத் தமிழர்களது பிரதிநிதி கருணாவென்ற எண்ணக்கரு இருக்குமானால் முஸ்லிம்களின் பிரதிநிதி யார்? முஸ்லிம்கள் பிரபாகரனுக்கோ கருணாவுக்கோ கீழ்படியவேண்டிய கடமைபாடு உள்ளவர்கள் அல்லர். அவர்கள் ஒட்டு;மொத்த தமிழ் தேசிய அடையாளத்தை ஏற்கமாட்டார்கள். பிரதேச வாஞ்சையைப் புறக்கணித்து பின்விளைவுகளை யோசியாமல் முடிவுகளை எடுத்தால் பிரதேசவாஞ்சையானது மீண்டும் திருப்பித் தாக்கும் என்பது இப்பொழுது தெளிவாகவே விளங்குகிறது. முஸ்லிம்கள் ஒரு திட்டவட்டமான இனக்குழுவும் தேசிய இனமுமாதலால் கருணாவிடயப் படிப்பனவுகளிலிருந்து புலிகள் தமது முஸ்லீம் சம்பந்தமான நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்து பார்க்க வேண்டும். 2004 பொதுத்தேர்தலிலே மூன்று முஸ்லீம்களை தமிழ் தேசியக் கூட்டின்சார்பில்; போட்டியிட நிறுத்தி தமிழ் முஸ};லீம் உறவுகளை வெளிகாட்டியது போன்ற நாடகமானதுää தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக ஒரு முஸ்லீமைக்கூட தேர்ந்துகொள்ள மனமில்லாத தன்மையை நன்றாகவே நிறுவிக்காட்டியுள்ளது. புலிகளோடும் அரசாங்கத்தோடும் பேரம்பேசுவதில் இராஜதந்திரரீதியாகக் கடுமிடுக்காக இருக்வேண்டுமென்பதைää இந்த நிகழ்ச்சியானது முஸ்லீம்களுக்கும் ஒரு சிறந்த படிப்பனவைக் கொடுத்துள்ளது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமுள்ள தமிழ் ஊடகங்கள் என்ற நிறப்பிரிகையினூடு பார்க்கும்பொழுது கருணா பிரச்சனையென்பது பிரதேசவாதமும் கள்ளத்தனமும் என்றே தோன்றுகிறது. கருணா பின்வாங்கி விட்டிட்டு ஓடி ஒளித்தாலும் கருணாவிடயம் புதிரைக் கிளப்பியதோடு புலிகளின் குழந்தைப்பிள்ளைகளை இராணுவத்தில் சேர்த்தல்ää ஆயுதங்களை வாங்கிக் குவித்தல்ää அரசியல் படுகொலைசெய்தல்ää பாரபட்சமாகத் தமிழ் ஊடகங்களினூடு ஒருபக்கம் சார்ந்து மொங்கான் போடுதல் என்பவற்றை அம்பலப்படுத்தியதேர்டுää முஸ்லீம்களின் இனம்சார்ந்த பிரதேசவாதத்தை நியாயப் படுத்தியுமுள்ளது. கீழ்மாகாணத் தமழர்களுக்;கு எதிர்காலம் என்ன சொல்லுமென்றால்ää முஸ்லீம்களைப் பொறுத்தவரையில் கருணா ஒரு மனிதர்களை விழுங்கி. அவர் அப்படி இல்லையென்று சொன்னாலென்ன சொல்லாது விட்டாலென்னää கருணாவும் புலிகளின் மற்றொரு புலிரகம் என்பதைத்தான் மட்டக்களப்பு; சொல்லும்.
"நீ என்னைப்பற்றி எந்த முடிவோடும் வந்திருக்கலாம், நாம் உண்மையைக்கொண்டு வந்திருக்கிறோம்"
--மைக்கேல் மூர்
9-11 பாறன்கைற் என்ற ஈராக் யுத்த விரோத சினிமாவின் இயக்குனர்.
முற்றும்.

இந்தக் கட்டுரையாளர் கீழ்மாகாண முஸ்லீம்களிடையேயும் தமிழ்மக்களிடையேயும் நன்றே அறிமுகமானவரும்ää சிறந்த சட்டவல்லுனரும்ää சர்வதேசசமூகவியல் அறிஞர்கள் அடங்கிய சிறிலங்கா ஜனனாயக அரங்கு என்ற சர்வதேச ஸ்தாபனத்தின்; ஊடகப் பேச்சாளருமாவார்.
Lines august 2004 ( Tamil Edition)

Regionalism: Fact or Fiction with reference to Karuna saga

S.M.M.Bazeer




" To all who are calling me traitor, I am saying I am proud; I am proud and happy to do what I did "
Mr. M. Vanunu, Whistleblower on the Israeli Nuclear Program, said on his release from Israeli prison after 18 years of imprisonment.

Is regionalism fact or fiction? It has been long said in Sri Lanka that there is distinction between the Udaratta Sinhalese and the Patharatta Sinhalese in terms of their geographical existence, cast and race. This difference has had no significant impact on life of the people of the two regions; Kandyan Ratwatta family had married into the Bandaranakyes in the South two generation ago. However the difference between the Northern and Eastern Tamils are explained as a kind of discrimination in terms of their unbalanced educational achievement and economical (development) growth. Above all, it is a sentiment of Northern dominance in every sphere of life style of the Eastern Tamils. Here a section of Eastern Tamils may have seen Karuna give vent to their innermost feeling of aversion to Northern dominance. This difference has been internally embedded in the social fabric of the Eastern Tamils for decades but Karuna has attempted to cast light on the issue with all his military credentials. This sentiment reflected long before in several anecdotes among the North and East Tamils. One of the modern Eastern Poets, the late Mr. V.Ananthan's verses reflected this sentiment some decades ago.

" Vantharai Val vaithu
Sontha Mannil Pirantharai
Sagadikkum Singaramana
Mattakkalappu Cheemayan
Vera Enna Siraippan"

The verse conveys the poet's loathing for the people of Batticaloa for being too generous to the "migrants" whilst "killing" the people who are born in their own soil. He is meant to have implicated the Northern Tamil migrants, especially the educated. Even during the time of armed struggle in 1995, Cho Ramasamy, the editor of "Thuklak" wrote in his 1-14 December Issue that "The Tamils living in the East do not accept Liberation Tigers". Nonetheless, this division has never surfaced or overshadowed the Tamil armed struggle although it intermittently reared its head in the political arena prior to the armed struggle.

Karuna's craving for regionalism was evident when he made a comment on the leadership of Mr. Hakeem. He told a foreign media after the LTTE's Paris meeting in 2003 that the Sri Lanka Muslim Congress leader Rauf Hakeem was an outsider to the Muslims of the Eastern Province. He also suggested "The Muslim of the East want one of their people to be the leader". This attitude became quite clear when he wanted the East under his leadership rather than the single Wanni leadership.

Karuna and Muslims

Karuna, when questioned about the Muslims, after the Paris meeting, said, "that the LTTE would represent the Muslims too at the Talks with the government. Thereafter the LTTE would talk to the Muslims on their concerns". Karuna's comment asserted the overall view that the LTTE holds for decades with respect to the Muslims. When the writer happened to meet Col. Karuna in his LTTE office (Ironically, the house of former Batticaloa M P the late Mr. Rajan Selvanayagam, who was known to be an anti-North politician) in Battocaloa in July/August 1987; soon after the arrival of the IPKF, he told the writer, among other things, that "The LTTE would talk to the Muslims about their concerns". It was a brief meeting facilitated by the writer's friend, Mr. Venudas, Attorney-at-law. Mr. Venudas had discussed with the writer about the inclusion of the Muslims in the interim council administration in the North and East proposed to be set up in the end of 1987. As a man from Batticaloa, having had appreciation for M.A.C.A.Rahman (Former Chairman of Eravur Town Council), Y.L.M.A. Cader (Former Principal and a social worker) both of Eravur and Mr.Ahamed Lebbe, the former Chairman of Town Council of kattankudy, for their activities towards Tamil Muslims unity, Mr. Venudas endeavored to identify the political issues relating to Muslims and talked to the writer about engaging Muslim-Tamil community leaders in that process. He recognized the Muslim factor better than the other members of the LTTE political wing in Batticaloa. He also disclosed that he was to be nominated for the NE Interim Council in 1987. It was never materialized as the war broke out in October 1987 between the Tigers and the IPKF. He was later killed by the Sri Lankan army. We all know how the LTTE's guns and machetes "talked" to the Muslims in the East and the North, especially after the departure of the IPKF. Karuna has not changed his perception for over a decade even after the ethnic divide became more acute, nor has the LTTE's supremo V.Pirabaharan. In an interview to BBC (2 March 1993), when questioned about the LTTE's stand on Muslims, Mr. Pirabaharan said "We have to approach their problems on the basis that the Muslim people are an ethnic group possessing their cultural identity. We are of the view, that, while the identity and land rights to the Muslim people are preserved it is by living together with the Tamil people that their social, political and economic life will be enhanced. Sinhala and selfish Muslim politicians are attempting to promote differences between the Tamil and Muslim people". It is evident that the Tigers have not changed their strips.

Karuna's former junior Commander Ramesh re-confirmed the view of Karuna a few months before Karuna challenged the Wanni by stating that Muslims and Tamils are one. Sinhala politicians and some external forces are manipulating certain Muslim leaders to divide and weaken our struggle." The same Karuna later could not agree with the Northern Tamil leadership and disclaimed that they are "one" and interestingly leveled the same charge against the Wanni Leadership. This is what Karuna himself was accused of by the Wanni Leadership. Tit for tat!


Hakeem's leadership and regional politics


Hakeem has always reposed his confidence in Ranil Wickramsinghe and Pirabakaran whenever there were promises. Soon after the second round of Talks in Thailand Mr.Hakeem said that "Karuna has a lot of respect for Pirabaharan and Pirabaharan knows that Karuna's contribution on behalf of the Tigers, can not be ignored". It was the leader of the SLMC who jumps the gun by giving assurances to the Muslims and later justifies the events. As far as the Muslims of the East are concerned they always implicate Karuna and Karikalan in the massacres of Muslims in the East. According to Sri Lankan military intelligence sources Karuna was not in the East but in the Wanni during the time of the attacks on Kattankudy and Eravur Muslims. He was intercepted giving orders to his cadres in the East in relation to various "activities". The ex-intelligence officer, who talked to the writer, could not confirm whether Karuna made any explicit orders to carry out the Kattankudy and Eravur massacres but commented on his harsh orders and strong language. Karuna was code named "Kilo November" and his messages were monitored. Newton received orders from Karuna and Newton and Karikalan were in virtual control of the East.

The Muslims of the East have shown that they always welcome candidates from the south to represent them. Ferrial Ashroff and Rauff Hakeem have been elected in Digamadulla to represent the people of the regions although they come from Kandy. Ironically it is not possible for any Eastern Muslim to win elections in the South to represent the people of the South. There may be exemptions to this theory in the cosmopolitan capital, Colombo. In the past, Sir Markan Markar, Sir Razik Fareed and Dr Badiudeen Mahmud chose the East for their place of easy contest; thus depriving of the chances of local candidates being elected and creating rabbles among the locals. The writer remembers how money was distributed in the Batticaloa District by Marcan Markar's agents in the Batticaloa District to buy votes from the poor Batticaloa Muslims some forty years ago. Unlike most of the other southern candidates, Mr. Hakeem, has been the leader of the so-called national party of the Muslims since the death of Mr. Ashroff. He asserted that it was his discretion to choose his place of contest without consulting the constituents. This clearly indicated that he was arrogant and ignored the will of the people. But his victory in the 2004 elections proved that he could take the people of the East for granted.

Political Power Vs Political obedience

"One can not have political power without political obedience: one can not have strong government without a sense of national identification " An inquiry into the Human Prospect (Robert Heilbroner -1980)

This is the case for Karuna and Pirabaharan. If Karuna has represented the perception of the disgruntled and disobedient Tamil Easterners, what about the Muslims? Muslims will not be obedient to Pirabaharan or Karuna and will never agree to have a Tamil national identification. It is quite clear now that if the regional sentiment is ignored and not dealt with prudently it will re-emerge and strike again. Karuna's factor is a lesson for the Tigers to review their stand on Muslims who are in every aspect a distinctive ethnic group and nationality. The TNA's inclusion of three Muslim Parliamentary candidates for the 2004 general election was a "showbiz" strategy in which they attempted to portray positive Tamil-Muslim relations but they were not prepared to appoint a single Muslim as their national list MP.

Muslims should realize that hard bargaining and complete diplomacy is essential to deal with the LITE and the government. Through the prism of the Tamil media locally and abroad the Karuna issue has become a sheer factor of traitorous claim of regionalism and embezzlement. Although Karuna is said to have retreated and gone into hiding, Karuna's saga has opened up the Pandora's box; exposing the child soldiers, stock piling of arms, political killings and the biased Tamil media mongers, let alone justifying the claim to ethno-regionalism by Muslims. For the Eastern Tamils the question is whether Karuna is a Zombie. Whereas for the Muslims, the question is whether Karuna is only another species of the Tigers.

"You came at me with anything, we came back with the truth"
Michael Moore - Director of the anti- war film Fahrenheit 9/11




Lines August 2004

இலக்கியத்திலும் ஜனநாயகம் வேண்டும்!தினகரன் வாரமஞ்சரி -கதம்பம் நேர்காணல் : விசு கருணாநிதி

மனம் விட்டுச் சொல்கிறேன்!

‘ஆவதறிவது’ எஸ். எம். எம். பசீர்

கவிதைக்குத் தலையிட்டால் உலகத்திற்குத் தலையிட்டதற்குச் சமம் என்பார்கள். அப்படி தாம் எழுதும் கவிதைக்கு ஏற்றமாதிரி வாழ்ந்து காட்டுபவர்களைக் கண்டிருக்கிaர்களா! பென்னம்பெரிய ஜாம்பவான்களை விட்டு விடுங்கள்! அநேகமாக எழுதும் கவிதைக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் தான் ‘நமது’ கவிஞர்கள் வலம் வருகிறார்கள். (விதிவிலக்கானவர்கள் மன்னிக்க)

காதலையும், பொதுவுடைமைக் கோட்பாடுகளையும் எழுதும் கவிஞர்களுக்கு மத்தியில் உவமைக் கவிஞர், புரட்சிக் கவிஞர்களும் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறார்கள். ஆனால் தன்னூக்க கவிதைகளை எழுதி அதுபோலவே வாழ்ந்துகொண்டிருக்கிறார் மட்டக்களப்பு மண் தந்த எஸ். எம். எம். பசீர்.

கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் இலண்டனுக்குப் புலம்பெயர்ந்த பசீர் அங்கு சொலிசிட்டராகப் பணியாற்றுகிறார். சொந்தமாக சட்ட ஆலோசனை நிறுவனத்தை நடத்திவரும் அவர் ஒரு படைப்பிலக்கியவாதியாகவும், அரசியல் விமர்சனங்களையும் இலக்கிய விமர்சனங்களையும் மேற்கொண்டு வருகிறார். பேராதனையில் படித்துப் பட்டம் பெற்று சட்டத்தரணியான பசீர் தமிழ் மொழியைத் தொடர்ந்து வளப்படுத்திக் கொண்டிருக்கிறார். இலண்டனுக்குப் புலம் பெயர்ந்திருந்தாலும் மட்டு. மண்ணையும் தமிழையும் மறக்காமல் கொழும்புக்கு வந்திருப்பவர் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்தபோது கவியரங்குகளில் பங்குபற்றினேன். அங்குள்ள அறிவிப்புப் பலகையில் கவிதைகளை எழுதிப்போடுவோம். எல்லோரும் பாராட்டுவார்கள். இலண்டனில் இணைய சஞ்சிகைகளில் நிறைய எழுதியுள்ளேன். நூல் விமர்சனங்களிலும் பங்குபற்றியுள் ளேன். தமிழை க. பொ. த. சாதாரணதரத்தில் மட்டுமே கற்றுள்ளேன். எனது தாயார் இலக்கிய அறிவு மிகுந்தவர். அதனால் எனக்கும் தமிழறிவை வளர்த்துக்கொள்ள முடிந்தது.”

“நீங்கள் எழுதியது கவிதைதான் என்று எப்போது, எவ்வாறு அங்கீகாரம் கிடைத்தது?”

“தினகரன் பத்திரிகையில்தான் முதலில் என் கவிதை பிரசுரமானது. அப்போது நிறையபேர் எனக்குத் தொலைபேசியில் பாராட்டினார்கள். அதன்பின்னர் எனக்கு ஊக்கமும் ஒரு தன்னம்பிக்கையும் பிறந்தது. அதிலிருந்து தொடர்ச்சியாக எழுதினேன்.”

“உங்கள் கவிதையின் கருப்பொருள் எதுவாக இருக்கிறது, எதனைப் பேசுகிறது, காதலையா அல்லது...?”

“தனிமனித ஊக்கத்தை (தன்னூக்கத்தை) மேம்படுத்தும் கவிதைகளையே அதிகம் எழுதியிருக் கிறேன். டொக்டர் எம். எஸ். உதயமூர்த்தியின் தத்துவங்கள் என்னைப் பாதித்துள்ளன. எனவே, எனது கவிதை தன்னூக்கத்தையே பேசுகின்றது. காதல் மனிதனின் இயலுமையைப் பாதிக்கிறது.

காதல் எதனையும் சாதிக்கவில்லை. காதலுக்குக் கட்டடம் அவசியம் இல்லை. அதனைவிட சமூகத்துக்குக் கண் திறந்துவிட்டிருக்கலாம்.” என்று கூறுபவர் தமது கவிதைகளில் வடித்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்து வாழ்ந்து வருவதாகக் கூறுகிறார்.

அவரது கவிதையின் வீச்சு சமூகத்தில் அரசியல் கருத்துகளாகப் பரிமாணம் பெற்று வருவதாகக் கூறும் பசீர், இந்தப் 19 வருடகாலமாக தனது பணிகளுக்கு மனைவி ஜெஸ்மி பசீர் மறுக்க முடியாத ஒத்துழைப்புகளை நல்கி வருவதாக நெகிழ்ந்துபோகிறார். திருமணமாகும்வரை நன்றாக எழுதிக்கொண்டிருப்பவர்கள், அது முடிந்ததும் எழுத்துக்கு முழுக்குப் போட்டுவிடுகிறார்கள். ஆனால், பசீரைப் பொறுத்தவரை, மனைவியை மறக்க முடியாது. அவரின் பக்கபலம்தான் எனக்குத் துணையாக இருக்கிறது என்கிறார்.

எழுபதுகளிலிருந்து தாம் எழுதிய கவிதைகளைக் கலாபூஷணம் பீ. எம். புன்னியாமீன் முயற்சியால் நூலுருவாக்க முடிந்துள்ளது என்று கூறும் பசீரின் சகோதர பாசம் ஓர் எடுத்துக்காட்டு என்றுதான் சொல்லவேண்டும். கவிதைத் துறையில் தன்னைப் போலவே எண்ணக்கருவைக் கொண்டுள்ள தனது உடன்பிறந்த சகோதரர் எஸ். எம். எம். நkர் எழுதிய கவிதைகளையும் தமது ‘ஆவதறிவது’ கவிதைத் தொகுதியில் சேர்த்தே வெளியிட்டுள்ளார்.

“கவிதைகளுக்கான வட்டம் மிகக் குறுகியதாகவே உள்ளது. புலம்பெயர் நாடுகளில் அரசியல் விமர்சனக் கட்டுரைகளுக்கான இணையத்தளங்கள் அதிகமாகவே உள்ளன. கவிதை இரண்டாம் பட்சமாகவே உள்ளது.”

“புலம்பெயர் இலங்கையர்கள் மத்தியில் இலக்கிய வளர்ச்சி எவ்வாறு உள்ளது?”

“புலம்பெயர்ந்து செல்பவர்கள், அகதி, கல்வி, வியாபாரம் என்ற ரீதியில் சென்றாலும் பிரதான நோக்கம் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கம்தான் மேலோங்கி காணப்படுகிறது. சிலர் உண்மையாகவே அகதியாக வருகிறார்கள். இப்போது பாருங்கள், நாட்டில் பிரச்சினை, அச்சுறுத்தல் இல்லாத சந்தர்ப்பத்திலும் உயிரைப் பணயம் வைத்துப் பயணம் செய்கிறார்கள். இதன் நோக்கம் பொருளாதாரம்தான். ஆகவே, புலம்பெயர்ந்தோரின் இலக்கியத்திலும் ஜனநாயகத்தைக் காண முடிவதில்லை” என்று ஆதங்கப்படும் பசீர் ‘ஆவதறிவது’ கவிதைத் தொகுப்பில் விபுலானந்தரைப் பற்றித் தாம் எழுதிய கவிதையை நினைவில் கொண்டு வருகிறார்.

விபுலானந்தர்
உன்பெயரில்கூட
மரியாதை
ஒட்டியிருக்கிறது!

தனி மனித
தமிழ்ச் சங்கம் நீ
மதுரைக்குப் பின்பு.

சஞ்சீவி மலையை
தூக்கிவரவில்லை நீ
உன் முதுகில்
சங்கப் பலகையே ஏறி
அமர்ந்துகொண்டது.

நீ துறவியோ!
நான் மறுப்பேன்
தமிழ்க் கன்னியை
காந்தர்வம் செய்தவன் நீ:
இல்லையென்றால்
முத்தமிழுக்கு உன்னையே
காணிக்கையாக்கியவன் நீ!

மட்டு வாவியில்
மகரயாழை
நீ இட்டு வைத்ததனால்
பூரணை நிலவில்
தேனிசை வந்து - காதில்
இன்றும் பாய்கிறது

மடம் கொடுத்தே
தமிழ் நாக்கில்
இடம் பிடுங்கியவன் நீ
கிழக்கில் கதிரவனுக்கு
வர்ணம் தீட்டியவன்
வயல்களையும்
வரப்புகளையும்
உடைத்துக்கொண்டே
கல்விமடை திறக்க
வைத்தவன் நீ!
உன் கல்லறை
மலர் வரிகள் - உன்
இதயக் கமலத்தின்
இறுதி மரண சாசனம்!

தாம் பாரதியின் அபிமானி என்று கூறும் பசீர் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பக்கச்சார்பான அரசியல் போக்கே காணப்படுவதாகக் கவலை தெரிவிக்கிறார். ‘வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்தும் அவர், நாம் அளவுக்கதிகமாகத் தனிமைப்படுத்திக் கொள்வது இணக்கப்பாட்டுச் செயற்பாட்டுக்குப் பங்கமாகவே அமையும் என்கிறார்.

“தமிழர்களும் முஸ்லிம்களும் காலத்துக்கு ஏற்றமாதிரி தத்தம் தேவைகளை இனங்காணவேண்டும். தனி மனித அதிருப்தியை பொதுப் பிரச்சினையாக்கக் கூடாது. இனவாத அரசியலைக் கைவிடவேண்டும்” என்று வேண்டுகோள் விடுக்கும் இவர் 1994 இல் ‘விடியல்’ என்ற பெயரில் ஆங்கில மொழியில் சஞ்சிகையொன்றை வெளியிட்டுள்ளதுடன், அமெரிக்கா, பிரான்ஸ், நோர்வே உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று அரசியல் இலக்கிய விமர்சன நிகழ்வுகளில் பங்கேற்று உள்ளார்.

2000 இல் இருந்து இலண்டனில் இலங்கை முஸ்லிம் தகவல் மையமொன்றை ஸ்தாபித்துச் செயற்படுத்தி வருகிறார். தனது தன்னூக்கக் கருத்துகளை இந்தத் தருணத் தில் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு களத்தை எதிர்பார்த்திருக்கிறார் பசீர்.

தினகரன் வாரமஞ்சரி -கதம்பம்
நேர்காணல் : விசு கருணாநிதி
28 சித்திரை 2010

http://www.thinakaran.lk/vaaramanjari/2010/04/11/?fn=f1004118&p=1

வடகிழக்கு மாகாணசபைத் தேர்தல்களிலிருந்து (1989) முஸ்லீம் காங்கிரஸ்சின் சுயாதீனத் தன்மைவரை. எஸ்.எம்.எம்.பஷீர்



" யார் ஒரு அற்ப தற்காலிக பாதுகாப்புக்காக சுதந்திரத்தின் முக்கியமான விடயங்களைத் தாரைவார்க்கிறார்களோ அவர்கள,; பாதுகாப்பையோ சுதந்திரத்தையோ பெறலாயக்கற்று விடுகிறார்கள்."
--பென்ஜாமீன் பிராங்கிளின்.--



முஸ்லிம்காங்கிரஸ் ஓர் அரசியற் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டவுடனேயே வடகிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றியது. இந்தோ-சிறீலங்கா ஒப்பந்தம் கைச்சாத்தாகியவுடனே முஸ்லிங்கள் தமிழர்களுக்கு அடிமையாக்கப்பட்டுவிட்டார்கள் என்று அஸ்ரப் கூறியபோதும் அதை உண்மையாக்கும் முகமாக வடகிழக்கு மாகாணசபைத் தேர்தலிற் பங்குகொண்டு அதிலே பதவிவகிப்பாளராகவும் ஆகினர். 1987 இலே முஸ்லிம்காங்கிரஸ் வடகிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பங்குகொள்ளாமல் விட்டிருந்தால் இந்தோ-சிறிலங்கா ஒப்பந்தம் தனது தகுதியை இழந்திருக்கும். ஆதலால் இந்திய அரசாங்கம் முஸ்லிம காங்கிரசைத் தேர்தலில் பங்குகொள்ளும்படி உந்தித்தள்ளி இந்தோ-லங்கா ஒப்பந்தத்தைத் தப்பிப் பிழைக்கச் செய்தது.

சிறீலங்கா சுதந்திரக்கட்சி இந்தோ-லங்கா ஒப்பந்தத்தை எதிர்த்ததால் அது மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றாமல் விடவே முஸ்லிம்காங்கிரஸ் யூ.என்.பியையும் தமிழ்க் கட்சிகளையும் எதிர்த்துப் போட்டியிடவேண்டி வந்தது. முஸ்லிம் காங்கிரஸ் யூ.என்பி விரோதப் பிரச்சாரத்தை மடைதிறந்து விட்டதோடு அதை நியாயப்படுத்த இஸ்லாம் மதத்தைத் துணைக்கு அழைத்ததோடு அதன் மதத்தீர்ப்பு மரபையும்கூறி யூ என்பிக்கு வாக்களித்தல் பாவமும் (ஹறாம்) இஸ்லாமிற் தடுக்கப்பட்டதென்றும் கூறியது.( ஹறாம் என்பது அரபுமொழியில் தடுக்கபட்டது என்ற மதவியாக்கியானத்தைக் கொண்டது). முஸ்லிம்காங்கிரஸ் தலைமைத்துவம் 1988 தேர்தலில் சிறீமாவோ பண்டாரனாயக்காவுக்கு ஒத்தாசை வழங்குவதென்று ஏகமனதாக முடிவெடுத்து சிறீமாவோ பண்டாரனாயக்காவோடு பேச்சுவார்த்தைகளை நடாத்தியது. ஜனாதிபதி தேர்தல்காலங்களில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி வடகிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்களுக்கும் ,முஸ்லிங்களுக்கும் சிங்களவர்களுக்கும் வெவ்வேறான நிர்வாக அலகுகளை ஏற்படுத்தும் பிரேரணையைப் பிரேரித்தது.

இந்த வேலைத்திட்டம் கொள்கையளவில் முஸ்லிம் காங்கிரசாலும் தமிழ்க்காங்கிரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தத் தேர்தல் அறிக்கை மாத்திரம்தான் வடகிழக்கு மாகாண முஸ்லிம்களின் உரிமையை அங்கீகரித்தது. ஜனாதிபதி தேர்தலுக்குச் சிலநாட்களுக்கு முன்னர் முஸ்லிம்காங்கிரஸ் தலைமை இந்த நிலைப்பாட்டைப் தன்னிச்சையாகப் புறக்கணித்துவிட்டு முஸ்லிம்காங்கிரஸ் தேர்தலில் நடுநிலமையாக இருக்கப்போவதாகவும் தாம் ஒரு கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் பிரகடனப்படுத்தியது. கொழும்பில் நடந்த முஸ்லிம்காங்கிரஸ்சின் 8வது வருடாந்த மகாநாட்டில,; முஸ்லிம் காங்கிரஸ் சிறீமாவோ பண்டாரனாயக்காவுக்கோ அன்றி ரணசிங்க பிரேமதாசாவுக்கோ ஒத்தாசை வழங்கப் போவதில்லையென்று அஸ்ரப் எழுந்தமானமாகப் பிரகடனப் படுத்தினார். அவரது இந்தத் தன்னிச்சையான எழுந்தமானக் கொள்கைத் திருப்பமானது மத்திய குழு அங்கத்தவர்களையும் ஏன் தேசந்தழுவிய முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களையும் வியாகூலப் படுத்தியது. ஏனெனில் முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே சிறீமாவோ பண்டாரனாயக்காவுக்கு வாக்களிக்கும்படி முடுக்கியிருந்தது.

இருந்தபோதும் ஒரு சிலர் துணிந்து முஸ்லிம்காங்கிரஸ்சின் தலைமைத்துவத்தை ஏன் இப்படியான திடீர் திருப்பம் என்ற கேள்வியைக் கேட்டனர். முஸ்லிம் சமூகத்தின் நன்மைமக்காகத் தலைவரின் உள்ளுணர்வு அப்படியான கொள்கைத் திருப்பத்தை எடுக்க வைத்ததாக முஸ்லிம் காங்கிரஸ்சின் முக்கியஸ்தர்கள் விடையிறுத்தனர். ஒரு சிலருக்கே இந்தத் திடீர் திருப்பத்திற்கான காரணம் தெரிந்திருந்தது. அனேகர் வியாகூலத்தில் பிரமித்துப்போய் இருக்க விடப்பட்டனர்.

அஸ்ரப்பும் சேகு இஸ்சாடீனும் சிறீமாவோ பண்டாரனாயக்காவோடு கலந்துரையாடிக் கொண்டிருக்கும் அதே வேளையில் யூஎன்பியின் ஜனாதிபதி வேட்பாளரான ரணசிங்கா பிரேமதாசாவோடும் இரகசியப் பேச்சுக்களை நடாத்தினர். ஜனாதிபதித் தேர்தலில் தாம் நடுவுநிலையாக இருக்கப்போவதாக முஸ்லிம் காங்கிரஸ் பிரகடனப் படுத்தியிருந்த போதும் இரகசியமாகப் பிரேமதாசாவின் வெற்றிக்காகப் பிரச்சாரம் செய்யும்படி செய்திகள் எல்லாப் பிராந்திய கிளைகளுக்கும் 1989 இல் தேர்தலிற் போட்டியிட இருந்தவர்களுக்கும் மத்தியகுழு அங்கத்தவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதும் தனதுகொள்கை மாற்றத்திற்கான இரகசியத்தை அஸ்ரப்பால் பாதுகாக்க முடியவில்லை. அவர் புத்திசாதுரியமற்று அந்த இரகசியத்தை பிரசித்தமாக வெளியிட்டு விட்டார். பிரேமதாசா அவருக்குத் தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு 'அஸ்ரப் நீங்கள் என்னை வெற்றியீட்டப் பண்ணியதற்காக நான் உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வேன்.உங்களுடைய ஒத்தாசை இல்லாதிருந்தால் நான் ஒருபொழுதும் ஜனாதிபதியாகி இருக்கமாட்டேன்." இதைக் கேள்வியுற்ற அந்தச்சந்தர்ப்பத்தில் கூடியிருந்தவர்கள் எல்லோரும் ஓர் இரட்சகரிடமிருந்து ஓரு மதபோதனையைச் செவிமடுத்த உணர்ச்சியோடு 'அல்லாஹ_அக்பர்"(அல்லாஹ்வே பெரியவன்) என்று கூச்சலிட்டனர். பின்பு அஸ்ரப் கூறினார்,

அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் 12 வீதம் என்ற வெட்டுவீதமில்லாமல் அதை 5 வீதமாக்கி விகிதாசாரத் தேர்தல் முறையின்கீழ் அதிகமுஸ்லிம்கள் பாரளுமன்றத்திற்குப் போவதற்கு ஒத்துக்கொண்டதாகக் கூறினார். இந்தப் படக்காட்சிகள் எல்லாம் இப்பொழுது பெருமளவுமாறிவிட்டபோதும் ஹக்கீம் போன்றவர்கள் தொடர்ந்து அஸ்ரப்பை ஒரு புனித மனிதனாகக்காட்டுகிறார்கள். அஸ்ரப்பின் கவிதைகள்கூட பொதுவான முஸ்லிம்களிடையே அபிப்பிராய பேதங்களை ஏற்படுத்தியுள்ளன. ஏனெனில் தனிமனித வழிபாடென்பது அடிப்படை இஸ்லாத்திற்கு எதிரானது. 1989 பெப்ரவரிப் பாராளுமன்றத் தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாட்டின் இரணடு பிரதான கட்சிகளுக்குமெதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இருந்த போதிலும் அஸ்ரப் யூ.என்.பி முஸ்லிங்களின் நலன்களுக்கு எதிரானகட்சியென்று கருதியதோடு ஜனாதிபதித் தேர்தலில் சிறீமாவோ பண்டாரனாயக்காவை கழுத்தறுத்த போதும் பொதுவாகவே அவருக்கு சிறிலங்க சுதந்திரக்கட்சிமேல் எப்பொழுதும் ஒரு சின்ன வாஞ்சை இருந்தது.

பாராளுமன்றத் தேர்தலிலே 'எந்த உண்மையான முஸ்லிமும் யானைச் சின்னத்திற்கு வாக்களிக்க மாட்டான் " என்று அஸ்ரப் பிரகடனப் படுத்தினார்.(இஸ்லாம் மதத்தின் பிரகாரம் உண்மையான முஸ்லிம் என்பது அல்லாஹ்வுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதும் தீர்க்கதரிசியின் வாழ்க்கை முறையப் பின்பற்றுவதுமாகும்.அவர்களை அரபு மொழியில் அல் மூமினுன் என்று அழைப்பார்கள். குரானிலுள்ள சூறாத் 49அல் ஹ_ஜூறாத் உண்மையான முஸ்லிங்களைப் பற்றி விஸ்தரிக்கிறது)

தற்போதய மாகாணசபைத் தேர்தலில் யார் யூ.என்.பியின் சின்னமான யானைக்கு வாக்களிக்கவில்லையோஅவர்கள் உண்மையான முஸ்லீம்கள் அல்ல என்று ஹக்கீம் கூறக் கூடும். அவரது அண்மைக்கால (உம்றா)சின்ன யாத்திரையும் அதைத்தொடர்ந்த பாரளுமன்றப் பதவியை இராஜினாமாச் செய்ததும் அவரையோர் பாராளுமன்றப் பதவியைக்கூடத் தியாகம் செய்த தலைவர் என்று காட்டுவதோடு அவரை ஒரு மத நம்பிக்கையுள்ள அர்ப்பணிப்போடு கூடிய முஸ்லீம் என்று காட்டுவதற்காகவுமாகும். இந்த மதக் கடமைகள் எல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களின் கட்சி வியாபாரம் ஆகும். அதனூடே அவர்கள் சொந்தப் பிரதேச முஸ்லிங்களை மாத்திரமல்ல எத்தனையோ மைல்களுக்கு அப்பால் வசிக்கும் முஸ்லிங்களையும் இதனூடு நம்பவைக்கிறார்கள்.

முஸ்லிம்காங்கிரசின் ஒவ்வொரு நகர்வுகளையும் மதக் கிளைக் கதைகளோடு தொடர்பு படுத்தி அவர்களைப் புனிதர்களாக்குவதற்கும் சில முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இதை எழுதுபவர் ஓரு குறிப்புரையை அவதானித்தார். ஒரு பலமான முஸ்லிம்காங்கிரஸ் அங்கத்தவர் ஹக்கீமின் உம்றா யாத்திரையையும் அவரது மாகாணசபைத் தோதலில் பங்குபற்றுதலையும் பற்றிக்கூறும்பொழுது 'சர்வ வல்மைபடைத்த இறைவனான அல்லாஹ் மதிப்புக்குரிய ரவ் ஹக்கீமையும் அவரது குழுவையும் வெற்றிக்கு ஆசீர்வதிப்பாராக என்று வாழ்த்தியதோடு அதை புனித தீர்க்கதரிசியான மோசஸ்சை (Moses ) அவர் எதிர்கொள்ளும் எல்லாச் சவால்களையும் எதிர்கொள்ளக் கூடிய பாதுகாப்புக்கும் போகும் வழிக்கும் வெற்றிக்குமாக ஆசீர்வதித்ததை ஒப்பிடுகிறார். இங்கே சவாலாகப் பிள்ளையான் PHAROAH ஆகவும் வடகிழக்கு மாகாண தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளையும் ஹக்கீமையும் ((Moses )மோசஸ்சாகவும் உவமிக்கிறார்.

ஜனாப் அஸ்ரப் அவர்களுக்கும் முன்னய ஜனாதிபதியான சந்திரிகா குமாரத்துங்காவுக்கும் இடையே நடைபெற்ற முரண்பாட்டை அடுத்து அஸ்ரப் அவர்கள் மெக்காவுக்குப் பறந்து உம்ரா தொழுகை செய்துவிட்டு அங்கிருந்து ஒரு நீண்ட கடிதமொன்றை எழுதி சிங்கள முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவரான அசிதா பெரேராவுக்குத் தொலைநகல் செய்து தனக்காக ஜனாதிபதியிடம் சொல்லச் சொன்னார். முஸ்லிம் காங்கிரஸ்சின் முதிர்ந்த அங்கத்தவர்கள் அஸரப் சந்திரிக்காவுக்கு எழுதிய கடிதம் ஒர் இலக்கியப் பெறுமதி வாய்ந்ததென்றுகூறினார்கள். அவர் மேலும் கூறுகையில் மற்றைய உச்சியிலுள்ள எல்லா முஸ்லிம்காங்கிரஸ் தலைவர்களைவிட அசிதா பெரேராவே தகுதிவாய்ந்தவர் என்றும் 2000ஆண்டு கல்முனையில் நடந்த ஒரு தேர்தற் பிரச்சாரக் கூட்டத்தில் அசிதா பெரேராவே மிகவும் நம்பகம் வாய்ந்தவர் என்றும் கூறினார். அசிதா பெரேரா சானக அமரத்துங்காவின் லிபரல் கட்சியிலிருந்து முஸ்லிம்
காங்கிரஸ்சில் சேர்ந்தவராகும். இருந்தபோதும் அசிதா முஸ்லிம்காங்கிரஸ்சைப் பலப்படுத்துமுகமாக தனது பாராளுமன்றப்பதவியை ;இராஜினாமாச் செய்தார். அவரது கடைசிப்பாராளுமன்றப் பேச்சு அவரது தாராளவாத உள்ளத்தைப் பிரதிபலிக்கும். 'நான் கட்சி பலமடைய வழிதிறந்து விடுவதற்காகவே இராஜினாமாச் செய்கிறேன்" அவர் முக்கியமான சமுதாயச் சேவைகளான சுகாதாரம,; போக்குவரத்து மற்றும் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காகவும் மக்கள் முன்னணிஅரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒருபொது உடன்பாட்டுக்கு வரவேண்டும் என்று நிர்ப்பந்தித்தவராகும்.

இதை எழுதுபவர் 1989 இல் மட்டக்களப்பில் ஒரு வயதான சூஃபி மனிதனோடுஇலாவகமாகக் கலந்துரையாடும்பொழுது அவர் மிகச் சந்தோஷமாக மரச் சின்னத்தைத்தேர்ந்தெடுத்ததையும் குர்ரானில் 'சிட்ரத் அல் முந்தஹர்" மரத்தைப் பற்றி விவரிக்கப்பட்டிருப்பதையும் ஒப்பிட்டுக் கூறினார்;. முஸ்லிம் காங்கிரஸ்சின் சகதி அரசியல் எவ்வாறு மரச்சின்னத்தைப் புனிதமாக மாற்றியிருக்கிறதென்றதைக் கேட்டு இக்கட்டுரையாளர் அதிர்ச்சியடைந்தார்.வடகிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்விளைவுகள்:-இருபது வருடங்களுக்கு முன்னர், அப்பொழுது ரவூப் ஹக்கீம் ஒரு முஸ்லிம் காங்கிரஸ்அங்கத்தவராகக்கூட இல்லாத நாட்களில் முஸ்லிம் காங்கிரஸ்சின் அங்குரார்ப்பண அங்கத்தவர்கள் உயிராபத்தை விலைக்குவாங்கி வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பங்குகொண்டு போட்டியிட்டனர்.

பிரேமதாசாவுக்கும் புலிக்குமிடையே நடந்துகொண்டிருந்த தேன்நிலவைப் பேணுமுகமாக முஸ்லிம்கள் புலியின் கருணையில் மாத்திரம் தப்பிப் பிழைக்கவிடப் பட்டிருந்தனர். புலி வாழைச்சேனை, மூதூர், தோப்பூர் முஸ்லிங்களைக் கொன்று குவித்தகாலமான ரணில் பிரதமராக இருந்த நாட்களில், ரணில் தனது சமாதான ஒப்பந்தத்தைப்பாதுகாக்க மாத்திரம் கவலைப் பட்டாரே ஒழிய முஸ்லிம்களதும் மற்றவர்களதும் உயிர்போவதையல்ல. ஜனவரி 30, 1990இல் முஸ்லிம் காங்கிரஸ்சின் 70அங்கத்தவர்கள் புலிகளால்கடத்தப்பட்டனர். பிரேமதாசா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் புலியோடு கதைத்து அவர்களில்50 முஸ்லிம்களை விடுதலையாக்கினர். அந்த அவல நாளில் கல்முனை பொலிஸ் பாசறைபுலிகளால் சுற்றிவளைக்கப் பட்டதைத் தொடர்ந்து வடகிழக்கு மாகாணசபை அங்கத்தவர் மொகமட் யூனுஸ் லெப்பே முகமட் மன்சூர்(முஸ்லிம் காங்கிரஸ்) கொல்லப்பட்டனர். ஜனாப் வை.எல் எம்.மன்சூர் புலியால் அவரது வீட்டில் சுடப்பட்டு இரத்தம் பெருகவிடப்பட்டார்.அவரைப் புலிகள் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். அதையடுத்து அவரது உடலம் புலிகளால் பிடுங்கிச் செல்லப் பட்டு எவர்க்கும் தெரியாத ஓரிடத்திற்குக் கொண்டுசெல்லப் பட்டது. அந்தத் தலைவிதி தத்தளித்த நாளில் புலி வேறு 5 நோயாளிகளை ஒரு தனியார் மருத்துவ மனையில் சுட்டுக் கொன்றதோடு மேலும் 10பேரையும் ஒருடாக்டரையும் கடத்திச் சென்றனர். இவர்களுள் முன்பு புலியின் அட்டூழியத்திற்கு எதிராகஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அடங்குவர். புலி முஸ்லிம் காங்கிரசைத் தடைசெய்தது. அதையடுத்து முஸ்லிம் காங்கிரஸ் தானைத் தளபதிகள் பாதுகாப்பின் நிமித்தம் கிழக்கைவிட்டுதெற்கிற்குக் குடிபெயர்ந்து அங்கு தமது இரணடாம் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர்.பாசறைகளை மாற்றுவது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்சின் நிகழ்வுப் போக்கு:- (வடகிழக்குமாகாணசபையிலிருந்து கீழ்மாகாணசபைக்கு)
சில சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட கிழக்கு மாகாணசபை அங்கத்தவர்கள் இப்பொழுதும்உற்சாகமாக அரசியல் செய்கின்றனர். துர்அதிஷ்ட வசமாக 1989இல் உயிராபத்தை விலைக்குவாங்கி அங்கு மாகாணசபையிற் போட்டியிட்டவர்களும் பாராளுமன்றத் தேர்தலிற் போட்டியிட்டவர்களும் இன்று எதிர்க்கட்சிக்குத் தாவி விட்டனர். இவர்களுள் சிறீலங்காமுஸ்லிம் காங்கிரஸ்சின் முதலாவது கட்சித்தலைவரும் முக்கியமான அங்கத்தவருமான சேகு இஸ்சாடீன். அவர் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விட்டோடீ தனது சொந்தக்கட்சியைத் ஸ்தாபித்து பின் பாராளுமன்ற அங்கத்துவப் பதவி பெறும் முகமாக யூ.என்.பி.யிற் சேர்ந்தார். பிறகு அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திற் சேர்ந்து துணை மந்திரியானார்.அவர் முதலாவது வடகிழக்கு மாகாணசபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றவர். வடகிழக்கு மாகாணசபை அங்கத்தவரும் முஸ்லிம் காங்கிரஸின் தற்போதய செயலாளரான ஹசான்அலி இப்பொழுது கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். மறைந்த முகிடீன் அப்துல் காதர் அவர்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடகிழக்கு மாகாணசபை அங்கத்தவர்.பின் யூஎன்பிக்கு மாறி மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் சேர்ந்து பாரளுமன்ற அங்கத்தவரானார். முஸ்லீம் காங்கிரஸில் உட்சதி நடந்த நாட்களில் அவர் அத்தாஉல்லாவோடு சேர்ந்து கொண்டார். பின்பு ஹக்கீமோடு சேர்ந்து 2001 இல் மரணமானார். எஸ்.நியாமுடீன் ;1992 இல் அவுஸ்திரேலியாவுக்குப் போய் மீண்டும் சிறிலங்காவுக்கு வந்து அரசியலில் ஈடுபட்டு இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக இருக்கிறார். அவர் யூஎன்பிக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் தேர்வுப் பட்டியல் மூலம் பாராளுமன்ற அங்கத்தவர் ஆகினார். ஒரு வடகிழக்கு மாகாணசபை அங்கத்தவரும் ஒருமுஸ்லீம் காங்கிரஸ் மாகாணசபை அங்கத்தவரும் கொடுமையாக ஆயுதந்தாங்கிய தமிழ்போராட்டக் குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மாகாணசபை அங்கத்தவரான எம் .வை .எம் மன்சூர் அவர்களும் வடகிழக்கு மகாணசபை அங்கத்தவரும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதியுமான அலி உத்துமான் அவர்களும் முறையே புலியாலும் ஈஎன் டி எல் எப் பாலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


(எஸ்.எம்.எம்.பஷீர் ஆங்கிலத்தில் எழுதிய இக்கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்தவர் : திரு. அழகலிங்கம்    
•கட்டுரைகள்
http://vizhippu.net/| vizhippu@gmail.com 6 May, 2008 - 01:46 — editor

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...