Thursday, 1 December 2011

“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா!” தொடர்: பத்துஎஸ்.எம்.எம்.பஷீர் 

அரசியல் தலைமைகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும்போது மக்கள் துணிவுடன் வெளிக்கெழும்பி விட்டால் அரசியல்வாதிகள் பயந்து விடுவார்கள். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கக் கூடாது. ஆனால், அரசியலுக்கு வந்து விட்டால் மக்களின் அதிகாரத்தைப் பெற்றுவிட்டால் அந்த அதிகார முள்ளவரின் பலவீனத்தை விமர்சித்தேயாக வேண்டும். அவரின் பலவீனம் சமூகத்தைப் பாதிக்கும்”  .
                        
சட்டத்தரணி நிசாம் காரியப்பர்     ( -பிரதி மேயர் -.கல்முனை நகர சபை  )       

ஹிஸ்புல்லா வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் ஒரு தேர்தல் ஒப்பந்தம் இருந்ததென்பதை பகிரங்கமாக பின்வருமாறு ஏற்றுக் கொண்டிருந்தார்.  
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட நான் உட்பட எல்லா ஸ்ரீ..மு காங்கிரஸ் உறுப்பினர்களும் ஒரு தேர்தல் ஒப்பந்தத்தின்படி  நடந்து கொள்ள இணங்கினோம். அதாவது அதிகப்படியான விருப்பு வாக்குகளை பெறும் முதல் மூன்று வேட்பாளர்களுக்கும் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய மூன்று பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக மாறி, மாறி பிரதிநிதிகளாக இருக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தின்படி ஓர் உறுப்பினர் இரண்டு ஆண்டுகளுக்கு பா.உ ஆக இருப்பார்.”

   
அதாவது ஏப்ரல் மாதம் 1991ஆம் ஆண்டு ஹிஸ்புல்லா ஒரு முழுப் பூசனிக்கையை சோற்றில் மறைப்பது போல்  அப்படி ஒரு ஒப்பந்தமே இல்லையென்று ஒரு நீதிமன்ற வழக்கில் சமர்ப்பித்த மனுவில் (“The petitioner denying the existence of any electoral undertaking or understanding and refusing to resign his seat” )கையொப்பமிட்டு கூறியதை (ஒரு வேளை சத்தியக் கடதாசி கூட அந்த மனுவுடன் சேர்த்து சமர்ப்பித்திருக்கலாம்) பின்னர் அவரே தனது பத்திரிகை அறிக்கையில் , அவ்வாறான தேர்தல் ஒப்பந்தம் இருந்தது என்று கூறி தன்னைத்தானே ஒரு பொய்யனாக பிரகடனப்படுத்திக் கொண்டார்.
மறுபுறம் அவ்வாறான ஒப்பந்தம் ஒன்று இல்லை என்று வழக்கிலே அவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக் கெதிராக , அதன் தலைவர் செயலாளர் , தவிசாளர் ஆகியோருக் கெதிராக கொண்டு வந்த வழக்கில் அறுதியிட்டு கூறியிருந்தார் . அத்தகைய தேர்தல் ஒப்பந்தம் சட்டப்படி செல்லாது என்பது ஒரு புறமிருக்க அந்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லாஹ் செய்யவில்லை என்று அவரின் மனுவில் கூறுவது பொய் என்று முஸ்லிம் காங்கிரஸ் தங்களின் பதிலில் அந்த ஒப்பந்தத்தை தாக்கல் செய்யவில்லை. 
முஸ்லிம் காங்கிரசின் அன்றைய தவிசாளர் சேகு இஸ்சதீனும் ( ஹிஸ்புல்லாவின் வழக்கில் கூட அவர் பிரதிவாதியாக காட்டப்பட்டிருந்தார் ) கட்சியின் அன்றைய உதவிப் பொதுச் செயலாளருமான அபுல் கலாம் பீரோவில் பாதுகாப்பாக பூட்டி வைத்த அந்த கணவான் ஒப்பந்தத்தினை ஏன் நீதிமன்றில் பதில் மனுத் தாக்குதலுக்கு சமர்ப்பித்து ஹிஸ்புல்லா பொய் சொல்லுகிறார் என்பதை நிருபிக்கவில்லை. அவ்வாறு  செய்யாததன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் ஹிஸ்புலாவுக்கு எதிராக தேர்தல் ஒப்பந்தம் பற்றி பொய் சொல்கிறது என்ற ஹிஸ்புல்லாவின் கூற்றை முஸ்லிம் காங்கிரஸ் ஆதாரத்துடன் நிரூபித்து தம்மை அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க தவறியதன் காரணம் என்ன ? அதற்கான கேள்வி இன்றுவரை பதிலுக்காக காத்திருக்கிறது.
அந்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கூட அந்த ஒப்பந்தத்தை ( அது சட்டப்படி வலுவற்றது என்றாலும் கட்சியின் மீதான குற்றச்சாட்டினை மறுக்க ) நீதிமன்றின் முன்வைக்கவில்லை. மொத்தத்தில் அந்த ஒப்பந்தம் உண்மையான நோக்கத்துடன் செய்யப்பட்டதா என்ற கேள்வியையும் , அவ்வாறு உண்மையாக நோக்கத்துடன் செய்யப்பட்டிருந்தால் அந்த எழுத்து மூலமான ஒப்பந்தத்திற்கு என்ன நடந்தது. அந்த ஒப்பந்தத்தை  பீரோவில் வைத்துப் பூட்டி , அந்த  பீரோவின் திறப்பினை கைவசம் வைத்திருந்த அபுல் கலாம் , சேகு இஸ்ஸதீன் அது பற்றி ஏன் வாய் திறக்கவில்லை. ஒருவேளை அந்த ஒப்பந்தத்தை (சட்ட வலு இல்லாதுவிடினும்) கைவிட பிரேமதாசா கொடுத்த அழுத்தம் கட்சியின் நிர்வாக முடிவுகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை ஹிஸ்புல்லா தொடர்பான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடுகள் நிரூபித்தன.  
ஹிஸ்புல்லாஹ் மீண்டும் முஸ்லிம் காங்கிரசுக்கு திரும்பிவிட்டார் , அதுவும் ஒரு பத்திரிகை அறிக்கையின் பின்னர் அவரை முஸ்லிம் காங்கிரஸ் அனைத்துக் கொண்டபோது. ஏறாவூர் முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவிலிருந்து பலர் ஏற்கனவே ஹிஸ்புல்லாஹ் ஆதரவாளர்களாக  (குறிப்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ருபி முஹிதீன் உட்பட )   மாறியிருந்ததால் , முன்னரே குறிப்பிட்டதுபோல் மீண்டும் ஏறாவூர் முதலாம் குறிச்சி பிரதேசத்தை பிரதிநிதிப்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதை , அந்த அடிப்படையில் தமது பகுதி வேட்பாளரை ( அப்துல் லத்தீபை  ) இப்போது இடையிலுள்ள இருவரும் இல்லாதபோது நியமிக்க கோரி , ஒருபுறம் ஏறாவூர் சுழற்சிக்கான எம்.பீயை பெறலாம் மறுபுறம் தமது குறிச்சி பிரதிநிதி எம்.பீ யாகும் அபிலாசைகளையும் அடைந்து விடலாம் என்று  வ்வாறான மறைமுக நிகழ்சி நிரலை முன்னெடுத்த மறைந்த இஸ்மா லெப்பை சார்பு அணி முயற்சித்தது. அந்த வகையில் ஏறாவூர் பிரதேசத்திலிருந்தும் ஒரு வேண்டுகோள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு விடுக்கப்பட்டது அந்த வேண்டுகோள் பிரசுரமாகவும் அக்கட்சியின் ஏறாவூர் மத்திய குழுவைச் சேர்ந்த இஸ்மா லெப்பை  என்பவரால் "தலையணையை மாற்றினால் தலையிடி தீர்ந்துவிடுமா" என்ற தலைப்புடன்   அன்று பிரசுரிக்கப்பட்டது. அதில் "ஹிஸ்புல்லாஹ்   அவர்கள் தமது பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்வதுதான் குற்றத்திற்கு பரிகாரமே ஒழிய பத்திரிகை அறிக்கைகள் மூலம் மன்னிப்பை கேட்டு விட்டு மீண்டும்   பாராளுமன்றத்திற்குள் போவது முஸ்லிம் காங்கிரசை குழிதோண்டி புதைப்பதற்கு பகீரதப் பிரயத்தனம் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்றே விளங்க முடிகிறது. ஜனாப் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தமது பதவியை ராஜினாமா செய்யும் போது தேர்தல் சட்டப்படி முறையே விருப்பு வாக்குகளை பெற்றவர்களுக்கு , அதுவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்தவர்களுக்கே பாராளுமன்ற உறுப்பினர் பதவி போய் சேர்ந்துவிடும். .இதில் பிழை ஏதும் இருப்பதாகத தெரியவில்லை .தற்சமயம் அரசியல் முதிர்ச்சியடைந்தவரை போலவும் ஏற்கனவே அரசியல் முதிர்ச்சி இல்லாமைதான் விட்ட பிழைக்கு காரணம் என்றும் ஜனாப் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் பத்திரிக்கை அறிக்கை தெளிவு படுத்துகிறது அப்படியானால் இப்போது அரசியலிலிருந்தே முதிர்ச்சியடைந்திருந்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியின் உயர்ச்சிக்காக உழைக்கலாமே இந்த நல்ல காரியத்தை செய்வாரா ?என்று அத்துண்டு பிரசுரம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த வேண்டுகோளும் கேள்வியும் ஒரு குறிப்பிட்ட பிரதேச வேட்பாளரை நியமிப்பதை மறைமுக நிரலாக கொண்டிருப்பினும் , ஒரு நியாயமான கோரிக்கையுமாகும் . ஏனெனில் இரண்டாவது வேட்பாளர் (மொஹிதீன் ) கட்சி மாறிவிட்டார். மூன்றாவது வேட்பாளர் நாட்டை விட்டு சென்றுவிட்டார். அவர் கட்சி தலைவர் அஸ்ரபிடம் , அவர் நாட்டை விட்டு செல்வதற்கு தீர்மானித்த வேளையிலே , தனது திட்டத்தை அறிவித்த பொது அவர் அதற்கு மேலோட்டமாக "நீங்கள் உங்கள் முறை வரும்போது வருவீர்களா"? என்று கேட்டு வைத்தார். அதற்கு அவர் "நீங்கள் அழைத்தால் வருவேன் என்றுதான்" சொல்லியிருந்தார். ஆனால் அவரை யாரும் அழைக்கவில்லை.  அதை விட்டு விடுவோம் , ஆனால் அவர்கள் ஏறாவூரின் பிரதிநியாக (நிஜ வேட்பாளர் , ஏனைய வேட்பாளர்கள் யாரும் நிஜ மனிதர்கள் அல்ல என்பதை நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன் ) நான்காவது இடத்தில் இருந்த லத்தீபை நியமித்து கட்சியின் வாக்குறுதியை எதோ ஒரு விதத்திலும் , ஹிஸ்புல்லாவை மீண்டும் ஒரு விஷப் பரிசோதனைக்கு உட்படுத்தி சோதித்திருக்கலாம். அதனை செய்ய முஸ்லிம் காங்கிரஸ் முன் வரவில்லை என்பதும் பிரேமதாசாவின் முஸ்லிம் காங்கிரஸ் மீதான ஆதிக்கத்தை ஹிஸ்புல்லா பிரேமதாசாவுடன் கொண்டிருந்த நெருக்கத்தை நிரூபணம் செய்தது..
முஸ்லிம் முன்னணி என்ற பத்திரிகை ( 1/8/1991 ) " கதை இத்தோடு முடியாது ஹிஸ்புல்லாஹ்வோடு , அதாவது அஸ்ரப் ......... 1991 மே  மாத  உள்ளூராட்சித் தேர்தல் மேடைகளிலும் 1991 ஆகஸ்ட் பத்தாவது மகாநாட்டிலும் நாடறியப் பிரகடனப்படுத்திய அபூஜஹிலோடு அஸ்ரப் ஹாஜியார் உறவுக்கு வருவார். . இந்த உறவு மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் செல்வாக்கை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காகத்தான் செய்யப்படுக்கியறதே ஒழிய  அஸ்ரப்  ஹிஸ்புல்லா மீது கொண்ட காதலால் அல்ல ." 
என்று குறிப்பட்ட அந்த பத்திரிகை செய்தியின் பின்னரே  ஹிஸ்புலாஹ் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டார் அல்லது இணைக்கப்பட்டார். இந்த பத்திரிகை மேலும் இன்னுமொரு உண்மையை சுட்டிக்காட்டியிருந்தது  " மட்டக்களப்பு மாவட்டத்தில் அடுத்த தேர்தலில் ஹிஸ்புல்லாஹ்வும் முஸ்லிம் காங்கிரசோடு இருந்தால் தான் அஸ்ரபுக்கும் பெரியவருக்கும் இடையிலான இரகசியப் பேச்சின்படி குறைந்தபட்சம் ஒரு லட்சம் வாக்குகளை பெற முடியுமென்பது ......" என்று எழுதியிருந்தது. இப்பத்திரிக்கையில் குறிப்பிட்ட பெரியவர் பிரேமதாசாவாகும்.  பிரேமதாசாவுடன் நிலவிய உறவின் காரணமாக ஐக்கிய தேசிய கட்சியின் கிழக்கு ஜாம்பவான்களை ஐக்கிய தேசிய கட்சிக்குள் செல்வாக்கிழக்கச் செய்யும்-தமது அரசியல் எதிரிகளை அக்கட்சியின் தலைவனை கொண்டே அடக்கி வைப்பது , அவர்களை தமது தேர்தல் போட்டியிலிருந்து நீக்கி விடுவது  போன்ற அரசியல் ஒப்பந்தங்களை மிக இலகுவாக முஸ்லிம் காங்கிரஸ் பிரேமதாசா மூலமாக செய்திருந்தது. மொத்தத்தில் இரு பகுதியினரும் வெளிப்படையான அரசியல் இணைப்பு கொண்டிராவிடினும் அந்தரங்கத்தில் மிக நெருக்கமான நட்பினை பேணி வந்தனர். 

அதனால் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு கட்சிக் கூட்டணி போல் சகல உதவிகளையும் பெற்றனர். அதனால் தான் பிரேமதாசாவுக் கெதிராக அவரின் கட்சிக்குள் எழுந்த அழுத்தமான எதிர்ப்பு பிரேமதாசாவை பயங்கொள்ள வைத்திருந்து . மேட்டுக்குடி கொவிகம சிங்கள ஆங்கில மேல்நாட்டு கல்விகற்ற அறிவு மிகுந்த ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற ஜாம்பவான்களின் எதிர்ப்புக்களை சமாளிக்க வேண்டிய நிலைக்கு பிரேமதாசா தள்ளப்பட்டார்.  செப்டெம்பர் மாதம்   1991 ஆண்டு லலித் அதுலத் முதலி பிரேமதாசாவை வீழ்த்த கொண்டு வந்த நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வியை தழுவியது . பிரேமதாசா கவிழ்க்கப் படல்  வேண்டும் என மேற்குலக நாடுகள் , இந்தியா உட்பட விரும்பிய போது உள்நாட்டில் ஜே வீ.பீ , புலிகள்   இடதுசாரி அமைப்புக்களும் விரும்பின. அப்போதான் நம்பிக்கை இல்லா பிரேரணையை எதிர்த்து  அஸ்ரப் தனது உதவியை மீண்டும் அவருக்கு வழங்கி பிரேமதாசாவுக்கு நெருக்கமானார். ஆனால் பிரேமதாசா சில விடயங்களில் எச்சரிக்கையாகவே செயற்பட்டார்.

 எங்கேயோ கேட்ட கதையாய்..

ஆனால் அன்று ஹிஸ்புல்லா ஒப்பந்த மீறுகை செய்தவுடன் அவருக்கு எதிராக கட்சி இடை நிறுத்தம் செய்த    போது கட்சிக் கெதிராக ஹிஸ்புல்லாஹ் வழக்கு தொடுக்க , அந்த வழக்கு தவணைகளை வாடிக்கையாக சென்று தேதி கேட்டு அலைந்த அனுவபம் நிசாம் காரியப்பருக்கு உண்டு. என்றாலும் அன்று போட்டியிட்டவர்கள் அஸ்ரபின் தலைமைத்துவத்தை உடனடியாக கேள்விகுட்படுத்தவில்லை என்பதும் அஸ்ரப் மீண்டும் தனது தவறை நிவர்த்திக்க பின்னர்   2000ஆம் ஆண்டு தேர்தலில் முஹிதீன் அப்துல் காதர் தமது கட்சியில் இணைந்து  போட்டியிட்டு வெற்றிபெற விரும்பினார். மொஹிதீனும் அதுவே தான் மீண்டும் எம்.பீ யாக ஒரே வழி என்ற முடிவுக்கும் வந்தார் . அதன்படி நு ஆ மூலம் மட்டக்களப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம் பீ யாகி பிரதி அமைச்சராக கூட பதவி வகித்தார். ஆனால் அன்மையில் நடந்த கல்முனை நகராட்சி தேர்தலில் யாருக்கு மேயர் பதவி என்ற சர்ச்சையில் , திட்டமிட்டு கட்சியின் தலைவரும் அவரின் தனிப்பட்ட அரசியல் ஆலோசகரும் கட்சியின் தவிசாளருமான பசீரும் சேர்ந்து தங்களின் தலைவருக்கு நிகரான அல்லது மிகைத்த அரசியல் ஆளுமையும் திறனும் நிறைந்த மும் மொழி திறன் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள்  தலைவரின் உறவினரான நிசாம் காரியப்பரை ஓரங்கட்ட சகல முயற்சிகளையும் கடந்த காலங்களில் செய்து வந்துள்ளனர். காரியப்பரும் அஸ்ரப் மரணித்த பின்னர் அஸ்ரபின் மனைவியரின் பக்கம் சென்றதும் இவர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது.      
இந்த பின்னணியில் நிசாம் காரியப்பர் மேயர் இழுபறி பற்றிய வாக்குறுதி பற்றி ஒரு பத்திரிக்கையாளர் "  இரண்டு வருடங்களுக்குப் பின்னர் உங்களுக்கு மேயர் பதவி தரப்படும் என்ற வாக்குறுதியை நீங்கள் நம்புகிறீர்களா?" என்று கேட்டபொழுது , நிசாம் சொன்ன பதிலே ஆயிரம் கதை சொல்கிறது என்பதுடன் தலைமைத்துவத்தை அவர் சாடிய விதமும் சான்றாக அமைகிறது.

நிஸாம்: இரவு எடுத்த முடிவை அடுத்த நாள் காலையில் நடைமுறைப்படுத்துவதற்கு திராணியற்ற தலைமைத்துவம் இரண்டு வருடங்கள் கழித்து இதனை நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கை என்னிடம் இல்லை.

2
வருடம் என்பது நீண்டதொரு காலப்பகுதியாகும். அந்தவகையில் 2 வருடங்களின் பின்னர் நடைபெறும் ஒரு  நிகழ்வு பற்றி இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியாது.
தொடரும்.


No comments:

Post a Comment

Wheeler Dealer Muslim Politicians and Helpless and Voiceless Muslim Community By Latheef Farook

The island’s Muslim community continues to suffer from political and religious leadership crisis .Unless the civil society come forward ...