Saturday, 19 November 2011

“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா!” - தொடர்: ஒன்பது

எஸ்.எம்.எம்.பஷீர் 

நீ எப்பொழுது பெரும்பான்மையோரின் பக்கம் இருப்பதாக காண்கிறாயோ, அதுவே நீ செயல் நிறுத்தி சிந்திக்க வேண்டிய நேரமாகும்.” - மார்க் டுவைன்     


( “Whenever you find that you are on the side of the majority, it is time to pause and reflect.” - Mark Twain, -Notebook 1904)

முற் குறிப்பு: -  இக்கட்டுரை தொடரை எழுதத் தொடங்கிய பின்னர் என்னை தொலைபேசி மூலமும், ஈமெயில் மூலமும் இலங்கை மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து தொடர்பு கொண்ட சிலர் , தொடர்ந்து தரும் ஆதரவு அபரிதமானது. அதேவேளை பலர் இத்தொடரை     (இது கதையல்ல நிகழ்வுகள் என்பதால் Facts not Fiction )  தொடர்ந்து அந்த எதிர்பார்ப்புடன் எழுதத் தூண்டுவதும் இக்கட்டுரையை சற்று விரிவாக எழுத என்னை ஊக்குவித்தன. அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் . நான் பூடகமாக சொல்லி வாசகர்களின் ஊகங்களுக்கு விட்ட சில சங்கதிகளை சற்று விரிவாக எழுத என்னை அன்புடன் வேண்டிக் கொண்டதால் , அவை பற்றியும் சிலவேளை எழுதியதை மீண்டும் எழுதி உங்களின் பொறுமையை சோதிக்காமலிருக்கவும் முடியவில்லை. எனது கட்டுரைகள் ஆங்கில தட்டச்சு மூலம் தமிழில் எழுதப்படுவதால் ஏற்படும் எழுத்துப் பிழைகளையும் , நீண்ட சொற்றொடர்கள் , சிலவேளை உடன் கிரகிப்புக்கு தடையாகவுள்ள வாக்கிய அமைப்புக்கள் என்பவற்றை எனது கவனத்துக் கொண்டு வந்த வாசகர்களுக்கு நன்றிகள். முடிந்தளவு உங்களின் அவதானிப்புக்களை வேண்டுகோள்களை கருத்திற் கொண்டு இனிவரும் தொடர்களை எழுத முயற்சிக்கிறேன் - நன்றி      


 தனிப்பட்ட  வகையில் ஒரு பத்திரிக்கை அறிக்கையினை பொது சனத்தை திருப்திப் படுத்தும் வகையில் வெளிப்படுத்த முன்னர் முஸ்லிம் காங்கிரசின் அரசியல் குழு ஒரு விசாரணையை நடத்தியது. அதற்கு முன்பாக முஸ்லிம் காங்கிரஸ் ஹிஸ்புல்லாஹ் என்ன செய்தார் , எவ்வாறு கட்சிக்குள் மீண்டும் நுழைய தனது வியூகத்தை வகுத்தார் என்பது பற்றி ஆகஸ்து 1992ல் வெளியான முஸ்லிம் முன்னணி பத்திரிக்கை பின்வருமாறு எழுதியிருந்தது.  
இன்று அந்த ஓட்டமாவடி வாழைச்சேனை முஸ்லிம்களிடமிருந்து  ஹிஸ்புல்லாஹ் தான் தொடர்ந்தும் எம் பீயாக இருக்க வேண்டும் என சகல பள்ளிவாசல்கள் , இயக்கங்கள் ,, சங்கங்களிடமுமிருந்தும் சிபார்சுக் கடிதம் பெறுவதன் நோக்கம் என்ன?
இவ்வாறான கடிதங்களைப் பெற ஏறாவூரிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதென்ன?ஓட்டமாவடி , வாழைச்சேனை ஏறாவூர் முஸ்லிம் பள்ளிவாசல்கள் இயக்கங்கள்  சங்கங்கள் , கழகங்கள் எல்லாம் இனி சிபார்சுக் கடிதம் கொடுப்பதற்கு எந்தத் தடையுமில்லை . காந்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பிறந்த இடமாதலால் சிபார்சுக் கடதங்கள் பெறுவதில் எந்த தடையுமில்லை"
என்று எழுதி இருந்தது , உண்மையில் அன்று ஹிஸ்புல்லா ஏனைய பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிகளை தமது கைக்குள் வைத்துக் கொள்வதில் , அவர்கள தத்தமது ஊர் பிரதிநிகள் சுழற்சி முறையில் வருவதை விட அல்லது அதற்காக கோரிக்கை விடுவதை விட ஹிஸ்புலாஹ்விடம் தாங்கள் பெற்ற சலுகைகள் உதவிகள் காரணமாக , மேலும் எதிர்காலத்தில் பெறப்போகும் அத்தகைய வாய்ப்புக்கள் காரணமாக அவரையே தொடர்ந்தும் எம்.பீ யாக இருக்க வேண்டும் என்றும் , அதுபோல ஏறாவூர் காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக வேலை செய்தோரை ஏனைய கட்சிக்காரர்களையும் ஹிஸ்புல்லாஹ் தனது கைக்குள் போட்டுக் கொண்டாமை பலதரப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மூலமும் இரண்டு ஊர்களிலும் செய்த அபிவிருத்திகள் வேலை வாய்ப்புக்கள் என கட்டமைத்த ஆதரவுத் தளம் இப்போது அவருக்கு பயனளித்தது.   மேலும் அப்பத்திரிக்கை (முஸ்லிம் முன்னணி) ஹிஸ்புல்லாவுக்கு கனிந்திருந்த சூழ்நிலையை பின்வருமாறு கோடிட்டு காட்டியிருந்தது.      

    
இப்படி முஸ்லிம் காங்கிரசின் ஏறாவூர் தலைவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இடத்துக்கு மறுமொழி இல்லாமல் சென்ற பின்னர் அதையே நல்ல தருணமாக பயன்படுத்தி ஏறாவூர் மக்களிடமும் சிபார்சுக் கடிதங்கள் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளதாக செய்திகள் கிடைக்கின்றன..   "முகிதீன் அப்துல் காதரும் பஷீரும் இல்லாத நிலையைப் பாவித்துக் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து இவரே எம்.பீ யாக இருக்க வேண்டுமெனக்கோரும் சிபார்சுக் கடிதங்களை  முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு அனுப்ப வேண்டுமென்பது ஏற்பாடாகும்."      அவரின் சகாக்களின் (முஸ்லிம் காங்கிரசுக்குள்ளும் இருந்தவர்கள் உட்பட )   ஆலோசனையுடன் ஒரு பகிரங்க பத்திரிகை அறிக்கை ஒன்றினை ஹிஸ்புல்லா வெளியிட்டார், "நீண்ட நேரம் அரசியல் குழு நடாத்திய விசாரணையின் முடிவில் தலைவர் என்னை எச்சரிக்க வேண்டுமென்றும், நான் சொந்தமாக ஒரு விளக்கமளிக்க வேண்டுமென்றும் தீர்மானித்தது" என்பதையும் கோடிட்டு காட்டி தனது பத்திரிகை அறிக்கையினை ஹிஸ்புல்லாஹ் தினகரன் பத்திரிகையில் வெளியிட்டார்.ஹிஸ்புல்லா எம்.பி.யின் நிலைப்பாடு விளக்கம்.

மட்டக்களப்பு மாவட்ட எம் பி எம்.எல்.ஏம் ஹிஸ்புல்லாஹ் தனது நிலைப்பாடு குறித்து நீண்ட அறிக்கையான்றை விடுத்துள்ளார். அதன் முக்கிய பகுதிகள் இவை.

எம்.எல்.எம் ஹஸ்புல்லா அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷரப் அவர்கள் கட்சியிலிருந்து என்னை இடைநிறுத்தினார்.. அவ்வாறு செய்தமைக்கான சூழ்நிலைகளை விளக்க விரும்புகின்றேன்.

எமது கட்சித் தலைவரின் தீர்மானத்திற்கு மாறாக நான் 1991 மார்ச் மாதம் 20ந் திகதி அவசரகாலச்சட்ட விவாதத்த்தின்மீது உரையாற்ற முயற்சி செய்தேன். நான் உரையாற்ற முயற்சித்த பொழுது எமது தலைவர் குறிக்கிட்டு ஸ்ரீ..மு காங்கிரஸ் சார்பில் என்னைப் பேசுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று சபைக்கு அறிவித்தார். பாராளுமன்றத்தில் எனது நடத்தையைக் கவனித்த எமது தலைவர் எனது நடத்தை ஸ்ரீ..மு காங்கிரஸ் யாப்பின்கீழ் ஓர் உறுப்பினரின் கடமைகளை மீறுவதாக அமைந்திருந்தனால் கட்சி அங்கத்துவத்திலிருந்து என்னை இடை நிறுத்தம் செய்தார்.

என்னைக் கட்சியிலிருந்து விலக்கியிருக்கலாம். கடுமையாக நடப்பதை தவிர்த்துக் கொண்டார்.அதற்காக நான் அவருக்கு நன்றி செலுத்துகின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட நான் உட்பட எல்லா ஸ்ரீ..மு காங்கிரஸ் உறுப்பினர்களும் ஒரு தேர்தல் ஒப்பந்தத்தின்படி  நடந்து கொள்ள இணங்கினோம். அதாவது அதிகப்படியான விருப்பு வாக்குகளை பெறும் முதல் மூன்று வேட்பாளர்களுக்கும் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய மூன்று பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக மாறி, மாறி பிரதிநிதிகளாக இருக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தின்படி ஓர் உறுப்பினர் இரண்டு ஆண்டுகளுக்கு பா.உ ஆக இருப்பார்.

சில நபர்களின் தவறான வழிகாட்டல் காரணமாகவும், எனது முதிர்ச்சியின்மையாலும் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டேன்.

இன்று முதிர்ச்சியடைந்து விட்டேன் ஸ்ரீ..மு காங்கிரஸ் யாப்பிற்கும் ஒழுக்கநெறிக் கோவைக்கும் விரோதமான பல நடவடிக்கைகளை நான் மேற்கொள்ள நேர்ந்தது. நான் செய்வதறியாத நிலையிலும், விரக்தியடைந்த நிலையிலும் இருந்தபடியால் எனது நடவடிக்கைகள் எந்தளவு பாரதூரமானவை என்பதனை நான் புரிந்துகாள்ளவில்லை.

நான் 1991 ஆகஸ்ட் 22 ல் கெளரவ சபாநாயகருக்கு எழுதிய ஒரு கடிதம் பற்றியும் குறிப்பிட வேண்டும். இதில் அடங்கிய விடயங்கள் அனைத்தும் எமது தலைவருக்கு விரோதமானது. இக்கடிதத்தை அனுப்பியதற்காக வருந்துகிறேன். இதனை வாபஸ் பெறுகின்றேன்

எனது கட்சித் தலைவருக்கு எதிராக வழக்குத் தொடர எப்படித் துணிந்தேன் என்பதனை கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை.எனது தலைவரையும். அரசியல் குழுவையும் புண்படுத்தியதற்காக வருந்துகின்றேன்.

நான் ஓர் ஒழுங்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதுதான் எனது தவறை உணர்ந்தேன். உண்மையிலேயே எனது மனவருத்தத்தினை கட்சிக்கும், தலைவருக்கும் காட்டும் பொருட்டு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்திருந்த வழக்கை நான் நிபந்தனை இல்லாமல் வாபஸ் பெற்றேன்.

அதேவேளை எனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பதினொரு குற்றச்சாட்டுக்களையும் ஒப்புக்கொண்டு கருணை காட்டுவதற்குரிய சூழ்நிலைமைகளை எடுத்துக் கூறினேன். என்மீது கட்சி வைத்திருந்த நம்பிக்கைக்கு நான் மாறாக நடந்தாலும் கட்சி என்மீது வைத்திருந்த நம்பிக்கையை இழக்கவில்லை. நீண்ட நேரம் அரசியல் குழு நடாத்திய விசாரணையின் முடிவில் தலைவர் என்னை எச்சரிக்க வேண்டுமென்றும், நான் சொந்தமாக ஒரு விளக்கமளிக்க வேண்டுமென்றும் தீர்மானித்தது.

என்னை மன்னித்த்தற்காக எனது கட்சிக்கு நன்றி செலுத்துகிறேன். அரசியல் குழு உறுப்பினர்களுக்கும்,செயற்குழு உறுப்பினர்களுக்கும், ஸ்ரீ..மு காங்கிரஸின் பேராளர் அமைப்பிற்கும், ஆதரவாளர்களுக்கும்,எனது பாராட்டை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.”
  
 எனவேதான் கட்சியின் அங்கத்துவத்திலிருந்து ஹிஸ்புல்லா ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கெதிராக கட்சியின் தலைவர் தவிசாளர் என்று பெயர் குறித்து தன்னை கட்சியிலிருந்து இடை நிறுத்தியதற்கெதிராக வழக்கு தாக்கல் செய்த ஹிஸ்புல்லா ஏன் முழுதாக கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை என்பதற்கான காரணங்களை இக்கட்டுரை தொடரை வாசிப்பவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.  
ஆக முஸ்லிம் காங்கிரசுக்கு இப்போது மன்னிப்பு வழங்கி ஹிஸ்புல்லாவை மீண்டும் அரவணைப்பது தான் ஒரே ஒரு வழி , அதன் மூலமே தாங்களும் ஹிஸ்புல்லாவுக் கெதிராக நடவடிக்கை எடுக்க முடியாதிருக்கும் தர்மசங்கடத்திலிருந்து தப்பிக்கவும்முடியும் என்று நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததோடு பிரேமதாசாவின் ஆதிக்கம் முஸ்லிம் காங்கிரசில் எப்படி இருந்தது என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தேன். அது தொடர்பில் இன்னும் சில விடயங்களை தொட்டுக் காட்டமுன்னர். அந்த பத்திரிகையில் பிரேமதாசா பற்றி எழுதியிருந்ததையும் மேற்கோள் காட்டினால் மேலும் வாசகர்கள் தங்களின் சுய மதிப்பீட்டுக்கும் வர துணை புரியும் என்பதால் அதே முஸ்லிம் முன்னணி பத்திரிக்கை என்ன எழுதியதென்றும் , ஹிஸ்புல்லாவின் அரசியல் குருவான காத்தான்குடி பிரதேச சபை நிர்வாகியாக இருந்து பின்னர் ஏறாவூரின் பிரதேச சபையின் ஆணையாளராக,  சேகு தாவூத் பசீர் ஏறாவூரின் ஈரோஸ் தலைவராக இருந்த போது ,  விளங்கிய ரமலானின் கதையுடனும்  தொடரும்வரை ……..

No comments:

Post a Comment

அமெரிக்க ஜனநாயகம் செத்துவிட்டது-நாகேஸ்வரி அண்ணாமலை

February 7, 2020 0 மனிதன் முடியாட்சியிலிருந்து முன்னேறி குடியாட்சிக்கு வந்துவிட்டான் என்று மகிழ்ந்திருந்த சமயம் உலகின் நாடுகளுள்...