Sunday, 6 November 2011

“சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா!”( தொடர் : ஏழு )


                                                                                      


எஸ்.எம்.எம்.பஷீர் "ஷரியா சட்டங்களை காப்பாற்றுவது,முன்னேற்றுவது, கட்சி உறுப்பினர்களையும் மற்றவர்களையும் தங்களின் சொந்த வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் முழு ஷரியா சட்ட நெறிகளையும் பின்பற்ற ஊக்குவிப்பது  "

( 5/7/1992  ஆண்டு இயற்றப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின்  கட்சி யாப்பின் உப பிரிவு ((g)  ( கட்சியின் நோக்கங்கள்  அத்தியாயம்-II)                                                                                   
முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளர் தெரிவும் கற்பனை பாத்திரப் புனைவுகளும் அதன் முதல் தேர்தலுடன் தொடங்கியது தொடர் கதையாக போனது. அந்த வகையில்தான் இந்த ௨௦௦0 ஆம் ஆண்டு தேர்தல் நியமனப் பத்திரங்களும் அமைந்தனவா அல்லது உண்மையான நபர்கள் யாருமே இல்லாத பெயர்களுடன் உண்மையான பேர்வழிகளும் அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டார்களா என்ற கேள்வி எழுந்ததன்  விளைவே ௨௦௦0 ஆண்டு தேர்தலில் போட்டியிட (கண்டி போகம்பரை சிறையில்)   புலிப் பயங்கரவாதியாக சந்தேகிக்கப்பட்ட நபரை வேட்பாளராக எப்படி நியமித்தனர் என்பதை விட அவரின் கையொப்பம் எவ்வாறு சிறைச்சாலையில் பெறப்பட்டது . மறுபுறம் மட்டக்களப்பில் ஹிஸ்புல்லா முதன்மை வேட்பாளராக தேசிய ஐக்கிய முன்னணி ( நு ஆ) என்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் சகோதரிக் கட்சி அல்லது (பிள்ளைக் கட்சியில் )  போட்டியிட்டபோது . ( நீதிமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூலம் போட்டியிடுவது தொடர்பில் வழக்கு நடைபெர்ருக்கொண்டிருந்த படியினால் நு ஆ வில் போட்டியிட்டனர் என என் ஞாபகத்தில் உண்டு )    இலங்கையில் வாக்குரிமை இழந்து மலேசிய பிரஜையாகிப் போன முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியின் , -அதற்கும் முன்னாள் தமிழரசுக் கட்சியின்-தமிழர் விடுதலைக் கூட்டணியின்  -மட்டக்களப்பின் முடிசூடா மன்னன் என ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்த ராஜதுரை   கையொப்பமிட்டதை விட எப்படி தேர்தலில் போட்டியிட முடிந்தது. எனவே இந்த நியமனப் பத்திரம் தள்ளுபடி செய்யப்படல் வேண்டும் என்று ஒரு நீதிமன்ற  ஆணை கோரும் வழக்கை , மிகத் தாமதமாக டெலோ கட்சியின் உறுப்பினர் நித்தியானந்தன் இந்திரகுமார் என்பவர்  மேன் முறையீட்டு நீதிமன்றில் ( C.A. NO. 1017/2000.) கொண்டு வந்தார் .   அந்த வழக்கில் மட்டக்களப்பு மாவட்ட நு . ஆவின் தலைமை வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் என்ன சொன்னார் என்பதும் ஹிஸ்புல்லாவின் பழைய  கதையை எமக்கு ஞாபகமூட்டியது.  "முந்திய காலங்களைப்போல் அல்லாது தற்கால நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டம் நியமன தினத்தன்று கட்சியின் செயலாளரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வேட்பாளர்களை  சமூகமளித்திருக்க வேண்டும் என்று தேவைப்படுத்தவில்லை . ஆதலால் சட்டத்தில் ஒரு இடைவெளி இருப்பதற்காக முழு வேட்பாளர் நிரலையும் நிராகரிப்பது நீதியற்றது " என்று தான் அந்த நியமனப் பத்திரம் நிராகரிக்கப் பட்டால் அது அடாத செயல் சட்ட இடைவெளி என்றெல்லாம்  தான் பெற்ற சட்ட ஆலோசனையின் படி அவர் நீதி மன்றில் கூறினார். மறு புறத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மனுதாரருக்கு ( இந்திரகுமாருக்கு ) அந்த மனுவை மேற்கொள்ளுவதற்கு அல்லது அம்மனுவினை நீதி மன்று கேட்கும் உரிமை இல்லை ஏனெனில் அந்த ஆட்சேபனைகளை கொண்டு வந்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சி ஒழிய மனுதாரர் அல்ல என்று கூறினார். இந்த வழக்கில் இலங்கையின் தேர்தல் சட்ட வழக்குகளில் பிரசித்திபெற்ற ஜனாதிபதி சட்டத்தரணிகள் பலர் ஆஜராகினர். குறிப்பாக எல் சி செனிவிரத்தின , பாயிஸ் முஸ்தபா (இன்றைய அமைச்சர் பைசர் முஸ்தபாவின் தந்தை )  ஆர் கே டப்லியு . குணசேகர , ஜயம்பதி விக்ரமநாயக , எஸ். சிறி பாலன்  ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.  இந்த சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் நிசாம் காரியப்பர் (துணை மேயர் கல்முனை மாநகர சபை - இவரது மேயர் இழுபறியில் தான் இக்கட்டுரை எழுதம் தேவை எழுந்தது  , அது பற்றி அடுத்துப் பார்ப்போம்) . ஹிஸ்புல்லாவை செல்வாக்கிழக்க செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிய (நான் முன்னரே குறிப்பீட்ட ) சட்டத்தரணி உமறு லெப்பை நஜீமும் இவ்வழக்கில் துணை சட்டத்தரணியாக ஆஜராகியிருந்தார் கொழும்பு மேன் நீதிமன்ற நீதிபதி ஜே என் தீ சில்வா    (    J.A.N. de SILVA, J.) இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கினார். 


 .

இந்த வழக்கு இலங்கையில் ஆவலுடன் எதிபார்க்கப்பட்ட தேர்தல் வழக்குகளில் ஒன்று . பல சட்ட ஜாம்பவான்களின் பிரசன்னத்துடன் நடைபெற்ற வழக்கு . அதில் மனுதாரின் மனு நிராகரிக்கப்பட்டது . ஆனால் அந்த மனு நிராகரிக்கபட்ட தற்கான கரணம் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கவில்லை. குற்றச்சாட்டுக்கள் இன்றுவரை நிலுவையாகவே நு ஆ அல்லது முஸ்லிம் காங்கிரசின் மீது  படிந்திருக்கும் . சட்ட தொழினுட்பத்தின் படி மனுவானது (1) மோசடிக்  கையொப்பமிடப்பட்ட நியமனப் பத்திரம் தொடர்பான அல்லது மோசடிக் கையொப்பமிடப்பட்ட  நியமனப் பத்திரத்தை கையளித்ததற்கான குறிப்பிட்ட பரிகாரம் என்னவெனில்  , யார் அதற்கு பொறுப்பாக இருந்தாரோ அவருக்கு எதிராக மட்டுமே உள்ளது. ( அதாவது வேறு விதமாக சொன்னால் வழக்கை ராஜதுரை அல்லது   அகிலேஸ்வரன் கொண்டு வந்திருந்தால் பரிகாரம் வழங்கும் நிலை சட்டத்தில் உள்ளது என்பதாகும் ) அடுத்தது ( 2 ) . ஒருவரின் கையொப்பம் மோசடி செய்யப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டால்  அவ்வாறு செய்த   யாரோ ஒரு நபரின் /நபர்களின் மோசடியான செயலுக்காக  ஏனைய வேட்பாளர்கள் தண்டிக்கப்படக் கூடாது. (அதற்காக முழு நியமனப்பத்திர )  நிரலும் நிராகரிக்கப்பட முடியாது. வாக்காளர்கள் தங்களின் தேர்வின்படி கட்சிக்காக அல்லது அந்த குழுவினருக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற முக்கிய காரணம் கூறப்பட்டு நிராகரிக்கப்பட்டது. அந்த வழக்கில் மிக முக்கியமாக ஏன்கனவே தபால் மூல வாக்களிப்புகள் நடைபெற்றிருந்ததும்   நீதிமன்றத்தால் கவனத்தில் கொல்லப்பட்டதுடன் அவ்வாக்குகள் அளித்தோரின் வாக்களிக்கும் உரிமை பிரயோகத்தையும் நீதி மன்றம் கவனத்தில் எடுத்திருந்தது.

மிகச் சுவாரசியமாக இங்கு பார்க்கப்பட வேண்டியது , படுவான்கரைக்கு மின்சாரம் வழங்கி புலிகளுடன் நல்லுறவு பேண விரும்பிய ஹிஸ்புல்லாவின் தேர்வாகவே புலிகளின் சந்தேக நபர் பட்டிப்பொளை சிவஞானம் அகிலேஸ்வரன் இருந்திருக்க வேண்டும்." புலிகளுக்கும் தோழன் பாலுக்கும் காவல்"  நிலைப்பாட்டை  அரசியலில் ஹிஸ்புல்லாஹ் கடைபிடித்தார் என்பதை பிரபல அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டதையும் இங்கு நினைவு கூறலாம்.  இந்த நியமனப்பத்திர நபர்கள் குறித்த சர்ச்சையில் வட மாகனத்திலும்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது இதே விதமான  குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அது வேறு நீண்ட  கதை என்பதால் நமது "கதை மாந்தர்களுடன்" தொடர்பு பட்டதை மட்டும் குறித்து பார்ப்போம்.


முஸ்லிம் காங்கிரசுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கு மிடையே  மிக நீண்ட காலமாக பாலமாக விளங்கிய இன்றைய கொழும்பு மேயர் ஏ.ஜே ஏம். முசம்மில் ( இப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாநகர சபையின் நகர பிதா) 2000 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ்(நு ஆ )வேட்பாளராக போட்டியிட்டவர்  என்பதுடன் முஸ்லிம் காங்கிரஸ் -நு ஆ- மீதான கையெழுத்து மோசடி குறித்த வழக்கு மேல் நீதிமன்றில் நடைபெற்றபோது டி என்.எல் (TNL)  எனப்படும் தொலைக் காட்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் எவ்வாறு முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளராக "உண்மையைப"  பேசினார் என்பதும்  இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டிய விசயமாகும்.

கண்டியில் நு ஆ வேட்பளராக உள்ள அகிலேஸ்வரன்  ( சர்ச்சைக்குரிய புலி சந்தேக நபர் அகிலேஸ்வரன்)  வேறு ஒரு நபர் , சிறையிலுள்ள அகிலேஸ்வரன் வேறு ஒரு நபர்., இருவரும் ஒரு நபரல்ல       என்று குறிப்பிட்ட போது, அந் நிகழ்சியை நடத்திக் கொண்டிருந்த சுமுதித்த சமரவிக்ரம குறுக்கிட்டு பொது மக்களை  தவறாக வழி நடத்த வேண்டாம்  என்று அவருக்கு ( முசம்மிலுக்கு) எச்சரிக்கை விடுத்துஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல் கட்சிக் குழுவின்  உறுப்பினரான அது சம்பந்தப்பட்ட கொழும்பு மேன்  நீதிமன்ற வழக்கில்   ஆஜராகும் சட்டத்தரணி நு ஆ வின் வேட்பாளர் அகிலேவரன்  ஒரு எல்.ரீ ரீ இன் சந்தேக நபர் என்பதை நீதிமன்றில் உறுதி செய்துள்ளார் என்று குறிப்பிட்டார்.அப்பட்டாமான பொய்களையும் உண்மைகளாக்கும் அரசியல் முஸ்லிம் காங்கிரசுக்கு மட்டும் உரியதல்ல ஆனால் முஸ்லிம் ஷரியா சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு செய்த புரட்டுக்கள் தான் முஸ்லிம்களை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் கட்சியின் லட்சணமாக தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து வந்திருக்கிறது என்பதுதான் கசப்பான வரலாறு. 

எப்படியோ ஹிஸ்புல்லா  வேட்புமனுவில் தப்பி பிழைத்து விட்டார். ஆனால் அதற்கு முன்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தனது மரணத்துக்கு முன்பு ஹிஸ்புல்லாவை கட்சியிலிருந்து மதுபான உரிமம் (Liquor licence )   வழங்கிய குற்றச்சாட்டுக்காக கட்சியிலிருந்து இடை நிறுத்தி வைத்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது  அஸ்ரப் விளக்கம் கோரி ஹிஸ்புல்லாவை இடை நிறுத்தியிருந்த களத்திலே அஷ்ரப் அகால மரணமடைந்தார், ஆனால் மீண்டும் தேர்தலில் ஹிஸ்புல்லாஹ் நு ஆ வில் போட்டியிட்டார்.    .ஹிஸ்புல்லா சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தந்து கட்சி அங்கத்துவத்தை இடை நிறுத்தியதற்காக , எம். பீ பதவியை கைவிடச் சொன்னதற்காக நீதிமன்றம் சென்ற ஹிஸ்புல்லா தான் ஒரு யு என்.பீ (ஐக்கிய தேசிய கட்சியின் ) அரசியல் மூலம் முஸ்லிம் காங்கிரசுக்கு வந்தவர் என்பதை தனது மனுவில் அழுத்தி சம்பந்தமில்லாமல் கூறியிருக்கவில்லை , அவருக்காக ஐக்கிய தேசிய கட்சியின் பிரேமதாசாவின் ஆதரவு சட்டத்தரணிகள் கூட காரணமில்லாமல் ஆஜராகவில்லை. மொத்தத்தில் அன்றைய பிரேமதாசாவின் அனுசரணையுடன் அனுதாபத்துடனே நீதிமன்றம் வரை ஹிஸ்புல்லாஹ் சென்றார், அவ்வாறான அனுதாபத்தை பெரும் வகையிலே அவர் தன்னை ஒரு ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பின்புலம் கொண்டவர் என்பதை தனது மனுவில் வலியுறுத்தியிருந்தார். ஏன் , இதனை வலியுறுத்துகிறேன் என்றால் பின்னர் நடந்த மிக முக்கியமான குற்றச்சாட்டிலிருந்து ஹிஸ்புல்லாவை பிரேமதாசாவை காப்பாற்றினார் என்ற  செய்தி கட்சி வட்டாரங்களில் கசிந்தது.     


 ஹிஸ்புல்லாஹ் எம்.பீ யாகி இரண்டு வருடம் முடிந்த பின்னர் காதர் மொஹிதீன் மெது மெதுவாக முஸ்லிம் காங்கிரசின் நடவடிக்கையில் நம்பிக்கை இழந்து கொண்டு போனார். அதனால் கட்சியுடனான அவரது தொடர்புகளை தொட்டது பாதி விட்டது  விட்டது பாதியாக அவர் குறைத்து கொண்டு வந்தார்.     

அவ்வாறே ஹிஸ்புல்லா மிக அவதானமாக கட்சியில் நடைபெறும் மாற்றங்களையும் அவதானித்துக் கொண்டு  தனது ஆதரவுத் தளத்தை விஸ்தரித்துக் கொண்டு செயற்பட்டபோதுதான் ஹிஸ்புல்லாவின் முதல் நாடாளுமன்ற கால  செயலாளராக அவரிடம் பணிபுரிந்த இப்திகார் என்பவர் ஹிஸ்புல்லாவை விட்டும் விலகி தலைமறைவானார்

 ஹிஸ்புல்லாவின் முதல் நாடாளுமன்ற காலத்தில் அவரது நாடாளுமன்ற செயலாளராகவிருந்த இப்திகார் என்பவர் கொழும்பை சேர்ந்தவர் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்றவர் , அவர் தனது சம்பளத்தினை  ஹிஸ்புல்லா முறைகேடாக கையகப் படுத்திக் கொண்டார் என்று ஒரு முறைப்பாட்டை   போலீசில் செய்திருந்தார் என்று கட்சி உயர் வட்டாரங்களில் குசுகுசுக்கப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சிலரும் மொஹிதீன் அப்துல் காதர் உட்பட  ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பயன்படுத்தும் அரிய சந்தர்ப்பமாக கருதினார்கள். அதனால் போலீசில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக முறைப்பாடு செய்த இப்திகார் , அவரின் சாட்சியத்தின் முக்கியத்துவம் குறித்து  மட்டக்குளிய (மோதர) என்ற இடத்தில் ஹிஸ்புல்லாவுக்கு தெரியாமல் பாதுகாப்பாக மறைவாக வைக்கப்பட்டார். அந்த நிலையில் மொஹிதீனுடனும் மேலும் சில முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடனும் மட்டக்குளிக்கு சென்று இப்திகாரை இக் கட்டுரையாளரும் சந்தித்துள்ளார். முஸ்லிம் காங்கிரசின் அரசியல் உயர் மட்ட குழுவினர் ஹிஸ்புல்லாவின் மீதான முறைப்பாடு போலீஸ் குற்ற விசாரணைப் பிரிவுக்கு சாட்டப்பட்டுள்ளதாக கூறினர். ஆனால் வழக்கு   ஆனால் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றவியல் வழக்கில் பிரபல குற்றவியல் சட்டத்தரணி என்.எம்.அமீன் ஹிஸ்புல்லாவுக்காக ஆஜரானார் என்று முஸ்லிம் காங்கிரசின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் கூறினர் . ஆனால் அந்த வழக்கு தொடராமல் முக்கியத்துவம் இழந்து போனதற்கான காரணம் மறைக்கப் பட்டுவிட்டது, மறக்கப்பட்டும் விட்டது என்று நான் கருதுகிறேன். .பின்னர் ஹிஸ்புல்லா மீண்டும் முஸ்லிம் காங்கிரசில் இணைந்து போராளியாகப் போனார்.    
அது தொடர்பாக நான் முன்னரே ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தேன். அதில் சம்பந்தப்பட்ட பகுதியை மீண்டும் தமிழில் இங்கு குறிப்பிட வேண்டி உள்ளது.  

“It was reported that there were also complaints against Hisbullah by his first personal secretary, to the police for alleged misappropriation of his salary. His first secretary was from Colombo and educated at the Royal College. Due to the significance of his testimony he was kept in a safe place in Modara (Mattakkuliya) by some members of the SLMC, including Mohideen Abdul Cader. It was there I went with Mohideen to Modera to visit the victim in his hiding place. I was informed by a section of the SLMC hierarchy that this matter had been reported to the Police Criminal investigation and the action brought against Hisbullah was defended by a leading Criminal lawyer Mr.A.M.Ameen. It seemed that there may have been some controversy as the matter was discretely swept under the rug.” (http://www.bazeerlanka.com/2011/03/slmc-game-of-musical-chairs.html)

இப்திகாரின் வழக்கு புஸ்வானமாக ஆக்கப்பட்டதில் பிரேமதாசா அஸ்ரப் சம்பந்தப்பட்ட உண்மைகள் எதுவும் தெரியாது ஆனால் வெறும் ஊகங்களுக்கே வர முடிகிறது. ஆனால் பிரேமதாசாவுடன் நெருக்கமாக ஹிஸ்புல்லாஹ் இருந்ததால் வழக்கு வலுவிழந்து போனதா என்பதை இப்திகாரே சொல்ல வேண்டும். ஆனால் இப்போது இப்திகார் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை சுற்றிய சர்ச்சைகள் முடிவுற்ற கால கட்டத்தில் சேகு இஷ்ஷதீனும் முஸ்லிம் காங்கிரசிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.   

அடிக் குறிப்பு: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்சி யாப்பு அத்தியாயம் ஒன்று உப பிரிவு 1.3 கட்சியின் வழிகாட்டிகள் என்ற தலைப்பின் கீழ் " புனித குர்ஆனும் புனித நபிகளாரின் (ஸல்) வழி முறைகளும் கட்சியின் தலைமையான பின்பற்றத்தக்க வழிமுறைகளாக இருக்க வேண்டும்" என்று கூறுகிறது.
அந்த வகையில் முஸ்லிம் காங்கிரசின் யாப்பு ஷரியா சட்ட வழிமுறைகளை கடைப்பிடிக்கும் கட்சியாக தன்னை   பிரகடனப்படுத்துகிறது. எனவே ஷரியா என்பதன்  மிக இறுக்கமான எளிய வரைவிலக்கணம் என்னவென்றால் ; ஷரியா என்பது புனித குர்ஆனிலும்  நபிகளாரின் (ஸல்) வாழ்க்கை முறைகளிலுமிருந்து பெறப்பட்ட விதிகளின் தொகுப்பாகும்"   
                                                                                                    தொடரும்
 

http://www.bazeerlanka.com/

No comments:

Post a comment