Sunday, 30 October 2011

"சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா!" (தொடர் நான்கு)                                                                             
                                      எஸ்.எம்.எம்.பஷீர் 

எல்லா உண்மைகளும் மூன்று கட்டங்களை தாண்டி செல்கிறது , முதலாவது அது பரிகசிக்கப்படுகிறது , இரண்டாவது , அது வன்மையாக எதிர்க்கப்படுகிறது. மூன்றாவது அது சுய சான்றாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.”                         -ஆர்தர்  சொபென்ஹுர்  -


( All truth passes through three stages: First, it is ridiculed; Second, it is violently opposed; and Third, it is accepted as self-evident. - Arthur Schopenhauer)


ஹிஸ்புல்லா நினைத்தவாறு ஏனைய வேட்பாளர்கள் தங்களின் குடும்பப் பெயரை (surname)  எழுதி (சாதாரண நடைமுறையில் எழுதுவதுபோல குடும்பப் பெயரை முன்னெழுதி )  முதற் பெயரை (First name) அல்லது சொந்தப் பெயரை பின்னுக்கு  எழுதினால் தான் முதல் இலக்கத்தை பெற்றுவிடலாம் என்ற தனது தயாரிப்புக்களுடன் வந்தவேளை ,  முதல் இலக்கங்கள் தங்களுக்கு வர வேண்டும் என்பதில் காதர் மொஹிதீனும்  அப்துல் லத்தீபும் கூட  எதிபார்த்தே செயற்பட்டனர். ஏனெனில் மக்களிடம் இலகுவாக வாக்களிக்க,  தாங்களே அதிகம் வாக்குப் பெற  இலக்கம் ஒன்று அல்லது இரண்டு என்பன வசதியாக இருக்கும் என்பதால் அதனையே அனைவரும் விரும்பினர். அப்துல் லத்தீப் இந்த மூன்று பேர் உடன்பாட்டில் தானே அதிக வாக்குகளை ஏறாவூரில் பெறுவதன் மூலம் தன்னை எம்.பீ யாக நியமிக்க கோரலாம் என்று அவருடன் சேர்ந்தவரக்ள் அவருக்கு ஆலோசனை வழங்கினர். அதிலும் குறிப்பாக ஏறாவூரில் கடந்த காலங்களில் எம்.பீ யாக இருந்தவர்கள் பலர் ஏறாவூர் மூன்றாம் குறிச்சியை சேர்ந்தவர்கள் என்பதால் மிகச் சிலரிடம்   முதலாம் குறிச்சியை சேர்ந்த குறிப்பாக , அரசியல் ஈடுபாடு கொண்டவர்கள் படித்தவர்கள் சிலரிடம் தாங்கள் அரசியலில் ஆளுமை செலுத்தமுடியவில்லை என்ற உணர்வு இருந்தது. அதிலும் குறிப்பாக ஏறாவூரின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின்  மத்திய குழுவின் பிரமுகர் மறைந்த இஸ்மா லெப்பை போன்றோர் தீவிரம் காட்டினர். ஆக ஏறாவூரிலும் ஒரு குறிச்சி போட்டி கீழ் நிலையில் மெதுவாக , பிரச்சாரங்களில் , மறைமுகமாக மேற் கொள்ளப்பட்டது.. இதற்கான முக்கிய காரணமாக அண்மையில் நடந்து முடிந்திருந்த மாகான சபை தேர்தலில் ஏறாவூர் மூன்றாம் குறிச்சி வேட்பாளராக ரூபி மொஹிதீன் போன்ற சாமான்யர் தெரிவு செய்யப்படிருக்கின்ற வேலையில் எம்.பீ பதவிக்கும் அவரின் உறவினரும் மூன்றாம் குறிச்சியை சேர்ந்தவருமான பஷீர் என்பவர் போட்டியிடுவதும் அமைந்தது.   எனவேதான் அப்துல் லத்தீப் எனும் சட்டத்துறை மாணவர் என்பவர்  ஏறாவூரில் நான்காவது ஒரு நிஜ வேட்பாளர் போட்டியிடும் சூழ் நிலையை இஸ்மாலெப்பை போன்றோர் கட்சியிடம் வலியுறுத்தினர். எனவே ஒரே கட்சிக்குள் இரு நபர் போட்டியிடும் சூழல்  ஒரே ஊரில் ஏற்படுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி தனக்கென தனிப்பட்ட அரசியல் பிரச்சாரங்களை  அவரின் ஆதரவாளர்களும் முடுக்கி விட்டனர். லத்தீப் பொதுவான பிரச்சாரத்தில் செயற்பட அவரின் குறிச்சி ஆதரவு ஆலோசகர்கள் தங்களின் குறிச்சிக்குள்ளான பிரச்சாரங்களை தங்களில் ஒருவர் என்ற அடிப்படையில் மேற்கொண்டனர்.  ஆகவேதான் அவரும் தனது பெயர் முதல் இலக்கங்களை பெறுவதில் குறியாகவிருந்தார்.  
ஹிஸ்புல்லாஹ் எம்.பீ ஆக தேர்தல் வெற்றிகள் மூலம் தெரிவானவுடன் அவர் முதன் முதலில் தனது செல்வாக்கை கட்சிக்குள் உயர்த்த பல முயற்சிகளை செய்தார். சகலருடனும் கட்சியின் உயர் மட்ட பிரமுகர்கள் உட்பட சாதாரண கட்சி அங்கத்தவர்களுடனும் மிக நெருக்கமாக பழகத் தொடங்கினார். அவருக்கு ஆதரவாக கட்சியின் தவிசாளர் சேகு இஸ்ஸதீன் விளங்கினார். தனக்கு முன்னரே அறிமுகமான கட்சியின் உயர் மட்ட பதிவிநிலையில் உள்ள மொஹிதீனையும் மூன்றாம் இடத்திலிருந்த பஷீரையும் அவர்களில் பாசாங்கில்லாத பேச்சு , நடத்தை என்பவற்றை கருத்திற் கொண்டு மட்டுமல்ல , தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாத இருவரின் தனித்துவத்தை கருதியும் , ஹிஸ்புல்லாவை முன்னிலைப்படுத்தும் வகையில் செயற்பட்டார். மேலும் மொஹிதீன் அப்துல் காதர் தன்னோடு மாகாண சபையில் அங்கத்துவம் வகித்தவுடன் , தன்னோடு இருந்தவர் நாடாளுமன்றத்தில் எம்.பீ யாவதை அவர் விரும்பவில்லை என்று சில மொஹிதீனுக்கு நெருக்கமான சிலர் தெரிவித்தனர். அந்த வகையில் தனக்கு முன்னரே பழக்கமான பஷீரும் எம்.பீ யாவதை அவர் விரும்பவில்லை. 

அன்றைய காலகட்டங்களில் அஸ்ரப் தனித்து முடிவு எடுக்கும் நிலையில் பலதடவைகள் முடியாமல் இருந்திருக்கிறார். அவைபற்றியெல்லாம் எங்கு எழுதி இக்கட்டுரையின் தலைப்பிலிருந்து விலகிச்செல்ல விரும்பவில்லை ) அந்த வகையில் சேகு இஸ்ஸதீனின் அழுத்தம் கட்சிக்குள் அதிகமாகவே இருந்தது. ஆகவே சேகு இஸ்ஸதீன் மொஹிதீன் அப்துல் காதர் திருமலைக்கு சென்று வட கிழக்கு மாகாண சபைக்கு பதவிப் பிரமாணம் எடுக்க எல்லா மாகாண சபை உறுப்பினர்களுடனும் செல்ல முன்னர் , மாகாணசபை நிஜமாவதை உணர்ந்த போது , ஹிஸ்புல்லாவின் ஒப்பந்தம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக எதிர்காலத்தில் இருக்காது. முஸ்லிம் காங்கிரசிலிருந்து நடைமுறையிலுள்ள மாகாண சபையிலிருந்து அந்த ஒப்பந்தத்தை காரணம் காட்டி விலகினாலும் ( சட்டத்தரனிகளான அஸ்ரபுக்கும் சேகு இஸ்ஸதீனுக்கும் சட்டப்படி செல்லாத ஒப்பந்தத்தை வைத்து ஹிஸ்புல்ல மீது நடவடிக்கை எடுக்க முடியாது , அவாறு கட்சியிலிருந்து விளக்கினாலும் , தமது கட்சியின் ஒரு உறுப்பினர் தொகை குறைவடையும் என்பது நான்கு தெரியும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை ) மக்கள் செல்வாக்கு தங்களுக்கு இருக்கும் என்று தனது ஹிஸ்புல்லாவை பாதுகாக்கும் ஆலோசனையை கட்சித் தலைவர் அஸ்ரபிடம் சேகு இஸ்ஸதீன் சொல்லியிருக்க வேண்டும். இந்தியா முட்டுக் கொடுத்த வரதராஜ பெருமாளின் வட கிழக்கு மாகாண சபை அம்போ என்று போய்விடுமென்று முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பார்க்காததால் அவ்வாறான சூழலில் என்ன முடிவு எடுக்கலாம் என்ற ஓர் அணுகுமுறையை கட்சித் தலைவர் மேற்கொண்டார். எனினும் கட்சித் தலைவரை பொறுத்தவரை நாடாளுமன்ற பதவியை ஹிஸ்புல்லாஹ் - இஸ்லாமிய குரான் ஹதீஸ் அடிப்படையிலான கட்சி வழங்கிய வாக்குறுதி என்ற அடிப்படையில் - பதவி விலகுவார் என்பதில் நம்பிக்கையும் கொண்டிருந்தார்.   மாகாண சபைக்கு - திருகோணமலைக்கு - பதவிப்பிரமானம் எடுக்க செல்ல தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் யாவரும் தயாரான பொழுது , அஸ்ரப் ஏறாவூர் எதிர்கால நாடாளுமன்ற பிரதிநிதியாக அறிவிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் தேர்வில் மூன்றாம் இடத்தில் இருந்த பஷீரை தனிப்பட்ட முறையில் சித்ரா லேனில் உள்ள அவரின் வீட்டில் சந்திக்க அழைப்பு விடுத்தார். அந்த தனிப்பட்ட சந்திப்பில் அஸ்ரப் மாகாண சபை உறுப்பினராக ஏறாவூரில் இருந்து செல்லும் உறுப்பினர் கல்வி அறிவு இல்லாதவர் , அப்பதவியை வகிக்க பொறுத்த மற்றவர் எனவே, நீங்கள் அந்த இடத்துக்கு செல்வதே எனது விருப்பம் என்று கூறினார், ஆனால் பஷீர் , முஸ்லிம் காங்கிரஸ் மக்களுக்கு வழங்கிய ஆணைக்கு அவாறு செய்வது மாறானது என்றும் அவ்வாறு செய்வது முறையற்றது என்றும்தான் அப்பதவியை ஏற்க முடியாது என்றும் கூறிவிட்டார். ஆனால் அஸ்ரப் தனது கருத்தில் உறுதியாக இருந்ததுடன் , மாற்றாக உடனடியாக அப்பதவியை ஏற்குமாறும் பின்னர் விலகிக் கொண்டு ஏறாவூர் ரூபி மொஹிதீனுக்கு விட்டுக் கொடுக்கலாம் . ஏனெனில் வட கிழக்கு மாகாண சபையில் கல்வி கற்ற அங்குள்ள சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திராணியுள்ள ஆட்களே தேவை என்று தனது வேண்டுகோளை நியாயப்படுத்தினார்.  எப்படியாயினும் தனது கருத்தை வலியுறுத்துவதில் அஸ்ரப் மிகுந்த அக்கறை காட்டினார். ஆனால் அஸ்ரபின் வேண்டுகோளை மறுத்து அவ்வாறு செய்வது முஸ்லிம் காங்கிரஸ் படித்தவர்களை போட்டியிட அழைத்த போது புலிகளுக்கு பயந்து யாரும் முன்வராத போது , துணிச்சலுடன் முன்வந்த ரூபி மொஹிதீன் என்பவரின் பொறுப்புணர்வை மலினப்படுத்துவதாகும் அது மட்டுமல்ல , அவரை மக்கள் வாக்களித்து தெரிவு செய்துள்ளார்கள் , அகவே சட்டப்படி அவரே செல்ல வேண்டும் என்பதும் அவரை ஏமாற்றுவதும் முஸ்லிம் காங்கிரசின் பிரதிமையை பாதிக்கும் என்றெல்லாம் ஒரு கருத்தினை பஷீர் முன்வைத்து அஸ்ரபின் வேண்டுகோளை நிராகரித்து விட்டார்.

ஆனால் மாகாண சபை கலைக்கப்பட்டபின்னர் தங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெகுமானமாக பஜிரோ இன்டெர் கூலர் வாகனங்களை பெற்றுக்கொண்டு சவாரி செய்வதிலே வட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பணி முடிவுற்றது. கிழக்கிலே முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்திய அமைதிப்படை வெளியேறியதுடன் அங்கு சுயாதீனமாக செயற்பட முடியாது போனது. புலிகளின் அச்சுறுத்தல்களினால் கிழக்கில் வாழ்வதே முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்கு முடியாமல் போனது.


ஆனால் ஹிஸ்புல்லாஹ் இரண்டு வருடம் முடிய சற்று முன்பாக ஜனாதிபதி பிரேமதாசாவுடனான தொடர்புகளை அதிகப்படுத்திக் கொண்டார். அஸ்ரபுக்கும் பிரேமதாசாவுக்கும் இடையேயிருந்த நெருக்கத்தால் தன்னை பாதுகாக்க பிரேமதாசாவுடன் நெருங்கியிருப்பது அஸ்ரபுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என ஹிஸ்புல்லா நான்கு தெரிந்து வைத்திருந்தார். அவ்வாறே பின்னர் முஸ்லிம் காங்கிரசின் நிதி உதவி செய்வதில் மிக முக்கிய பாத்திரம் வகித்து , அதனால் முஸ்லிம் காங்கிரசின் நியமன  எம்.பீ யாக ஆக்கப்பட்ட  புஹாரிதீன் ஹாஜியாரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் முரண்பட்டு பிரேமதாசாவிடம் சரணடைந்தார். ஆனாலும் அஸ்ரப் முன்னர் சொன்னது போல் மொஹிதீணினதும் அப்பிரதேச மக்களினதும் அழுத்தத்தினால் ஹிஸ்புல்லாவை கட்சியிலிருந்து இடைநிறுத்தம் செய்தார். ஆனால் கட்சிலிருந்து விலக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.     


இதேவேளை கட்சியிலிருந்து இடை நிறுத்தப்படுவவதற்கு  முன்னரே ஹிஸ்புல்லாவின் சகோதரரான வைத்திய கலாநிதி நிஜாமுதீன் அவருக்கும் கட்டுரையாளருக்கும் நெருக்கமான இன்னுமொரு இலங்கையில் பிரபல்யமான வைத்திய கலாநிதி ஒருவரிடம் அஸ்ரப் தனது தம்பியை எம்.பீ யாக நியமிக்கவில்லை, மக்களே நியமித்தனர். அகவே அச்ரபுக்கு ஹிஸ்புல்லாவை பதவி விலகச் சொல்ல எந்த உரிமையும் கிடையாது , அது நடக்கப் போகும் நிகழ்வுமல்ல என்று பிரத்தியேக சம்பாசனையின் போது குறிப்பிட்டிருந்தார்.    


தொடரும் .. 

No comments:

Post a Comment

சுமந்திரன் கேட்பது நியாயமானதா? –பிரதீபன்

அ ரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும் பேசும் நிலையை மக்கள் உருவாக்க வேண்டும் என தமிழரசுக் கட்சி நா...