Thursday, 27 October 2011

“சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா! “ (தொடர் மூன்று )எஸ்.எம்.எம்.பஷீர்             
உண்மை பெரும்பான்மை வாக்குகளால் தீர்மானிக்கப்படுவதல்ல
                                                                                             தாக் குவைன்   
( Truth is not determined by majority vote.  ~Doug Gwyn)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட கிழக்கு மாகான சபை தேர்தலில் போட்டியிட்டிருந்தாலும் அதில் அபார வெற்றி பெற்றிருந்தாலும் வட கிழக்கு மாகாண சபை நிர்வாகம் யதார்த்தத்தில் செயற்படுமா அதற்கான பாதுகாப்பு சூழல் இல்லாத நிலையில் இந்திய படையின் பாதுகாப்பு உத்தரவாதம் என்ன என்ற கேள்விகள் நிலுவையாக , விடை காணப்படாமல் ஊகங்களுடன் இருந்த போதே நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றன. வட கிழக்கு மாகாண சபை தேர்தல்களில் ஏற்கனவே போட்டியிட்டு தெரிவான முஹிதீனும் ஹிஸ்புல்லாவும் தங்களின் எதிர்காலம் என்னவென்று உறுதிப்படுத்தப்படாத ஒரு சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரசும் அவ்வாறு வெற்றியீட்டிய இருவரையும் அவர்களின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டும் அவர்களின் கல்வி , பொருளாதாரம் ( அப்போது ஹிஸ்புல்லா ஒரு பல்கலைக்கழக மாணவர் , மொஹிதீன் சமூக நலன் கொண்ட வணிகர் ) அடிப்படையில் இருவருக்கும் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முன்னுரிமை அளித்தனர். அதேவேளை ஏறாவூரை சேர்ந்த மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு வென்ற ரூபி மொஹிதீன் என்பவரை நாடாளுமன்ற தேர்தலில் நிறுத்த முஸ்லிம் காங்கிரஸ் முயலவில்லை , அதேவேளை மொஹிதீனும் தனது இயலுமையை உணர்ந்து வேறு யாரேனும் போட்டியிடுவதை விரும்பினார் , அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவினருடன் தீவிரமாக ஒத்துழைத்தார். 
 
ஓட்டமாவடி / வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து மொஹிதீன் அபுல் காதர் மாத்திரமே வேட்பாளராக நியமிக்கப்பட, ஏறாவூரில் இரண்டு பேரை வேட்பாளாராக நியமிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை கட்சி ஏற்றுக்கொண்டதால் ஏறாவூரிலிருந்து இருவர் தெரிவு செய்யப்பட்டனர். ஏறாவூரில் வட கிழக்கு மாகான சபையில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ரூபி முஹிதீன் என்பவர் ஆரம்ப கல்வி மட்டும் கற்றவர் என்பதுடன் ஏறாவூர் பிரதேசத்தில் அரசியல் ஜாம்பவான்களான எம்.ஏ .சீ . ஏ . ரகுமான் , மறைந்த ஐக்கிய தேசிய கட்சியின்ஆட்சியில் பிரதி அமைச்சராகவிருந்த பரீத் மீராலெப்பைபையின் சகோதரர் மறைந்த அப்துல் ரசாக் , இன்றைய ஏறாவூர் பிரதேச சபை தலைவர் அலி சாகிர் மௌலானா (சுதந்திரக் கட்சியில் ) ஆகியோர் என பலர் போட்டியிட முன்வந்ததால் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஓர் தகுந்த வேட்பாளராக ரூபி மொஹிதீன் காணப்படவில்லை , அவர் மாகான சபையில் வெற்றிபெற மேற்சொன்ன பலர் தத்தமது கட்சிகளிலோ அல்லது சுயாதீனமாகவோ போட்டியிடாமையும் ஒரு காரணமாகும். ஏறாவூரில் முஸ்லிம் காங்கிரசின் அரசியல் பிரவேசத்தில் ரூபி மொஹிதீன் பல சவால்களை எதிர்கொண்டவர் என்பதும் அன்றைய காலகட்டத்தில் மாகான சபை தேர்தலில் பலர் பயந்து பின்வாங்க துணிச்சலாக தன்னை வேட்பாளராக்கியவர்.            
இந்த பின்னணியில் காத்தான்குடியில் வேறு யாரேனும் தனக்கு போட்டியாக வந்துவிடுவார்கள் என்ற அச்சம் ஹிஸ்புல்லாவுக்கு இருந்து , ஆகவே பொதுத் தேர்தலுக்கான நியமனப் பத்திரத்தில் காத்தான்குடியை சேர்ந்த இன்னுமொருவர் கையொப்பமிடுவார் என்றும் , அதற்காக ஒரு இடத்தை வெற்றிடமாக விடுமாறும் ஹிஸ்புல்லா விடுத்த வேண்டுகோளை கட்சியின் அன்றைய தவிசாளர் சேகு இஸ்ஸதீன் , பிரதி பொதுச் செயலாளர் அபுல் கலாம் ஆகியோரும் அங்கீகரித்தனர் என்பதால் அதுபற்றிய திட்டங்களை அவர்கள் அறிந்திருக்கவே வேண்டும். ஆனால் அங்கிருந்தோர் ஏனைய வேட்பாளர்கள் உட்பட யார் அந்த காத்தான்குடி வேட்பாளர் என்று கேட்டபொழுது அவரின் பெயர் என்.எம். முஹமத் அவர் வந்தவுடன் (பின்னர்?) நியமனப்பத்திரத்தில் கையோப்பமிடுவர். என்றும் அவரின் பெயர் அவ்வாறே நிரப்பப்பட்டது. முறைப்படி அந்த நியமனப் பத்திரத்தில் இடப்படும் கையொப்பங்களை அவர்களின் தேசிய அடையாள அட்டைகளை உறுதி செய்தே சமாதன நீதவான் கையொப்பமிடல் வேண்டும்.ஆனால் அங்கு முகமத் என்பவர் யாரென்று இதுவரை காத்தான்குடி மக்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம் காங்கிரசுக்கும் தெரியாது , தெரியவும் வேண்டியதில்லை!! . 

ஏனெனில் முஸ்லிம் காங்கிரஸ் கூட நியமனப் பத்திரத்தில் காண்பித்த சிங்கள முஸ்லிம் வேட்பாளர்களும் அங்கு பிரசன்னமாகவிருக்கவில்லை, கையொப்பமிடவுமில்லை , ஆனால் வேட்பாளர்களாக தேர்தலில் "போட்டியிட்டனர்!" . அந்த தமிழ் சிங்கள வேட்பாளர்களை மூன்று முக்கிய வேட்பாளர்கள் காணவுமில்லை , மாவட்ட வாக்காளர்கள் காணவுமில்லை , மொத்த வாக்காளர்களில் வாக்காளர்களுக்கு தெரிந்தவர்கள் நிஜ மனிதர்கள் நால்வரை தவிர ஏனையோர் யார் என்பது யாருக்கும் இன்றுவரை தெரியாது , அப்படி யாரேனும் இருந்திருந்தால் அவர்கள் யாரும் இதுவரை "சாட்சாத் நாங்கள் தான் அவர்கள்" என்று சொன்னதும் இல்லை.. சொல்லவும் முடியாது.!. முஸ்லிம் காங்கிரஸ் தனக்கென ஒரு யாப்பினை கொண்டிருக்காத , அதன் ஆரம்பகால அரசியல் பயணத்தில் எழுந்தமானமாக , உணர்வுபூர்வமாக தங்களின் கட்சியின் யாப்பு குர் ஆணும் ஹதீசும் என்று மேடைகளில் முழங்கிய காலங்களில்தான் நாம் சொல்லுகின்ற சம்பவங்கள் யாவும் அரங்கேறின. சரி அந்த வேட்பாளர்களை வாக்காளர் அட்டையில் கானப்பட்டவாறு பார்ப்போம் , (1) அப்துல் காதர் (2) அப்துல் லதீப் (3) ஆலிம் முஹம்மத் ஹிஸ்புல்லா (4) கிரிஷான் ரத்னராஜா (5) பஷீர் (6 ) முதியான்சலாகே லொக்கு பண்டார (7) முஹமது (8) சஷீந்திரன்.
நியமன பத்திரம் தயாரிக்கப்பட்ட வேளையில் ஹிஸ்புல்லா மிகவும் மனக்
கிலேசத்துடன் காணப்பட்டார். ஏனெனில் , நியமனப் பத்திரத்தில் தனக்கு இலக்கம் ஒன்று கிடைக்க வேண்டும் என்பதால் தனது தந்தையின் பெயரான ஆலிம் முஹம்மது ஹிஸ்புல்லா என்று ஆங்கில அகர முதல் எழுத்தான "ஏ" (A) வருமாறு தனது பெயரை கூட தயார்படுத்தி காத்திருந்தார். வழக்கமாக சகல வேட்பாளர்களும் தந்தையர் பெயரை (குடும்பப் பெயர்-Surname) அல்லது இனிஷலை (initial)  தங்களின் முதற்பெயருக்கு பின்னர் எழுதுவதே வழக்கம் , அதனையே ஏனைய அங்கிருந்த வேட்பாளர்களும் செய்தனர் , அங்கில்லாதவர்களுக்கும் அவ்வாறே பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. ஆனால் அப்துல் காதரும் , அப்துல் லத்தீபும் முறையே தங்களின் முதற் பெயரிலேயே ஆங்கில அகர ஒழுங்குப்படி முதலாம் இரண்டாம் இலக்கங்களை வேட்புமனுவில் பெற்றனர். ஹிஸ்புல்லாஹ்வுக்கு  மூன்றாம் இலக்கமே கிடைத்தது. 

No comments:

Post a Comment

"யார் பயங்கரவாதிகள்" By Vijaya Baskaran

--------------------------- 1983 இனக்கலவரம் நடந்தபின் ஆயுதக்குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியில் நடமாடத் தொடங்கின.ஏதோ நமக்கு சுதந்திரம் கிடைத்த...