Wednesday, 26 October 2011

“சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா! “
.

எஸ்.எம்.எம்.பஷீர்             
 "புதிரான உலகமடா - உண்மைக்கு எதிரான உலகமடா - இதில் பொறுமையைக் கிண்டிவிடும் போக்கிரிகள் அதிகமடா"

             
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
மேலும் ஹிஸ்புல்லாவின் சட்டத்தரணி எல். செனிவிரட்ன , ஹிஸ்புல்லாவின்  மனுவை ஆதரித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றில் " ஹிஸ்புல்லாஹ் ஒரு நாடாளுமன்றத்துக்கு முழுமையான காலத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் . எனவே ஒரு அரசியல் கட்சி அதன் பிரதிநிதியின் நாடாளுமன்ற அங்கத்துவ காலத்தை நாடாளுமன்றத்தில் கட்டுப்படுத்துவதற்கு அல்லது  அவரின் ஆசனத்திலிருந்து ராஜினாமா செய்ய அவரை  நிர்ப்பந்திப்பதற்கு ஏதேனும் ஒப்பந்தம் செய்வது அல்லது தீர்மானம் எடுப்பது ஸ்ரீ லங்காவின் அரசியல் யாப்புக்கு முரணானதும் அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதுமாகும்.

(Mr. Seneviratne stated that the petitioner received a letter dated 2-3-91 referring to an electoral understanding and undertaking given at the time of the last General Election that if the SLMC won a seat in the district it would be occupied on a rotational basis and calling upon him to resign from Parliament within seven days as the said two year period had come to an end.
He said that the petitioner replied the letter denying the existence of any electoral undertaking or understanding and refusing to resign his seat.
He stated that a Member of Parliament was elected for a full duration of Parliament and any agreement of decision of Parliament was elected for a full decision of a political party to restrict the period of membership of its representatives in Parliament to compel a member to resign his seat was contrary to and in violation of the Constitution of Sri Lanka.
He said that thereafter the petitioner received a letter dated 19-3-91 from SLMC leader that he had been suspended form the membership of the Sri Lanka Muslim Congress with immediate effect. The letter referred to the petitioner’s absence from the group meeting of the party on 18-3-91 and his conduct in Parliament. The petitioner denied these allegations.
The suspension order was made without giving the petitioner an opportunity to explain.)
மேலும் மனுதாரார் 19/3/91 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடமிருந்து பெற்றார். அக்கடிதத்தில் அவர் முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்துவத்திலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்தப்பட்டுள்ளார் என்றும் ( முதல் வழங்கிய ஏழு நாட்களுக்குள் எம்.பீ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சி அனுப்பிய கடிதத்தின்படி தனது பதவியை ராஜினாமா செய்யாததால் இரண்டாவது கடிதம் கட்சியின் அங்கத்துவத்திலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அனுப்பப்பட்டிருந்தது. ) மேலும் அக்கடிதத்தில் மனுதாரர் (ஹிஸ்புல்லாஹ்) கட்சியின் 18/03/91 ஆம் திகதி நடைபெற்ற குழுக் கூட்டத்தில் அவர்  சமூகமளிக்காதது பற்றியும் , நாடாளுமன்றத்தில் அவரின் நடத்தை பற்றியும் குறிப்பிட்டிருந்த குற்றச்சாட்டுக்களை அவர் மறுப்பதாகவும் அந்த மனுவில் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஹிஸ்புல்லாவுக்கு கட்சியினால் விளக்கமளிக்க சந்தர்ப்பம் அளிக்கப்படாமல் இடை நிறுத்தப்பட்டுள்ளார் என்றும் , அவ்வாறான நடவடிக்கை முறையற்றது என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் அஸ்ரபின் நண்பராகவிருந்து, அஸ்ரப் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆரம்பித்தவுடன் தீவிரமாக அஸ்ரபை எதிர்க்கதொடங்கிய ஐக்கிய தேசிய கட்சியினதும் பிரமதாசாவினதும் ஆதரவாளரான சிரேஷ்ட சட்டத்தரணி பாரூக் தாகிர் ஹிஸ்புல்லாவின் சார்பாக  ஆஜரான இன்னுமொரு சட்டத்தரணியாவார். இந்த வழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆஜரான சில சிரேஷ்ட  சட்டத்தரணிகளுடன் இப்போதைய கல்முனை துணை மேயர் நிசாம் காரியப்பர் ஆஜராகி இருந்தார். அதனை தொடர்ந்த பல வழக்கு தவணைகளிலும் நிசாம் காரியப்பர்  இந்த வழக்கில் ஆஜரானார். ஒருவரின் வாக்குறுதி மீறலுக்காகவும் சட்டவலுவற்ற ஒப்பந்தத்திற்காகவும் ஆஜரான  அனுவபம் , அது தொடர்புபட்ட நிகழ்ச்சிகள் அவருக்கு மீண்டும் ஏதோ ஒருவிதத்தில் ஞாபகத்துக்கு வரலாம், வந்திருக்கிறது  அதில் பொதிந்துள்ள சூழ்ச்சிகள் என்ன என்பதையும் இக்கட்டுரை தொட்டு செல்லும் ஆனால் இது என்ன எம்பீ பதவியா , ஆப்டர் ஆல்  (after all) ஓர் மேயர் பதவிதானே. ஆனாலும் காரியப்பர் அவதிப்பட்டு காரியத்தை கெடுக்க மாட்டார் என்று நம்பலாம்.  

மூன்று ஊர்களிலும் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அஸ்ரப் கலந்து கொண்டபோது அவர் அந்தந்த ஊர் பிரதிநிகளை சுட்டிக்காட்டி அவரே உங்களின் எம்.பீ யாக நிச்சயம் இரண்டு வருடங்கள் இருப்பார் என்பதை வலியுறுத்தி வந்தார். அதிலும் யார் அதிக வாக்கு பெற்று தெரிவு செய்யப்பட்டாலும் அவர் தனது இரண்டு வருடத்தின் பின் தனது பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும்/விட்டுக் கொடுப்பார் என்பதையும் மூன்று வேட்பாளர்களும் ஒரே மேடையில் இருந்த வேளைகளிலும் ஒரு கட்டளையாகவே உறுத்தி சொன்னார். இன்ஷா அல்லா  உங்களின் ஊர் மகன் பாராளுமன்றத்துக்கு நிச்சயம் செல்வார் என்று   கூட்டங்களில் கூடி இருந்த மக்கள் முன்பு அவர் சொன்னபோதெல்லாம் , மக்கள் உணர்ச்சியுடன் அல்லாஹு அக்பர் என்று கோஷமிடுவார்கள்.  ஆனால் உள்ளூர தானே முதலில் வந்துவிட வேண்டும் என்பதில் மறைமுகமாக ஹிஸ்புல்லா குறியாகவிருந்தார். அதனால் மற்ற இரண்டு ஊர் பிரதிநிகளையும் காத்தான்குடியில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில் தவிர்த்து வந்ததுடன், தானே முதன்மை வேட்பாளர் என்பதையும் வெற்றியை தானே பெற வேண்டும் என்பதையும் உறுதி செய்வதில் சில கபடத்தனமான வேலைகளையும் அவர் மேற்கொண்டார். தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் பிரசுரங்கள் என்பவற்றில் மற்றைய ஊர் வேட்பாளர்கள் பற்றிய விபரங்களை வெளியிடாமல் பார்த்துக் கொண்டார் , அவ்வாறான  பிரசுரங்கள் ஏதேனும் ஏனைய பிரதேச வேட்பாளர்களை அல்லது அவர்களில் ஆதரவாளர்கள் விநியோகிக்க வழங்கினால் அவற்றை விநியோகிக்காமல் அழித்துவிடுவதில் மிகக் கவனமாகவிருந்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஏனைய முஸ்லிம் வேட்பாளர்களை விட ஹிஸ்புல்லாஹ் ஐக்கிய தேசிய கட்சியில் பிரதேச மட்டத்தில் அரசியல் செய்தவர் , மேலும் காத்தான்குடி பிரதேச சபையில் பணியாற்றிய ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளரான ஏறாவூரைச் சேர்ந்த ரமளானின் கீழ் பணியாற்றிய அனுபவங்களும் அவருக்குண்டு. மொஹிதீனும் முதன் முதலில் வட கிழக்கு மாகான சபை தேர்தலில் போட்டியிட்டே அரசியலுக்கு வந்தவர். ஒரு பிரபல வர்த்தகர். மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தில் க.பொ. த உயர் தரம் (விஞ்ஞானம் ) வரை கல்வி கற்றுவிட்டு தமது குடும்ப வியாபாரத்தில் ஈடுபட்டவர்,. முஸ்லிம் காங்கிரசில் வட கிழக்கு மாகான சபை தேர்தலில் போட்டியிட்டமை மூலம் அவரின் அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் நியமனப் பத்திரம் கையொப்பமிடும் தருணத்தில் ஹிஸ்புல்லா எவ்வாறு நடந்து கொண்டார் என்பதுடன் முஸ்லிம் காங்கிரசும் எவ்வாறு நடந்து கொண்டது என்பதும் கூட இப்போதைக்கு திரும்பிப் பார்க்கும் தேவையை ஏற்படுத்துகிறது. 

தொடரும்

No comments:

Post a comment

Bengal polls: Abbas Siddiqui's ISF seals seat-sharing deal with Left, talks on with Congress

  Indian Secular Front leader Abbas Siddiqui (Photo | Youtube screengrab) Addressing a press conference, Siddiqui said the Left Front has ag...