“நாம் தமிழரும்” நமது தமிழரும் !!




                                                எஸ். எம்.எம்.பஷீர்  

 

வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!
                                                                  பாரதிதாசன்


இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு புனித யாத்திரை சென்ற சிங்கள யாத்திரிகர்கள் சிலர் மீது , தமிழ் உணர்வு வெறிகொண்ட புலிகளின் இயக்கத்துக்கு , அதன் அஸ்தமனத்தின் பின்னரும் , அதி தீவிரமாக ஆதரவு வழங்கும் சீமான் தலைமையிலான "நாம் தமிழர்" இயக்கத்தின் உறுப்பினர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். அவ்வாறு தாக்கிய இன வெறியர்கள் -காடையர்கள்- மூவரை இந்திய போலீசார் கைது செய்துள்ளனர் என்ற செய்தி இப்போது வெளிவந்துள்ளது.

நாம் தமிழர் இயக்கத்தை வழிநடத்தும் சீமான் போன்ற இன வெறியர்கள் இலங்கை சிங்கள , இந்திய சீக்கிய மக்களின் மீதான துவேஷ கருத்துப் பரப்புரைகள் செய்வதும் , தமிழர்  என்ற பெயரில் , அதிலும் தாங்கள்தான் உண்மையான கலப்பற்ற தமிழர்கள் என்று பிரகடனப்படுத்தி ,   ஒரு அரசியல் கட்சியாக செயற்பட முனையும் பயணத்தில் கூட , புலிகளின் வழியில் தமது மானசீக தலைவனின் பயங்கரவாத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். சென்னையிலுள்ள மகாபோதி விகாரையில் தங்கியிருந்த யாத்ரீகர்கள் வீதியில்  நடமாடும் பொது  அடையாளம் காணப்பட்டு மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். அதனால் தாங்கள் தான் தமிழர்கள் என்று சொல்பவர்கள் தங்களின் (அ)நாகரீகத்தை  வெளிப்படுத்தி தங்களையும் தமிழரையும் புலி வழிநின்று அடையாளப்படுத்தியுள்ளார்கள்.



இவ்வாறே இந் நாம் தமிழரின் வழிகாட்டிகளான புலிகளும் தங்களின் பாணியில் வெட்டியும் சுட்டும் கொல்லும் கைங்கரியத்தை  சிங்களவர்கள் மீது  அனுராதபுரத்திலும், அரந்தளவாயிலும், தலதா மாளிகையிலும் முஸ்லிம்கள் மீது அவர்களின் வணக்கத் தளங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டோர் மீது பல இடங்களிலும் , குறிப்பாக ஹஜ் யாத்திரை மேற்கொண்டு வீடு திரும்பும் வழியில் ஒன்தாச்சிமடத்திலும் மேற்கொண்டனர். அந்த வரலாற்று பின்னணியில் நோக்கும் போது, இது ஆச்சரியமான ஒரு நிகழ்வல்ல. புலியும் நாமெல்லாம் "தமிழர்" தானே என்று கூறியே முஸ்லிம்களையும் வெட்டியும் சுட்டும் கொன்றனர் என்பது ஒரு புறமிருக்க , சிங்கள யாத்திரீகர்கள் தங்களின் நாட்டில் அதுவும் தமிழர் மாநிலத்தில் "நாம் தமிழர்களால்" தாக்கப்பட்டது தமிழ் கூறும் "நல்" உலகெங்கும் ஒரு அநாகரீக செயலாக்க பார்க்கப்படப்போகிறது.
செம்மொழி மாநாடு நடப்பதை எதிர்த்த நாம் தமிழர் அதற்கெதிரான செயற்பாடுகளை முடிக்கிவிட்டிருந்தனர்.  அதில் கலந்து கொல்லும் நபர்களின் பெயர் விபரங்கள் மின்னஞ்சல் முகவரிகள் அவர்களின் கைகளுக்கு கிடைத்திருந்தன . அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்த தேசத்திலிருந்து அந்நிகழ்வில் பார்வையாளராக கலந்து கொண்ட அல்லது கொள்ளவிருந்த நபர்களின் பெயர்களை மின்னஞ்சல் முகவரிகளை  குறிப்பிட்டு நாம் தமிழர் இயக்கத்தின் பெயரால் தமது கட்சி /இயக்க கொள்கைகளை பரப்ப அளித்ததோடு எமக்கு அவர்களின் கட்சி கொள்கைகளை விளக்குமாறும் , தங்களோடு இணைந்து செயற்பட  தூண்டுமாறும் , அவர்களின் கட்சிக்காரர்களுக்கு வேண்டுகோளும் விடுத்திருந்தனர் . செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள நாடி அனுமதி பெற்ற பின்னர் அங்கு செல்வது ஆபத்தானது என்ற உள்ளுணர்வு ஏற்பட நான் அங்கு செல்வதை தவிர்த்துக் கொண்டேன். நல்லவேளை இந்த காட்டுமிராண்டி "நாம் தமிழரிடம்" நான் அகப்பட்டிருந்தால் !!. சரி அது போகட்டும் எனது பெயரை எனது மின்னஞ்சல் முகவரிகளை பகிரங்கமாக எனது அனுமதின்றி வெளியிட்டமை தொடர்பாக எனது ஆட்சேபனையை  27/07/2011   அன்று மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருந்தேன். அந்த மின்னஞ்சலில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்.
--
நாம் தமிழர் தலைமையகம்,
கதவு எண்.8.மருத்துவமனை சாலை,
செந்தில் நகர்,
போரூர், சென்னை-600 016.

அன்புடையீர்.

 உலகின் பயங்கரவாத இயக்கமான புலிகளையும் அதன் கொல்லப்பட்ட தலைவனான பிரபாகரனையும்  போற்றி புகழும் இயக்கமான உங்களின் இனையத்தளத்தில் எனது பெயரையும் மின்னன்ஞ்ஜல் முகவரியையும் பிரசுரித்து வாசகர்களை அல்லது உங்களின் கட்சி அல்லது கொள்கையை ஆதரிக்கும் நபர்களை என்னையும் என்னைப்பொன்ற கருத்துக்கொன்ட சிலரையும் தொடர்பு கொன்டு உங்கள் தரப்பு கருத்துக்களை எடுத்துவைக்க வேன்டுதல் விடுத்துள்ளீர்கள். ஏனது அனுமதியின்றி எனது பெயரை , மின்னஞ்ஞல் முகவரியை வெளியிட்டதும் தமிழ் இண  மொழி வெறிகொன்ட ஒரு சமூகப்பகுதியினரை தூண்டி எம்மை மறைமுகமாக அச்சுருத்தும் ஒரு செயலாகவும் அமைகிறது. எனவே எனது பெயர் மின்னஞ்ஞல் முகவரியை உடனடியாக உங்களின் சகல இனையத்தள்ங்களிலுமிருந்து நீக்குமாறு இத்தால் வேன்டுகிறேன்.

இவ்வேன்டுகோளினை கவனத்தில் கொள்ளாவிட்டால் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அன்புடன்
ஸெயெட் எம். எம்..பஷீர்
--
 
ஆயிரக்கணக்கில் இந்திய தமிழ் நாட்டு சாதாரண , வியாபார நோக்கம் கொண்ட தமிழர்கள் இலங்கை சென்று வரும் காலகட்டத்தில் , அதுவும் சென்றவருட உல்லாச பயணிகளில் இந்திய உல்லாச பயணிகள் தொகை அதிகளவாக காணப்பட்ட நிலையில் , இந்திய வியாபாரிகள் சேலை வியாபாரம் கூட தெருத்தெருவாக வட கிழக்கில்  மட்டுமல்ல அதற்கப்பாலும் சென்று தங்களின் அங்காடி வியாபாரத்தை செய்கின்ற சூழலிலும் , அடிக்கடி விசாக்காலம் முடிந்து தங்கி கைது செய்யப்படும் பின்னணியிலும் , இந்த நாம் தமிழரின் காட்டுமிராண்டித்தனம் ,புலி பிராண்டுதனம் நடைபெற்றிருக்கிறது. புலிகளிடம் மனித விரோதத்தை இன குரோதத்தை , பயங்கரவாதத்தை , தற்கொலையை தவிர வேறேன்னவற்றை  கற்றுக் கொள்ளமுடியும்.  


 பல நூற்றாண்டுகளாக இந்திய வம்சாவளியாக வாழ்ந்து இலங்கை பொருளாதாரத்தை வளம்படுத்தி இலங்கை மக்களாய் மாறி மலையக மக்களாய் இனத்துவ அடையாளம் பெற்று வாழும் மாபெரும் தமிழ் சமூகம் தமது பூர்வீக மக்கள் என்று கூறும்  இந்த நாம் தமிழர் இயக்கம்  செய்த இழி செயலால் நிச்சயமாக அருவருப்படைவார்கள்.  அதுவும் தங்களின் வாழ்வுரிமையை பறிக்க கால்கோளிட்ட தமிழ் தேசிய பிதாமகர்களின் பேரப்பிள்ளைகளான புலிகளின் வாரிசுகள் நாங்களும்தான் என்று கடல் கடந்து தமிழின் பேரில், தொப்புள் கொடி உறவின் பேரில் இந்த அநாகரீகத்தை செய்த தமிழகத்து நாம் தமிழர் இயக்கம் குறித்து மலையகத் தமிழகம் நிச்சயம் மனம் வருந்தியிருக்கும். இலங்கையின் சென்னைக்கான தூதுவர் மலையகத்தமிழர் கிரிஷ்ணமூர்த்தி கூட  இவர்களை நினைத்து வெட்கித்திருப்பார்.  புலிகள் சிங்களவர்கள் மீது பல தடவைகள் தாக்குதல்களை நடத்தி தென்னிலங்கையில் கலவரங்களை தூண்ட பல பிரயத்தனங்களை செய்து தமது எதிர்பார்ப்புகள் தோல்வியுற்று தாமே அழிந்து போன பின் இந்த நாம் தமிழர் அதே கைங்கரியத்தை கையாண்டிருக்கிறார்கள்.
  

நாம் தமிழர் இயக்க இணையம் பெரும் தமிழர் கலாநிதி ஞானேந்திரனின்  உருவாக்கத்தில் சீரும் புலியின் இலச்சினையுடன் வெறும் சவடால் வாசகங்களுடன் புலிகளே கைவிட்டதையொத்த , கடைபிடிக்காமல் போன , கவைக்குதவாத  " விழுந்து விடாத வீரம் மண்டியிடாத மானம்"   என்ற கோஷத்துடன் பவனி வருகிறது. ஆனால் பெரும் தலைவர் காமராஜர் என்றால் பட்டி தொட்டியெங்கும் தெரிந்த தமிழர் அவர். ஆனால் இந்த பெரும் தமிழர் எதில் பெரும் தமிழர் , எதில் கலாநிதி என்பதைவிட இவருக்கு இந்த பட்டத்தை சூட்டியவர் யார். ஒருவேளை பிரபாகரன் பாணியில் சீமான் கூட பட்டங்களை தமது பட்டாளங்களுக்கு சூட்டலாம்.  திராவிடரின் " திராவிடர் " அடையாளத்தை குறுக்கி தமிழ் தாளத்தை மட்டும் முன்னிலைப்படுத்தும் முயற்சி மூலம் நாம் தமிழர் இயக்கம் இனிமேல் "அச்சம் என்பது மடமையடா , அஞ்சாமை திராவிடர் உடைமையடா " என்று கூறாமல் திராவிடருக்கு பதிலாக "அஞ்சாமை தமிழர் உடைமையடா  "  என்று வேறு கூறலாம், ஆனாலும் இப்போதைக்கு தமிழகத்தின் திராவிட தலைவியும் , திராவிட தந்தை பெரியாரும் சற்று இவர்களின் சுத்த தமிழர் கோஷத்துக்கு  சங்கடங்கள்தான் !.   


நாம் தமிழர் இயக்க இணையம் பெரும் தமிழர் கலாநிதி ஞானேந்திரனின்  உருவாக்கத்தில் சீரும் புலியின் இலச்சினையுடன் வெறும் சவடால் வாசகங்களுடன் புலிகளே கைவிட்டதையொத்த , கடைபிடிக்காமல் போன , கவைக்குதவாத  " விழுந்து விடாத வீரம் மண்டியிடாத மானம்"   என்ற கோஷத்துடன் பவனி வருகிறது. ஆனால் பெரும் தலைவர் காமராஜர் என்றால் பட்டி தொட்டியெங்கும் தெரிந்த தமிழர் அவர். ஆனால் இந்த பெரும் தமிழர் எதில் பெரும் தமிழ் , எதில் கலாநிதி என்பதைவிட இவருக்கு இந்த பட்டத்தை சூட்டியவர் யார். ஒருவேளை பிரபாகரன் பாணியில் சீமான் கூட பட்டங்களை தமது பட்டாளங்களுக்கு சூட்டலாம்.  திராவிடரின் " திராவிடர் " அடையாளத்தை குறுக்கி தமிழ் தாளத்தை மட்டும் முன்னிலைப்படுத்தும் முயற்சி மூலம் நாம் தமிழர் இயக்கம் இனிமேல் "அச்சம் என்பது மடமையடா , அஞ்சாமை திராவிடர் உடைமையடா " என்று கூறாமல் திராவிடருக்கு பதிலாக "அஞ்சாமை தமிழர் உடைமையடா  "  என்று வேறு கூறலாம், ஆனாலும் இப்போதைக்கு தமிழகத்தின் திராவிட தலைவியும் , திராவிட தந்தை பெரியாரும் சற்று இவர்களின் சுத்த தமிழர் கோஷத்துக்கு சற்று சங்கடம்தான் !. பாரதிதாசனுக்கு பிறகு தமிழ் இன உணர்வு மேலோங்கி எழுகிறது , இது பல்லின பலசமூக உறவை மேம்படுத்தும்    உட்கிடையான விழுமியங்களை கொண்ட தமிழகத்தில் ஆபத்தான சூழலை ஏற்படுத்தப் போகிறதா அல்லது வெறுமனே தமிழக சினிமாபோல் வெறும் சோபனை காட்சிகளுடன் வியாபாரமாக மட்டும் நிலைத்துவிடப் போகிறதா என்பதை பொறுத்திருந்துதான்   பார்க்க வேண்டும். ஆனால் நாமக்கல் ராமலிங்கம் பாடிய "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா "  என்பதை இப்படித்தான் சீமான் கூட்டம் நிருபிக்க புறப்பட்டால் நாம் தமிழர் என்பதிலிருந்து நாம் சீமான் சொல்லும் தமிழர் அல்ல என்பதை நிருபிக்க வேண்டிய தேவையும் தமிழகத்து மக்களுக்கு உண்டு.! 

இலங்கையில் இன ஒற்றுமைக்கு மீளினக்கத்துக்கு பல முயற்சிகள் பரவலாக நாடெங்கும் முன்னெடுக்கப்படும் வேளையில் வடக்கில் சுமார் இருபத்தைந்து விழுக்காட்டுக்கு மேலாக இலங்கையின் தேசிய அரசியல் கட்சிகளுக்கு வட மாகாணத்தில் தமிழ் மக்கள் வாக்களித்த சூழலில் , தேசிய ஐக்கியத்துக்கு அவசியமான முயற்சிகள் அரசியல் தீர்வு பற்றிய விவாதங்கள் முனைப்பு பெறுகின்ற வேளையில் இலங்கை சமூக உறவுக்கும் இன சவ்ஜன்யத்துக்கும் இடையூறு செய்யும் விதத்தில் சிங்கள யாத்திரீகர்கள் மீதான தாக்குதலை மேற்கொண்ட நாம் தமிழர் இயக்கத்துக்கு எதிராக தமிழர்கள் இலங்கையில் குரலெழுப்ப வேண்டிய தேவையும் இல்லாமல் இல்ல


 http://www.bazeerlanka.com/

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...