Sunday, 15 May 2011

பயங்கரவாதத்துக்கான உருவச்சிலை - எதிர் – பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம்

 தேனீ  / சலசலப்பு (9 நவம்பர் 2010)- ஆக்கம் : எஸ்.எம்.எம். பஷீர்
eric and ltteஉலகம் முழுவதிலும் சாதாரணமாக பயங்கரவாத அச்சுறுத்தல் இடம் பிடித்துள்ளது. இந்த அச்சுறுத்தல்கள் சில நாட்களின் பின் சாதாரணமான ஒரு ஏமாற்று வித்தையாக மாறிவிடுகின்றன. இதில் அறியக்கூடியது என்னவெனில் மேற்குலகம் இஸ்லாமிய பயங்கரவாதத்தை மட்டும் வெகுவாக மிகைப்படுத்தி அதன் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு கடிவாளமிட்டு மாறாக நடக்கிறது. பயங்கரவாதம் என வரும்போது மேற்கு தெளிவான பாகுபாட்டுக் கொள்கையை வளர்க்கிறது. இது தமிழீழ விடுதலைப் புலிகள் விடயத்திலும் அதே அபிப்ராயமுடையதாகவே இருக்கிறது. இடைநிகழ்வாக  இந்தக் கடும் உணர்ச்சி வயக்கருத்துக்களுக்கு மேற்குலகில் வாழும் தகா வழிகளுக்கு பெயர் பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தினர்களும் அனுதாபிகளும் ஜனநாயகப் பாணியில் தங்கள் சுயாட்சிமுறைக் கோரிக்கைகளைத் திரும்பவும் செல்லுபடியாக்க முயல்கிறார்கள்.
இதற்கிடையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சட்டக் கழுகு அமரிக்காவிலுள்ள தமிழீழம் என்றழைக்கப்படும் கற்பனைப் பூமிக்கு பிரதமராக நியமிக்கப் பட்டுள்ளதுடன், பிரான்ஸில் தமிழ்செல்வனுக்கு அவரது மரணத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவையொட்டி ஒரு உருவச்சிலை அமைக்கப் பட்டுள்ளது. கடைசியாக நிகழ்ந்த சமாதானப் பேச்சு வார்த்தைகளின்போது, (2002 – 2006 ) தமிழ்ச்செல்வன் உட்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக் குழுவினருக்கு பிரான்ஸ் தங்குவதற்கு இடமளித்ததுடன் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நிகழ்ந்த பேரம் பேசல் பேச்சு வார்த்தைகளுக்கு ஏற்ற வசதிகளையும் செய்து கொடுத்திருந்தது.


தமிழீழ விடுதலைப் புலிகளின் பணிசார் அங்கத்தினர்கள் சுதந்திர உணgajan tomstoneர்வின் வெளிப்பாட்டை அனுபவித்து மகிழ்ந்ததுடன், ஈழநாடு பத்திரிகையாளர்கள் கப்டன் கஜன் (கந்தையா கஜேந்திரன்) மற்றும் லெப்.கேணல் நாதன் ஆகியோர் அடையாளம் தெரியாத கொலையாளிகளினால் 26 அக்டோபர் 1996 ல் சுட்டுக் கொல்லப் பட்டபோது அவர்கள் தேசிய வீரர்களாகச் சித்தரிக்கப் பட்டார்கள். பிரான்ஸில் அவர்களுக்கு சகல மரியாதையுடன் கூடிய நல்லடக்கம் இடம்பெற்று அவர்களின் கல்லறைக்கற்களில் அவர்களின் இராணுவத் தரங்கள்,உருவப்படங்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளச் சின்னமும் செதுக்கப் பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளச் சின்னம் வெளிப்படுத்தியது உறுமும் புலியின் உருவத்தை மட்டுமல்லாது குறுக்காக வைக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளையும். சில வருடங்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரான்ஸியப் பிரிவினால் சபாலிங்கம் கொல்லப்பட்ட பயங்கரவாத இலக்காக மாறியது.
தமிழ்செல்வனின் பிரான்ஸ் விஜயத்தின்போது அவருக்கும் அவருடன் பயணித்தவர்களுக்கும் சூடான வரவேற்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கததினர்கள் மற்றும் பிரான்ஸிலுள்ள அவர்களின் ஆதரவாளர்களாலும் வழங்கப் பட்டது. தமிழ்செல்வன்,கருணா ஆகியோர் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பத்திரிகையாளர்களான கஜன் மற்றும் நாதன் ஆகியோரின் கல்லறைகளுக்கு விஜயம் செய்து அவர்களின் நாயகர்களுக்கு மரியாதை செலுத்தினர்.அந்த நாட்கள்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் சுதந்திர உணர்வின் வெளிப்பாட்டை வாய்ப் பேச்சாலும் துப்பாக்கிகளாலும்(சபாலிங்கம்) அனுபவித்து மகிழ்ந்த நாட்கள்.  தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமர் கொலை செய்யப் பட்டதுடன் நிலமை மோசமாக மாற்றம் பெற்றது. இன்னும் சொல்லப்போனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்தான் கடைசியாக வெளிநாட்டுப் பயங்கரவாதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்தவை.
எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும்கூட லா குர்னேவோ மாநகரசபைச் சுற்றடைப்புக்குள் தமிழ்ச்செல்வனின் உருவச்சிலையின் திறப்பு விழாக்கால சிறப்பு நிகழ்வினை ஒரு பிரான்ஸிய மாநகரசபை உறுப்பினர் நடத்திவைத்தது வெறுக்கத் தக்கதும் அதிர்ச்சி அளிப்பதுமான ஒரு செய்கை. தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்pனர்கள் விஜயம் செய்து சுதந்திர உணர்வின் வெளிப்பாட்டை அனுபவித்து மகிழ்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு இது ஒரு முன்னுதாரணமாகி விடக்கூடும். தமிழ்ச்செல்வனின் உருவச்சிலையினை பிரான்ஸில் திறந்து வைத்தது, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு ஊடகங்களுக்கிடையே உணர்ச்சிவயக் கருத்துக்களை திரும்பவும் ஒலிக்க வைத்து அவர்களின் பயங்கரவாதத் தலைவர்களுக்கும் மற்றும் தியாகிகளுக்கும் அவர்கள் இறந்த இடங்கள், அழிந்துபோன இடங்கள், புதைத்த இடங்கள் ஆகியவற்றில் அவர்களின் இறப்புக்களைக் கொண்டாட முடியாதபடியால், ஐரோப்பிய நாடுகளில் அவர்களுக்கு அழகிய கல்லறைகளை கட்டும் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட முயல்வார்கள். எப்படியாயினும் பிரபாகரனின் சிரஞ்சீவித் தன்மை இப்படியான ஆடம்பர நினைவுக் காட்சியகங்களுக்கு ஒரு விதிவிலக்காக இருக்கும்.
வழக்கம் போல பிரான்ஸில் தமிழ்ச்செல்வனின் உருவச்சிலைக்கு வழங்கப்பட்ட அனுமதியும், பிரான்ஸிய அரசியல்வாதியின் ஞாபகத் திறப்பு விழா பங்கேற்பும் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்ப வைக்கிறது: பிரான்ஸ் அரசாங்கம் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு குழி பறிக்கிறதா? என்பதே அக் கேள்வி
குறிப்பு :- தமிழ்ச்செல்வனைப் பற்றி லங்கா கார்டியன் மற்றும் தேனி இணையத் தளத்திலும் வெளியான எனது முந்தைய கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன்.
தமிழ்ச்செல்வனும் கிழக்கு முஸ்லிம்களும் – ஒரு நினைவு மீட்டல்
முஸ்லிம் சமூகத் தலைவர்களுடனான ஒரு சந்திப்பில் தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தவறுகளை ஏற்றுக் கொண்டதுடன், அவர்களைத் தங்களுடன் கை கோர்க்க வரும்படி அழைப்பு விடுத்தார். அவர் கூறியது நாங்கள் தவறு செய்து விட்டோம் அதை யாராலும் மறுக்க முடியாது. சிங்கள அரசு எங்களிடம் எவ்வளவு பாகுபாடு காட்டுகிறது என்பதை சுனாமி தெளிவாக எடுத்துக்காட்டியது.சிங்களத் தலைவர்கள் ஒருவரும் எங்களைச் சமமாகக் கருதமாட்டார்கள். எங்கள் சொந்த ப+மியில் எங்களைப் பிரித்து வைப்பது மூலம் அவர்களது இலக்கை அவர்கள் அடைந்து விட்டார்கள். தமிழ் பேசும் மக்களை எப்போதும் பிரிவினை செய்து ஆட்சி செய்வதை நாங்கள் அனுமதிக்க முடியாது. நாங்கள் ஒன்று சேர்ந்து எடுக்கும் தீர்வு மூலம்தான் எங்களின் பொதுவான இலக்கை எட்டமுடியும்.
“மனிதன் செய்யும் தீங்குகள் அவனுக்குப் பின்னும் உயிர் வாழும். நல்லவைகள் அவனது எலும்புகளுடன் கல்லறையுள் புதைக்கப்பட்டு விடும்” – ஜூலியஸ் சீசர்
(நவம்பர் 9, கொழும்பு, லங்கா கார்டியன்) காலம் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்புத் தலைவர் கௌசல்யனின் மரணச்சடங்கில் கலந்து கொள்ள 2005 பெப்ரவரியில் தமிழ்ச்செல்வன் மட்டக்களப்புக்கு வருகை தரும் வரை  பெரும்பாலான கிழக்கு வாழ் முஸ்லிம்களுக்கு அவரைப் பற்றித் தெரியாது. தமிழ்ச்செல்வன் தனது பரிவாரங்களுடன் கிழக்கு மாவட்டங்கள் முழுவதற்கும் விஜயம் செய்யக் கூடியதாக இருந்தது.முஸ்லிம் தலைவர்களைச் சந்திப்பதுடன் கிழக்கு மாகாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டைப் பலப் படுத்திக் கொள்வதுமான பல நோக்கங்களைக் கொண்ட ஒரு விஜயமாக அது இருந்தது. முஸ்லிம் தலைவர்களின் நிகழ்ச்சி நிரலின் பிரதான அம்சமாக கலப்பற்ற ஒரு சுமுக நிலைக்கான எதிர்பார்ப்பே இருந்தது. ஏனெனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளின் கைகளில் அவர்கள் தசாப்தங்களாக இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். மறுபக்கத்தில் வடக்கு முஸ்லிம்கள் ‘சைரான்’ குழு ஒரு  இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டதால் தங்களது மீள்குடியேற்றத்தில் நம்பிக்கை இழந்தவர்களாக இருந்தார்கள். இந்த விரிவாக்கங்களின் பின் விளைவுகளினாலேயே 2005ல் தமிழ்ச்செல்வன் முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்தார். இது அவரது மறைவுக்கு இரண்டரை வருடங்களுக்கு முன்பு நடந்தது. முன்னாள் காத்தான்குடி நகரசபைத் தலைவர் காலஞ்சென்ற அகமத்லெப்பை அவர்களின் சகோதரர்,அப்துல்ஜவாத் அவர்கள்  கிழக்கு மாகாணத்தில் பிரபலமான முஸ்லிம்களை தமிழ்ச்செல்வன் மற்றும் இதர தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களுடனான  கொக்கட்டிச்சோலையில் (இப்போது இது இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது) நடந்த சந்திப்பில் வழிநடத்தினார். முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் நிலையங்களின் உபதலைவரான சட்டத்தரணி ஏ.ஜவாப் அவர்கள் இந்தச் சந்திப்பானது நமது முன்னோர் மரபு வழி வந்த தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவையும் ஒற்றுமையையும் மீளக் கட்டியெழுப்புவதாக இருந்ததாக ஆர்ப்பரிப்புடன் சொன்னார்.
கிழக்கு  இராணுவத்தால் வெற்றிகரமாகக் கைப்பற்றப்படும் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் தான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்கிற புரிந்துணர்வு முஸ்லிம் சமூக மற்றும் அரசியல் தலைவர்களின் இதயங்களில் ஆழமாக வேரூன்றி இருந்தது. இந்தப் புரிந்துணர்வு வெளிப்படுத்தியது பல்வேறு வண்ணமான தமிழ் போராளிக் குழுக்களின் அவதாரங்கள் அவர்களின் மனநிலையில் ஆழமாகப் பதித்து வைத்திருந்த அச்சத்தையே. இருந்த போதிலும் திரு.அஷ்ரப் அவர்கள் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் தயவு தாட்சண்யம் பாராமல் தமிழீழ விடுதலைப் புலிகளை விமர்சிப்பதில் சாதனை படைத்திருந்தார். அஷ்ரப் அவர்கள் தனது மரணத்துக்கு இரு வாரங்களுக்கு முன்னர் தென்னிந்திய தமிழ் பத்திரிகையான ‘விடிவெள்ளி’ யுடன் நிகழ்த்திய நேர்காணலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களது இணையத்தில் தமிழீழம் என்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம்களுக்கும் உரியது எனத் தங்கள் நிலைப்பாட்டினை தளர்த்தி பிரசுரம் செய்திருப்பதைக் குறிப்பிட்டு, இந்த மெய்யான சாதனையை ஏற்படுத்தியதுக்காக அல்லாவைத் துதித்தார்.
ஹக்கீமும் தமிழீழ விடுதலைப் புலிகளும்
பிரபாகரனுக்கும் ஜனாதிபதி பிரேமதாஸவுக்கும் தேனிலவு நடைபெற்ற சமயம், 1989 ல் நடந்த அனைத்துக் கட்சிகள் மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகக் கலந்து கொண்ட திரு.ஹக்கீம் யோகரட்ணம் யோகியுடன் ஒரு மென்மையான தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டார். ஹக்கீமை பொறுத்தமட்டில் இது தமிழீழ விடுதலைப் புலிகளின் வலுவற்ற நிலையிலுள்ளவர்களுடனான ஒரு தொடர்பு மாத்திரமே. இருந்த போதிலும் சேகு தாவுத் பஷீர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்pல் இணைந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சகோதர அமைப்பான ஈரோஸில் அவருக்கிருந்த அனுபவம் காரணமாக அவர் ஒரு பயனுள்ள நபராகக் கருதப்பட்டார். அவருக்கு வி.பாலகுமாரோடு நீண்டகாலமாகவே தொடர்பு இருந்ததுடன் அவரையே தனது அரசியலுக்கு முன்மாதிரியான உதாரணமாகக் கருதினார்.எரிக் சொல்கைமுடன் ஹக்கிம் தனியாகப் பிரபாகரனைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்த உபகரணம் இவரே என நம்பப்படுகிறது. 1989 பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈரோஸ் வேட்பாளராக பஷீர் போட்டியிட்ட பொழுது முஸ்லிம்கள் ஈரோஸ_க்கு வாக்களிக்கா விட்டால் ஒரு சிறிய பையுடன் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறவேண்டி இருக்கும் என எப்பொழுதும் அவர்கள் மனதில் சிறிது சிறிதாக ஒரு உணர்வை பஷீர் ஏற்படுத்தி இருந்தார்.
ஹக்கீம் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றிக்   குறிப்பிடும் போதெல்லாம் எப்போதும் இந்த உளப் பயம்தான் சாட்சியாக இருந்துள்ளது. அவர் தனது தலைவரை தமிழீழ விடுதலைப் புலிகள்தான் கொலை செய்தார்கள் என ஒளிவுமறைவாக குற்றம் சாட்டிய போதிலும் பகிரங்கமாக மௌனம் சாதித்தே வந்தார். அத்துடன் அவரது மரணத்தைப் பற்றி விசாரணை செய்ய சுதந்திரமான ஒரு ஆணைக்குழு அமைக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தன்னுடைய நிலையை திரும்பவும் நிலைநிறுத்த வேண்டியதற்காக விசேடமாக கிழக்கில், ஸ்ரீpலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாழ்நாள் தலைவர் என்று அவர் பெயரை பயன்படுத்த அவர் ஒருபோதும் மறந்ததில்லை. பிரபாகரனைச் சந்தித்ததிலிருந்து அவருடைய பாணி அரசியலால் ஹக்கீம் பெரிதும் கவரப்பட்டார். அவர் தன்னை முஸ்லிம்களின் தேசியத் தலைவர் என அழைப்பதையும், அவரைவிட்டு விலகியவர்களைத் துரோகி என அழைப்பதையுமே விரும்பினார்.
சமீபத்தில் மருதமுனையில் நடந்த ஒரு கூட்டத்தில் ஹக்கீம் கூறியது, பாராளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் தன்னை தமிழீழ விடுதலைப் புலிகளின் தரகர் என அழைப்பதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் நல்லது செய்யும்போது அவர்களைத் தட்டிக் கொடுத்தும் அவர்கள் தவறு செய்யும்போது அவர்களைக் கண்டிக்கவும் தான் தவறுவதில்லை என்று. தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லிம்களுக்கு ஏதாவது நல்லது செய்திருப்பதைப் பற்றி ஹக்கீம் அறிந்திருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை. அப்படிச் செய்திருந்தால் அவற்றில் ஒன்றை அவர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போதுமே எந்த நல்லதையும் செய்ததில்லை,மாறாக அவர்களை அடக்கி வைப்பதையும் போர் தொடுப்பதையுமே செய்து வந்தார்கள்.
ஹக்கீம் தமிழ்செல்வனுடன் பலதடவைகள் தொலைபேசியில் உரையாடியிருப்பதாக பாராளுமன்றில் தம்பட்டமடித்தார்.ஆனால் மூன்றாவது பகுதியினரின் பிரதிநிதித்துவம் பற்றி விவாதம் உயர்ந்தபோதும் தமிழ்செல்வன் ஹக்கீம் – பிரபா உடன்படிக்கை சம்பந்தமாக குற்றச்சாட்டுகள் எழுந்த போதும், அந்த ஒப்பந்தம்’ கிழித்தெறியப் பட்டு விட்டதாகவும் அது இனி இல்லை என்றும் தமிழ்செல்வன் ஆணித்தரமாக குறிப்பிட்டார். புலிகளின் முதுகைச் சொறிந்த போது அகமகிழ்ந்த ஹக்கீம் அதன் வாலில் ஆணியடிப்பதில் தோற்றுப் போனார்.
ஹக்கீமின் அனுதாப வெளிச்சத்தில் என்னால் பாhக்க முடிவது, தமிழ்செல்வனுடன் முஸ்லிம் தலைவர்கள் கிழக்கில் 2005 ல் நடத்திய சந்திப்பின் ஒப்புமையை. இந்த நினைவு மீட்டல் நிகழ்வுகள் குறிப்பாகச் சுட்டுவது, முஸ்லிம்கள் அரசியல் அணுகு முறைகளில் முதிர்ச்சியடையாதவர்களாய் இருப்பதையே அதன் விளைவாக வண்டியை குதிரைக்கு முன்னே கட்ட உத்தேசித்து முஸ்லிம் சமூகத்தை சீரழித்து வருகிறார்கள். நீண்ட கால தொலைநோக்கக் குறைவினாலும் முரணான நிலைப்பாடுகளாலும் முஸ்லிம்கள் எப்போதும் வெறும் கறிவேப்பிலையைப் போல பயன்படுத்திக் கொள்ள தங்களை வழங்குகிறார்கள். கல்குடா தொகுதியின் மசூதிகள் கூட்டமைப்பின் தலைவர் திரு.ஏ.ஐ. அப்துல்லா, தமிழ்செல்வனுடன் சந்திப்பை நடத்தியபோது தமிழீழம அமைப்பதற்கே தமிழ்ச்வெல்வன் முக்கியத்துவம் கொடுத்துப் பேசியபோது அவர் சொன்னார்; “தமிழீழம் சந்தேகமின்றி நிச்சயம் ஒருநாள் அமையும். ஆனால் அடிப்படையில் அது வெல்ல வேண்டியது முஸ்லிம் – தமிழ் ஒற்றுமையை”.
தமிழ்செல்வனுக்கு முஸ்லிம்களின் அனுதாபம்
இதில் மிகவும் ரசகரமான நிகழ்வு, லண்டனைத் தளமாகக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பான ஐ.பி.சி வானொலி நடத்திய தமிழ்ச்செல்வனுக்கான  அனுதாப நிகழ்வில் குவைத்தில் இருந்து தொலைபேசி மூலம் இணைந்து கொண்ட ஒரு மனிதர், தன்னை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தன்பெயர் றிஸ்வி என்றும் அறிமுகம் செய்து கொண்டு தமிழ்ச்செல்வனுக்கு தனது இரங்கல்களைத் தெரிவித்தார். அவர் தன்னை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் எனக் கூறிய போதிலும் ;றிஸ்வி’ என்கிற பெயரை முஸ்லிம்கள் உச்சரிப்பது போல உச்சரிக்க முடியாமல்’;றிட்ஜிவி’ என உச்சரித்ததோடு இரங்கல் உரையை முடிக்கும்போது புலிகளின் பல்லவியான “புலிகளின் தாகம்.தமிழீழத் தாயகம்” எனக்கூறி முடித்தார். இத்தகைய கபடநாடகம் முகம் தெரியாத தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் நடத்தப் படுவது சர்வ சாதாணம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான முஸ்லிம்களின் பெருந்தன்மை
முஸ்லிம் சமூகத் தலைவர்களுடனான ஒரு சந்திப்பில் தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தவறுகளை ஏற்றுக் கொண்டதுடன், அவர்களைத் தங்களுடன் கை கோர்க்க வரும்படி அழைப்பு விடுத்தார். அவர் கூறியது நாங்கள் தவறு செய்து விட்டோம் அதை யாராலும் மறுக்க முடியாது. சிங்கள அரசு எங்களிடம் எவ்வளவு பாகுபாடு காட்டுகிறது என்பதை சுனாமி தெளிவாக எடுத்துக்காட்டியது. சிங்களத் தலைவர்கள் ஒருவரும் எங்களைச் சமமாகக் கருதமாட்டார்கள். எங்கள் சொந்த ப+மியில் எங்களைப் பிரித்து வைப்பது மூலம் அவர்களது இலக்கை அவர்கள் அடைந்து விட்டார்கள். தமிழ் பேசும் மக்களை எப்போதும் பிரிவினை செய்து ஆட்சி செய்வதை நாங்கள் அனுமதிக்க முடியாது. நாங்கள் ஒன்று சேர்ந்து எடுக்கும் தீர்வு மூலம்தான் எங்களின் பொதுவான இலக்கை எட்டமுடியும்.
தூதுக்குழுவில் இடம் பெற்றிருந்த முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்கள் மீதான  தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் சுறுசுறுப்பாக வெளிச்சம் போட்டுக்காட்டிய கிழக்கின் முக்கிய நகரங்களைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், 1915ம் ஆண்டு அநகாரிக தர்மபாலவும் அவரது அடியாட்களும் செய்ததின் பின் எந்த ஒரு சிங்களத் தலைவருமே முஸ்லிம்களை வெளியேற்றவோ கொலை செய்யவோ,கொலை செய்யும்படி ஆணையிடவோ தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களைப் போல நடந்து கொண்டதில்லை என்கிற போதும், தம்பி என்கிற அடைமொழியுடன் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட காத்தான்குடியைச்சேர்ந்த தூதுக்குழுவின் தலைவர் திரு. ஏ.ஜாவத் உட்பட ஏனைய தலைவர்கள் எல்லோருமே தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த குற்றங்களை எல்லாம் மன்னித்து விட்டதாகக் காண்பித்த சிறந்த நடத்தை மூலம் தங்கள் பெருந்தன்மையை வெளிக்காட்டினார்கள்
முஸ்லிம் தூதுக்குழவினருடனான சந்திப்பின் போது தமிழ்ச்செல்வன் மேலும் கூறியது “நான் உங்களுக்கு உறுதி கூறுவது,முஸ்லிம்கள் சார்பான எங்கள் கொள்கை நாங்கள் கொல்லப்பட நேர்ந்தாலும் தொடர்ந்து இருக்கும். எஙகள் வாழ்க்கை நிச்சயமற்றது. இந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையில் எங்கள் உறவுகளை உறுதியான அத்திவாரத்தில் கட்டியெழுப்புதல் வேண்டும்.” ஆம் அவரது உறுதிமொழியின் சரியாக ஒரு வருடத்தின் பின் மூதூர் சுற்றிவளைக்கப் பட்டு முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப் பட்டதுடன்,முழுக் கிராமமுமே வெளியேற்றப் பட்டது.ஸ்ரீலங்கா அரச படைகளும் அவர்களது நண்பர்களும் இல்லாவிட்டால் முஸ்லிம்கள் ஒதுங்க இடம்தேடி இன்னோர் புத்தளத்துக்கு செல்ல வேண்டியிருந்திருக்கும்.அவரும் இப்போது இல்லை அவரது வார்த்தைகளுக்கு மதிப்பும் இல்லை.
முஸ்லிம் அரசியல்வாதிகளின் அரசியல் துரோகங்களை எல்லாம அரசியல் ஜால வித்தைகள் எனக்கருதி மறக்கவோ மன்pனக்கவோ முடியும். ஆனால் கிழக்கு மாகாண ஜமாயத்துல் உலாமாத் தலைவரின் குறிப்பை என்னவென்று சொல்வது. அவர் தனது விசுவாசத்தைக் காட்ட தமிழ்ச்செல்வனையும் அவரது ஆட்களையும் புகழ குரான் வரிகளை மேற்கோள் காட்டியுள்ளார். உண்மை,நேர்மை,நீதி என்பன இறுதியில் வெல்லும் எனவே தமிழ் சுதந்திரப் போராட்டம் இந்த முதன்மையான மூன்று மேற்கோள்களையும் கொண்டிருப்பதால் இறுதியில் நிச்சயம் வெல்லும் எனக் கூறியுள்ளார்.
குரான்; முஸ்லிம்களுக்கு மேலும் கட்டளையிடுவது, அவர்களை அவர்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றி கடவுளைத் துதிப்பதைத் தடை செய்தவர்களுக்கு எதிராக யுத்தம் புரியும்படி. இதன் எழுத்தாளர் புலிகளுக்கெதிராக போர் முரசு கொட்டவில்லை, ஆனால் கபடத்தனமாய் பொறுத்துக் கொள்ளவும் விரும்பவில்லை. ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பெயரால் ஒரு துரோகியின் பாத்திரத்தை ஏற்றுள்ளார். அவர் குற்றம் பாராமல் பொறுத்துக் கொண்டு கிழக்கில் முஸ்லிம்களை கொலை செய்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறார்.சரித்திரம் அவரது கபட நாடகத்தை பதிவு செய்யத் தவறாது.

ஆங்கிலக்கட்டுரையின் தமிழ்மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

http://www.blogger.com/post-edit.g?blogID=6173053676503587190&postID=1822307420812728610

No comments:

Post a Comment

“மக்கள் சீனத்தை பிரமாண்டமான அதிநவீனமான சோசலிச நாடாக மாற்றுவோம்!”

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மாநாட்டில் சூளுரை!! 2050 ஆம் ஆண்டிற்குள் மக்கள் சீனத்தை “உலகிலேயே மிகப்பிரம்மாண்டமான, அதிநவீனமான...