Tuesday, 29 March 2011

“புலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்”

“புலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்”


(பாகம் இரண்டு)
எஸ்.எம்.எம்.பஷீர்


“பகை ஒருவன் முன்னம் வித்து ஆக முளைக்கும்; முளைத்தபின் இன்னா வித்து ஆகிவிடும்.” (விளம்பி நாகனார்)


எனது “புலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்” என்ற கட்டுரையின் முதல் பகுதி முஸ்லிம் இளைஞ்ர்கள் புலியின் கொள்கைகளால் கவரப்பட்டோ அல்லது சமூக ஆதிக்க சக்திகளாக மாறும் போது ஆயுதம் தாங்குவதால் அனுபவிக்கும் அதிகாரம் சமூக மேலாதிக்க நிலவுடமை சமூகத்தின் மீதான உள்ளார்ந்த வெறுப்பு என்பனவும் அவர்கள் புலிகளில் இணைந்ததற்கான காரணங்களாகவும் இருக்கலாம் சென்ற கட்டுரையில் நான் அக்கரைப்பற்று புலி உறுப்பினரின் (கப்டன் பாரூக்) இயக்க ஈடுபாடும் இறப்பும் குறித்து புலிகளின் வரலாறு எழுதிய அதகான பணியில் ஈடுபட்ட புலி வரலாற்றாளரின் மூலப்பதிவிலிருந்தே மறுபதிப்பு செய்தேன். இம்முறை காத்தான்குடி கான்கேயநூடை சேர்ந்த இன்னுமொரு முஸ்லிம் புலி பற்றிய வரலாறு உங்களின் வாசிப்புக்கு:- ….


"மதத்தால் வேறுபட்டாலும் மொழியால் இணைந்து கொண்டவன் வீரவேங்கை கபூர்
முகம்மது அலியார் – முகம்மது சலீம், காங்கேயன்ஓடை ஆரையம்பதி மட்டக்களப்பு.
வீர உயிர்ப்பு: 1972. வீரச்சாவு: 1990.06.11.
மதம் இனம் இவைகள்தான் எங்களைப் பிரித்திருக்கின்றது. ஆனால் மொழியால் இணைக்கப்பட்டவர்ளாகின்றோம். அதனால் இலங்கைவாழ் இனங்களுக்கிடையில் இஸ்லாமியத் தமிழர்களே அவர்களின் தாய்மொழி அரபு மொழியாக இருந்தாலும் பேச்சு மொழியாக தமிழையே கொண்டவர்கள்.
இலங்கை சுதந்திரம் அடையவேண்டும் எனக் குரல் எழுப்பியவர்களில் தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லிம்களும் அடங்குவர் இருந்தபோதிலும் தமிழ் முஸ்லிம்களுக்கு இலங்கைச் சுதந்திரத்தினால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. மேலும் வெள்ளையர்களுக்கு அடிமைப்பட்டுக் கி;டந்த இனங்கள் சிங்களவர்களுக்கும் அடிமையாக வாழவேண்டி ஏற்பட்டது.
உலக நாடுகளில் வாழ்ந்த இலங்கையர்கள் உரிமைக்காகவும் மொழிக்காகவும் போராடினார்கள். வென்றார்கள் இது வரலாறு சொல்லும் பாடங்கள் ஆனால் இலங்கையில் குறிப்பாக தமிழீழத்தில் வாழ்ந்த இஸ்லாமியர் “விடுதலை உணர்வோடு விடுதலைப் புலிகளில் இணைந்து போராடி மாண்டனர்” என்றால் அது ஆச்சரியப்பட வேண்டிய விடயம் என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழ் இளைஞர்கள் சிங்கள இராணுவத்தால் மட்டுமல்ல இந்திய இராணுவத்தால் மட்டுமல்ல இனத்துரோகிகளாலும் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு. அதேபோன்றுதான் இந்தியப்படைகள் நேசக்கரம் நீட்டி தமிழீழ மண்ணில் அராஜகம் நடாத்திக் கொண்டிருந்த வேளைகளில் இந்தியச் சிப்பாய்களினாலும் இனத்துரோகிகளினாலும் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள்.
அடி, உதை பட்டு எத்தனை காலம் எவன்தான் வாழுவான் ஆக மானமே பெரிதெனக் கொண்டவன் அடிமையாக வாழ விரும்பமாட்டான் அதற்கு இந்த முகம்மதி அலியார் முகம்மது சலீம் மட்டும் சளைத்தவனாக இருக்கமாட்டான்.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க இந்தியப்படைகளும் இனத்துரோகிகளும் செயற்படுகின்றார்கள். ஒரு லெட்சம் இந்தியத் துருப்புகள் தமிழீழ மண்ணில் வந்து இறங்கிவிட்டது. வீதிக்கு வீதி தெருவுக்குத் தெருவாகவும் படையினர் வருகின்றார்கள். சந்தேகம் கொண்டவர் யாராக இருந்தாலும் இந்தியச் சிப்பாயின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாவான். வுpடுதலைப் புலிவீரர்கள் அன்று மட்டக்களப்பு அம்பாறை மண்ணிலிருந்து உயிர் தப்பிப் பிழைப்பதென்பது மிக அரிதிலும் அரிது.
அதனால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் வாழ்ந்த இஸ்லாமியத் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் மீது இரக்கம் காட்டத் தொடங்கினார்கள். பகல்வேளைகளில் முஸ்லிம் வீடுகளில் தங்குவதும் இரவுவேளைகளில் ஆயுதங்களுடன் தங்கள் கடமைக்குச் செல்லப் புறப்படுவதும் புலிவீரர்களின் செயற்பாடாக இருந்தமையினால் இஸ்லாமியத் தமிழர் மனங்களில் விடுதலைப் புலிகள் போராட்டம் சம்பந்தமான கருத்துக்கள் விதைக்கப்படலானது.
1988ம் ஆண்டு மட்டக்களப்பு ஆரையம்பதி தமிழர் வாழ்ந்த பகுதி, இடையிடையே முஸ்லிம் குடும்பங்களும் தமிழர்களுடன் ஒட்டி உறவாடி வாழத் தொடங்கினார்கள். அந்த வேலையில்தான் மேஜர் வள்ளுவன் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம், வளர்ச்சி மக்களின் பங்களிப்பு இருந்தும் இஸ்லாமிய இளைஞர்களின் பங்களிப்பு சம்மந்தமான கருத்துகளை இஸ்லாமிய இளைஞர்களின் மனங்களில் விதைத்தார்;.
மட்டக்களப்பு ஆரையம்பதி மறக்கமுடியாத கிராமம்;. தமிழர்களும் முஸ்லிம்களும் பிட்டும் தேங்காய்த் துருவலும்போல் வாழ்கின்றாhகள்;. கைத் தொழிலுக்கே முதன்மையான இடம். கல்வியிலும் சழைத்தவர்கள் அல்லர்;. வெள்ளிக்கிழமைகளில் மதிய வேளைத் தொழுகை முடிந்ததும் அந்தக் காத்தான்குடி ஆரையம்பதிப் பிரதான பாதையில் தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகளோடு பெரியோர்கள் சிறியோர்களும் நின்று கூடிக் கதைத்துப் பேசி அன்பை பரிமாறிக் கொள்வார்கள். இடையிடையே மனக் கசப்புக்கள் வந்து இரு இனங்களுக்கிடையிலான கலவரங்களாக. மாறிவிடுவதும் உண்டு. சூறாவழியடித்து ஓய்ந்ததுபோல் மீண்டும் அன்பைப் பரிமாறுதல் தொடரும்.
இப்படியான பாசப் பிணைப்புகளின் வலையில் பின்னப்பட்டுக் கிடக்கும் வேளையில்தான். மேஜர்வள்ளுவனின் கருத்தில் இணைந்து விடுதலைப்புலிகளின், அவர்களுக்கான செயற்திட்டங்களில் இந்த முகம்மது சலீம் செயற்பட்டுக் கொண்டிருந்தான்.
எப்படியான வேலைகள் இருந்தாலும் மதம் என்ற ஒன்றை உயிரெனக் கொண்டிருப்பவன். இறைவணக்க வேளை வந்ததும் பள்ளிவாசலை நாடத் தவறாதிருந்தான். புலிகளின் செயற்திட்டங்களையும் மறைமுகமாகக் செய்துவந்தான். இரகசியங்களைக் கையாழுதல் அக்கால வேளைகளில் இந்தியப்படையினதும்இ இனத்துரோகிகளினதும் நடமாட்டங்களை வேவுப்பணிமூலம் ஊருக்குள் நின்று கண்காணித்து செயற்படுத்துபவன்.
அதுமட்டுமின்றி இவனால் பல முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப் புலிகளின் பாசறையில் புகுந்து கொள்வதற்கு வழிகாட்டியாக இருந்தவன். இரவுவேளைகளில் துப்பாக்கியைத் தோளில் சுமந்துகொண்டு இந்தியப்படைகளுக்கு எதிராகப் போரிட்டவன். அன்று அவை சிறுசிறு தாக்குதல்களாக இருந்தாலும் அது பெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்ததென்றே சொல்லலாம்.
விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பமானதும் இந்தியப்படைகள் தமிழீழ மண்ணைவிட்டு வெளியேறிய வேளைகளில் புலிகள் அமைப்பில் இனைந்திருந்து பல முஸ்லிம் புலிவீரர்கள் தாங்களாகவே ஓய்வு எடுத்திருந்தனர். ஆனால் இந்த சலீம் மட்டும் புலிகள் இயக்கத்தைவிட்டோ, புலி உறுப்பினர்களைவிட்டோ விலகிச் செல்லாதிருந்தது களமாடுவதற்காகவன்றோ.
விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள அரசபடைகளுக்குமிடையில் போர் மூண்டது. தமிழீழ மண்ணில் குண்டு வீச்சு விமானங்களாலும் துப்பாக்கிச் சன்னங்களினாலும்இ எறிகணை வீச்சுகளினாலும் தாக்கித் தகர்த்தான் தமிழீழ மண் ரணகளமாக மாறியது. மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையம் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டது. அடுத்துள்ள விசேட அதிரடிப்படை முகாம்மீது 10.06.1990 அன்று புலிவீரர்கள் மனோ மாஸ்ரரின் தலைமையில் தாக்குதலைத் தொடுக்கின்றார்கள். சங்கரின் திட்டப்படி இந்த வீரவேங்கை கபூரும் தாக்குதலை மேற்கொள்ளுகின்றான். சென்றல்கேம்;ப் பொலிஸ்நிலையத்திலிருந்து சிங்கள இராணுவத்தினர். வீசும் ஆட்லறி எறிகணைகள் பதுங்கிக்கிடந்து தாக்குதலைத் தொடுக்கும் புலிகள் பக்கம் வீழ்ந்து வெடிக்கின்றது. கப்டன் சங்கரின் அணியில் நின்று இந்த கபூர் மிக வேகமாகச் செயற்படுகின்றான்.
11.06.1990 அன்று களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்டைமீது மிக வேகமான தாக்குதல்கள் புலிவீரர்களினால் தொடுக்கப்படுகின்றது. நேரத்திற்கு உணவு கிடைத்தாலும் உறக்கமின்றி எதிரியை விரட்டத் தாக்குதலை மேற்கொள்ளுகின்றனர்.
அளவான உடலோடு பின்னால் வாரி விடப்பட்ட தலைமுடிக்கு அழகைக் கொடுக்கும் அந்த வட்டமுகம் சிவந்த மேனி கூரிய விழி கொண்ட வேங்கையாக கபூர் தாக்கினான் தாக்கிக் கொண்டே சென்றான் முகாமினுள் இருந்த பகைவனுக்கு மிக அருகில் நின்று தாக்கினான். அது அவனுக்கு மிக இலகுவாக இருந்தது.
இருந்தபோதிலும் அன்று அனைத்தும் மிக வேகமாக செயற்பட்டு முன்னேறி இவன் தாக்குதலைத் தொடுத்தான். அந்தவேளை தம்பலவத்தையைச் சேர்ந்த வீரவேங்கை சபேசன், கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த நவயுகன,; கொத்தியாபுலையைச் சேர்ந்த கீறோ, கோயில் போரதீவைச் சேர்ந்த வீரவேங்கை வசந்தராஜ், மகிழவட்டுவானைச் சேர்ந்த வீரவேங்கை விமலநாதன் ஆகியோர்களுடன் இந்த வீரவேங்கை கபூரும் வீரச்சாவைத் தழுவிக் கொள்ளுகின்றான்.

(மீண்டும் பொழிப்புரை அவசியமில்லை இலத்தீன் மொழியில் Res ipsa loquitur என்று “அதுவேஅதற்கு பேசும்” (the thing speaks for itself) என்று சொல்லுவத்போல இதனையும் உங்களின் வாசிப்புக்கு விட்டு விடுவிடுகிறேன் . இனிமேலும் இன்னொரு தமிழ் சிங்கள முஸ்லிம் இளைஞ்ர்கள் இன முரன்பாட்டுக்காக அழிவதை நிறுத்துவோம்)

No comments:

Post a Comment

Wheeler Dealer Muslim Politicians and Helpless and Voiceless Muslim Community By Latheef Farook

The island’s Muslim community continues to suffer from political and religious leadership crisis .Unless the civil society come forward ...